ஏக்கப்பார்வை.

இன்று காலையில் மனைவியை அழைக்க  சென்னை விமான  நிலையம் சென்று இருந்தேன்...

மனைவியின் வருகைக்கு   யாழினியும் நானும் காத்திருக்கும் வேளையில்...

அவரை  பார்த்தேன்.


அவருக்கு 45 வயது இருக்கும்...

கலைந்த தலை... தூக்கம் இல்லா கண்கள்... அயர்ன் செய்யப்படாத பேன்ட் சர்ட்....

வெளியே வருவதற்கு முன்னே தன் உறவுகளை பார்க்க ஆர்வம் கொண்டார்.. அடிக்கடி பார்வையாளிர் பக்கம்  தன் உறவுகளை கண்டு விட  மாட்டோமா ? என்ற ஏக்கம் அவர் கண்களில் வியாபித்து இருந்தது..



அது மகளோ? மகனோ? மனைவியா? அம்மாவா?  தெரியவில்லை... இல்லை இனிமேல்தான் திருமணமா? என்று ஏகப்பட்ட கேள்விகள்  என்னுள்.....

ஏதோ அரபு நாட்டில் பணி புரிந்த இருக்க வேண்டும்... உடல்  உரமாய் இருந்தாலும் உடம்பில்  சொந்த  மண்ணில் கால் பதித்த அப்பாடா?  என்ற பீலிங்கினை பார்க்கும் போதே உணர முடிந்தது...

செக்கின் முடிந்து வந்த அவரை கஸ்டம்ஸ்  போலிசார்  தடுத்து நிறுத்தினர்...

 தடுத்த போலிசாரிடம் உரிய பேப்பர்களை  காட்டி விட்டு டிராலி நிறைய பொருட்களை வைத்து தள்ளிக்கொண்டு  அரைவல் கேட்டுக்கு வெளியே வந்தார்...

இன்னும் அவர்து உறவினர்களை பார்க்கவில்லை... ஒருவேளை உறவினர்கள்.. அரைவல் கேட்டுக்கு பதில் டிப்பார்ச்சர் கேட்டுக்கு  சென்று இருக்கலாம்...


ஏர் போர்ட்டில் யாழினி ஓடி போய் கிழே விழுந்து  சின்ன சிராய்ப்பு முட்டியில் ஏற்ப்பட்ட காரணத்தால்.. அவள் அழுகையை  சமாளிக்க முடியாமல் தினறிய போதிலும்...
 அந்த மனிதரின் கண்களில் உள்ள தேடலின்  ஏக்கம் என்னை ஏகத்துக்கும்  தாக்கியது..


அல்லது குழந்தையை போட்டோவில் மட்டும் பார்த்து விட்டு குழந்தையை  பார்க்க வேண்டும் என்ற ஏக்கம்   கொண்ட தகப்பனின் ஏக்கப்பார்வையாக இருக்க கூட வாய்ப்புண்டு..


யாழினி அம்மா  கண்ணில் பட அரம்பித்த உடன் யாழினி உற்சாகம் கொள்ள.. அந்த மனிதரை மறந்து போனேன்..
இந்த  பதிவை டைப்பிடும் இந்த கணத்தில் கூட அந்த மனிதரின் கண்களில் இருந்த ஏக்கப்பார்வை என்னை என்வோ செய்கின்றன.,..


இறையே  இனி அந்த மனிதருக்கு அவரது சொந்த மண்ணில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏகத்துக்கு பெருக்கி கொடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..


உழைத்து களைத்து சொந்த மண் திரும்பியவரை ..பொருள் கொடுக்கும் இயந்திரமாக  பார்க்காமல் அவரின் மனைவியும், குடும்பத்தினரும்  கடந்த கால அவரது   வலிகளை மறக்க  அவருக்கு  ஆறுதலாக இருக்க வேண்டும் என இறையை வேண்டிக்கொள்கின்றேன்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
07/09/2014



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

  1. sentiment; nalla ka-llu-kku-nga' ;matter; 'sa-ppaiya- 'irukku;

    ReplyDelete
  2. மனிதாபிமானத்தை முன்னிறுத்தும் மகத்தான கட்டுரை. பாராட்டுக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  3. good one i had those feelings so many times

    ReplyDelete
  4. அந்த மனிதருக்கு விரும்பிய சந்தோஷம் கிடைக்க நானும் இறைவனை வேண்டுகிறேன்!

    ReplyDelete
  5. சின்ன பதிவாக இருந்தாலும் சிலிர்க்க வைத்த பதிவு.

    ReplyDelete
  6. உங்கள் பார்வையில் பட்ட அந்த மனிதர் வெளியே யாரையாவது சந்தித்து இருப்பார் .கவலைப்படாதீர்கள் .பொதுவாய் இந்த மண்ணை விட்டு செல்பவர்கள் பின்னே பல அழுத்தமான சோகங்கள் அப்பிகிடக்கின்றன.உங்கள் அனுதாபம் அவரை நிம்மதியாக்கும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner