காலேஜில் வேலைக்கு போனதுமே போட்டோ... வீடியோ ஆர்டர்கள் எடுப்பதை நான் விட்டு விட்டேன்..
ரொம்ப நெருங்கிய
நண்பர்கள் அதிகம் வற்புறுத்தலின் பேரில் எப்போதாவது
போட்டோ வீடியோ
ஆர்டர் எடுத்துக்கொடுப்பது வழக்கம்...
ஒரு மாதத்துக்கு முன் நெருங்கிய
நண்பர் ஒருவரின் திருமணத்தில் போட்டோ எடுத்தக்கொண்டு
இருந்தேன்... அப்போது....மணமகனின் நெருங்கிய உறவினராம் வெளி நாட்டில் இருந்து வந்து இருக்கின்றாராம்..
ஒரு சின்ன ஹேன்டிகேமில் நிகழ்வுகளை வளைத்து
வளைத்து பதிவு செய்துக் கொண்டு இருந்தார். தரையில் கவுந்து படுத்து எக்ஸ்ட்ரீம் லோ ஆக்கிளில்தான்
அவர் எடுக்கவில்லை.. மற்றபடி எல்லா ஆங்கிளிலும் எடுத்துக்கொண்டு இருந்தார்...
மணமகனின் உறவுக்கார பெண்கள்
வந்தால் இன்னும் நிறைய ஆங்கிளில் எடுத்தார்.
கையில்
காப்பு கட்ட ஐயர் மேளக்காரரை மேளம் அடிக்க சொல்லி பணிக்க... நான் குத்து விளக்கோடு
பிரேம் கம்போஸ் செய்து முட்டி போட்டு ஒரு போட்டோ
எடுத்தேன்...
அந்த வெளிநாட்டு ரிட்டன் போட்டோகிராபர்.. என்னிடம்
வந்து வடிவேல் போல வாண்டட் ஆக வண்டியில் ஏறினார்....
சார் இதுக்கு ஒரு ஸ்டுல் போட்டு மேல இருந்து போட்டோ எடுத்து இருக்கனும் என்றார்...
சார் இந்த போட்டோவை மேடையில் இருந்து கீழ இறங்கி லாக் ஷாட்டுல எடுக்கனும் என்றார்...
அப்படி எடுக்கனுமாக்கும் இப்படி எடுக்கனுமாக்கும் என்று அந்த பாரின் ரிட்டர்ன் படுத்தி எடுத்தார்.
நான் திருமணம் முடியும் வரை பல் கடித்து பொறுமை காத்தேன்...
திருமணம் முடிந்து விடைபெறுமுன் அவரை அழைத்தேன்...
சார் இங்க வாங்க....
சொல்லுங்க சார்...
எத்தனை வருஷாமா இந்த கேமரா வச் சி இருக்கிங்க.,? என்றேன்.
ஜஸ்ட் திரிமன்த் பிபோர்
இந்த கேமரா பாஸ்டன்ல வாங்கினேன்....
எத்தனை போட்டோ எடுத்து இருக்கிங்க –?
எதுக்கு கேக்கறிங்க.?
இல்லை சும்மா சொல்லுங்க...,?
இதுவரைக்கு 227 போட்டோ
எடுத்து இருக்கேன்..... என்று டிஸ்ப்ளே அழித்தி பார்த்து புள்ளி விபரம் சொன்னார்.....
ஏதாவது ஒரு போட்டோவாவது
நீங்க எடுக்கும் போது, நீங்க இப்படி எடுக்கனும்.. அப்படி எடுக்கனும்ன்னு.... நான் சொல்லி
இருக்கேனா?
இல்லையே?
அப்புறம் நான் போட்டோ எடுக்கும் போது மட்டும் அப்படி எடுங்க ..இப்படி எடுங்கன்னு சொல்லறிங்க...,,??
இல்லை சார் ஐஸ்ட் ஒரு ஐடியாதான் சார்...
அப்படியா?
டெப்தஆப் பில்டு அப்படின்னா
என்ன?
என்ன சார்?
டெப்த்ஆப் பில்டு ஆப்டின்னா என்ன?
அப்படின்னா... ???அதை தெரிஞ்சிக்கிட்டு வந்து போட்டோவுக்கு
ஆங்கிள் எப்படி எடுக்கனும்னு எனக்கு ஐடியா
கொடுங்க...
கேமராவை தோள்ள வச்சும் கழுத்துல மாட்டியும் 20 வருஷத்துக்கு மேல
ஆவுது... எப்படியும் 25 ஆயிரம் கல்யாணத்துக்கு
மேல போட்டோ வீடியோ எடுத்து இருக்கேன்... 5 லட்சம் போட்டோவுக்கு மேல எடுத்து இருப்பேன்...அதனால நுனிபுல் மேஞ்சிட்டு எங்கிட்ட வந்து எந்த ஆங்கிள்ள வச்சி எடுக்கனும்ன்னு எங்கிட்ட மட்டுமல்ல... எந்த போட்டோகிராபர்கிட்டயும்
சொல்லாதிங்க... என்றேன்.
பொம்பளைங்க நலுங்கு வைக்கும்
போது ரைட்டுல எடுத்துக்கிட்டு இருக்கும் போது லெப்ட்ல போய் எடுக்க சொல்றிங்க...
குனிஞ்சி நலுங்கு வைக்கும் பொது பொடவ
விலகி மாரு தெரியும்... ஒரு போட்டோ கூட ஆல்பத்துல
வைக்க முடியாது... அதனால எங்க கிட்ட ஆங்கிள்
பத்தி பேசாதிங்க, இப்படி எடுக்க அப்படி
எடுக்கன்னு தயவு செய்து சொல்லதிங்க என்றேன்..
அவர் எதுவும் பேசவில்லை...
சாரி சார் என்று சொன்னார்...
ரொம்ப நாள் கழிச்சி நான்
ரொம்ப பொறுமையா இருந்தேன்...
பட் எனக்கு அப்படி பொறுமையா பேசி அவருக்கும் புரிய வச்சது எனக்கு பிடிச்சி இருந்தது...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
:)
ReplyDelete25000+ marriages !!! u r GREAT if thats true..
ReplyDeletegood that u started to control the anger.. pls keep it up..
ReplyDeletewish u all the success...
நல்லதொரு அணுகுமுறை அண்ணா
ReplyDeleteJackie anna nan neenga left and right anthala vankiruppinganny ninechen. But yazhiniyala ungaloda porumai increase akuthunnu ninikiren
ReplyDeleteஉங்கள் பிளாக் ரெகுலராக படிக்கும் வாசகன் நான். சார் உங்கள் தொழில் பற்றி தெரிந்து கொள்ளவே கேட்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். ஒரு வருடத்திற்கு 60-70 முகூர்த்த நாள் தான் வருகிறது. இருபது வருடம் என்றாலும் 1400 திருமணங்களே வருகிறது. எப்படி 25 ஆயிரம் திருமணம்..?
ReplyDeleteஉங்கள் பிளாக் ரெகுலராக படிக்கும் வாசகன் நான். சார் உங்கள் தொழில் பற்றி தெரிந்து கொள்ளவே கேட்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். ஒரு வருடத்திற்கு 60-70 முகூர்த்த நாள் தான் வருகிறது. இருபது வருடம் என்றாலும் 1400 திருமணங்களே வருகிறது. எப்படி 25 ஆயிரம் திருமணம்..?
ReplyDeleteகெண்டை மீன் கண்கள் அப்படின்னா கெண்டை எங்கன்னு கேட்பிங்களா? கல்யாணத்துக்கு போகும்போது எக்ஸ்சல் ஷீட்டுல எழுதி வச்சிட்டா போவாங்க... ??? பேசும் போது ரைமிங்கா வந்து விழுறதுதான்எழுதும் போதே நினைச்சேன்... எப்படியும் பார்.... நான் உன்னை எப்படி மடக்கிட்டேன்... அல்லது... ஜாக்கி அடிச்சி விடுறார்ன்னு சொல்லி சந்தோஷபட்டுக்கலாம் இல்லையா??? அடிச்சி விட்டா... அடிச்சி விட்டேன்னு கண்டிப்பா நான் சொல்லிடுவேன் நண்பர்களே.. அது மட்டுமல்ல... இதை எத்தனை பேர் கேட்கறாங்கன்னு பார்க்கத்தான் 25 ஆயிரம் கல்யாணம்ன்னு எழுதி இருந்தேன்....ஆனால் கண்க்கில் இல்லாத அளவுக்கு கல்யாணங்க்ள் விழாக்கள் எடுத்து இருக்கின்றேன் நண்பர்களே....
ReplyDeletegreat ji.....Nice advise....
ReplyDeleteGreat Ji......Nice advice......
ReplyDeleteJackie, i did not mean to hurt u..
ReplyDeletesome said one of the reason for Kalaignar's longivity is the no. of marriages he attended.. long live jackie.... cool down..
oru nalaiku 1 kalyanam enralum 20 varushathukku (20 x 365) 7300 naal than sir varudhu
ReplyDeleteஜாக்கி, இவர்கள் ஒரு ரகம்.. இன்னுமொருரகம் அவங்க உங்கள் இனம் அதாவது இக்கலை படித்தோர் அல்லது அனுபவசாலிகள், தாம் எடுத்தது தவிர அத்தனையும் மட்டம் போல் ஏதாவது நொட்டை கண்டு பிடித்துப் புலம்புவார்கள். நம்ம "சுப்பர் சிங்கர் ஜட்ச்"-அல்லது சாருநிவேதிதா போல் என்று கொள்ளலாம்.
ReplyDeleteஆனாலும் சென்னை உலகமயமான பின்னும், அந்த பொறின் றிற்ரேன்...இந்த லூட்டியடித்தது கொடுமையே!
அவருக்கு பொறுமையாக உணர்த்தியது, உங்கள் முதிர்ச்சி!!
புள்ளிவிபரத்தில் 2- பூச்சியம் கூடத் தட்டிவிட்டீர்கள் என நினைத்தேன்.
தங்களது அணுகுமுறைதான் சிறந்தது.அதை விடுத்து நம்முடைய மேதாவித்தனத்தைக் காட்டி இருந்தால் தேவையில்லாத வாக்கு வாதமும்,விரோதமும் வளர்ந்திருக்கும்.
ReplyDeleteதங்களது முறையில் ஒரு புத்திசாலித்தனம் உள்ளது
வாழ்க லளமுடன்
கொச்சின் தேவதாஸ்
நன்றி நண்பர்களே நீண்ட நாட்களுக்கு பின் நிறைய பின்னுட்டங்கள்....
ReplyDeleteஒரு விளக்கம்..
கெண்டை மீன் கண்கள் அப்படின்னா கெண்டை எங்கன்னு கேட்பிங்களா? கல்யாணத்துக்கு போகும்போது எக்ஸ்சல் ஷீட்டுல எழுதி வச்சிட்டா போவாங்க... ??? பேசும் போது ரைமிங்கா வந்து விழுந்தைதான் அப்படியே எழுதியும் வச்சேன்....எழுதும் போதே நினைச்சேன்... படிக்கற எல்லேலாரும் கணக்கு போடுவாங்கன்னு.... எப்படியும் பார்.... நான் உன்னை எப்படி மடக்கிட்டேன்... அல்லது... ஜாக்கி அடிச்சி விடுறார்ன்னு சொல்லி சந்தோஷபட்டுக்கலாம் இல்லையா??? அடிச்சி விட்டா... அடிச்சி விட்டேன்னு கண்டிப்பா நான் சொல்லிடுவேன் நண்பர்களே.. அது மட்டுமல்ல... இதை எத்தனை பேர் கேட்கறாங்கன்னு பார்க்கத்தான் 25 ஆயிரம் கல்யாணம்ன்னு எழுதி இருந்தேன்....ஆனால் கண்க்கில் இல்லாத அளவுக்கு கல்யாணங்க்ள் விழாக்கள் எடுத்து இருக்கின்றேன் என்று அர்த்தம் நண்பர்களே....