புருஷன் செத்தா... அவன் உடல் எரிகின்ற தீயில் கதற கதற வலுகட்டாயாமாக அவனது மனைவியையும் இழுத்து வந்து, குபு குபு என்று எரிகின்ற தீயில் தள்ளி விட்டு... , கண் எதிரில் அப்பாவி மனைவிமார்களை துடிக்க துடிக்க கொலை செய்த சமுகம் நம்முடையது...
சற்றே யோசித்து பாருங்கள்... கொடுமையாக இல்லை... ஆனால் இந்தியாவில் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் இந்த காட்டு மிராண்டிதனம் நடைபெற்றது.
அந்த கருமத்துக்கு பெயர் சதி.
அந்த சதி என்ற உடன்கட்டை ஏறும் கருமத்தை ஆங்கிலேயர்கள் உதவியுடன் காட்டு மிராண்டி தனம் என்று உறக்க கூவி. அதனை இந்தியாவில் தடை செய்து வெற்றியும் பெற்றவர் ராஜாராம் மோகன்ராய் .
சற்றே இரண்டு நூற்றாண்டு முன் போய் இந்தியாவில் வாழ்ந்து பார்த்தால் கைம்பெண்கள் வேதனை பற்றி பக்கம் பக்கமாய் கதைகள் உண்டு.
உண்மையில் இந்திய பெண்கள் கடவுளுக்கு நிகராக வணங்க வேண்டிய மனிதர்களில் ராஜராம் மோன்ராயும் ஓருவர் என்றால் அது மிகையில்லை.
சிறு வயதில் வரலாற்று புத்தகத்தில் இவர் பற்றி வரலாறு வாத்தியார் பாடம் நடந்திய போது வாய் பிளந்த கதை கேட்டது இன்னும் என் நியாபக அடுக்குகளில்.
இன்று ராஜாராம் மோகன்ராய் அவர்களின் பிறந்த தினம். இந்திய பெண்களின் உயிர் பயத்தை போக்கி சுதந்திர காற்றை சுவாசிக்க செய்தவர். இந்திய பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு போதும் மறக்ககூடாத மனிதர்.
======
ஹாலிவுட் கனவுகன்னி Halle Berryக்கு இன்று பிறந்தநாள்.
அமெரிக்காவின் ஓஹாயோ மாநிலம் பெற்றெடுத்த கருப்பு தங்கம். முதல் முறையாக ஆஸ்கார் விருது பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி இவர்தான்..
எப்படி நம்ம ஊர் திரிஷா மாடலாக இருந்து பின்பு திரைதுறையில் கால் பதித்து வெற்றி பெற்றாரோ...? அதே போல மாடலாக மிஸ் யூ எஸ் ஏ மற்றும் மிஸ் வேர்ல்டு பட்டங்கள் வென்றவர்.
நடிக்கறதுக்காக நியூயார்க்கிற்கு ஓடியாந்து சோத்துக்கு கஷ்டப்பட்டு இருக்கற காச எல்லாம் காலியாகி....பிளாட்பார வாழ்க்கை ரேஞ்சிக்கு வாழ்க்கை மாறி போனாலும் தன்னம்பிக்கையோடு போராடி டெலிஷன் தொடர்களில் தலைகாட்டி தன் நடிப்பு ஆசைக்கு தளம் அமைத்துக்கொண்டார்.
1991 ஆம் ஆண்டு வெள்ளி திரையில் கால் பதித்தாலும், நடிகர் எட்டி மர்பியோட Boomerang படத்தில் நடித்து ரசிகர்களின் பரவலான பாராட்டை பெற்றார். அன்று முதல் இன்று பெர்ரியை ஹாலிவுட் மட்டுமல்லாது உலகம் எங்கும் உள்ள ரசிகர்கள் இந்த கருப்பு தங்கத்தை ரசித்து மகிழ்கின்றார்கள்...
எக்சிகியூட்டிவ் டிசிஷன், ஸ்வார்டு பிஷ், எக்ஸ்மேன், டை அனதர் டே, த பர்பெக்ட் ஸ்டேன்ஜர், தி கால் போன்ற திரைப்படங்கள் பெர்ரி கேரியரில் மறக்க முடியாத படங்கள்..
47 வயதாகின்றது என்று மாரியம்மன் கோவிலில் சத்தியம் செய்தாலும் யாரும் இதனை நம்பபோவதில்லை. இன்னும் பத்து வருஷத்துக்கு ஹாலிவுட் நாட்டுக்கட்டை ஹெலிபெர்ரி என்று எழுதுவதை நிறுத்தப்பபோவதில்லை....
நிறைய ஆக்ஷன் படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருக்கின்றார்... அதே போல டாப்லெஸ் காட்சிகளில் நடித்து பலரது தூக்கத்தை கெடுக்கவும் தலைகாணியை பிராண்டி கிழியவும் காரணமாக இருந்து இருக்கின்றார்.
முக்கியமாக ஸ்வார்டு பிஷ் திரைப்படத்தில்தான் அவரின் முதல் டாப்லெஸ் காட்சி வெளியானது.. வார்னர் பிரதர் நிறுவனம் ரொம்பவே வற்புறுத்த பெரிய தொகை கொடுத்து அந்த காட்சியில் அவரை அரை நிர்வானமாக தோன்ற வைத்தார்கள் என்று ஒரு செய்தி காட்டு தீ போல பரவ அந்த குற்றச் சாட்டை பெர்ரி மறைத்தார்...
ஆனாலும் Monster Ball படத்தில் கோ ஸ்டார் பில்லி பாப்உடன் மூன்று நிமிட நேர உடலுறவு காட்சி யாராளும் எளிதில் மறக்க முடியாத காட்சி.... அந்த படத்தில் நடித்தமைக்காக அவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது...
அன்றில் இருந்து இன்று வரை உலகலாவிய ரசிகர்களுக்க கனவு கன்னியாக திகழ்ந்து வருகின்றார்.
இரண்டு திருமணம்... இரண்டு பிள்ளைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று .
நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் விரும்புகின்றவர்கள் இவர் நடித்த ஸ்வார்டு பிஷ் மற்றும் தி கால் திரைப்படத்தை நான் பரிந்துரைக்கின்றேன்.
ஹாலிவுட் கனவுகன்னி Halle Berryஇன்று பிறந்தநாள். இன்றைய நாளில் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துவோம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment