ஜெர்மனியில்...



இப்பதான் வீட்டம்மாவை(16/08/2014) 9.30 நைட் பிளைட் ஏத்தி ஜெர்மனிக்கு அனுப்பினேன்... ஒரு மாதம் கம்பெனி பிராசஸ் டிரெயினிங்.
கடந்த 20 நாட்களாக விடாமல் வேலை... 



பாஸ்போர்ட், அப்பாயிண்மேன்ட், ஏ கவுண்டர், பி கவுண்டர் , சி கவுண்டர், எதுக்கு தக்கல்ல அப்பளை பண்ணி இருக்கிங்க... ??
போலிஸ் வெரிப்பிக்கேஷன், போஸ்ட்மேன்....

விசாவுக்கு 35க்கு 45 பர்சென்ட் சைஸ் வைச்சி... 85 பர்சென்ட் போல்டா மூஞ்சி தெரியறா மாதிரி விசா பாஸ்போர்ட் எடுத்து வாங்க....

டிராவல் இன்ஷூரன்ஸ், டிக்கெட் ஃபேர், டிராவல் ஏஜென்டுகளின் அலப்பறைகள் ... ஜெர்மன் தூதரகம், யூரோ பணம் சேஞ்சிங், அமெக்ஸ் கார்டு,
டபுள்யூ என்ஸ்சில் எனது இல்லாள் வேலை பார்த்த போது அயர்லாந்து சென்றார்...அப்போது இந்த அளவுக்கு அலையவில்லை... 

ஆனால் புதியதாய் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலைக்கு சேர்ந்து இருக்கும் கம்பெனியில்..எ ல்லாமே இவர்களே செய்ய வேண்டும். இதுவும் நல்ல அனுபவம்.

2009 ஆம் ஆண்டு திருமணம் ஆகி அயர்லாந்துக்கு தங்கமணி மூன்று மாதம் சென்ற போது பிலிங் இருந்தாலும் சின்னதாக என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ற சந்தோஷம் இருந்தது...

ஆனால் இப்போது என்னையும் யாழினியையும் விட்டு விட்டு செல்லும் போது கண்கள் கலங்கியது. யாழினியை டாக்டர் தம்பி பாலாவிடம் கொடுத்து விட்டு.. கொஞ்சம் தனியே நின்றேன்...

எங்க அப்பா வீட்டுக்குன்னு எந்த வேலையும் செய்தது எனக்கு தெரிந்து நினைவில் இல்லை..... அவருக்கு விசுவாசம் மட்டுமே தெரியும்... 

காலையில் எட்டுமணிக்கு கடை திறந்து பத்து மணிக்கு கடை சாத்தி விசுவாசமாய் முதலாளியிடம் 30 வருடம் கடை சாவியை கொடுத்த புண்ணியவான் அவர் ... பிள்ளைகள் எத்தனையாவது படிக்கின்றார்கள் என்று கேட்டால் அவருக்கு எதுவும் தெரியாது...

அதனால் என் அம்மா அடைத்த வேதனைகள் என்ன என்று நான் அறிவேன்.. அந்த வேதனை எங்க வீட்டு அம்மா படக்கூடாது என்ற காரணத்திற்காக முதலில் குடும்பம் அடுத்ததுதான் எல்லாம் என்ற மன நிலை எனக்கு...

நல்ல வேலை ஏர்போர்ட் போய் இறங்கும் போது யாழினி நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த காரணத்தால் அவள் அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை..

புதிய ஏர்போர்ட்டுக்கு இப்போதுதான் வருகின்றேன்.. பிரமாண்டமாக இருக்கின்றது...

24 முறைக்கு மேல் மேற்கூறை இடிந்த விழுந்துள்ளது என்று தொடர்ச்சியாக தினத்தந்தி படிக்கும் காரணத்தால் அனிச்சையாக நிமிடத்துக்கு ஒரு முறை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நடக்க வேண்டியதாய் இருக்கின்றது.

கச கச என பழைய ஏர்போர்ட்டில் கூட்டம் அம்மும்.. சென்னையில் புதிய புனரமைக்கப்பட்ட ஏர்போர்ட்டில் அந்த பேச்சிக்கே இடம் இல்லை. கடலும் காவேரியுமாக இடம் தாரளமாக இருக்கின்றது...

சிறை ச்சாலையில் மனு போட்டு பார்ப்பது போல பிரமாண்ட கண்ணாடி வழியே எக்கி எக்கி உறவினைரை பார்த்து பாசத்தை வெளிப்படுத்த வேண்டியதாய் இருக்கின்றது. முன்பு எல்லாம் 50 ரூபாய் கொடுத்தால் ஏரோபிளேனில் உறவினர் சென்று ஏறுவது வரை பார்க்கலாம்... இப்போது எல்லாம் காரிடரிலேயே தடுத்து நிறுத்தி விடுகின்றார்கள்..

பிலிங் அதிகமாக இருந்த காரணத்தாலும், யாழினி கேட்கப்போகும் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள போகின்றேன் என்ற தடுமாற்றத்தினால் லட்டு லட்டாக என்னை கிராஸ் செய்த சென்ற நவநாகரீக நங்கையரை வாழ்வில் முதன் முறையாக உதாசீனம் செய்தேன். அப்படியும் மைதாமாவினால் உருவாக்கப்பட்ட அரபு தேசத்து பெண் ஒருவரும்... சின்ன டிரவுசரும் வெள்ளை பனியன் போட்டுக்கொண்டு அதிர அதிர நடந்து சென்ற பெண்ணும் இந்த பதிவை டைப்பும் வரை நினைவில் நிற்கின்றார்கள்.

ஜெர்மனியில் அப்பார்ட்மென்ட் புக் செய்தாகி விட்டது.... ஐஸ்சென்பெர்க்.

வேறு என்ன....

யாழினிக்கு முன்பே அம்மா வெளியூருக்கு செல்ல போகின்றார் என்று ஒருவாரத்துக்கு முன்பு இருந்தே மூளை சலைவை செய்த காரணத்தால், அவளால் இரண்டு விதமாக இதை எதிர்கொண்டாள்... 

அம்மா ஊருக்கு போகின்றாள் என்று தெரிந்து அக்செப்ட் செய்தாலும், திடிர் என்று அம்மா வேணும்... வா நாமும் ஜெர்மனி போகலாம் என்று தொடர்ந்து நச்சரித்தாள்...

ஜெர்மனிக்கு போகனும்னா... நிறைய டாக்குமென்ட் சைன் செய்யனும்.. முக்கியமா அப்பா கிட்ட காசு இல்லைடா என்று சமாதானப்படுத்தினேன்...

யாழினி சொன்னாள்...

அப்பா நான் சம்பாதிச்சி உனக்கு நிறைய காசு தரேன் நீ கவலை படாதே... என்றாள்..

என் வாழ்க்கையில... நான் உனக்காக இருக்கேன்.. நான் பார்த்துக்கிறேன்னு உதட்டளவில் நண்பர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் என் நான்கு தங்கைகளில் ஒருவர் கூட அந்த வார்த்தை சொன்னதில்லை...

நீ கவலை படாதே நான் பார்த்துகிறேன்னு , நான் ஆட்டோ ஓட்டும் போதே எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது என் காதல் மனைவி மட்டும்தான்.

அடுத்து நான் உன்னை பார்த்துகிறேன் சொன்னவள்...யாழினி....

யாழினி சொன்னதுமே...

பிரமாண்ட ஏர்போர்ட் கமர்கட் ரேஞ்சிக்கு ரொம்ப சிரிசா இருக்குப்பா...

நம்பிக்கை வார்த்தைகளுக்குதான் எவ்வளவு சக்தி.????

(எப்படியும் நான் என்ன எழுதி இருக்கின்றேன்.. என்று ஜெர்மனி சென்று ஆர்வமாக என் பக்கம் வந்து வாசிப்பவளுக்கு...
கிருஷ்ணர் கதையில் எனக்கு பிடித்த ஒருவரி எனக்கு மிகவும் பிடித்தது...

மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.)

வழக்கம் போல உங்களின் ஆசிகள் வேண்டி...


குறிப்பு...
ஜெர்மனியில் அப்பார்ட்மென்ட் புக் செய்ய வேண்டும் என்று  நண்பர்களின் உதவி கோரியதும்... உடனே  ஓடி வந்து  உதவிய தம்பி கார்த்திகேயன், பிரசன்னா வேணு,ஸ்டாலின் பெலிக்ஸ், ஜெகன்நாதன் சீனுவாசன், ரங்கராஜன் கிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றிகள்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர். — 


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

4 comments:

  1. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணி, யாழினிய பத்தரமா பார்த்துக்கங்க அண்ண.

    ReplyDelete
  2. you also should have gone. atleast for couple of weeks. these are places one cannot miss to see.

    ReplyDelete
  3. இப்போ ஆகஸ்ட் இல் நிறைய சம்மர் fair ,எல்லாம் நடைபெறும் யாழினிக்கு மிகவும் பிடிக்கும் .ஐரோப்பாவில் அழகான நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று அடுத்த தடவை சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க ..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner