அமலா



1986 ஆம் வருடம் கடலூர் ரமேஷ் திரையரங்கம்... பின்பு பாலஜி தியேட்டராக மாறி இப்போது மண்ணோடு மண்ணாகி கேவிடெக்ஸ் துணிக்கடை கார்பார்க்கிங் ஆக இருக்கின்றது.

மைதிலி என்னைகாதலி படம் ரிலிஸ்...


நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை பாடலை டி ராஜேந்தர் தாடியும் , சால்வையோடு பாட ....ஒல்லி பிச்சான் போல இருந்த அமலா ஆட.... கடலூரே அந்த கிளைமாக்ஸ் பாடலுக்கு கண்ணீரில் மூழ்கியது...

பெண்கள் புடவை தலைப்பில் மூக்கை உறிஞ்சியபடி படத்தை பார்க்கின்றார்கள்....
பட்டி தொட்டி எங்கும் மைதிலி என்னை காதலி படமும் பாடல்களும் பெரிய ஹிட்... ஆனால் அமலாவை பெரிய அளவில் அப்போது ரசிக்கவில்லை என்றாலும் தமிழகமெங்கும் அமலா என்ற நடிகை அறிமுகமாக அந்த ஒரு படம் போதுமானதாக இருந்ததது...

1987 ஆம் ஆண்டு கடலூர் நியுசினிமா தியேட்டரில் வேலைக்காரன் ரிலிஸ்.... முதல் நாளே தலைவர் படம் விசில் அடித்து பார்க்கின்றோம்...

அமலா ஹேர் ஹோஸ்டல் போல தலை அலங்காரம் செய்து ஓட்டலில் வேலை செய்யும் கேரக்டர்... மைதிலி என்னை காதலி அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் கொஞ்சம் சதைப்பிடிப்போடு என் மனதில் அமர்ந்தவர்.

அதே ஆண்டு இறுதியில் கடலூர் கிருஷ்ணாலாயாவில் பேசும் படம் ரிலிஸ் ஆனது.


படத்தை பார்த்து கமலுக்கு நிகராக பேசா அந்த நடிப்பை பார்த்து அசந்து போனேன். முக்கியமாக பால்கனியில் மஞ்சள் உடையில் தேவதை போல நின்றுக்கொண்டு கமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அந்த காட்சியில் மனதில் சம்மனமிட்டு அமர்ந்தார்.

முதல் படம் போல இல்லாமல் ஐரிஷ் அப்பாவுக்கும் பெங்காளி அம்மாவுக்கு பிறந்து வெஸ்ட் பெங்காலில் கோதுமை அதிக அளவு சாப்பிட்டு வளர்ந்தவர் என்பதை அவரது உடல் வனப்புகள் பேசும் படத்தில் உறுதி செய்தன.

அக்னி நட்சத்திரம்... சிகரேட் பிடித்த அமலா.... மாடியில் விளம்பில் நின்று ஒரு எலி இரண்டு மூனு எலி போல அஞ்சலி என்று பிரபுவுடம் அறிமுகப்படுத்திக்கொண்ட போதும் சரி... ரோஜா பூ வாடி நின்றது பாட்டுக்கு உடற்பயிற்சி உடை அணிந்து இடுப்பை ஆட்டி நெளித்து ஆட என் மனம் நெளிய ஆரம்பித்ததும் அப்போதுதான்.,..

தூங்காத விழிகள் இரண்டு பாடலில்.... மஞ்சள் சாரியில் வந்து நெஞ்சில் ஏறி மிதித்தவர்... தினத்துக்கும் கனவில் வந்து ஒரு எலி ரெண்டு எலி சொன்னதோடு அக்னி நட்சத்திரத்தில் அமலாவின் அந்த கரகர குரலுக்கும் ரசிகன் ஆனாது தனிக்கதை.

அது மட்டுமல்ல....உங்க அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டியாமே என்று அமலா சொல்லி பாக்சிங் உருளையால் பிரபு அடித்து விழுந்ததும் அவரை தூங்கி ஐயம்சாரி என்று பிரபு சொல்லி விட்டு ஒரு முத்தம் கொடுத்தால்...

பின்பு முகம் முழுக்க பிரபு எங்கே முத்தம் கொடுக்க வேண்டும் என்று முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு முத்தம் கேட்கும் காட்சியை மணிரத்னம் வைத்தாலும் வைத்தார்... பல இரவுகளில் முத்தம் கேட்டு தொல்லை பண்ணுவதாக கனவு வந்து தொலைத்தது....

அதே வருடம் சத்யா....ஆல்டைம் பேவரைட். வலையோசை பாடலில் அந்த நெருக்கம்.... சின்ன கையில் ஆம்ஸ் இருக்கு என்று கமலிடம் கை மடித்து காட்டும் அந்த காட்சிகளில் தமிழகம் சொக்கிப் போனது.

அதே வருடம் வெளியான ஜீவா படத்தில் சத்தியாராஜூடன் ஹீரோ வந்தாச்சிடி ரதி தேவியே பாடலில் ஸ்வீம் ஸூட்டில் அதிர அதிர ஓடிவர.... கடலூர் ரமேஷ் தியேட்டரே உஷ்னத்தில் மூச்சை அடைத்து போனது... எனக்கு கடற்கரையில் அமலா ஓடிய காட்சி திரும்ப திரும்ப ரிவைன்ட் ஆக ஒரு வாரத்துக்கு ஜூரம் சனியன் என்னை ஆட்டி படைத்தது.

1989 ஆம் ஆண்டு கடலூர் பாடலியில் வெளியாக வெற்றி விழா திரைப்படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் அமலா ரசிகர்கள் மனதில் பதித்தார்.

மவுனம் சம்தம் படத்தில் அம்சமான ரோல்... கற்பூரமூல்லை திரைப்படத்தில் திரும்பவும் மார்டன் கேர்ள் கேரக்டரோடு நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தினார்.

நான் டென்த் முடிச்ச ஒரு வருஷத்துல அமலா நாகர்ஜூனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆனார்...

அதன் பின் அமலாவை ரசிகர்கள் மறந்து போனார்கள்..

சுட்டிக்குழந்தை படத்தில் அமலாவில் குழந்தை நடிக்கின்றது என்று திரும்ப சிலகாலம் கழித்து அமலாவின் பேச்சு அடிபட்டது...

அதன் பின் கினற்றில் போட்ட கல்லாக இருந்தாலும் புளு கிராஸ் மெம்பர் என்பதால் தினத்தந்தியின் எட்டாம் பக்கத்தை பிளாக் அண்டு ஒயிட்டில் அலங்கரித்தார்.
ரொம்ப வருஷம் கழித்து....

2012 இல்... இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கிய லைவ் ஈஸ்பியூட்டி புல் தெலுங்கு படத்தில் அம்மாவாக நடித்தார்...

2014 இல்.... அமலா அவர்களின் குடும்ப படமான மனம் படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் கணவன், மகன் மாமனார் நடித்த படத்தில் நடித்தார்...

தற்போது மருத்துவமனையை சம்பந்த பட்ட ஜீ தொலைகாட்சி தொடரில் நடிக்கின்றார் என்று பத்திரிக்கை விளம்பரங்கள் தெரிவித்தன...

எல்லா கேரக்டர்களிலும் நடித்தாலும் இன்றளவும் தமிழக ரசிகமாக ஜனங்களில் மனதில் அமலா நிற்க காரணம்... அவருக்கு கிடைத்த லவ் போர்ஷன்களில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.......

அது மட்டுமல்ல .. அவருக்கு நல்ல மேலடி பாடல்கள் எப்படியாவது ஏதாவது ஒரு படத்திலாவது எப்படியாவது அமைந்து விடும்.

வெஸ்ட் பெங்களாலில் பிறந்து தமிழக ரசிகர்களையும் என்னையும் கிறங்கடிக்ககாரணமாக இருந்தவரும், ஒரு காலத்து கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை அமலாவுக்கு இன்று பிறந்தநாள். அவரை வாழ்த்துவோம் வாருங்கள்...

அமலா இன்னும் பல உயரங்களையும் சிறப்புகளையும் அவர் அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
12/09/2014


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

6 comments:

  1. Jackie

    Nice post. I liked Amala's movies too, even though I have not watched all these movies quoted here.
    I liked her pleasant acting style. Great social activist.

    ReplyDelete
  2. அண்ணே நீங்கள் "ஜொள்"ளிய செய்திகளை அந்த முதல் படமே சொல்லிவிட்டது

    ReplyDelete
  3. நல்ல பதிவு.. பத்தி பத்தியாக ஜொள்ளு உட்டுப்புட்டு கடைசியில் வாழ்த்துவோம் என்று முடிச்ச உங்க பெருந்தன்மை கண்டு வியக்கேன்..

    ReplyDelete
  4. நல்லதொரு நடிகை! வேதம் புதிதை மறந்துவிட்டீர்களே!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner