DAGLICHT-2013/உலகசினிமா/நெதர்லேன்ட்/சில ரகசியங்கள் வெளிச்சம் பெறாமல் இருக்கின்றன.


உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது...

உங்களுக்கு என்று சொல்கின்றீர்களே...? நான் ஆனா? அல்லது பெண்ணா??

பெண்....

 நீங்கள் உங்கள் அம்மாவுக்கு ஒரே பெண்..

சரி...

 சொல்லுங்க...

 அப்புறம் சொல்ல மறந்துட்டேன் ... நீங்கள் வக்கில் தொழில் செய்கினறீர்கள்.


ஒரே ஒரு ஆண்குழந்தை....(குழந்தைக்கு   ஆட்டிச குறைபாடு )

 அதனால்  வக்கில் தொழிலில் கவனம் இல்லை...

பள்ளியில் பார்த்துக்கொள்ள முடியாது என்று கை விரிக்கின்றனர்...
 முக்கியமான கேசில்  கவனம் செலுத்த முடியாமல் பிள்ளையையும் பார்த்துக்கொள்ள முடியாமல் அவதிபடுகின்றீர்கள்..

 ஆத்தாகாரி சும்மா தானே தனி வீட்டில் இருக்கின்றாள்... அவளிடம் போய்  ஒரு பத்து நாளைக்கு குழந்தையை விட்டு விட்டு சொந்த வேலைகவனிக்கலாம் என்றால் ...


ஆத்தா  வீட்டுக்கு போனால் ...

நான் வருடா வருடம் ஒரு வாரம் வெளியூர் போவேன் அல்லவா? அது போல நான் செல்ல வேண்டும்... அதுவரை நீ புள்ளையை பார்த்துக்கோ... நான்  ஊருக்கு போயிட்டு திரும்பி வந்து பேரனை பாத்துக்கிறேன் என்று சொன்னால்....

 கிழங்கட்டைக்கு என்ன டூர் மயிர் வாழுது  என் புள்ளைய பாத்துகறதை விட்டுபுட்டுன்னு புடவை மடிச்சிக்கட்டிக்கிட்டு டகா டகான்னு சன்டைக்கு போகலாம்..

நெதர்லான்டில் எல்லாம் அப்படி இல்லை...  தோலை   பிரிச்சி விடுவார்கள்... அம்மாவாக இருந்தாலும் அங்கே  தனி மனித சுதந்திரம் ரொம்ப முக்கியம்...

சரி போய் தொலையுது..  நான் வாங்கி வந்த வரம் அப்படி...நீ  மகராசியா ஊருக்கு போயிட்டு வா என்று அம்மா  வழியனுப்பி  வைக்கின்றீர்கள்...

உங்கள் அம்மா  போகும்  மூன் வீட்டில் இருக்கும்  பெரிய   மீன்  தொட்டியை கிளின் பண்ண ரெகுலரான ஆளை வரச்சொல்லி இருக்கேன்... அவனுக்கு  ஒத்துழைப்பு கொடு என்று சொல்லி விட்டு  உங்க அம்மா ஒரு வார டூருக்கு போயிடுச்சி...

உங்கள் பையனுக்கு பாட்டி வீட்டில் இருக்கும் மீன்  தொட்டியில் இருக்கும் அத்தனை மீன்களுக்கும் ஒரு பெயர் வைத்து..... விளையாடுபவன்... பாட்டி வீடுதானே...  அதுதான் அவனின் பொழுது போக்கு.....

மறு நாள் மீன் தொட்டி கிளின் பண்ண ஒரு வயதான ஆள் வருகின்றான்.... அவன் மீனுக்கு தீங்கு செய்ய போவதாக நினைத்து  உங்கள்  மகன் மீன் தொட்டியை கிளீன்  செய்ய வந்தவரை அடிக்கின்றான்.

மீன் தொட்டி கிளின் பண்ண வந்தவர் சொல்கின்றார்....  உன் அண்ணன் கூட இப்படித்தான்  அடம் பிடிப்பான் என்று சொல்லுகின்றார்....

 நீங்கள் அதிர்ச்சி ஆகின்றீர்கள்...????

 என்ன .....?????? 

எனக்கு அண்ணன் இருக்கின்றேனா???

 நான் என் அம்மாவுக்கு  ஒரே பெண்... என்று வாதாடுகின்றீர்கள்... நான் பார்த்ததை சொல்லிட்டேன்...  உனக்கு விபரம் தேவைன்னா  உங்க அம்மாக்கிட்ட கேளுன்னு சொல்லிட்டு ஒரு குண்டை தூக்கி போட்டு விட்டு போய்க்கிட்டே இருக்கான்...

 நல்லா யோசித்து பாருங்க..

திடிர்ன்னு உங்களுக்கு அண்ணன் இருக்கின்றான்  என்றால் 

உங்களுக்கு  எப்படி இருக்கும்??

அதுவும் அவன் எங்கே என்று அம்மாவிடம் கேட்டாள்  மூடி மறைக்கின்றாள்... சரி என்னவென்று விசாரித்து வரும் போது அவன் ஜெயில் இருக்கின்றான்... 

ஒரு கைக்குழந்தையையும்  அவள் அம்மாவையும் கொலை செய்த குற்றத்திற்க்காக....
 அப்படி என்ன பாவத்தை உங்க அண்ணன் செஞ்சான்---??
அவனும் உங்கள் பிள்ளையை போலவே  நார்மலாக இல்லை..
???
ரகசியம்.. பரமரகசியம்..
அந்த ரகசியத்தை யார் தெரிந்துக்கொள்ள வந்தாலும் அவர்களை மரணம் துரத்தும்...

நீங்கள்தான் வக்கில் ஐரிஸ்.,.... அவள் ரகசியத்தை கண்டு பிடித்தாலா? அம்மா ஏன் அவளுக்கு அண்ணன் இருப்பதை மூடி மறைக்க வேண்டும்.?? நார்மல் இல்லாத தன் அண்ணன் ஏன் இரண்டு கொடுர கொலைகளை செய்ய வேண்டும்.???

வெண்திரையில் காணுங்கள்...
=======
படத்தின் டிரைலர்.


============== 

படக்குழுவினர் விபரம்.

Regie Diederik van Rooijen
Producent Reinout Oerlemans
Productie-
maatschappij Eyeworks
Scenario Marion Pauw
Simone Kome-van Breugel
Philip Delmaar
Hoofdrollen Angela Schijf
Fedja van Huêt
Monique van de Ven
Derek de Lint
Muziek Bart Westerlaken
Montage Moek de Groot
Stanley Kolk
Cinematografie Lennart Hillege
Distributie Benelux Film Distributors
A-Film
Première 8 april 2013
Genre Thriller
Speelduur 114 minuten
Taal Nederlands
Land Vlag van Nederland Nederland
Opbrengst € 2.428.270[1]
Nominaties 1

============ 

பைனல் கிக்.


செம்மையான  சைக்லாஜிக்கல் திரில்லர்...

டச் மொழி திரைப்படமான இந்த திரைப்படம் உலக திரைப்பட விழாக்களில் நான்குக்கும் மேற்ப்பட்ட அவார்டுகளை பெற்றுள்ளது..
 டச்சின் புகர்  பெற்ற எழுத்தாளாரான.... Marion Pauw 2008 ஆம் ஆண்டு  எழுதிய நாவலின் திரைவடிவம்தான் இந்த  திரைப்படம்.

யூகிக்கவே முடியாத கிளைமாக்ஸ்.. அற்புமான முடிச்சி... திடிர்திருப்பங்கள்... சான்சே இல்ல...

முக்கியமாக நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்

திரில்லர்  மற்றும் சஸ்பெஸ் விரும்பிகள் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பாருங்கள்... அவசியம் இந்த திரைப்படம் பார்த்தே தீர  வேண்டிய திரைப்படம் என்று பரிந்துரைக்கின்றேன்.
=======
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு எட்டு

=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

12/09/2014


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. அப்புறம் ஹீரோயினின் குளியல் காட்சியிலேயே வந்த சந்தேகம் அடுத்தடுத்து கிளைமேக்சில் அவர்கள் பேசும் முன்னாடியே எனக்கு தெரிந்துவிட்டது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner