காதர் மொய்தீன்...
சினிமா துறை உச்சரிக்கும் பெயர்... ஆனால் சினிமாவில் இருந்தாலும் பெரும்பான்மையான பொது மக்களுக்கு இந்த பெயர் அறிய நியாமில்லை... காரணம் சினிமாவில் இருக்கும் வினியோகஸ்தர்கள் மத்தியில் காதர் மொய்தீன் என்ற பெயர் வெகு பிரபலம்..
சினிமாவின் நெளிவு சுளிவு தெரிந்து வெற்றிப்படம் எது தோல்வி படம் எது என்று நாடி பிடித்து, ஊதாசீனப்படுத்தப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் அந்த படத்தின் மேல் நம்பிக்கை வைத்து அந்த படத்தை வாங்கி வெளியிட்டு லாபம் பார்த்த வினியோகஸ்தர்...
அது எப்படிங்க.... முடியும்??? அதுக்குதான் அனுபவம்ன்னு பேர்..
ரஜினியின் முதல் படம் பைரவி படத்தை தயாரிச்ச கலைஞானம் பணப்பிரச்சனையில் இருந்த போது அந்த காலத்தில் அட்வான்ஸ் 15 ஆயிரம் கொடுத்த பைரவி படத்தை வளர வைக்க உறுதுணையா இருந்தவர் இதே டிஸ்ரிபியூட்டர் காதர்தான்...
கமலின் 16 வயதினிலே படம் பார்த்த வினியோகஸ்தர்கள் எல்லாம் லஞ்ச் சாப்பிட்டு விட்டு சப்பானி கேரக்டர் போல வெற்றிலை பாக்கு போட்டு புளிச் புளிச் என்று துப்பி படம் தேறாது என்று சிவப்பு உதட்டை பிதுக்கிய போது ,படம் இயக்கிய பாரதிராஜா மிரண்டுதான் போனார்...
வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாகதானே படத்தை எடுத்து இருக்கோம் ஏன் படத்தை வினியோகஸ்தர்கள் வாங்க மறுக்கின்றார்கள் என்று குழப்பத்தில் தவித்த போது வினியோகஸ்தர்கள் சொன்ன காரணம்.. டிப் டாப் ஆசாமியா... நடிச்ச கமலுக்கு கோமணம் கட்டி நடிக்க வச்ச ஒரு பய இந்த படத்தை பார்ப்பானா? என்று ஒட்டு மொத்த வினியோகஸ்தர்களும் பாரதிராஜா காதில் கோரஸ் பாட...
செய்வதறியாது திகைத்து போனார் பாரதிராஜா...
ஏன்டா படம் ஒரு ஆளுக்கு கூடவாயா? பிடிக்கலை என்று நொந்து உட்கார்ந்துக்கொண்டு இருந்த போது இந்த படத்தை நாங்க வாங்கி ரிலிஸ் செய்யறேன் என்று நெஞ்சை நிமிர்த்தி நின்ற வினியோகஸ்தர் காதர் மொய்தீன்தான்..
.அழகை பார்க்காதே மனசை பாரு என்று அற்புதமான கான்செப்ட் நிச்சயம் ஜெயிக்கும் என்று சொல்லி பாரதி ராஜா வயிற்றில் பதினாறு வயதினிலே படத்தின் போது பால் வார்த்தவர் காதர் மொய்தீன்தான்...
இந்த காதர் மொய்தீன் வேறு யாருமல்ல... பாண்டவர் பூமி தவமாய் தவமிருந்து படங்கள் மூலம் தனது அற்புமான குணச்சித்திர நடிப்பை வழங்கி தமிழ் சினிமா வரலாற்று பங்கங்களில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் ராஜ்கிரண்தான்
ராஜ்கிரண் இதே நாளில் 1954 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தவர்... முதலில் வினியோகஸ்தராக தமிழ் சினிமாவில் கால் பதித்து மெல்ல மெல்ல தயாரிப்பாளராக உயர்ந்தார்... எப்படி மோகன் 1978 இல் இருந்து 1988 வரை ரஜினி கமலுக்கு டப் பைட் கொடுததாரோ...?? அதே போல 1988 இல் ராமராஜன் ரஜினி கமலுக்கு டப் பைட் கொடுத்துக்கொண்டு இருந்தார் எனலாம். அவரை வைத்து ராஜ்கிரன் வெற்றிப்படங்களை தயாரித்தார்.
1991 ஆம் ஆண்டு நாயகனாக அரிதாரம் பூசி என் ராசாவின் மனசிலே... படம் மூலம் தமிழ் திரையுலகில் மயாண்டி கேரக்டர் மூலம் காலடி வைத்தார்.. பிற்காலத்தில் வைகைபுயல் வடிவேலு என்று நாமகாரணம் சூட்டிக்கொண்ட வடிவேலு நடித்த முதல் படமும் இதுதான்... ஒரு குட்டி பிளாஷ் பேக்... மதுரையில் நடந்த படபிடிப்பில் ராஜ்கிரண் கலந்துக்கொள்ள அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக சென்னைக்கு வடிவேலுவை அழைத்து வந்து தனது சினிமா அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலைக்கு சேர்த்துக்கொண்டவர் ராஜ்கிரண் என்பது குறிப்பிடதக்கது...
என் ராசவின் மனசிலே படம் சாராயம் குடித்து விட்டு வீட்டில் வந்து பேயாட்டம் ஆடும் கணவர்களின் மறுவடிவாகவே ராஜ்கிரண் பார்க்கப்பட்டார்... மீனாவின் அப்பாவி நடிப்பு படத்துக்க பெரிய பலம்...
அதில் இருந்து சின்ன காதல் முரடன் தனது மனைவிக்கு ஈரம் கசிய மாறும் அந்த சென்டிமென்ட் பிடித்து போக படம் சூப்பர் டூப்பர் ஹிட்... யாரு மச்சான் அவன்... அவன் மூஞ்சியும் தலையும்... என்று படம் வந்த போது நண்பர் பேசியது நியாபகம் வருகின்றது.... அதே போல எலும்பு கடிக்கும் காட்சியும்... சாம்பலை அடித்துக்கொண்டு அழும் காட்சிகளும் அக்காலத்தில் பெரியதாய் பேசப்பட்டன எனலாம்.
அதன் பின் தானே இயக்கி நடிக்க ஆரம்பித்தார்... அந்த படம் அரண்மைனை கிளி.... ராசாவே உன்னை விட மாட்டேன் என்ற பாடல் 1993 களில் கிராமத்து காதலர்களின் தேசிய கீதமாக பிரகடனப்படுத்த பட்டது.. அடி பூங்கயிலே பூங்குயிலே கேளு...
அம்மன் கோவில் கும்பம் இங்கே.. பாடல்கள் செம ஹிட்..
தாய் சென்டிமென்டும் , கிராமத்து களமும், இளையாராஜாவின் இசையும்... பி,சி சென்டர்களில் பெரிய அளவு வரவேற்பை ராஜ்கிரண் படங்களுக்கு கிடைத்து...
மாணிக்கம் படத்தில் நடித்த உடன் ராஜ்கிரண் காணாமல் போனார்...
அதில் கூட சந்தனம் தேச்சாச்சி என் மாமா சங்கதி என்னாச்சி என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. 1996 ஆம் ஆண்டு மாணிக்கம் படத்தில் இருந்து அவர் 2001 ஆம் ஆண்டு நந்தா படத்தில் படிக்கும் நடிக்கு வரை ராஜ்கிரண் வாழ்க்கையை கடன் , சொந்த வாழ்க்கை என சினமா பரமபத விளையாட்டில் புரட்டி போட்டு பாம்பில் விழுந்து தரைக்கு வந்து விட்டார்...
நந்தா படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டு மீண்டும் சினிமா பரமத விளையாட்டில் இருக்கும் ஏணியில் ஏறி வெற்றிக்கோட்டையே தொட்டு விட்டார்...
பர்சனல் லைப்பில் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டு இரண்டாவது மனைவி மற்றும் பிள்ளையுடள் வாழ்ந்து வருகின்றார்.
பாண்டவர் பூமி மற்றும் தவமாய் தவமிருந்து படங்களின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வழங்கினார்...
தவமாய் தவம் இருந்து திரைப்படத்தில் தமிழ்நாட்டு கிராமத்து அப்பாவின் வாழ்க்கைகயை யாதாத்ததோடு மிகைபடுத்தாம்ல் பதிவு செய்தார்....
ராஜ்கிரண் நடித்த படங்களில் என் ஆல் டைம் பேவரைட்,. சண்டக்கோழிதான்... ஒரு பேட்டியில் அந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமியே... விஷால் அப்பா கேரக்டர் என்று சொன்னாலும் அந்த கேரக்டரை தனக்கு தானே நடை உடை பாவனைகள் மூலம் வெறி ஏற்றி மாற்றி அமைத்து அந்த துரை கேரக்டருக்கு வலு சேர்த்தார்....
முன்டாசு சூரியனே பாடலில் கம்பீரம்ன்னா ஒம்மால இப்படித்தான் இருக்கனும் என்று தன் முகத்திலும் நடை உடை பாவனையிலும் ராஜ்கிரண் வெளிப்படுத்தி இருப்பார்....
அந்த பாடலையும் ராஜ்கிரணின் அட்டகாச நடிப்பை பார்த்தால் நீங்களே கடையில் ஓடிப்போய் ஒரு வேட்டி வாங்கி வந்து கட்டிக்கொண்டு, அவர் போல மிரட்டலாக மீசையை உருட்டி விட்டபடி நடக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்பதே உண்மை.
வேட்டி கட்டினாலும் பட்டா பட்டி கோடு போட்ட அண்டர்வேரை கூட மரியாதையாக காட்டலாம் என்று தமிழ் திரையுலகில் உணரவைத்தவர் என்று போகின்ற போக்கில் அடித்து விடலலாம் சண்டக்கோழி படத்தில் ஒரு சாங்கில்... இவர் வந்த விட்டார் என்று எல்லோரும் நின்று விட மழையில் நனைந்துக்கொண்டு வேட்டியை ஒரு மாதிரி வளைந்து மடித்துக்கொண்டு ஆடும் அந்த காட்சி எனது பேவரைட் காட்சி.
திரைப்பட துறையில் கூட ராஜ்கிரணுக்கு நல்ல பெயர் இருக்கின்றது.. சரியான நேரத்துக்கு வந்து டெடிக்கேஷனாக நடித்து கொடுப்பவர் என்ற பெயரை சம்பாதித்து இருக்கின்றார்....
திரைப்பட வினியோகஸ்தராக இருந்து , தயாரிப்பளாராக அவதாரம் எடுத்து, இயக்குனராக பரிமளித்து, நாயகனாக அரிதாரம் பூசி, எல்லவற்றிலும் ஜெயித்து, பாம்பில் சருக்கி, தன்னம்பிக்கையுடன் மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் வெற்றி ஏணியில் ஏறி இருக்கும் ராஜ்கிரணுக்கு இன்று பிறந்த நாள்...
58 வருடத்திலும் தன் இயல்பான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ராஜ்கிரனை மனதார வாழ்த்துவோம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேர்.
26/08/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
YOURS...
Happy birthday to ராஜ்கிரண் (a) காதர் மொய்தீன்
ReplyDeleteராஜ்கிரண் தனது படமான மஞ்சப்பையில் மிக மிக நன்றாக நடித்திருந்தார்
ReplyDeleteவாழ்க பல்லாண்டு!!!!!!!!! HAPPY BIRTHDAY TO RAJKIRAN
கருத்துக்கு மிக்க நன்றி நண்பர்களே..
ReplyDelete