கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது... சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ் எழுதி... 2013
ஆம் ஆண்டு என் வாழ்வில் மறக்க முடியாத
ஆண்டு....
அப்படியான நிதி நெருக்கடியில் சிக்கி
தவித்தேன்...தற்கொலை ஏன் செய்து கொள்கின்றார்கள் என்று யோசிக்க வைத்த காலம் அது ..
விட்டோத்தி மன நிலையில் தான் அனைத்தையும் எதிர் கொண்டேன்... வாழ்க்கையே ததிங்கனத்தோம் ஆகிக்கிட்டு இருக்கும் போது என்னத்த எழுதறதுன்னு
எதுவும் எழுத தோனலை... நிறைய எழுத விஷயங்கள்
இருக்கு... எழுத சுத்தமா மூட் இல்லாம இருந்துச்சி... இந்த வருடத்தில்
எழுத மூட் இருக்கு.. ஆனா எழுத நேரம் கிடைப்பதில்லை...
மிக முக்கியமாக நான் யாழினியோடு அதிகம் நேரம் செலவு செய்கின்றேன்...
எழுத்து, காதல் , காமம்
, ரசனை , எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் ஸ்டாக் ஆகி டப்புன்னு நின்னுடும்.... உதாரணத்துக்கு டீசல் என்ஜின் போலன்னு வச்சிக்கோங்களேன்... பத்து நாள் இன்ஜினை ஸ்டாட் பண்ணலைன்னா மக்கார் பண்ணும்... என்ஜின் ஸ்டார்ட் ஆயி சூடு ஏறிடுச்சின்னா... பிச்சிக்கிட்டு பறக்கும்...
ரைட் மீண்டும் உங்களை
சந்திப்பதில் மகிழ்ச்சி.
============
ஆல்பம்.
மத்தியில் மோடிக்கு தனி மெஜாரிட்டி கொடுத்து உட்கார வைத்து அழகு பார்த்தாகி
விட்டது... என்ன செய்ய போகின்றார்...? என்பதை ஒரு ஆறுமாதம் பொருத்து இருந்துதான் பார்க்க
வேண்டும்... யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை கடற்படை கைது செய்வதை நிறுத்த போவதில்லை என்பதைதான் தற்போது மீனவர்கள் கைது நிரூபிக்கின்றது...
சில பல விஷயங்களை பத்திரிக்கைகள்
பாராட்டி தள்ளுகின்றன... அதே போல தங்க நாற்கற சாலை போல வைர நாற்கர ரயில் ரோடுகளை போடபோவதாக அறிவித்து இருப்பது
மகிழ்ச்சி... எல்லா வளமும் இருந்தும் நமது ரயில்கள்.. அதிக பட்சம் 150 கிலோ மீட்டர்களுக்கு
மேல் பயணிப்பது இல்லை என்று நினைக்கின்றேன். வைர நாற்கார இருப்புப்பாதை செயல்படுத்தினால் இந்தியாவிள் உள் கட்டமைப்பு மேம்பாட்டி மேலும் ஒரு
மைல்கல்தான்.
==
தேர்தலுக்கு பிறகு நேற்று வட இந்திய ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்துள்ளன....
பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் ஆண் நண்பரும் குஜராத்
தொழில் அதிபருமான நெஸ்வாடியா மீது பாலியல்
புகார் அளித்து இருக்கின்றார்... இரண்டு பேரும் ஒன்றாகவே 5 வருடம்
திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து இருக்கின்றார்கள்.. பின்பு பிரிந்தாலும் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் இருவரும்
உள்ளனர்... தற்போது ஐபில் போட்டி கள் நடக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்....
வட இந்திய ஊடகங்கள் பாலியல் சீண்டல் குறித்து
விவாதித்து தள்ளி விட்டன... நெஸ்வாடியா இந்த குற்றச் சாட்டை மறுத்து இருக்கின்றார்... பஞ்சாப்
அணி செட்டில்மென்ட்ல ஏதாவது பிரச்சனை இருக்கும்
அதுக்குதான் இந்த அந்தர் பல்டி அடிக்கின்றார் ப்ரீத்தி என்று வட இந்திய ஊடகங்கள்
முனுமுனுக்காமல் இல்லை....
தொழில் அதிபர் என்ற பட்டத்தில் இருந்து விட்டு சட்டென பொறுக்கி ரேஞ்சிக்கு நெஸ்வாடியாவையும் ஒரு பக்கம் வட இந்திய ஊடகங்கள் சித்தரித்துக்கொண்டு இருப்பது
தனி டிராக்.
==============
மிக்சர்.
ஆறு மாதத்தில்
மின்சாரத்தை சீர் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு
வந்து, மின்வெட்டி தவியாய் தவித்து போனார்கள்... மின்வெட்டில் புழுங்கிக்கொண்டே மீண்டும் அம்மாவை அரியனை ஏற்றி இருக்கின்றார்...
தப்பில்லை... ஜுன் முன்றாம்
தேதியில் இருந்து மின்வெட்டு அடியோடு இருக்காது என்றார் இன்னமும் தமிழகம் புழுக்கத்தில்
தவித்துக்கொண்டு இருக்கின்றது.. சூப்பர் ஜி... மின்வெட்டில் தவிச்சி தீஞ்சி போங்க..
========
இரண்டு கருத்துகளுக்கு நான் மிக பயங்கரமாக தாக்கப்பட்டேன்... ஒன்று வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஓட்டுரிமை தேவையில்லை என்ற கருத்துக்கும்
கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதுக்கும் என்னை திட்டி தீர்த்தார்....
முதலில்..
வெளி நாட்டில் இருப்பவனுக்கு
தொகுதியின் நிலையோ அல்லது மின்வெட்டின் அவலநிலையோ
அறியவாய்ப்பில்லை.... அதனால் ஓட்டு தேவையில்லை
என்று சொல்லி இருந்தேன்.. இது எனது கருத்து...
நிறைய பேர் லக்கி வேண்டும் என்றே பேட்டி
என்ற பெயரில் உங்களை காலை வாரி இருக்கின்றார்.. உங்களுக்கு அதிகமான என்ஆர்ஐ நண்பர்கள்... அவர்கைளை கருவருக்கவே இந்த
பேட்டியை உங்களிடத்தில் வாங்கி அவர் டெம்ட் அதிகம் ஏற்றி எழுதி விட்டதாகவும்... இன்பாக்சில் வந்து சிலர் என்னை
ஏற்றி விட்டார்கள்...
லக்கி டெம்ட்டாக எழுதி இருப்பது உண்மைதான்... அதே போல எனது கருத்து என்ன என்பதையும் அன்றே பதிவு போட்டு விட்டேன்...
ஆனால் நிறைய இடத்தில்
என் பெயரை வைத்து பேஸ்புக்கில் நிறைய பேர் திட்டி தீர்த்தார்கள் என்று லக்கியே
போன் செய்து சொன்னார்... எது எப்படியாக இருந்தாலும்
என் கருத்தை சொல்லியே திருவேன்...
எதிர்கருத்தில் ஏற்புடையதாக இருந்தால் எனக்கு ஏற்றுக்கொள்வதில்
எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
பட் அந்த
கருத்தில் எதிர் விணையாக சொன்னவர்கள் கருத்தில்
ஒருவர் கருத்தில் முழு உடன்பாடு எனக்கு
உண்டானது...
அவர் அயனாவரம் ஆனந்..
அம்மாவை விட்டு தூர தேசம் வந்தாலும் அம்மாவின் நினைப்பு
இருந்துக்கிட்டே இருக்கும் இல்லையா..?? அது போலத்தான் எங்களுக்கு நம்ம நாட்டை பற்றி நினைப்பு
இருந்துக்கிட்டே இருக்கும்.... அது
மட்டுமல்ல அவர் சொன்ன இன்னோரு கருத்தில் நான் முழுவதும் உடன்படுகின்றோம்... உள்ளுரிலேயே
இருந்தாலும் , பல துன்பங்களை அனுபவித்தாலும், காசுக்கு தன் ஓட்டை விலைபேசும் மக்கள் அங்கே அதிகம்... ஒரு என்ஆர் ஐ
காசு வாங்கிக்கொள்ளாமல் தனது ஓட்டினை நேர்மையாக பதிவு செய்வான்... என்றார்..
100 சதவிகிதம் உண்மைதான்...
இரண்டாவது கலைஞர் பிறந்தநாள் வாழ்த்துக்கு எனக்கு விழுந்த அர்ச்சனை மிக அதிகம்.
கலைஞர் பிறந்தநாளுக்கு வாழ்த்தினேன்... தமிழுக்கு பிறந்தநாள் என்று சொல்ல தமிழை ஏன் அசிங்படுத்துகின்றீர்கள்
என்று வரிந்துக்கட்டிக்கொண்டு வந்தார்கள்...
கலைஞர் யோக்கியமானவர்
என்று நான் எங்கேயும் வாதாடியதில்லை.. இரண்டு அய்யோக்கியர்களில் நான் கலைஞர் பக்கம் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்....
நான் கலைஞரை வாழ்த்த நிறைய காரணங்கள் உண்டு... அதை
மிக அழகாக முகநூலில் அறிவழகன் எழுதிய கருத்தகள்
உங்களுக்காக.
===
#கலைஞரை வாழ்த்துபவர்கள்
யார் யார்??? - By Arivazhagan Kaivalyam
ஒருவன் தனது முதல் தலைமுறையைக்
கோவணத்தில் இருந்து வேட்டிக்கு மாறியதற்காக அவரை வாழ்த்திக் கொண்டிருந்தான்,
ஒருவன் தனது தலைமுறை முதன்முதலாகக்
கல்லூரிக்குப் போக உதவிய ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வாய்ப்புகளைச் சட்ட
வடிவமாக்கியதற்காக அவரை வாழ்த்திக் கொண்டிருந்தான்.
ஒருவன் மதராஸ் என்கிற
புரியாத பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றியதற்காகவும்,
தமிழையும், ஆங்கிலத்தையும்
மட்டுமே மாநில ஆட்சி மொழியாக மாற்றிச் சட்டம் கொண்டு வைத்ததற்காக ஒருவன்,
கையால் இழுக்கப்பட்ட ரிக்சா
வண்டிக் கொடுமையில் இருந்து தனது தந்தையைக் காப்பாற்றியதற்காக ஒருவன்,
பன்னிரண்டாம் வகுப்பு
வரை இலவசக் கல்வியைப் பெற்றதற்காக ஒருவன்.
மண் வீடுகளில் இருந்து
ஒடுக்கப்பட்ட மக்களை மழைக்கு ஒழுகாத கான்க்ரீட் வீடுகளுக்குக் குடியமர்த்தியதற்காக,
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான
அமைச்சகத்தை முதன் முதலில் உருவாக்கியதற்காக, பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு
விழுக்காட்டை 25 இல் இருந்து 28 ஆக மாற்றியதற்காக ஒருவன்,
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான
இட ஒதுக்கீட்டை 16 இல் இருந்து பதினெட்டாக உய்ரத்தியதற்காக ஒருவன்,
தமிழகத்தின் முதல் விவசாயப்
பல்கலைக் கழகத்தை உண்டாக்கி அதில் கல்வியை வழங்கியதற்காக ஒருவன்,
சேலம் இரும்பு உருக்காலையை
உருவாக்கி அதில் வேலை வாய்ப்புக் கொடுத்ததற்காக இன்னொருவன்,
இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதற்காக,
ஏழைக் குழந்தைகளுக்கான
அரசுக் கல்வித் திட்டம், ஏழை இளம்பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், விதவைகளுக்கான
திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவித் திட்டம்,
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்
பல்கலைக் கழகம் உள்ளடக்கிய ஐந்து புதிய பல்கலைக்கழகங்கள்,
உள்ளாட்சித் தேர்தலில்
33 சதவிகிதப் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சமச்சீர்
கல்வி என்று இன்னும் பக்கங்கள் தீராத மக்களுக்கான திட்டங்களை வழங்கியதற்காக பல லட்சம்
தமிழ்ச் சமூக மக்கள் அவரை நேரிலும், அவரவர் வாழிடங்களிலும், ஊடகங்களிலும், சமூக இணைய
தளங்களிலும் வாழ்த்தினார்கள்
அது போலத்தான் நானும்
வாழ்த்தினேன். ஆனாலும் வாழ்த்துவதே தவறு என்று
நிறைய சைக்கோக்கள் இருக்கின்றார்கள்...
===========
ஈழ பிரச்சனைதான் கலைஞருக்கு
தோல்வியை கொடுத்தது என்று சொல்லுபவர்களுக்கு ஒரே கேள்விகேட்கின்றேன்... கலைஞரை விடுங்கள்
ஈழத்துக்காக தொடர்ந்து குரல் ஏழுப்பும் வைகோ
ஏன் தோற்றுக்கொண்டே வருகின்றார் என்று யாரவது அரசியல் தெரிந்தவர்கள் விளக்கினால் நலம்...
==========
சென்னையில் மெட்ரோ ரயில்
சோதனை ஓட்டத்தை தொடங்கி விட்டது...
பெருமளவு டிரராபிக் நெரிசலை தீர்க்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.. பைக் மற்றும் கார் பார்க் பண்ண சரியாக வசதி செய்து கொடுத்தாலே நிறைய
பேர் பொது போக்குவரத்தை பயண்படுத்துவார்கள்.. நிறைய பறக்கும் ரயில் நிலையங்களில் பைக் பார்கிங் இல்லேவே இல்லை... அப்புறம்
எப்படி ரயிலில் பயணிப்பார்கள்.??
===========
பிரேசிலில் உலக கால்பந்து
போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. ஒர மாதத்திற்கு
திருவிழா களைகட்டும்.. போங்கள்... குவாட்ர் பைனலில் இருந்துதான் களை கட்டும் என்பதால் அப்போதுதான் போட்டிகளை பார்க்க உத்தேசம். ஷாக்கிரா
விடியோவை விட இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்து
இருந்தது...
==========
இன்று தந்தையர் தினமாம்....
அப்பாவுக்கும் என் அன்பு....
=========
இணையத்தில் ரசித்த படம்.
==========
இன்று தந்தையர் தினமாம்....
அப்பாவுக்கும் என் அன்பு....
=========
இணையத்தில் ரசித்த படம்.
==========
நான்வெஜ் ஜோக்
Do you know why they
call it the Wonder Bra?
When you take it off
you wonder where her tits went.
=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

இன்னுருமுறை கலைஞ்சருக்கு வாழ்த்துக்கள் சொன்ன technic super.
ReplyDeleteவெல்கம் பேக் அண்ணே.
ReplyDeleteமீண்டும் இந்த பகுதியை எழுதியமைக்கு வாழ்த்துக்கள்! நமது கருத்தை கூறத்தான் இந்த வலைப்பூவை எழுதுகிறோம்! ஒருவருக்கு வாழ்த்து கூறுவது உங்களின் தனிப்பட்ட விருப்பம்! இதை தூற்றுவது அருவெறுக்கத்தக்க செயல்! பிடித்தால் படித்து வாழ்த்தட்டும்! பிடிக்காவிட்டால் தள்ளிப் போகட்டும்! அதைவிடுத்து ஏகடியம் செய்தல் எதற்கு? என்றுதான் பலர் திருந்தப்போகிறார்களோ? நன்றி!
ReplyDeleteVery good entry.
ReplyDeleteThanks, Jackie.
The video ad from McDonald is very good. If you search on YouTube, you will find several other interesting soccer shots.
வணக்கம் அண்ணே
ReplyDeleteகலைஞருக்கு வாழ்த்துச் சொன்னதுக்கு இந்தளவு அக்கபோரா...
உங்கள் புளொக் உங்கள் தனிப்பட்ட கருத்து....
மறுகருத்த தெரிவிக்கும் உரிமை எமக்கிருந்தாலும் மறுத்துரைக்கும் உரிமையில்லை
தளிர் சுரேஷ்... உண்மைதான்.. ஆனால் பலருக்கு புரிவதேயில்லை என்ன செய்ய??
ReplyDeleteயோவ் அயனாவரம் ஆனந்... கம்முன்னு இருயா.. நாம என்ன பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவா எடுக்க முடியும்---?? விடுங்க.... பப்ளிக் பப்ளிக்
ReplyDeleteவாழ்த்தி வரவேற்கும் தம்பியண்ணன் அப்துல்லாவுக்கு நன்றி ஹை.
ReplyDeleteநாடோடி பையன் ரொம்ப நன்றி... உண்மைதான் நிறைய வீடியோ இருக்கின்றது... வாழ்த்துக்கும் தொடர் வாசிப்புக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteமதி... அப்படி வாழ்த்தியதுக்கு எவ்வளவு திட்டு எவ்வவு அர்ச்சனை தெரியுமா? விடுங்க... நன்றி
ReplyDeleteAnna.. Welcome back... Thanks....
ReplyDeleteஅ ஆ ஆஆ................ மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteஅ ஆ ஆஆ................ மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteதமிழ் = கலைஞர் என்ற ரீதில் இருந்தது "தமிழுக்கு இன்று வயது 91" என்ற உங்கள் தலைப்பு. அதை என்னால் ஒத்துக்கொள்ள முடிய வில்லை. அது தவறுதான். தமிழ் என்றாலே அது கலைஞருக்கு மட்டும் பட்டா போட்டு கொடுத்தது போன்ற இமேஜ் என்று உடையப் போகிறதோ தெரியவில்லை.
ReplyDelete