சாண்ட் வெஜ் அண்டு நான் வெஜ்/17/09/2014


நீண்ட நாட்கள்  ஆகி விட்டது... இனி நேரம்  கிடைக்கும் போதாவது சாண்வெஜ் நான் வெஜ் எழுதி வைப்போம்.
  ஆல்பம்.
 ஆசை60 வது நாள் மோகம்  முப்பது நாள்ன்னு சொல்லுவாங்க...  இந்தியாவில் மோடி பீவர் முடிந்து விட்டது என்று கட்டியம் கூறுவது போல 9 மாநிலங்களில் நடந்த இடை தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு பெருத்த  பின்னடைவு ஏற்பட்டுள்ளது..நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை ரட்சிக்க வந்த பிதாமகன் மோடிதான் என்று நினைத்து  பொருவாரியான தொகுதிகளில் வாக்களித்த மக்கள்... 100 நாட்களில் இப்படி ஒரு முடிவை கொடுத்து  பிஜேபிக்கு வயிற்றில் புளியை கரைத்து விட்டனர்.
====

இன்று  இந்திய பிரதமர்  மோடி அவர்களுக்கு க்கு பிறந்த நாள்... இந்திய குடிமகனாக அவருக்கும்  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
=========
 காஷ்மீர் வெள்ளத்தை பார்த்து  மெர்சலாகி கிடக்கின்றேன்... மாடி வீடுகள் எல்லாம் மூழ்கி கிடக்கின்றன...200க்கு மேற்ப்பட்ட மக்கள் இறந்து போய் உள்ளார்கள்.... சேட்டிலைட் போட்டோவில் பார்த்தால் வெள்ளம் எந்த அளவுக்கு பாதித்து இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ள முடிகின்றது.,. அது மட்டுமல்ல மார்பளவு தண்ணியில்  இராணுவ  வீரர்கள் காவல் காக்கின்றார் என்று பேப்பரில்   படிக்கும் போதே வெள்ளத்தின் வீச்சினை அறிய முடிகின்றது.4 லட்சம்  மக்கள் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றார்கள். காஷ்மீர்  இயற்கை அன்னையோடு  இணைந்து மீண்டு வர எல்லாம் வல்ல பரம்பொருளிடம்  பிரார்த்திப்போம்.

======
ரொம்ப நாளா சீனா வாலை கொஞ்சம் கொஞ்சம் காட்டிக்கிட்டு வாலாட்டிக்கிட்டு இருந்துச்சி.. சீன பிரதமர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்த வேலையில்  திரும்ப எல்லை  பிரச்சனையில் பிரச்சனை  செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்... அதே போல பிஜேபி ஆட்சி காலத்தில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் போதே பாகிஸ்தான் தீவிரவாதிகள்... இந்தியாவில் ஊடுருவினார்கள் என்பது வரலாறு...
========
மிக்சர்.


தமிழர்களை சயமரியாதையோடு  வாழ கற்றுக்கொடுத்து, தன்  உயிர் மூச்சுவரை தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட   தந்தை பெரியாருக்கு இன்று பிறந்தநாள்....சுயமரியாதை பற்றி பேசும் போது எல்லாம் தமிழர்களின் மனத்திரையில்  வந்தமரும் ஈரோட்டுக்காரர்.

========
இன்னும் மூன்று  நாட்களில் ஜெயலலிதா  மீதான  சொத்துகுவிப்பு வழக்கு  தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்த  நிலையில் , தற்போது விடுதலைபுலிகளால் தனக்கு அச்சறுத்தல்  என்று முதல்வர் மனு செய்ய...? தீர்பினை வரும் 27 ஆம் தேதிக்கு மாற்றியதோடு  பரப்பன அக்ரஹாரா தனிக்கோர்ட்டுக்கு  மாற்றி  இருக்கின்றார்கள்...
========
ஐநா மன்றத்தில் ராஜபக்சே கலந்து கொள்வதை கண்டித்து  வரும் 25 அம் தேதி அன்று கருப்பு சட்டை அணிந்து  எதிர்ப்பை  தெரிவியுங்கள் என்று  கலைஞர் சொல்லி  இருக்கின்றார்... எதுக்கு இவருக்கு இந்த வேலை...?? நீங்கதான் ஈழ  விரோதி ஆயிற்றே.. எங்களுக்கு எல்லாமே ஈழத்தாய்ன்னு சொன்னாங்க.. அவுங்களே விடுதலைபுலிகளால் தனக்கு அச்சுறுத்தல் என்று சொல்லி இருக்காங்க.. இது குறித்து யாருமே  வாய் திறக்கவில்லை....   எல்லாம் செலக்ட்டிவ் அம்னிஷியாதான் காரணம்.
=========
திநகர்  நடை பாதை வியாபாரிகள் கடையை காலி செய்து அவர்களுக்கு  பாண்டிபஜார் பகுதியில்  பிக் பஜார்  அருகில் அரசு செலவில்  அவர்களுக்கு வணிக வளாகம் அமைத்து கொடுத்தார்கள்...
  பட்டா போட்டு பணம் கொடுத்து வாங்கியது போல ... எங்களுக்கு கடைகள் ரொம்ப சின்னதாக  இருக்கின்றது  என்று முதலில்   உள்ளே போகும் முன்பே எதிர்ப்பு தெரிவித்தார்கள்..  இப்போது உள்ளே போய் கடையை ஆக்கிரமித்து வியாபாரம் நடந்து கொண்டு இருக்கின்றது..
 மொத்தம் 600க்கு மேற்ப்பட்ட கடைகள் இருக்கின்றது.. 300க்கு மேற்ப்பட்ட கடைகளில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை..  அதனால்  தீபாவளி வரையாவது நடைபாதையில் கடை வைப்போம்  என்று   தங்களை கடையை பூட்டி  விட்டு  போர் கொடி  தூக்கி இருக்கின்றார்கள்..

இவர்களுக்கு  இன்னும் என்னதான் அரசு செய்ய வேண்டும்... நடைபாதையில் செல்லும் மக்களை  அவர்களை கடை வைத்து இருக்கும் வணிகவளாகத்து திரும்பி அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா? என்று தெரியவில்லை...
சரி அப்படி திரும்பவும் நடைபாதையில்தான் கடை வைப்போம் என்றால் எதற்கு  கோடிக்கணக்கான செலவில்  வணிகவளாகம் மக்கள் வரிப்பணத்தில் அமைத்துக்கொடுக்க வேண்டும்..???
இப்போதுதான் மக்கள் பிரியாக  பாண்டி பஜார் நடைபாதையில் நடக்க  தொடங்கி இருக்கின்றார்கள்.. ஆனால் அதற்குள் வணிக வளாகத்தில் கடையும் வேண்டும் .. பிளாட்பாரத்தில்  கடையும் வைக்க வேண்டும் என்றால் என்ன நியாயம் என்றே எனக்குபுரியவில்லை.
இந்த காமெடி எல்லாம் நம்ம நாட்டில்தான் நடக்கும்....
============
ஐ படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு  ஹாலிவுட் நடிகர்  அர்னால்டு வந்து தமிழகத்தையும் பேஸ்புக்கையும் அல்லோலகல்லோல படுத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.தயாரிப்பாளரும், சங்கரும் நினைத்தது நடந்து விட்டது.. பிரி  மார்க்கெட்டிங் ...
======
புத்தக விமர்சனம்.

தம்பி  விஷ்வா    தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து  இருக்கின்றார்.... பதிப்பக துறையில் இன்னும்  சாதனை அடைய வாழ்த்துகள்....
உல்லாச  கப்பல் பயணம்  என்ற  நாவலை கொடுத்து  வாசிக்க கொடுத்தார்... நாவலை எழுதியவர்.. கிருத்திகா என்ற பெண்மணி..
5 நாட்கள் உல்லாச கப்பலில் தன் குடும்பத்தோடு பயணித்த  பெண்மணியின் பார்வையில் இந்த நாவ்ல் எழுதப்பட்டு இருக்கின்றது... இதனை நாவல் என்று சொல்வதை காட்டிலும் பயணக்கட்டுரை என்று சொல்வதுதான் ஏற்புடையது... ஸபீட் டூ படத்தில் பிரமாண்ட கப்பலை பார்த்து இருக்கின்றோம்... டைட்டானிக் படத்தில் பார்த்து இருக்கின்றோம் என்றாலும் முதல் பயணியின் பார்வையில் தமிழில் உல்லாச  கப்பலை பற்றி மிக  நுனுக்கமாக பார்த்து பார்த்து பல விஷயங்களை சுவாரஸ்யமாக  எழுதி இருக்கின்றார்...
முதல் முறையாக  கப்பல் பயணம் செய்பவர்கள்... அவசியம் இந்த புத்தகத்தை வாசித்து விட்டு செல்லலாம் அந்த அளவுக்கு செய்திகள் பொதிந்து உள்ளன...
புத்தகம்  வேண்டுவோர் தமிழ் காமிக்ஸ் உலகம் பதிப்பகத்தை தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..tamilcomicsulgam@gmail.com... மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்...
===========
 சினிமாவை பற்றி ஒரளவுக்கு தெரிந்தாலும் சினிமாவின்  வீச்சு  என்ன என்பதை என்னால்  உணர முடிகின்றது.... சிகரம் தொடு திரைப்படத்தில் ஒரு காட்சியில்  நான் தலை காட்டினாலும் காட்டினேன்... நிறைய ஊர்களில் இருந்து பழைய நண்பர்கள் எல்லாம் போன்   செய்து பாராட்டுகின்றார்கள்....  போன் செய்யாத பழைய நண்பர் போன் செய்கின்றார் என்றால் அவர் படம் பார்த்து  விட்டு போன் செய்கின்றார் என்று அர்த்தம்... போனை எடுத்தும்  என்ன மச்சி படம் பார்த்தியா? என்று கேட்டால் அசடு வழிகின்றார்கள்..
===========
நான்வெஜ் 18+
Three friends by the names Fuckoff, Shit, and Manners go for a walk but Shit gets run over. So Fuckoff goes to look for help when he finds a Local Policeman He tells him what happened and the Cop says "Slow down pal, Whats your name?" "Fuckoff" he replies The cop says "Name please?" This time he replied a little slower making sure to enunciate the syllables "Fuuuuck offfffff" The policeman begins losing it big time and says "Where's your manners?" The reply came back "Picking shit up off the road"

=====
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  2. //நீங்கதான் ஈழ விரோதி ஆயிற்றே.. எங்களுக்கு எல்லாமே ஈழத்தாய்ன்னு சொன்னாங்க.. அவுங்களே விடுதலைபுலிகளால் தனக்கு அச்சுறுத்தல் என்று சொல்லி இருக்காங்க.. இது குறித்து யாருமே வாய் திறக்கவில்லை.... எல்லாம் செலக்ட்டிவ் அம்னிஷியாதான் காரணம்.// தலைவரின் பிள்ளை ஸ்டாலினுக்கு விடுதலை புலிகளால் ஆபத்து இருக்கிறது என்று டி.ஆர்.பாலு மூலமாக சனாதிபதி அய்யாவுக்கு ஓலை அனுப்பிய அதே கருணா தான் இப்போ விடுமுறையில் இருப்பதால் டெ”ஷோ” காட்டுகிறார். மற்றபடி இங்குள்ள அரசியல் வியாதிகள் அனைவரும் ஈழப்புலிகளை தங்களின் பிழைப்பை ஓட்டவே பயன்படுத்துகின்றனர் என்பது வரலாறு. இதில் கருணா என்ன, செயலலிதா என்ன?

    மற்றபடி வழக்கம்போல ஜாக்கி அண்ணனின் சண்ட்விச் சுவையே.. .யாழினியும் அண்ணியும் நலம் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  3. Sir good to see u in Sigaram Thodu..
    Keep it up

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner