ஒரு அலட்சியத்துனுடேதான் இந்த திரைப்படத்தை அனுகினேன்.. காரணம் 1995 ஆம்
வருடத்திய திரைப்படம் என்பதால்...
படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷம்.. கொய்யால இதுதான்டா
படம்ன்னு கட்டன கைலியோட அப்படியே உட்கார்ந்து
பார்க்க ஆரம்பிச்ச படம்...
சரியான சைக்காலிஜிக்கல் திரில்லர்.... படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் அந்த விறுவிறுப்பு
படம் நெடுக அது முடியும் வரை கொண்டு போவது படத்தோட சிறப்பு... சான்சே இல்லை.. அசத்திட்டானுட்ங்க..
முக்கியமா ஏலியன் படத்துல மார்பு சின்னதா...
ஒத்தை புள்ளைய காப்பாத்த.... தனி பொம்பளையா வெற்றி கிரக ஜந்துக்களுடன் உயிருக்கு
போராடுவாளே ஒரு பொம்பளை... அவதான் இந்த படத்தோட நாயகி.. அவளை சுத்திதான் கதை.. சாமி சத்தியமா அந்த
பொம்பளையோட பேரு என்னன்னு கூட எனக்கு தெரியாது... தோ இருங்க பார்த்துட்டு வரேன்...
சிகோனி வீவர்....(Sigourney
Weaver ) ஹெலன் பாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்...
அவர் டாக்டரேட் பட்டம் வாங்கியவர்... அதுவும்
யாரை பற்றி???
சீரியல் கில்லர்களை பற்றி...
தினமும் டிவியில் சீரியல்
எடுத்து கொலையா கொல்லறானுங்களே.... அவனுங்களை இல்லை...
உண்மையாளுமே..... கொடுரமா தொடர்ச்சியா கொல்லற கொலைகாரனுங்களை
பற்றி அக்குவேறா ஆணி வேற.... அலசி துணியை துவைச்சி புழிய வைக்கற அளவுக்கு ... அப்படி
ஒரு அலசல் பண்ணி கொலைகாரன்களை விஸ்ட்டே வச்சி
இருக்காங்க..
உதாரணத்துக்கு மணல்மேடு ரவின்னு அவுங்க கிட்ட சொன்னா
போதும்... பொண்ணுங்களை கொலை பண்ணுவான்...
கொண்ணுட்டு வாயில மண்ணைக்கொட்டிட்டு போயிடுவான் என்று டீடெயிலாக
சொல்லுவார்....
அந்த அளவுக்கு
எல்லா சீரியல் கொலைகாரனுங்க கொலை செய்யற
ஸ்டைலும் டாக்டருக்கு அத்துப்படி...
சீன் அப் கிரைம் சொன்னா போதும்...
இந்த கொலையை கண்டிப்பா அவடி பரணி
பண்ணி இருப்பான் காரணம்... பொண்ணுங்க முடியை புடிச்சி இழுத்து போட்டு நிலைய
குலைய வச்சிட்டு அதுக்கு அப்புறம் கொஞ்சம்
கொஞ்சம்.,...
வேண்டாம்.. டாக்டர்..??
ஏன்பா..?
எனக்கு பயமா இருக்கு....
அப்படின்னு அந்த அம்மாக்கிட்ட பொலம்பற அளவுக்கு எலும்பை
சில்லிடவைக்கும் அளவுக்கு டீடெயில் கலெக்ட் பண்ணி வச்சி இருக்கற மகா புண்ணிய வதி.
காப்பி கேட் படம் ஆரம்பிக்குது.. வீவர்... கருத்தரங்குல பேசிக்கிட்டு இருக்காங்க... சீரியல்
கில்லர் எப்படி பட்டவங்கன்னா.. இந்த கூட்டத்துல நம்ம கூடவே உட்கார்ந்துக்கிட்டு இருப்பாங்க..
யாருக்கும் சந்தேகம்
வராது.. வெறி வரும் போது மட்டும் கொலை செய்வாங்க.. அதுவரை அவுங்க ரொம்ப சாப்ட் என்று சொல்லுவார்...
முக்கிய கொலைகாரன் அப்படின்னா
..
கருப்பு பனியன்ல வரிவரியா கோடு
போட்டு இருக்கனும்ன்னு அவசியம் இல்லை.... அன்பே சிவத்துல சொல்லறது போல.. நல்லா சிவப்பா ஜம்முன்னு அமுல் பேபி கணக்காகவும் இருக்கலாம் என்று சொன்ன... ஐந்து நிமிடத்தில்
ஒரு சீரியல் கொலைகாரன் அந்த டாக்டர் அம்மாவை கொலை பண்ண முயற்சிக்க.. அதுக்குப்பிறகு டைட் செக்யூரிட்டி இருக்கற வீட்டுலயே வாழ்க்கையை
வாழறாங்க...
வீட்டை விட்டு வெளியே வந்தா பயம்... அப்படி ஒரு போபியாவுல சிக்கிட்டுட்டு இருக்கும்
போது திரும்பவும் நகரில் இளம்பெண்கள் கொடுரமாக கொலையாகின்றார்கள்..
இந்த டாக்டரம்மாவையும் கொலை பண்ண ஒருத்தன் வரான்... டாக்டரம்மா எப்படி தப்பிக்கிறாங்கன்னு றதுதான் கதை..
சும்மா பட்டாசா இருக்கு... படம்...
============
படத்தின் டிரைலர்..
==========
படக்குழுவினர்விபரம்
Directed by Jon Amiel
Produced by Arnon Milchan,
Mark Tarlov
Written by Ann Biderman,
David Madsen
Starring Sigourney Weaver
Holly Hunter
Dermot Mulroney
Harry Connick, Jr.
William McNamara
Music by Christopher Young
Cinematography László Kovács
Edited by Jim Clark
Production
company Regency Enterprises
Distributed by Warner Bros.
Release date(s) October 27, 1995
Running time 123 minutes
Country United States
Language English
Budget $20,000,000
Box office $32,051,917
===========
பைனல்கிக்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய
திரைப்படம்... ஆரம்பம் முதல் படம் முடியும் வரை விறு விறுப்பினை குறையாமல் எடுத்து சென்றதே இந்த
திரில்லர் திரைப்படத்தின் வெற்றி என்பேன்.
=========
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஆறரை...
=======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அண்ணே இவுங்க அவதார்ல கூட டாக்டராதான் வருவாங்கல்ல.......
ReplyDeleteநல்லதொரு விமர்சனம்...
ReplyDeleteஅருமை அண்ணா...
நன்றி ஜாக்கி. இரண்டு நாள் எப்படிடா பொழுதைப் போக்குவது என்று நினைத்திருந்தேன். சட்டென தங்கள் தளம் ஞாபகம் வந்தது, ஏதேனும் புதிய படத்தினைப் பற்றி எழுதியிருப்பீர்கள். சுவாரசியமான படமென்றால் பார்க்கலாம் என்று வந்தேன். கிடைத்துவிட்டது. :-)
ReplyDeleteநன்றி அண்ணா!!! இந்த படம் என்னோட லேப்டாப்ல கூட யாருமே கவனிக்காம 6 மாசமா தூங்கிட்டு இருக்கு. இன்னைக்கு தட்டி எழுப்பி பாத்துட வேண்டியது தான்!!!
ReplyDelete