Sathuranga Vettai-2014-சதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.
 முதலில்  உள்ளே போய் துழாவும் முன்...

 சில வரிகளில் முதலில் பேசி  தீர்த்துக்கொள்ளலாம்.


சதுரங்க வேட்டை  சான்சே இல்லாத திரைப்படமா?

 அப்படி ஒன்றும்  இல்லை.... கண்டிப்பாக ஒரு முறை  சர்வ நிச்சயமாய் பார்க்கலாம்.

ஆனால் கண்டிப்பாக  தவறவிடக்ககூடாத  தமிழ் திரைப்படம்.
முக்கியமாக கிராமத்து  இளைஞர்கள் மற்றும் நகர இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

தூக்கி விட யாரும் இல்லாத போது, குடும்பத்துக்கு பாராமாக இருக்கின்றோம் என்று உறுத்தல் இருந்துக்கொண்டே இருக்கும் அல்லவா-? அப்போது எதை தின்னால் பித்தம்  தெளியும்   என்று ஒரு நிலை வரும். அந்த நேரம் நமக்கு  நேரம் நன்றாக இருந்தால்  அதை கடந்து விடுவோம்... நேரம் சரியில்லை என்றால்  அவ்வளவுதான் நமக்கு என்றே பிறந்த காந்திபாபுக்கள்  நம்மை சற்றி வட்டமிட தொடங்குவார்கள்....

 எப்படி எல்லாம் மக்கள் ஏமாற்றபடுகின்றார்கள் என்று இயக்குனர் மிக டீடெயிலாக கேஸ் ஸ்டடி செய்து இயக்குனர் வினோத் எடுத்து  அசத்தி இருக்கின்றார்.

எனக்கு கூட ரொம்ப நாள் ஒரு கேள்வி...

கேமராமேன் நட்ராஜ் என்கின்ற நட்டு... தமிழ் நாட்டுல இவரை  சினிமா மூலம் தெரியும்.. ஆனா  வட இந்திய ஜாம்பவான்களுக்கு நட்டு  என்கின்ற நட்ராஜ் ஏற்கனவே அறிமுகம்.. அதுவும் ஒளிப்பதிவாளாராக....

 இன்னைக்கு அனுராக் கஷ்யாப் திரைப்படங்களுக்கு  வேண்டுமானால் மலையாள மண்ணில் இருந்து   சென்று அவர் படங்களுக்கு தொடர்ந்த ஒளிப்பதிவு செய்யும்  ராஜீவ் ரவி  இருக்கலாம்... ஆனால் கஷ்யாப்பின் ஆரம்பகால திரைப்படங்களுக்கு நட்ராஜ்தான்  ஒளிப்பதிவு என்றால்  உங்களால் நம்ப முடிகின்றதா?
ஏதோ மொக்கையான படங்களின் நாயகன் என்று தமிழ் நாட்டில்  அறியப்படும் நட்ராஜ்.. இந்தியில்  பாக்ஸ்  ஆபிசில்  பிச்சு  உதறிய ஜப் வி மெட், லவ் ஆஜ்க்கல், இந்தியில்  வெளியாகி தனுஷூக்கு  இந்தி மார்க்கெட்டில்  ஒரு நிலையான  இடத்தை பெற்றுக்கொடுத்த ராஜ்ஜனா படங்கள் உட்பட நட்டு என்கின்ற நட்ராஜ்தான்  ஒளிப்பதிவாளர்..

 அது மட்டுமல்ல 1500க்கு மேற்ப்பட்ட  விளம்பரபடங்கள்  எடுத்த்து இருக்கும் நட்ராஜ் பரமக்குடிகாரர் என்பதும் பலர் அறியாத செய்திதான்.

 அது என்னவோ தெரியலை...  ராம்கோபால் வர்மா, அனுராக் கஷ்யாப், ஸ்ரீராம் ராகவன், போன்ற இயக்குனர்களிடம் பணிபுரிந்த பலர் செம்மையான பயரோடு  இருப்பதை கவனித்து வருகின்றேன்..


 பிராடு தனம்  பண்ணா வாழும் போதே கொஞ்சகாலத்துக்கு  சொர்கம் பார்க்கலாம்... ஆனால் அதனால் பாதிக்கப்பட்டவங்க எந்த  நேரத்திலேயும்  சொர்கத்தை பார்த்தவன்  கண்ணுல நரகத்தை காட்டுவாங்கன்றதுதான் படத்தோட ஒன்லைன்.

 சான்சே இல்லை...


பணத்துக்கு ஆசைப்பட்டு அலைஞ்சி போயி ஏமாறும் மக்களை பார்த்தா காமெடியா இருக்கு... ஆனா  நம்மில் நிறைய பேர் இதுபோன்ற ஏமாற்று காரர்களிடம் ஏமாந்து இருக்கின்றோம் என்பதே நிதர்சனம்.

 படத்துல   எனக்கு புடிச்ச பிராடுதனம்... திண்டிவனத்துல பாதி  விலையில் தங்கம் பிராஜக்ட்டும்.. எம்எல்எம் புராஜாக்டுகளும்தான்.. அதில் வேலைக்கு சேர்ந்த நாயகியை சில்வர் , கோல்டுன்னு பிராடு தனம் பண்றது... சான்சே இல்லை..

கலா மாஸ்டர் சொல்லறது போல சும்மா கிழி கிழின்னு கிழிச்சி விட்டு இருக்கானுங்க...

 படத்துல   மொத மொத இளவரசன் பாம்பு மேட்டர் ரொம்ப  நீளம். அதை குறைச்சி இன்னும்  இரண்டு  மூன்று  பிராடுதனங்களை டீடெய்லாக   இன்னும் சுவாரஸ்ய படுத்தி இருந்தால் படம் இன்னும் தாறுமாறாக இருந்து இருக்கும்.. அப்படி செய்து இருந்தால்.. இந்த படம்  கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய லிஸ்ட்டுக்கு அது பாட்டுக்கு போய் இருக்கும்...

 இப்பவும் இந்த திரைப்படத்தில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால்  அரைத்த மாவையே அரைக்காமல்  வித்தியாசமாக டிரை செய்தது...

கதாநாயகி இஷாரா நாயர்... மலையாள மனம் உடலில் இருந்தாலும்... ஒரு ஷாட்டில் பேரழகியாகவும், ஒரு ஷாட்டில் மொக்கையாகவும்  தெரிகின்றார். ஆனால்    மாசமாக வயிற்றை பிடித்துக்கொண்டு நடிக்கும் காட்சிகளில் இயற்கையில் பெண்களுக்கு  அந்த கால் கட்டங்களில் ஏற்ப்படும் ஒரு மினு மினுப்பு அவருக்கு  முகத்தில்  இருப்பது சான்சே இல்ல..

அதே போல படத்தை பல காட்சிகளில் தொய்வடைய செய்யாமல் நகர்த்தி இருப்பது  பின்னனி  இசை என்றால் அது மிகையில்லை... முக்கியமாகஜீப் செல்லும் காட்சிகளில்....


 படத்தினை நடிகர்  மற்றும் இயக்குனர் மனோபாலா  தயாரித்து திருப்பதி பிரதர்ஸ் இந்த திரைப்படத்தினை  வெளிவிட்டு இருக்கின்றது...அதனாலே இந்த திரைப்படம் பரவலாக சென்றுள்ளது  என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

 படத்தை தொய்வடையும் போது எல்லாம் தூக்கி நிறுத்துபவை வசனங்கள்தான்...

 நானா  யாரையும் ஏமாத்தலை... ஏமாற வாய்ப்பு கொடுத்தேன்  அவிங்க ஏமாந்தாங்க.. அவ்வளவுதான்.. என்று நட்ராஜ் படம் முழுக்க பேசும்  நிமிர வைக்கும் வசனங்கள் படத்தின் பலம்
 படத்துக்கு செலவு என்றால்  திண்டிவனம் மேட்டரும் எம்எல்எம் மேட்டரும்தான்.....


காமராஜ் அரங்கத்தில் இருந்து நண்பர்  ஒருவர் போன் செய்தார்.. அவசியம் வாருங்கள் என்றார்... நான் சென்றேன்.. முக்கியமாக படத்த மேல்தட்டு வர்கம் மூளை சலைவை செய்யப்பட்டு  வித விதமான உடைகளில் வலம் வந்துக்கொண்டு இருந்தது...


 யார் டீசன்சியாக இருக்கின்றார்களோ? யார் ரொம்ப பெரிய பொசிஷனில் இருக்கின்றார்களோ?? யார் சொன்னால் மகுடிபாம்பாக  கேட்பார்களோ... பிராடு என்று தெரிந்தாலும் வெளியே சொன்னால் அவமானம் என்று கட்டிகாத்த பெயருக்கு யார் பயப்படுகின்றார்களோ... அது போன்ற மனிதர்கள் அங்கே.. கோல்டு ,சிலவர், பிளாட்டினம் என்று சொல்லிக்கொண்டு வளைய வந்தனர்.. என்னை சேர சொன்னார்.. உங்கள்  நட்புக்கா நான் இங்கே வந்தேன்..,..  நிறைய முறை வற்புறுத்தியதால் இங்கே வந்தேன் என்றேன்... அதன் பிறகு என்னை அவர் வற்புறுத்தவில்லை..

 இந்த படம் சமுகத்துக்கு தக்க தருணத்தில்  வந்த சரியான விழிப்புணர்வு திரைப்படம் இது...

 படம் ஓடுமா ஓடாதா என்று சின்ன நெருடலுடன் படத்தை இயக்கி இருப்பது பல காட்சிகளில்  தெரிகின்றது.. நிறைய  ஷாட்டுகள் கவித்துமாக இருக்கும்  அதே வேளையில் சில ஷாட்டுகள் காட்சிகள் கடமைக்கு   பிரேம் வைத்து  சுருட்டிக்கொண்டு  வந்தது  போல இருப்பதாக என் மனதுக்கு பட்டது....

 படத்தின் பெரிய பலமே  நட்டுதான்.. தரையில் ,உருண்டு ,புரண்டு  ,அடித்து , ரத்த மிளாராய்  உயிரை கொடுத்து நடித்து இருக்கின்றார்... நடிகனாக அவர்  கேரியரில் காலரை தூக்கி வீட்டுக்கொண்டு  நடக்க சதுரங்க வேட்டை சரியான திரைப்படம்.

=============
 படத்தின் டிரைலர்.
===========
படக்குழுவினர் விபரம்
Directed by H. Vinoth
Produced by Manobala
Sanjay Rawal
Written by H. Vinoth
Starring Natarajan Subramaniam
Ishara Nair
Ponvannan
Ilavarasu
Music by Sean Roldan
Cinematography K. G. Venkatesh
Edited by Raja Sethupathi
Production
  company Manobala's Picture House
SR Cinema
Distributed by Thirrupathi Brothers
Release date(s)
July 18, 2014
Country India
Language Tamil


============
பைனல் கிக்.

(குறிப்பு.. படத்தை பார்க்காதவர்கள்  பைனல் கிக்கை  படிக்க வேண்டாம்.  படத்தை பார்த்து விட்டு திரும்ப  கீழே உள்ள பத்தியை   படிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.)

தமிழர்களின் ஏமாற்றத்தை தடுக்க வந்த விழிப்புணர்வு திரைப்படம்...  பட்ம் முழுக்க பிராடுகளின் நிறைய டீடெயில்,   அதுக்காக ஒரு சல்யூட்... இதுக்கு  நடுவில் ஈமு கோழி மேட்டரை போட்டு அசத்தி இருந்தாங்க..
நிறைய பேருக்கு கிளைமாக்ஸ் உடன்பாடு இல்லை.. ஆனால் காட்சியின் பலத்துக்கு அந்த கிளைமாக்ஸ் அவசியம்..


 பணத்தை பார்த்த   ரவுடி திலகன்.... இதுக்குன்னா அவளை  காப்பாத்தி இருக்க வேண்டாம் என்று சொல்லும் அந்த டயலாக்.. அதே போல ஒரு பிராடு திடிர் என்று பணத்தை விட மாட்டான்.. ஜீப்பு நிறைய பணத்தை விடமாட்டான் என்று சொன்னாலும்... பணத்தை நம்பி  எந்த நல்ல இதயங்களையும் சம்பாதிக்க வில்லை.. கெட்டபணத்தால் தன் தலைவருடி விடும் பெண்ணும் பிள்ளையும் சென்று விடுவார்கள் என்பதாலும்  ஏற்கனவே  தன் வாழ்க்கையில்  கெட்ட பணம்,  கெட்ட மனிதர்கள் , எற்ப்பட்ட வலி இனி தேவையில்லை என்பதால்தான்  மலையடிவாரத்தில்  மம்முட்டியை பிடித்து உழைக்க ஆரம்பித்தான் என்பதால் கிளைமாக்ஸ் சரியே...


===========
படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு ஏழு.
==========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner