
தமிழுக்கு இன்று பிறந்தநாள்...
இலங்கை ஒன்றும் இராமேஸ்வரம் அல்ல… மாநில முதல்வர் சாட்டையை எடுத்து வீச… அது அடுத்து நாடு… ஒரு மாநில முதல்வர் அதிக பட்சம் கடிதம் எழுதி நெருக்கலாம்.. ராணுவம், தளவாடங்கள் கொடுக்காதே என்று சொல்லக்கூட முடியாது… காரணம் அது பிரதமர் மற்றும் டெல்லி அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் எடுக்கும் முடிவு.
ஈழத்தாயால் கூட எதுவும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை.
தமிழக முதல்வராக யாராக இருந்தாலும் இதுதான் முடிவு… இந்த அரசியல் நிலைப்பாடு கூட தெரியாதவர்கள்தான்… கலைஞரை தொடர்ந்து விமர்சிக்கின்றார்கள்.. அது ஒன்னும் பிரச்சனையில்லை…
கட்டுமரம்ன்னு சொன்னா அப்படித்தான் திட்டிதான் தீர்ப்பான்… அதை சொல்லி இருக்க கூடாது.. அதனாலதான் ஏதோ ஒரு ஊர்ல அல்லது ஏதோ ஒரு நாட்டுல தமிழனுக்கு மலச்சிக்கல் வந்தா கூட…. கலைஞர் காரக்குழப்பிலே பூண்டு போடவில்லை என்று திட்டுறான்.. கட்டு மரம் அது இதுன்னு கலைஞரே தேடி போய் உட்கார்ந்துக்கிட்ட ஆப்பு.. அதை ஒன்னும் செய்ய முடியாது.
எந்த பிள்ளை தன் அப்பனை நல்ல அப்பன் என்று சொல்லி இருக்கின்றான்… எவ்வளவு செய்தாலும் அது சரியில்லை.. இது சரியியல்லை.. அப்படி செய்து இருக்கலாம் ,இப்படி செய்து இருக்கலாம் என்று எப்போதும் திட்டிக்கொண்டே இருப்போம் இல்லையா இது போலத்தான் கலைஞரும்... அப்பன் இன்னும் ரொம்ப வாய் விட்டா …. அது சண்டை கை கலப்பில் கூட முடித்து இருக்கின்றோம்.. …
மீசை முளைத்து தோள் திடம் பெற்ற பின் நம்மை உருவாக்க காரணமான அப்பாவை தொடர்ந்து திட்டி தீர்ப்போம்… அப்படித்தான் கலைஞரையும் திட்டி தீர்க்கின்றோம்.
திட்டிய அதே பையன் அப்பா ஸ்தானத்துக்கு போகும் போதுதான்.. அப்பா எவ்வள கஷ்டப்பட்டு நம்மை உருவாக்கினான் என்று நம்மால் உணர முடியும்… எப்போது தெரியுமா?
அப்பன் போட்டோவுல ஜீரோவாட்ஸ் லைட்டை தலைக்கு மேல வச்சிக்கிட்டு லைட்டா சின்ன வயசு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுல சிரிக்கும் போது நமக்கு தோனும்…
அன்னைக்கு என்ன சொல்லுவோம்… எங்க அப்பா கிரேட்டுன்னு சொல்லுவோம்…
அது போலத்தான் கலைஞர்..
அவருடைய கடைசி கால அரசியல் நிலைப்பாடுகள் அவரை தடுமாற வைத்து இருக்கலாம்.. அதனால் அவர் மீது ஆயிரம் விமர்சனம் வரலாம்.. அவரை கண்டபடி திட்டலாம்.. ஆனாலும் அவரால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் கனணி முன் வந்து உட்கார்ந்தார்கள் என்பது ரொம்ப லேட்டாக தெரியும்…திமுக ஆட்சிகாலத்தில்தான் தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்..
என்னைக்குமே ஆடு காசாப்பு கடைகாரனைதான் முழுமையாக நம்பும் என்பது வரலாறு… அது போலத்தான் தமிழக மக்களும்.
ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் வரும் வசனம் போல….
உங்க அப்பான்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா?
இல்லை…
அப்புறம் எதுக்கு அவருக்காக இவ்வளவு போராட்டம்.??
ஏன்னா அவுரு எங்க அப்பா….
அது போலத்தான் கலைஞரும்..
இன்று கலைஞருக்கு 91 வது பிறந்த நாள்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா கலைஞர் அவர்களே.
((இந்த நேரத்தில் சில நாட்களுக்கு முன் டுவிட்டிய டுவிட்டை கலைஞர் பிறந்தநாள் அதுவுமாக மீணடும் பகிர நினைக்கின்றேன்..
கலைஞர் என்ற மனிதர் மட்டும் தமிழ்நாட்டில் இல்லையென்றால் நடுநிலையாளர்கள், சமுக போராளிகளின் தைரியம் எப்படி பட்டது என்பதை அறிய வாய்ப்பில்லாமல் போய் இருக்கும்..))
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்…
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

தமிழை அவமான படுத்திவிட்டீர்களே தலைவா..
ReplyDeleteஅவருடைய பிரச்சினையே அவருடைய குடும்பம்தான்.நீங்க சொன்ன மாதிரி அவரு நிறைய பண்ணி இருக்கார். இருந்தாலும் மக்களின் எதிபார்ப்பு அதிகம்.யானை பசிக்கு சோள பொறியதான் அவருடைய ஆட்சி குடுத்துருகுது. அவருடைய ஆட்சி மட்டும் இல்லை, அனைவரின் ஆட்சியும் அதுதான். என்ன இருந்தாலும், இந்த பின்னுட்டத்தின் எனது வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteசில சமயம் வந்த பாதையை சிலர் மறப்பதில்லை .அவர் தந்திரம் என்ற அஸ்த்திரத்தை என்று கைவிடுவாரோ அன்று அவர் இன்னொரு பிறந்தநாள் கொண்டாடிகொள்வார் .
ReplyDeleteபெரிய ஓர் ஆலமரத்தின் அடியில் எந்த ஒரு புல் பூண்டும் செழிப்பாக வளர முடியாது.
ReplyDeleteஆலமரம் மேலும் தழைத்திட வாழ்த்துகிறேன்.
இவர் தான் தமிழ் என்பது சற்று அதிகமே!
ReplyDeleteஎப்படியோ இருக்கவேண்டியவர்,பதவிஆசை,தன் குடும்பம் மட்டும் எனும் குறுகிய மனத்தால் சிறுத்துத் தெரிகிறார்.
மற்றவர்கள் எப்படியும் இருக்கட்டும், "கட்டுமரம்" என்பவர் இப்படி இருக்கக் கூடாது.
"மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்"
இந்த 91 லும் இம்மியும் பிசகாமல் அந்த வரிக்கு உயிரூட்டும் அவர் திறனைப் பாராட்டுகிறேன்.
91 க்குப் பரிசாக தேர்தலில் பெரிய முட்டை கொடுத்த தமிழக மக்கள் - சோற்றால் அடித்த பிண்டங்களல்ல!
என்னும் பல்லாண்டு அவர் தன் குடும்பத்திற்காக மட்டும் வாழட்டும். தமிழகத்துக்கும், தமிழருக்கும் போதும்....
super commedy jackie sir
ReplyDelete