ராஜராஜ சோழன்
எப்படி இருப்பான்...? அவன் கருப்பா சிவப்பா? தாடி வச்சி இருப்பானா? அல்லது... சிவாஜி
போல புள்ளா ஷேவ் அடிச்சி பளபளன்னு இருப்பானா?
எப்படி அந்த கல்லை மேல ஏத்தி இருப்பானுங்க... ஏதாவது போட்டோ ஆதாரம் இருக்கா? எல்லாம் அசெம்ஷன்ஸ்தான்... இப்படி இருக்கலாம்... அப்படி இருக்கலாம்... என்பதுதான்....
திருவள்ளுவர் எப்படி இருப்பார்...?
அவர் மயிலையில் வாழ்ந்த வீடு எப்படி இருக்கும்?
அவர் எதால திருக்குறள் எழுதினார்...? தாடி வச்சிக்கிட்டு
இருப்பாரா? அதுவும் நிர்மா போட்டு வெளுத்து
எடுத்தது போல வெள்ளை வெளேர்ன்னு இருக்குமா?
ஆனா இன்னைக்கு கமல் களத்தூர் கண்ணம்மாவில் நடிச்சதில் இருந்து இன்னைக்கு உத்தமவில்லன்
வரை எல்லாத்துக்கும் புகைப்படம் இருக்கும்...
முதல் உலக போர் இரண்டாம்
உலக போரின் கோரமுகங்கள் புகைப்பட ஆதாரங்களாக இன்னும் நம் கண்முன்..
ஹிட்லர் இந்த எடுத்துலதான்
6 லட்சம் பேரை சாவடிச்சான்.. என்று சொல்லி
ஆதாரத்துடன் காட்டும் புகைப்படங்கள் ஏராளம்...
யோசித்துப்பாருங்க....
பிலிம் என்ற வஸ்த்து மட்டும் இல்லையென்றால்....?
நிறைய நிகழ்வுகளை நாம் நினைத்து பார்க்க வாய்ப்பே
இல்லாமல் போய் இருக்கும்..... ஒரு போட்டோவை பார்த்து நியாபகங்களை கிளறி விட
பிலிமின் தேவை இன்றியமையாதது......
1970 களில் இருந்து 1995 வரை சிறுவர்களாக இருந்தவர்கள்...
நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே
பிலிம் இருந்து இருக்கும்...
பெட்டிக்கடைகளில் நாலனாவுக்கு 20 பிலிம் பேக் செய்து
வைத்து இருப்பார்கள்.. அவைகளை வாங்கி சூரியா
ஒளியில் சென் செய்தால் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்
ஸ்ரீதேவி போன்றவர்களை கண்டுபிடித்து அப்படியான
பிலிம்களை சேகரிப்பது அந்த காலத்தில் மிகப்பெரிய பொழுது போக்கு... ஒரு எம்ஜிஆர் பிலிமுக்கு பத்து பிலிம் கொடுத்து பண்டமாற்று முறை எல்லாம் நடந்து இருக்கின்றது...
டென்ட் கொட்டகையின் ஆப்பரேட்டர் ரூம் அருகே பழியாக கிடந்து பிலிம் துணுக்குகளை சேகரித்து இருக்கின்றோம்..
இதில் பிலிம் பேக்கில் சிலருக்கு லக்காக எம்ஜிஆர் சிவாஜி போன்ற படங்கள் அருள் பாலிக்கும்... எல்லாவற்றையும்
விட கொடுமை.. ஒரு தமிழ் படத்துக்கு 5 இந்திபடம், பாடாவதி தெலுங்கு படம் எல்லாம் இருக்கும்...
ஒரு எப்படியும் ஒரு கேப்ரே டான்ஸ் பிலிம் கிடைத்து விட்டால்
கொண்டாட்டம்தான்... சின்ன பெட்டியில் சூரிய ஒளி
உள்ளே இருக்கும் லென்சில் புகுந்து
அப்பாவின் அழுக்கு வெட்டியில் மங்கலாக
தெரியும் படமே... அப்போதைக்கு உலகதரம்... அந்த காட்சி கலங்கலாக வெட்டியில் தெரிந்தாலே கைதட்டி மகிழ்ந்த காலம் அது...
ஒரு 40 வாட்ஸ் பல்ப் எடுத்து சிந்தாமல் சிதறாமல் அதில் உள்ளே இருக்கும் டங்கஸ்டனை
எடுத்த விட்டு அதில் சுத்தமான நீரை நிரப்பி
அதில் சூரிய ஒளியை அடித்திட்டால் அதற்கு
முன் பிலிமை வைத்தால் இன்னும் தெளிவான படம் கிடைக்கும்......
பாட்டு பாடி டிக்கெட் கொடுத்து பெல் அடித்து தண்ணிர் பல்பில் படம் காட்டி , 5 பிலிம் காட்டி
விட்டு, இன்டவெல் என்று பெல் அடித்து தெங்கா ரொட்டி
முறுக்கே என்று கூவி...தட்டுமுறுக்கு விற்றது எல்லாம் தனி கதை...
இது எல்லாம் பிலிம் என்ற
வஸ்துவால் சாத்தியமாயிற்று..
சரி பிலிம் எப்படி எங்கே யாரால் கண்டுபிடிக்கப்பட்டது
என்று சின்ன பிளாஷ்பேக் போய் விட்டு வருவோம்.
பிலிமை கண்டுபிடித்தவர்
ஜார்ஜ் ஈஸ்ட்மென் அமெரிக்காவின் நியூயார் நகரில் 1854 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். (ஜூலை 12 ஆம் தேதி.....)பிலிமை கண்டுபிடித்தவர் இவர்தான்..
முதலில் பிலிம் கள் புகைப்படம் எடுக்க பயண்படுத்தப்பட்டு பின்பு சலனபடகாட்சிகளுக்கு பிலிம் ரோல்கள் பயண்படுத்தப்ட்டன…
சினிமா துறையில் பிலிம்
கண்டு பிடிப்பின் முன்னோடி என்று ஈஸ்ட்மேன் போற்றப்பட்டர்…1870 ஆம் ஆண்டு பிலிமை
கண்டுபிடித்தார்.. அதாவது ஈஸ்டமெனின் 16 ஆம் வயதில் பிலிமை கண்டுபிடித்தார்... .
1888 ஆம் ஆண்டு தான் கண்டு பிடித்த பிலிமுக்கு காப்புரிமை பெற்று கோடாக் கம்பெனியை ஆரம்பித்தார்..
கோடாக் கம்பெனி தொழிலாளர்களுக்கு லாபத்தில்
பங்காக ஓய்வுதியம், மருத்துவகாப்பிடு, போன்ற எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கினார்… காரணம் சிறுவயதில் வறுமையோடு வளர்ந்தவர் என்பதால் வறுமையின் கோர முகம் அவருக்கும் நிச்சயம் தெரியும்...
அது மட்டுமல்ல ஈஸ்ட்மேன் சிறுவனாக இருக்கும் போது அவரது அப்பாவுக்கு மூளையில் ஏற்ப்பட்ட உபாதை காரணமாக இறந்தார்... 1862
இல் அப்பா இறந்தார் என்றால்.... அவருடைய தங்கைக்கு
போலியோ பாதிப்பு காரணமாக 1870 இல் இறந்து போனார்...
சோகம் ஒரு பக்கம் வறுமை ஒரு பக்கம்
என்று ஒரு கண்டு பிடிப்பாளனை துரத்தியது என்றால்
அது ஈஸ்ட்மேனைதான் என்பேன்.. இத்தனை ஈடர்பாடுகள்
வந்தாலும் தன் கண்டுபிடிப்பில் கவனம் செலுத்து வெற்றி கண்டது சாதாரண விஷயம் இல்ல.....
கொடுத்து சிவந்த கைகள்
என்றால் ஈஸ்ட்மேனுக்கு கண்டிப்பாக பொருந்தும்,. ஆம் தான் சம்பாதித்த தொகையில்100 மில்லியனுக்கு மேற்ப்பட்ட டாலர்கள்..
ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனைகளுக்கு தராளமாக வழங்கினார்.... நிறைய ஆராய்ச்சி
கண்டுபிடிப்புகளுக்கு முக்கியமாக மருத்துவம்
சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு அதிக அளவு நிதி வழங்கினார்...
எவ்வளவோ தர்மகாரியம் செய்தும் திரைதுறையில் பெரிய
சாதனை நிகழ்த்திய ஈஸ்ட்மேனை விதி விட்டுவைக்கவில்லை…
அவரது முதுகு தண்டுவடத்தில் ஏற்ப்பட்ட தாங்க முடியாத வலி
காரணமாக தன்னை தானே மார்பில் துப்பாக்கியால்
சுட்டு, தற்கொலை செய்துக்கொண்டார்..
தற்கொலைகான கடித்தில்… நான் வந்த வேலை முடிந்து
விட்டு பின் நான் ஏன் காத்திருக்க வேண்டும் என்று எழுதி வைத்து இறந்து போனார்....
"To my friends: my work is
done. Why wait?"
என்று எழுதி வைத்து இருந்தார்...
இந்த காலதேவன் ஏன்.... ஜார்ஜ் ஈஸ்ட்மேனை போட்டு இந்த அளவுக்கு வாட்டி வதைத்தான் என்று தெரியவில்லை...
இந்தனைக்கு மனிதசமுகத்துக்கு நல்லதுதான் செய்தார்.
அவர் மட்டும் பிலிம் கண்டுபிடிக்கவில்லை என்றால்
நிறைய பேர் வீட்டில் பாட்டன் மூப்பாட்டன் போட்டாக்கள் நடு ஹாலில்
அலங்கரிக்க வாய்ப்பே இல்லாமல் போய் இருக்கும்..
இன்னும் போட்டோக்களின் பயண்பாடுகளை எழுதிக்கொண்டே
போகாலாம்.
எச்சி கையால் கூட காக்கா ஓட்டாதவர்கள் எல்லோரும்
நன்றாக இருக்கும் போது தனது பணியாளர்கள் அத்தனை பேருக்கும் நல்லது தானே செய்தார்..?
அப்படி இருந்து அந்த மனிதனுக்கு ஏன் அப்படி ஒரு வலியும் வேதனையும் வெற்றி பெற்ற பின்னும்
கொடுக்க வேண்டும்...
so அப்போது நல்லது செய்வது... தர்மம் தலைகாக்கும்
என்று சொல்வது எல்லாம் பச்சை பொய்யா.....
ஓத்தா பாடுங்களா? யாரைடா ஏமாத்திறிங்க...
நல்லது செஞ்சாலும் கெட்டது செஞ்சாலும் விதி என்னவோ
அதான் என்பது மட்டும்தான் இந்த உலகத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லும்
சேதி.
புகைப்படம் மற்றும் சினிமா உலகம் இருக்கும் வரை,
பிலிம் என்ற வஸ்துவை நினைவு கூறும் போதேல்லாம்....
ஜார்ஜ்
ஈஸ்ட்மேன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
இன்று அவருக்கு பிறந்தநாள்.. அவருடைய நினைவு
தினத்தில் ஒரு பெரும் சரித்தரத்துக்கு சொத்தக்காரனனை கால ஓட்டத்தில் காணமல் போனவை தொடரில்
நினைவு கூர்வதில் கொள்வதில் நான் பெருமை கொள்கின்றேன்..
அமெரிக்காவில் வறுமையிலும்,
சோகத்திலும் மூழ்கி வளர்ந்தவனின் பெயரை... கடலூர் பாதிரிக்குப்பத்தில் இருக்கும் ஜெகதாம்பிகா
டென்ட் கொட்டாய் வரை... அவ்வளவு ஏன் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க போஸ்டர்களிலும் ஈஸ்ட்மென் கலர் என்று தனது பெயரை
இரண்டு நூற்றாண்டுக்கு முத்திரை பதிக்க வைத்தது
சாதாரண காரியம் அல்ல....
பிளாக் அண்டு ஒயிட்டில்
இருந்து கலருக்கு மாறிய பிலிம் ரோல்களின் போது கூட ஜார்ஜ் ஈஸ்ட்மேன் ஆரம்பித்த கோடாக் கம்பெனி பட்டையை கிளப்பியது...
ஆனால் கம்யூட்டர் வருகை
புகைப்படம் மற்றும் திரைதுறையில் டிஜிட்டல் புரட்சியை ஏற்ப்படுத்த பிலிமுக்கான மவுஸ் குறைந்துகொண்டு வர ஆரம்பித்தது..
அதனால்தான் உலகபுகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும்
அரங்கத்தை கோடாக் அரங்கமாக பெயர் பெற்று விளங்கியது.. பிலிம் மவுஸ்
குறையவும் தற்போது அதனை டால்பி சவுண்ட் காண்ட்ராக்ட்
எடுத்துக்கொண்டது...
வரலாற்று ஆவனத்தில் இருந்து.. பல குற்ற வழக்குகளில்
புகைப்படங்கள் ஆதாரங்களாக மாறி இருக்கின்றன... அதற்கு காரணகர்த்தா பிலிம் என்பதை மறக்க
முடியாது..
பிலிம் இன்னும் கொஞ்சம்
நாளில் முழுவதும் மறையலாம்.. ஆனால் அது ஏற்ப்படுத்திய
தாக்கம் மற்றும் வரலாற்று ஆவனங்கள்... மனித சமுகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
பிலிம் ரோலில் போட்டோ எடுத்த நினைவுகள் வந்துவிட்டது! நல்லதொரு பகிர்வு!
ReplyDeleteGreat post. Thanks.
ReplyDeleteபிலிம் பற்றி அறியத் தந்தீர்கள்...
ReplyDeleteவீட்டுச் சுவற்றில் பெட்டிக்கடையில் வாங்கிய பிலிமை வைத்து படம் ஓட்டி விளையாண்ட சந்தோஷ நினைவுகள் மீண்டும் என்னுள்...
நன்றி அண்ணா....
Digital camera and light emitting diodes were invented by Kodak scientists. In fact, Kodak owns the digital camera patent. However, other companies found loopholes in the patent and built a patent portfolio to kill the business of Kodak. Unfortunately, Kodak lost both digital camera and film business.
ReplyDeleteபாட்டு பாடி டிக்கெட் கொடுத்து பெல் அடித்து தண்ணிர் பல்பில் படம் காட்டி , 5 பிலிம் காட்டி விட்டு, இன்டவெல் என்று பெல் அடித்து தெங்கா ரொட்டி முறுக்கே என்று கூவி...தட்டுமுறுக்கு விற்றது எல்லாம் தனி கதை...
ReplyDeleteReally superb nostalgic feel ...Small hand lens with plastic frame available for 50 paise but the image will be small, so we made Bulb lens . We made plane glass with Black ash from lantern to show welcome and no smoking messages, paper cuttings used for publicity and notice hand written.