காமத்தை ரசித்துக்கொண்டே காமத்தை எதிர்க்கும் நம்மவர்கள் என்று நான் அடிக்கடி சொல்லிவருவதுண்டு...
சமீபத்தில் செக்ஸ் திரைப்படங்கள் என்று ஒரு ஸ்கிரிப்ட்டில் எழுதி விட்டேன்... அண்ணே செக்ஸ் அப்படின்ங்கறது ரொம்ப ஹார்டா இருக்கு...
பாலியல் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் என்று மாத்தி எழுதி கொடுங்க என்று சொன்னார்கள்...
நானும் எழுதிக்கொடுத்தேன்... செக்ஸ் என்ற வார்த்தைக்கு மட்டும் செந்தமிழ் கொஞ்சி விளையாடியாது...
இங்கு மட்டுமல்ல.. செக்ஸ் என்ற வார்த்தை ஒரு கேவலமான வார்த்தையாக இந்தியாவில் பாவிக்க படுகின்றது.. செக்சை செக்ஸ் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது என்று தெரியவில்லை....
இன்டர்நெட் புழக்கத்துக்கு பின் நிறைய விஷயங்களை டீன் எஜ் பருவத்தினர் கற்றுக்கொள்கின்றார்கள்... அதில் கெட்டது எது என்று புரிய வைக்கும் பொறுப்பு நமக்குள்ளது..
இந்த வீடியோவில் செக்ஸ் பற்றி இந்தியாவில் நிலவும் போலித்தனங்கள் துகில் உரித்து பொட்டில் அடித்து போல்டாக காட்டி இருக்கின்றார்கள்... சான்சே இல்லை...
வீடியோவின் கிளைமாக்சில் முக்கியமாக மாணவர்கள் யூ போர்ன், மற்றும் ரெட் டீயூப் நன்றாக இருப்பதாக சொல்ல... அதில் ஒரு பெண்.. எக்ஸ் வீடியோ அருமை மற்றும் எச்டி என்று ஒரு படி மேலே போய் சொல்லும் போது..... கட்டுப்பெட்டி தனமானவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.. ஆனால் இதுதான் இந்தியாவின் நிதர்சன உண்மை.
இன்றைய தலைமுறை நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்து இருக்கின்றார்கள்.. அவர்களிடம் நாம் எது நல்லது எது கெட்டது என்பதை மட்டும் பிரித்து கற்றுக்கொடுக்க வேண்டும்..
பாலியல் கல்வி 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் எப்படி வகுப்பெடுக்க படுகின்றது என்று கலாய்த்து இருக்கின்றார்கள்.. இந்திய பாலியல் கல்வி இன்னும் முதலிரவில் பால் சொம்போடு இருப்பதாக சரியாக பகடி செய்து இருக்கின்றார்கள்....
நமது மத்திய மாநில அரசுகள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
காலாச்சாரத்தை முன் வைத்து பெரிய போர்வை போர்த்திகொண்டு இருப்பதால் யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருப்பது சரியானதல்ல..
கலாச்சாரத்தை அனுதினமும் பேசும் நமது நாட்டில்தான் ரேப்பின் போது பெண் பிறப்புறுப்பில் கம்பி செருகும் வண்ணம் எதிர்கால சந்ததியினர் உருவாகி இருக்கின்றார்கள் என்ற உண்மையை புரிந்தக்கொள்ள வேண்டும்....
நெருப்புக்கொழி தலையை புதர்க்குள் மறைந்துக்கொண்டு முழு உடம்பும் மறைந்து விட்டதாக எண்ணிக்கொள்வது போலத்தான் நாம் இருக்கின்றோம் என்பதை இந்த வீடியோ வலியுறுத்துகின்றது.
அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Good video ....must for everyone...
ReplyDeleteஅருமையான வீடியோ அண்ணா...
ReplyDelete