ZULU-2013/உலகசினிமா/ பிரான்ஸ்/கொலை கொலையா காரணமாம்.



மனிதன் ...சக மனிதனை துன்புறுத்த ஏதாவது ஒரு காரணம் தேவையாய் இருக்கின்றது.. ஜாதி, மதம், தேசம், எல்லை, பண்பாடு , கலாச்சாரம்  போன்ற விஷயங்களை முன்னிறுத்தி சக மனிதனை துன்புறுத்த வேண்டும்... இதில் முக்கியமாக ஒன்றை சேர்க்க வேண்டும்... அது நிற பாகுபாடு...கறுப்பினம் என்றால் கிள்ளுக்கிரையாக பார்த்த  மனித சமுகம்... அவர்கள் அடிமைகளாகவே   வாழ வேண்டும் என்ற  ஆழ் மனதின் எண்ணம்... 


கறுப்பாக   பிறந்த காரணத்தாலே   தீண்ட தகாதவர்களாக  வெள்ளையார்கள் கொடுமை படுத்திய வரலாறுகள் ஏராளம்...

ஜுலு இந்த பிரான்ஸ் படம் 1978 ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்  கருப்பர் மோதலில் தன் தந்தையை தன்  கண்  முன் தீ ஜூவாலைகள் போட்டிபோட்டுக்கொண்டு தின்க... அவன் அப்பாவின் அலறலை  ரசித்து பார்த்துக்கொண்டு இருக்கும் வெள்ளையர்களிடம்  இருந்து  உயிர் பிழைக்க தப்பிக்கின்றான்  சிறுவன் அலி...

 சரி இப்படி  ஆரம்பிக்கலாம்.

உங்கள் அப்பாவை   நிற வெறியின் உச்சத்தில் உங்கள் கண் முன்  தீயிட்டு கொளுத்தி சாகடித்து  விடுகின்றார்கள்.

 சிறுவயதிலேயே நிற வெறியின் உச்சத்துக்கு  பலியான உங்கள் அப்பா ஒரு புறம் என்றால்.... சிறுவனாக இருந்த உங்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை...

 ஆம்  வெறிநாய்களை விட்டு உங்கள்  ஆண் உறுப்பை அது வெறியோடு கடித்து சிம்பி இழுப்பதை  வெள்ளையர்கள் வேடிக்கை பார்க்கின்றார்கள்.. அது மட்டுமல்ல.  வலியில் துடிக்கும்  உங்களை  உங்கள் ஆணுறுப்பில்  எட்டி  உதைத்து விட்டு செல்கின்றார்கள்..

அப்பாவை தீ சாப்பிட்டு விட்டது.. உங்கள் ஆணுறுப்பை நாய்  கடித்து வைத்து உங்களை ஆண்மையற்றவனாக மாற்றி விடுகின்றது... 

ஆனாலும் நீங்கள்   ஒரு முனைப்புடன் வாழ்கின்றீர்கள்...
 கல்யாணம் செய்துக்கொள்ளவில்லை...  காம இச்சைக்கு , பெண்களிடம் காசு கொடுத்து விட்டு தடவுதல் மட்டுமே...  சாத்தியம்.

 ஆனாலும்   விட முயற்சியால் போலிஸ் வேலையில்  நேர்ந்து டிடெக்டிவ் ஆக மாறி விடுகின்றீர்கள்...

ஆனாலும்  படம் முடியும் போது மன நிறைவாய் இறக்கின்றீர்கள்... அதுதான் இந்த படத்தின்  பிளஸ் மேக்கிங்.


ஜூலு படத்தின் கதை என்ன?

சவுத் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில்  உள்ள ஒரு  பூங்காவில் இளம் பெண்  கொலையாகி கிடக்கின்றாள்...

அந்தக் கொலையை  கண்டு பிடிக்க  மூன்று டிடெக்டிவ் வருகின்றார்கள்... மூன்று பேருமே  நண்பர்கள்...  அலி (பாரஸ்ட் ஒயிட்கர்)  சிறுவயதில் அப்பாவையும் ஆண்மையையும் நிற வெறிக்கு பலி கொடுத்தவர்,  மற்றும் பிரெயின் அவரது நண்பர்...

முதலில் கொலையான பெண் ரேப் செய்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்தால்  கடைசியில் அது  ரேப் இல்லை...  காதலனோடு உறவுக்கு  செல்லும் போது அவள் இறந்த இருக்கின்றாள்... ஆனால் எதற்கு காதலன் அவளை கொலை செய்தான்  என்ற கேள்வியை  நூல் பிடித்து துப்பறிந்து செல்ல... நிறைய முடிச்சிகள் அவழ்கின்ற அதே வேளையில்... அது போதை மருந்து மாபியா  கும்பலிடம் செல்கின்றது.. 

இதனால் மூன்று பேரில்  ஒருவனை போதை மாபியாக்களால்  கொல்கின்றார்கள்... நண்பனின் இழப்பின்  வலியோடு உயிரை துச்சமென மதித்து  உண்மையை கண்டு பிடிக்க முயல்கின்றார்கள்.

 கொலையாளி யார் ??என்  அந்த பெண்ணை கொலை செய்தான்...? 

நகரில் தொடர்ச்சியாக கருப்பின  சிறுவர்கள் மற்றும் பெண்கள் இறந்து வருவதன் காரணம் என்ன, ,??? போன்ற   விஷயங்களை ஒருமணி  பத்து நிமட நேர இந்த பிரான்ஸ்  திரைப்படம் விளக்குகின்றது...

 இந்த படம்  2013  ஆம்  ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில்  குளோசிங் திரைப்படமாக திரையிடப்பட்டது குறிப்பிடதக்கது..

============
 படத்தின் டிரைலர்...


=========
படக்குழுவினர் விபரம்

Directed by Jérôme Salle
Produced by Richard Grandpierre
Written by Caryl Ferey
Julien Rappeneau
Jérôme Salle
Starring Orlando Bloom
Forest Whitaker
Music by Alexandre Desplat
Cinematography Denis Rouden
Edited by Stan Collet
Release date(s)
26 May 2013 (Cannes)
6 November 2013 (France)
Running time 110 minutes
Country France
Language English
==========
பைனல் கிக்
இந்த படம் பார்க்க வேண்டிய திரைப்படம் ... முதலில் சின்ன கொலை என்ற  போர்வையில் ஆரம்பிக்கும் இந்த திரைப்படம் அப்படியே வேவ்வேறு திசைகளில் நாம் யூகிக்க முடியாத திசைகளில் பயணிப்பது  இந்த  திரைப்படத்தின் பலம்.

======
படத்தின் ரேட்டிங்
பத்துக்கு ஏழு.
========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. விமர்சனம் அருமை ஜாக்கி சார்

    ReplyDelete
  2. Super விமர்சனம் Jacki

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner