KILLERS-2014/ (18+)உலகசினிமா/ஜப்பான்/ தன் வினை தன்னைச்சுடும்.



கண்டிப்பாக வயது வந்தோருக்கான சைக்லாஜிக்கல் திரைப்படம்...
ஜப்பானின் லேட்டஸ்ட் சைக்கலாஜிக்கல் திரில்லர்...2014 பிப்ரிவரி ஒன்னாம் தேதி ரிலிஸ் ஆன  இந்த திரைப்படம்  உலகம் எங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது...


சைக்கலாஜிக்கல் திரைப்படம்தான் என்றாலும்  திரைப்படத்தையும் மீறி ஒரு  சைக்கோதனம் படம் நெடுகிலும் தொடர்வதோடு   படம் பார்க்கும் நமது எலும்புகளை சில்லிட வைக்கின்றது...

படம் பார்க்கும் போதே அந்த அதிர்வை நீங்கள்  நிச்சயம் உணர்வீர்கள்.
நிறைய சைக்கோ திரைப்படங்கள் வந்தாலும் ஒரு உயிரை துள்ள துடிக்க கத்தியால் கழுத்தை வெட்டி பல கோடி மக்கள் பார்க்கும் படி யூ டியுபில்  பார்க்கும் படி  செய்து அதனை ஒரு ரசனை  சார்ந்த விஷயமாக வெளிச்சம் போட்டு காட்டியவர்கள் மத தீவிரவாதிகள்தான்...

  சமீபத்தில் கூட   பத்திரிக்கையில்  வந்த செய்தியை படித்து உலகமே அதிர்ந்தது..
=====
அமெரிக்கா வான் தாக்குதல் நிகழ்தியதை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐஎஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் அமெரிக்கர்களை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் உலகையே உலுக்கியது.
அவரை கொலை செய்வதற்கு முன்னர் தீவிரவாதிகள் அவரை விடுவிக்க பணயத்தொகையாக ரூ.800 கோடி கேட்டு மிரட்டியதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த குளோபல் டிரஸ்ட் என்ற பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய ஜேம்ஸ் போலே என்ற பத்திரிகையாளர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வீடியோ இணையதளத்தில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
. இந்நிலையில் பத்திரிகை நிருபரின் கழுத்தை அறுத்து கொலை செய்தவர் பிரிட்டனை சேர்ந்த பயங்கரவாதி என்றும் கூறப்படுகிறது.
                                        =========
யோசித்து பாருங்கள் நிராயுதபாணி பினைக்கைதி என்ன செய்து விடு முடியும்..?? அதுவே பெண்கள் என்றால்..,?

ஜப்பானில் இருக்கும் சீரியல்  கில்லர்   நோமுரா... சிரியல் கில்லர்.. பெண்களை கடத்தி வந்த கட்டி போட்டு சுத்தியால் மண்டையில் அடித்து , அந்த அப்பாவி பெண்கள் துடி துடித்து சாவதை  இம்பி பிசகாமல் வீடியோ படம் எடுத்து அதனை யூ டியூடிபில்  வலையேற்றுவான்..  இதற்கு நிறைய லைக்குகள்...

 அப்படியான இந்த வலைதளத்தில்  அவள் கொலை  செய்த பெண்களில் உயிர் துடிப்புகள் அத்தனையையும் வலையேற்றுவான்..
 அப்படியே இந்த பக்கம் பாயு... பத்திரிக்கையாளன் மனைவி ஒர பெண் குழந்தையுடன் இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்தாவில் வசித்து வருபவன்..

 நிறைய டென்ஷன்.. குடும்பத்தில்  மாமனாரால்  பிரச்சனை என்று   டிப்ரஷனில் இருக்கும் போது  நோமரா வலையேற்றும்  நேரடி  கொலை  சம்பவங்களை யூடியுப்பில் பார்க்கின்றான்... தர்மா என்ற அரசியல்வாதியால் அதிகம் பாதிக்கப்படுகின்றான்... நோமுரா போல நாமும் ஏன் கொல்லக்கூடாது என்று புத்தி பேதலித்து  யோசித்து  கொலை செய்ய செல்ல....

அவன் என்ன மாதிரியான பிரச்சனைகளை  அவனும் அவன் குடும்பத்தினரும் சந்தித்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
 ஒவ்வோரு கொலையும் கலை போல நோமுரா செய்யும் போது, அந்த கொலைகள் நேரடியாக நடைபெறுவது போல  தத்ரூபமாக படம் பிடித்து இருக்கின்றார்கள்....ஒரு உயிர் எப்படி அடங்கும் என்பதை  அனு அனுவாக   காட்டி யிருக்கின்றார்கள்...


 இயக்குனர்கள் இது போன்ற ரெபரன்சுக்கு நிறைய  பத்திரிக்கையாளர்கள் கழுத்து அறுபட்டு   கொலை  செய்யப்பட்ட காட்சிகளை   பார்த்தே இவ்வளவு டீடெய்லாக  எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்...

====
படத்தின் டிரைலர்.


==
படக்குழுவினர்

Directed by Mo Brothers
Produced by Yoshinori Chiba
Shinjiro Nishimura
Takuji Ushiyama
Kimo Stamboel
Timo Tjahjanto
Written by Takuji Ushiyama
Timo Tjahjanto
Starring Kazuki Kitamura
Oka Antara
Rin Takanashi
Luna Maya
Music by Fajar Yuskemal
Aria Prayogi
Cinematography Gunnar Nimpuno
Edited by Arifin Marhan Japri
Production
company
Nikkatsu
Guerilla Merah Films
Damn Inc.
Media Prima Productions
PT. Merantau Films
Million Pictures
Holy Bastards
Distributed by XYZ Films
Release dates
20 January 2014 (Sundance)
1 February 2014 (Japan)
6 February 2014 (Indonesia)
Running time 137 minutes
Country Japan
Indonesia
Language Japanese
Indonesian
English
===


பைனல் கிக்.
சரி வயதுக்கு வந்தவர்கள் மட்டும் இந்த திரைப்படத்தினை பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன்.

ஜப்பான் மற்றும் உலக திரைப்பட  விழாக்களில் மட்டுமே ஒரிஜினல் வெர்ஷன் திரையிடப்பட்டது..

 இந்தோனேஷியாவில் எல்லா வன்முறை காட்சியும்... கட்டோ கட் பண்ணி   படத்தை ரிலிஸ் செய்து  இருக்கின்றார்கள்..

இந்த திரைப்படம் முதன் முறையாக  ஜப்பானும் இந்தோனேஷியாவும் இணைந்து தயாரித்த திரைப்படம் என்ற பெருமையை இந்த கில்லர்ஸ் திரைப்படம் பெருகின்றது...

இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம் அவசியம் வயதுக்கு வந்தோருக்கானது..
=======
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஆறரை.
====
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner