இசை தேவதூதன் எனும் மைக்கேல் ஜாக்சன்

இந்த உலகில் புகழ்   போதை இல்லாத மனிதன் உண்டா....? சொல்லுங்கள்....

 சார் எனக்கு புகழ் போதையே கிடையாது... என்று நீங்கள் சொன்னால் இந்த வரிக்கு மேல் இந்த பதிவை நீங்கள்  படிப்பது என்பது நேர விரயம் என்பதால் இத்தோடு நீங்கள் கழண்டுக்கொள்வது  உங்களுக்கும் எனக்கு ரொம்பவே நல்லது...


சார் நீங்க அந்த படத்துல வடிவேலுக்கிட்டு தொடப்பட்க்கட்டையால உதை வாங்குவிங்களே? அவர்தானே நீங்க என்று  சிறிய வேடத்தில்  நடித்தவரை நியாபகம் வைத்து இருக்கும்... சந்திரனுக்கு ராக்கெட் உட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை   தொடப்பக்கட்டையால் அடி வாங்கியவருக்கு பக்கத்திலே நின்று இருந்தாலும்  பாராட்டி புகழந்தவருக்கு  ஒன்றும் தெரியாது...

புகழ் என்றால்  பெரிய அளவில் இருக்க  வேண்டும்... எம்ஜிஆருக்கு தமிழ் நாட்டில் இருந்த செல்வாக்கு போல... கலைஞரின் பேச்சுக்கு கால் கடுக்க  நின்று இருந்தது போல,60 வயசுல  ஸ்கீரீன்ல ரஜினி நின்னா நடந்தா  வயசு வித்தியாசம் பார்க்காம தலைவான்னு ஸ்கீரினை தொழுவது  போல புகழ் பெற வேண்டும்....

வட இந்தியாவில் ஷாருக்கான் மேல் அப்படி ஒரு மோகம்... அமிர்கான் மேல் அப்படி ஒரு காதல்...

ஆனால் ஏதோ பிளாக்ல எழுதி... நாலு வரி  படிக்கறவனுக்கு புடிச்சி....  அவன் கால் பண்ணி சார்.. அந்த பதிவு  ரொம்ப அசத்தாலா இருக்குன்னு சொல்லும் போது  ஒரு நிறைவு வரும்...

 கர்வம் வர வேண்டும் என்றால் சுஜாதா போல பாலகுமாரன் போல எழுத்தில் எழுதி கலக்கினால் மட்டுமே சாத்தியம்.. என்னை பொருத்தவரை கலக்குதலை விட நாலு பேருக்கு நாம்  பெயர் அறிமுகமாகி இருக்கின்றதே என்பதே எனக்கு எல்லாம் பெருமை.

ஆனால் யோசித்து பாருங்கள்,... விஜய், சூர்யா, தனுஷ் எல்லாம் ரொட்டில் பிரியா நடந்து போய் விட முடியுமா? சொல்லுங்கள்...  மெரினா படத்துக்கு முன்னும்   மெரினா படத்துக்குபின்னும் சிவகார்த்திகேயனை சந்தியம்  சினிமாவில் பார்த்து இருக்கின்றேன்..  மிக சாதாரணமாக நின்றுக்கொண்டு இருப்பார்... இப்போது அவரே  நினைத்தாலும் அப்படி நிற்க முடியாது  என்பதே  உண்மை...

அப்படியான  புகழ்  எவ்வளவு சந்தோஷத்தையும் பெருமையையும் கொடுக்கும்... உதாரத்துக்கு லொள்ளு சபாவுல ஒரு ஆளா நடிச்சிக்கிட்டு இருந்த சந்தானம் இன்னைக்கு தமிழ் சினிமாவுல  நம்பர் ஒன் காமெடியன்... பட் கூடவே நடிச்சிக்கிட்டு இருந்த ஆளுங்களுக்கு  சந்தானம் வளர்ச்சியையும் அவருக்கு கிடைச்ச புகழையும் நினைச்சா எப்படி  இருக்கும்..? சில பேருக்கு தூங்கமே வந்து இருக்காது. இல்லையா...

 பட் எனக்கு இந்த புகழ்களில் எல்லாம் எனக்கு பெருமை இல்லை.,..

 38 வயதில் எனக்கு ஒருவரை  போல புகழ் பெற வேண்டும் என்ற ஆசை...

 புகழ் என்றால் சாதாரண புகழ் இல்லை... நீங்கள் இந்த  பூவுலகில் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத புகழ்.  நின்றால் , நடந்தால், கண்ணாடி கழட்டினால், கால் எடுத்து ஒரு ஸ்டெப் வைத்தால், அழுது கலங்கி, திமிரி  எத்தனை எத்தனை ரசிகர்கள்??? எப்படி சாத்தியாம் ?? 

 புகழ் என்றால் இதுதான் புகழ்... ,இந்த பூமியில்  பிறந்தால் இப்பயான புகழை பெற  வேண்டும். அப்படி  பட்ட புகழை  நான் அடைந்தால் எப்படி இருக்கும்  என்று சில தினங்களுக்கு  முன் அந்த வீடியோ வை பார்க்கும் போது  கற்பனை செய்து பார்தேன்.. உடம்பே சிலிர்த்து விட்டது.

ஒரு கால் பந்தாட்ட மைதானம் எவ்வளவு பெரியது...?? அந்த மைதானம் முழுவதும் மக்கள் நின்றுக்கொண்டு தேவதூதனை பார்க்க காத்து இருப்பது போல காத்திருந்தால்  உங்களுக்கு எப்படி  இருக்கும்...???

 சேர் போட்டு எல்லாம் உட்கார  வில்லை.. எல்லோரும் நின்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஆண் பெண் என்ற பேதம் இல்லை...

 நெரிசலில் மூச்சி தினறி மயங்கி விழுபவர்களை அள்ளிக்கொண்டு சென்று முதலுதவி செய்ய பவுன்சர் குழு ஒன்று  திரளனா மக்களிடையே சுற்றிக்கொண்டு இருக்கின்றது...

 மக்கள் நிகழ்ச்சி தொடங்கும் நேரம்  வர வர மக்கள் ஒரு மாதிரி  டென்ஷனாக இருக்கின்றார்கள்.... அவர்கள் எந்த நேரத்திலும் காவலர்களை தள்ளி விட்டு   மேடையில் சில  நொடிகளில்  தோன்றப்போகும்  தேவ தூதனை காணவும்... அவனை  ஒரு  முறையாவது தொட்டு பார்த்து ஜென்ம சாபல்யம் அடையவும் பெண்கள்   கூட்டம்  முண்டியடித்துக்கொண்டு இருக்கின்றது... பவுன்ஸ்லர்கள்  கூட்டத்தை கட்டுப்பட்டுத்த பெரும் சிரமம் அடைகின்றனர்.

  நிகழ்ச்சி தொடங்க போகின்றது.

 இசை தொடங்குகின்றது... தேவதூதன் குரங்கு போல  தாவி மேடையில் வந்து நிற்கின்றான்... கூட்டம் மகிழ்ச்சியில் அழுது ஆர்பாரிக்கின்றது.. கள்ளு குடித்த குரங்கு போல  மக்கள் ஒரு மாதிரியான உன் மத்தமான நிலைக்கு செல்கின்றார்கள்..
 மேடையில் எந்த அசைவும்  இன்றி தேவதூதன் அப்படியே நிற்கின்றான்... மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக   கூச்சலை குறைக்கும் போது  தேவதூதன் சடார் என்று திரும்புகின்றான்.. அவ்வளவுதான் திரும்பவும் கூக்குரல்.. திரும்ப அசைவற்று ஒரு 45 செகன்ட், திரும்ப கண்ணாடியை அவிழ்க்க கூட்டம் கத்தி தீர்கின்றது... சின்ன அசைவு கத்தி தீர்க்கின்றது... ஒரு இடத்தில் என்றால் பரவாயில்லை  உலகம் முழக்க இப்படியான  ரசிகர்கள் பெறுவது என்றால் அது  யாருக்கும் சாத்தியமில்லை.. அது  தேவதூதனுக்கே  சாத்தியம்.. அந்த தேவ தூதன் வேறு யாருமில்லை.. பாப் பாடகர்  மைக்கேல்ஜாக்சன். 

இன்றளவுக்கு இவர் போல புகர் பெற்றவரும்  அந்த உலகில்  இல்லை.. அதே வேளையில் சர்ச்சையில் சிக்கயவர்களும் இல்லை...

  இவரின் பிளாக் அன்டு ஒயிட் அல்பம்  ஒரே  நேரத்தில் 27 தேசங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.. 50 கோடி பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்த பாடல் அது...
 இதுவரை இந்த பூமி பந்தில் 50 கோடி பார்வையாளர்கள் ரசித்த ஒரே நிகழ்ச்சி இன்றுவரை அது மட்டுதான்...சிலருக்கு மட்டும்தான் இந்த அதிஷ்டம் கிடைக்கும் ஆனாலும் அந்த புகழே அவரை நிறைய இடங்களில்  தடுமாற வைத்தது என்று சொல்லலாம்...

 என்னை காதலிக்கு காதலிகள் என் வீட்டு எதிரில்  வந்து நிற்கலாம் என்று மைக்கேல் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் பத்து கிலோ மீட்டர் நீளத்தக்கு பெண்கள் நின்று இருப்பார்கள்... அந்த அளவுக்கு ஆண்ககளும் பெண்களும் கிங் அப் பாப்   மீது காதல்  கொண்டு இருந்தார்கள் எனலாம்.அதே நாளில் அமெரிக்காலில் மைக்கேல் ஜாக்சன் பிறந்தார்... என்னை போல  கன்னி ரசிக்காரர்கள்தான்... ஆனால் ஏதோ ஒன்று  அவரை உலக அளவில் புகழ் பெற அதுவும் சாதரண புகழ் எல்லாம் இல்லை.. அப்படியான புகழை  இந்த பூவுலகில் பெற்றவர்.


இனி எக்காலத்திலும் அப்படியான புகழை அவருக்கு இணையாக  இசை உலகில் பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான்...

அவரின்  பாடிக்கொண்டே ஆடும் அந்த ஸ்டைல்  

ஒன்றுக்காகவே அவரை  உருகி உருகி கொண்டாடலாம்.இன்று பிறந்து உலகை ஆண்ட இசை அரசன் அவன்.. அவன் புகழ் இந்த பூவுலகம் உள்ளவரை  நிலைத்து நிற்கும் ஹேப்பி பார்த்டே கிங் ஆப் பாப். 


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
29/08/2014
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

3 comments:

 1. ஹாய்...ஜி..,
  முதலில் இந்த பதிவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
  அதென்ன.. நினைவு தினம்..அது இறந்து போனவர்களுக்குத்தானே..
  அவர் இறந்து விட்டதாக உலகத்தின் அனைத்து ஊடகங்களும் சொல்லியன.சரி..
  ஊடகங்கள் உண்மையை மட்டுமே சொல்லாது என்பது குழந்தைகளுக்கும் தெரியும்.
  அவர் நம்மோடு இருக்கிறார்..இந்த பதிவை நீங்கள் இடும்போது உங்கள் பக்கத்திலேயே நின்று ரசித்துக் கொண்டிருந்திருப்பார்...
  நான் அவரின் ரசிகன், வெறியன்...என்று சொன்னால் அது படு பழைய டயலாக்.சரி..எனக்கும் அவருக்கும் என்ன உறவு என்றால்....¿{■\~◇◆《¡¿#&(; $÷☆¤
  அவர்தான் இந்த உலகை படைத்தார் என்றால் அதை நம்பும் பல கோடி ரசிகர்களில்,(முட்டாள்களில்., வெறியர்களில்., பைத்தியங்களில்)அடியேனும் ஒருவன்.
  உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் ..தொடர்பவர்களில் ஒருவன் என்ற உரிமையிலேயே இந்த கமென்ட்..
  என் முதல் படமான 'ஆப்பிளை' அவருக்குத்தான் சமர்ப்பிக்கப் போகிறேன்..

  ReplyDelete
 2. ஹாய்...ஜி..,
  முதலில் இந்த பதிவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
  அதென்ன.. நினைவு தினம்..அது இறந்து போனவர்களுக்குத்தானே..
  அவர் இறந்து விட்டதாக உலகத்தின் அனைத்து ஊடகங்களும் சொல்லியன.சரி..
  ஊடகங்கள் உண்மையை மட்டுமே சொல்லாது என்பது குழந்தைகளுக்கும் தெரியும்.
  அவர் நம்மோடு இருக்கிறார்..இந்த பதிவை நீங்கள் இடும்போது உங்கள் பக்கத்திலேயே நின்று ரசித்துக் கொண்டிருந்திருப்பார்...
  நான் அவரின் ரசிகன், வெறியன்...என்று சொன்னால் அது படு பழைய டயலாக்.சரி..எனக்கும் அவருக்கும் என்ன உறவு என்றால்....¿{■\~◇◆《¡¿#&(; $÷☆¤
  அவர்தான் இந்த உலகை படைத்தார் என்றால் அதை நம்பும் பல கோடி ரசிகர்களில்,(முட்டாள்களில்., வெறியர்களில்., பைத்தியங்களில்)அடியேனும் ஒருவன்.
  உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் ..தொடர்பவர்களில் ஒருவன் என்ற உரிமையிலேயே இந்த கமென்ட்..
  என் முதல் படமான 'ஆப்பிளை' அவருக்குத்தான் சமர்ப்பிக்கப் போகிறேன்..

  ReplyDelete
 3. ' மேட் இன் ஜப்பான் 'என்பது ' மேக் இன் இந்தியா 'வாக மாற மோடி ஆசை
  http://www.dinamalar.com/news_detail.asp?id=1060600
  டோக்கியோ: ஜப்பான்- இந்தியன் அசோசியேஷன் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மேக் இன் இந்தியா என்று உலகம் முழுவதும் பிராண்டு பெயர் பெற வேண்டும் இதுவே எனது ஆசை என்று குறிப்பிட்டார். மேலும் ஜப்பான் முதலீட்டாளர்கள்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner