SIGARAM THODU-2014/ சிகரம் தொடு. சினிமா விமர்சனம்.






பொதுவாக தற்போது  எந்த படத்தை பார்த்தாலும் ரசிக மகாஜனங்கள்...  பேஸ்புக் பக்கங்களில் எங்கே இருந்து இந்த   படத்தை உருவினார்கள் என்று ஷெர்லக் ஹோம்ஸ் ஆக மாறி கண்டு பிடித்து  பாடல் ஓடுகின்றதோ இல்லையோ??? அதற்குள் இயக்குனர்ரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டி தள்ளி விடுகின்றனர்...

 அந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து இருப்பது ஒரு முக்கியகாரணம்....

 என்னதான் ரசித்து  ரசித்து  இழைத்து இழைத்து  ஒரு  திரைப்படத்தை எடுத்தாலும்  ஏதோ ஒரு பாரின் படத்தின் தழுவல் இந்த திரைப்படம் என்று மனதில் ரசிகனுக்கு  தொன்றியதுமே படம் பார்க்கும் ஆசையே  ரசிகர்களுக்கு போய் விடுவதும் உண்மை.

அதே போல் இப்போதைய ரசிகர்கள்.. வா மச்சி படத்துக்கு போலாம் என்று எல்லாம் திடிர் என்று கிளம்புவதில்லை...

120 டிக்கெட், பார்கிங் 20,  பாப்கார்ன் கோக் 200 என்றால் ஆன் லைன் என்றால் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய்  சர்விஸ் கட்டனம்... அதாவது ஒருவன்  தனியாக படம் பார்க்க சென்றலே 500  ரூபாய் செலவு ஆகின்றது... 

அப்படி இருக்கையில் எவனும் வா மச்சி படத்துக்கு போயிட்டு வரலாம் போர்  அடிக்குது என்று யாரும் இப்போது சொல்வதில்லை.. அந்த வாக்கியமே வழக்கொழிந்து வருகின்றது என்று வேண்டுமானால் சொல்லலாம். 

 முதல் காட்சியில்  படம் பார்த்து விட்டு பேஸ்புக்கிலும் , டூவிட்டரிலும்  ஒத்த அலைவரிசையுள்ள   நண்பர்கள் படத்தை பற்றி எழுதும் ஒரு வரி விமர்சனத்தை வைத்தே... அந்த  படத்தின் அடுத்த காட்சிக்கான  டிக்கெட்டை இப்போது எல்லாம் ரசிகர்கள் புக் செய்கின்றார்கள்..


 மலையாள திரையுலகில்  காலை காட்சி படம் பார்த்து விட்டு வெளி வரும் சேட்டன்மார்கள்  உதடு பிதுக்கிவிட்டான் என்றால்  ஷகிலா நடித்த படமாக இருந்தாலும் ஒடாது என்பது சினிமா ஐதீகம்.. ஆனால் அங்கே கூட உதடு பிதுக்கலுக்கு பதில் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் படத்தின் இன்டர்வெல்லில் உதடு பிதுக்கி விடுகின்றான்...

அப்படி படத்தை பற்றி  நெக்ட்டிவ் விமர்சனம் வந்த அடுத்த நொடி டிக்கெட்டை ஆன்லைனில் என்னிடம் இந்த படத்துக்கு 5 டிக்கெட்டுகள் விலைக்கு இருக்கின்றன...  ஆன்லைனில் விற்க முயற்சிக்கின்றார்கள்...

தரமானது மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில்தான் இப்போதைய தமிழ் சினிமா உலகம் இருக்கின்றது.

 ஒரு திரைப்படத்தின் ரிலிசின் போது இரவு நேரக்காட்சி அரங்கம் முழுவதும் நிரம்புகின்றது என்றாலே... அந்த படம்  வெற்றி பெற்று விட்டது என்று சொல்லலாம்.. அப்படித்தான் இருக்கின்றது இன்றைய  சினிமா உலகம்.

சிகரம் தொடு திரைப்படத்துக்கு நேற்று சத்தியம் தியேட்டர் புல்....
 சரி விஷய்த்துக்கு வருவோம்..

 இந்த படம்  பார்க்கலாம் என்று டாக் வர முக்கியகாரணம் ஒன்று  இயக்குனர் அனுராக் கஷ்யாப்  போல  நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன் லைன்  பிடித்து... பேனை பெருமாளாக்கும்  திரைக்கதை யுத்தி...

இந்த லைனுக்கு போய் விட்டால்... எந்த பாரின் படத்தின்  உருவல் இது என்று சொல்ல முடியாது... செப்ட்டி டிராவல் ஏரியா..
 அதைதான் இயக்குனர் கவுரவ் செய்து இருக்கின்றார்... சென்னை புறநகரில் ஏடிஎம்களில்  நடக்கும் குற்ற செயல்களை வைத்து தனி தீசிஸ் எழுதலாம். 

ஏடிஎம் கொள்ளை சம்பவங்களின் உண்மை சம்பவங்களை  வைத்துக்கொண்டு, நாகசு வேலை செய்து இரண்டரை மணி நேர  படத்தை  நிறைய லாஜக்குகளுடன் ரசிக்க வைக்கின்றார்.

சென்னை கேளம்பாக்கம்  படூர் இந்துஸ்தான் கல்லூரிக்கு முன் ஒரு ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம் இருக்கின்றது... அது  ஆள்  நடமாட்டம்  அற்ற  பகுதி...அந்த இடத்தில் நிறைய முறை பணம் எடுத்து இருக்கின்றேன்...
 ஆனால் அங்கே நடந்த  ஏடிஎம் கொள்ளை முயற்சியில்  செக்யூரிட்டி ஒருவர்  கொல்லப்பட்டார் .. இது போல சென்னை புறநகர்களில்  ஏடிஎம்மையங்களில்  கொள்ளை அடிக்க நடந்த முயற்சியில் நிறைய  கொலைகள் நடந்து இருக்கின்றது...

இதுதான்  சிகரம் தொடு  படத்தின் ஒன்லைன்...

சென்னை நகரில் ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் கொலை சம்பவங்கள்  தொடர்ந்து நடக்கின்றன... சத்தியராஜ்  நேர்மையான போலிஸ் ஆபிசராக இருந்து பணியின் போது காலை இழந்து காவல் துறை அலுவலகத்தில்  டெஸ்க் ஒர்க் செய்துக்கொண்டு இருப்பவர்... அப்பாவின்  கால் இழக்க காரணம் போலிஸ் வேலை என்பதால் ஹீரோ விக்ரம் பிரபு  போலிஸ் வேலையை   அதிகமாக  வெறுக்கின்றார்.. அப்பா சத்தியராஜோ தன் மகன் நேர்மையான போலிஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று  அதீத எதிர்பார்ப்பு...
ஹீரோ போலிசாக உயர்ந்தாரா?

அப்படியே  போலிஸ் வேலையில் சேர்ந்தாலும்  அந்த வேலையை காதலித்தாரா?


ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யார்...
விடை வெண்திரையில்...

தூங்க நகரம் படத்திற்கு பிறகு இயக்குனர் கவுரவ் இயக்கும் இரண்டாவது திரைப்படம் சிகரம் தொடு... இரண்டு வருட உழைப்பு. ஹோம் ஒர்க்   சொல்லிக்கொள்ளும் வெற்றியை பெற்றுள்ளார்.
விக்ரம் பிரபு...


பார்ன் இன் சில்வர் ஸ்பூன் ஹீரோ...


தண்டையார் பேட்டை மார்கெட்டில்  சிவகார்த்திகேயனை  கைலி கட்டி ஒடவிடலாம்... ஓடிவிடுவார்...


ஆனால் விக்ரம் பிரபு ..?? முதல் படம் கும்கியில் டவுன்டு  எர்த்தாக நடித்தவர்....கும்கி, இவன் வேற மாதிரியில்  இருந்த   தடுமாற்றங்கள் இந்த படத்தில் இல்லவே இல்லை..


முதல்பகுதிகாதல் காட்சியாகட்டும்... அப்பா  குண்டடிப்பட்டு மருத்துவமைனையில் சேர்க்கப்பட  கலங்கி சுவற்றில் அடித்துக்கொண்டு அழும்  இடங்களில்  இயல்பான நடிப்பில்  மிளிர்கின்றார்.

மோனல் அழகு பதுமையாக வருகின்றார்... சத்தியம் தியேட்டர் ஸ்கிரின் அருகே போய் அந்த இரண்டு...... பம்ளிமாஸ் கன்னங்களை கிள்ள வேண்டும் என்று கை பறபறக்கின்றது...

கொஞ்சம் ரொமான்ஸ் சீன்ஸ் வைத்து இருக்கலாம்...
பிடிக்குதே  சாங்கின் லோக்கேஷன் மற்றும்  காஸ்ட்யூம்கள் கலக்கல்... காதலர்களுக்கு  இந்த வருடத்தின்  சிறந்த மெலடி பாடல் பிடிக்குதே..  இசையமைப்பாளர் இமானுக்கு வாழ்த்துகள்.


அதே போல இந்தியாவில் வடக்கு பக்கத்தை மிக அழகாக  பாரின் போல  பிரசன்ட் செய்த ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுகள்.. அது மட்டுமல்ல நிறைய லாங் ஷாட்டுகள் ரசிக்க வைக்கின்றன... சேசிங்கில் கூட லாரி போர்ஷன் லாங் ஷாட் சூப்பர்.

முதல் பாதி சென்டிமென்ட், காதல் கிரிப்பாக செல்ல இரண்டாம் பாதி ஏடிஎம் டிடெயிலிங்குடன் பரபரப்பாய் பயணிக்கின்றது..
நான் இந்த  படத்தை ரசிக்க முக்கியகாரணம் ஏடிஎம் பற்றி இந்த படத்தில் காட்டிய டீடெயிலிங்கும்... அதற்கான ஹோம் ஒர்க்கிற்கும் ஹேட்ஸ்ஆப்.


அதே போல முதல்  பாதி சிரிதும் தொய்வில்லாமல் ,செல்ல கிரிஸ்பான எடிட்டிங் முக்கியகாரணம்  என்கின்றேன்...

படம் பார்க்க வேண்டிய திரைப்படம்... ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்... விக்ரம்பிரபு கேரியரில்  சிகரம் தொடு  வெற்றிப்படம் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்..

=====
படத்தின் டிரைலர்.


=========
படக்குழுவினர் விபரம்.
Directed by Gaurav
Produced by Ronnie Screwvala
Siddharth Roy Kapur
Written by Gaurav
Starring Vikram Prabhu
Monal Gajjar
Sathyaraj
Music by D. Imman
Cinematography Vijay Ulaganath
Edited by Praveen K. L.
Production
company
UTV Motion Pictures
Release dates September 12, 2014
Country India
Language Tamil

======
பைனல்கிக்...

முன்பாதியில் சத்தியராஜூக்கும் மகனுக்குமான அழுத்தமான  காட்சிகள் இன்னும் இருந்து இருக்க வேண்டும் என்பது என்  எண்ணம்..   லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் படம் இரண்டாம்  பாதியில் பரபரப்பாக இருக்கும் காரணத்தால் அதை பற்றி பேச வேண்டாம்...
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். சிகரம் தொடு.

=======

சினிமா  மீது காதல் இருந்தாலும் குடும்பத்துக்காக சினிமாவை எட்ட நின்று காதலித்தவன் நான்..

சிகரம் தொடு திரைப்படம்...  இந்த படத்தில் நான் ஒரு காட்சியில்  நடித்து டப்பிங் பேசிய  முதல் திரைப்படம் இதுவே...

சினிமாவில் ஒரு காட்சியில் நடித்ததை எல்லாம் வெளியே சொல்லிக்கொண்டு திரியக்கூடாது... நீளம் கருதி நம்ம சீன் காணமல் போய் விடும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் காரணத்தால் வெளியே சொல்லவில்லை....


பேங்கில் எடிஎம்மில் பபணம் பறிகொடுத்த பத்திரிக்கையாளனாக நடித்த இருக்கின்றேன்..

இந்த திரைப்படத்தில் நான் ஒரு  காட்சியில்  நடிக்க  வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த Natarajan Jaganathan க்கும்... தைரியாமாக நடியுங்கள் என்று தட்டிக்கொடுத்த இயக்குனர் Gaurav Narayanan க்கும்... ஹீரோ விக்ரம் பிரபுவுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் நன்றிகள்.

மேலும் திரைதுறையில் இன்னும் சாதிக்க  உங்கள் வாழ்த்துகள் வேண்டி

உங்கள் ஜாக்கிசேகர்.

நன்றி.

==========
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஏழு.

==
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

11 comments:

  1. neengal naditha scene paarthaen...ungalukku make up konjam over dhan(hahahaha!!!)...All the best for your future endeavour.....padathai innum konjam nandraga eduthu irukalam enbadhu enadhu ennam...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஜாக்கி
    இப்போது ஒரு திரை நட்சத்திரம்... வாவ்..

    ReplyDelete
  3. mudhal onscreen play..!! vazhthukkal jackie...!!

    ReplyDelete
  4. Appo inime ungalai "sigaram thodu" pughal jackie sekar appadinnu koopadalam :-)

    ReplyDelete
  5. BEST OF LUCK TO SHINE LIKE A STAR IN NEAR FUTURE.

    ReplyDelete
  6. Jackie, as a crew member, 1 VIP ticket pls ..

    ReplyDelete
  7. அண்ணே அப்போ டக்கு டக்கு பாட்டுல வரது நீங்க இல்லையா

    ReplyDelete
  8. Congrats Jackie.. All the best to get more opportunities

    ReplyDelete
  9. அப்போ 2016 முதல்வர் போஸ்டுக்கு நீங்களும் போட்டியா?

    ReplyDelete
  10. வாழ்த்துகள் ஜாக்கி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner