ஒரு ஓட்டல் முதலாளி பையன் தமிழ் நாட்டின் ரசிகர்களை கிறங்க வைக்க முடியுமா?
அதுக்கு முன்ன ஒரு சின்ன அனலைசஸ்....
எனக்கு தெரிந்து கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் திரை துறையில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள்...நான்கு பேர்...
ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்
இரண்டாவது மோகன்( மைக் மோகன் என்றால் எல்லோரும் அறிவர்)
மூன்றாவது அர்ஜூன்
நான்காவது பிரகாஷ்ராஜ்.
சரி இதில் இன்றுவரை புகழை முதலிடத்தில் தக்க வைத்துக்கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மாத்திரமே...
ஆனா அதே ரஜினிக்கு ஒரு காலத்தில் பீதி கிளப்ப வைத்த நடிகர் யார் என்றால் அது நடிகர் மோகன்தான்.. இன்னும் ஒரு சுவாரஸ்யம்... கமல் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் அறிமுகமானவர்கள் பிற்காலத்தில் அவருக்கு ரெண்டு பேர் ஃடப் பைட் கொடுத்தார் ஒருவர் ரஜினி மற்றவர் மோகன் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா-?
ஆம் ரஜினி கமலுக்கு இணையான சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் என்றால் நம்புங்கள்.1980 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை ரஜினி கமலின் தூக்கத்தை கெடுத்ததில் மோகனுக்கு முக்கிய பங்குண்டு....
1980களில் இளமை பருவத்தை கடந்த பல பெண்களின் கனவு நாயகன் மோகன்தான்... மோகன் போட்டோவை படுக்கையில் வைத்து வியர்வையோடு படுத்தி எடுத்த காலம் அது...
கர்நாடகாவில் ஓட்டல் வைத்து நடத்தியவர் மோகனின் அப்பா...
மோகன் பெங்களூரில் பிறந்தார்... அங்கேதான் படிப்பு எல்லாம்.. ஓட்டலில் பார்த்துதான் அவரை நாடகத்தில் நடிக்க அழைத்தனர்...
அதன் பின் 1977 ஆம் ஆண்டு கமல் நடித்த கோகிலா மூலம்..... பாலுமகேந்திராவால் அறிமுகம் செய்யப்பட்டார்.. அதன் பின் 1980 ஆம் வெளிவந்த மூடுபணி... மற்றும் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே... அவருக்கு ஸ்டார் அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்தது எனலாம்.
அதன் பின் வெற்றியோ வெற்றிதான்... திரும்பி பார்க்க முடியாத , நினைத்து பார்க்க முடியாத, கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வெற்றி விழா படங்களில் நடித்தவர் மோகன்...
பணங்கள் முடிவதில்லை... மற்றும் கிளிஞ்சல்கள் படங்களில் மோகனை தமிழ் ரசிகர்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடினைர்கள்..25 நான் ஓடினால் இப்போது எல்லாம் பெரிய வெற்றி... மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை...500 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம் என்றால் நம்புங்கள்...
கட் ஷூ போட்டு பெல்ஸ் பேன்டோடு கையில் மைக்கோடு மோகன் திரையில் வந்தால் .. கரகோஷம் பின்னும்...
மோகனின் திரை வெற்றிக்கு முக்கியகாரணங்களில் ஒன்று காதல் மற்றும் குடும்பகதைகளை தேர்ந்து எடுத்து நடித்துதான்... அதே போல அவர் நடிக்கும் படத்துக்கு ராஜாவின் பாடல்கள் மேலும் மகுடத்தை சேர்க்க வெற்றிக்கு கேட்கவா வேண்டும்.
அவர் கேரியரில் நிறைய படங்கள் மதர்லேன்ட் பிக்சருக்கு செய்து இருக்கின்றார்... உயிரே உனக்காக எனக்கு பிடித்த திரைப்படம்
1978 இல் இருந்து 1988 ஆம் ஆண்டு வரை இருந்த காலம் இருக்கின்றதே... தமிழ் சினிமாவுக்கு நடிகர் மோகனுக்கு அது பொற்காலம் என்றே சொல்லலாம்..
ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் செய்த ஒரே தமிழ் நடிகர் மோன்தான் என்று நினைக்கின்றேன் மூன்றில் ஒன்று பிளாப் ஆக வேண்டும் என்று அக்கலாத்தில் நிறைய பேர் வேண்டிக்கொண்டனர்.. மூன்று படங்களும் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள்.
உதாரணத்துக்கு 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே வருடத்தில் மோகன் நடித்த வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா...?? மொத்தம் 19 திரைப்படங்கள்... எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் முறியடிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.
ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் ஆகி மூன்று மே வெள்ளிவிழா படங்கள் என்ற சாதனையையும் இதுவரை எவரும் வெல்லவில்லை... யாரும் இல்லை..
சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் இத்தனை படங்களில் நடித்து இருந்தாலும்... அவர் எந்த படத்திலும் சொந்தக்ககுரலில் பேசி நடித்து இல்லை... ஆம் அவருக்கு இரவல் குரல் கொடுத்தவர் சுரேந்தர்...
ஆனால் கலைஞர் வசனத்தில் வெளியான பாசப்பறைவைகள் படத்தில் முதல் முறையாக சொந்தக்குரலில் பேசி நடித்தார்... விம்சிஹனிபா இந்த படத்தை இயக்கினார் என்று நினைக்கின்றேன்...
10 வருடங்கள் பட்டைய கிளப்பிய நடிகர் இன்று எந்த படத்திலும் நடிக்க வில்லை... யோசித்து பாருங்கள் மோகனின் பார்வையில் பத்து வருடம் தூங்க கூட நேரம் இல்லாமல் நடித்தவர்... ஷார்ட் ரெடி, ஆக்ஷன், கட் போன்ற எந்த சந்ததமும் கடந்த 14 வருடங்களில் கேட்காமல் இருப்பது எவ்வளவு கொடுமை.. சினிமா உலகம் அப்படியானதுதான்...
1990 களில் உருவம் என்ற படத்தில் விகாரமாக நடித்த காரணத்தால் அவரை ரசிகர்கள் தூக்கி எறிந்தார்கள் என்ற பேச்சு உண்டு...
ஆனால் மோகனுக்கு அந்த நேரத்தில் அதிஷ்டம் இருந்து இருந்தால் மவுனராகத்துக்கு பிறகு அஞ்சலி படத்தில் மோகன் ரேவதி ஜோடி நடிக்க முடிவு செய்து இருந்தார்.. மோகன் டேட்ஸ் இல்லாத காரணத்தால் அந்த பாத்திரத்தில் ரகுவரன் நடித்தார்... ஒரு வேளை மோகன் நடித்து இருந்தால் பெரிய வெற்றிப்படமாக அஞ்சலி அமைந்து இருக்கும் காரணம்... மவுனராகம் அந்த அளவுக்கு பெரிய வெற்றி...
அப்படி ஒரு அன்பான கணவன் கிடைக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்த பெண்களுக்கு அன்பாக தகப்பனாக மோகன் நடித்து இருந்தால் பெண்கள் கண்ணை மூடி ஏற்க்கொண்டு இருந்து இருப்பார்கள்..
கடந்த விட்ட காலங்கள் பற்றி பேசி பயன் இல்லை என்றாலும் இப்போதாவது பேசுவோமே...
மோகன் செய்த நல்ல விஷயம் உணர்ச்சி வசப்பட்டு தன் கேரியரை நிலை நிறுத்த சொந்தப்படம் எடுக்கின்றேன் என்று முஷ்ட்டி மடக்கி படம் எடுக்கவில்லை.. ஒரே படம்தான் எடுத்தார்... அதுவும் சரிவரவில்லை என்ற காரணத்தால் விலகி விட்டார்...
தற்போது கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்...
சில்வர் ஜூப்ளி நாயகன் 1990க்கு பிறகு படம் இல்லாமல் தவித்தார்... ஆனால் ஏன் மோகனை அதன் பிறகு குணச்சித்திர , வில்லன் , காமெடியன் படங்களில் அவருக்கு ஏன் வாய்ப்பு தமிழ் சினிமா வழங்வில்லை என்பது மில்லியன் டாலர் கேள்விதான்..
காரணம் காமெடி, வில்லன், குணச்சித்திரம் என பட்டையை கிளப்பியவர் அவர்...
மோகன் நடித்த திரைப்படங்களில் என்னுடைய ஆள் டைம் பேவரைட் திரைப்படம் மவுனராகம்....
நான் எழுதிய தமிழ் சினிமா விமர்சனங்களில் நான் மிகவும் ரசித்து எழுதிய விமர்சனங்களில் மவுனராகமும் ஒன்று...
மௌனராகம் திரைப்படத்தின் விமர்சனத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்
நிறைய பாடகர் கதாபாத்திரங்களில் நடித்த காரணத்தால் மைக் மோகன் என்ற அடைமொழி ஓட்டிக்கொண்டது...
58 வயதாகும் மோகனுக்கு இன்று பிறந்த நாள்.... இன்னும் பல சாதனை புரிய மைக் மோகனை வாழ்த்துவோம்..
.
நடிகர் மோகன் பற்றிய சுவாரஸ்ய செய்திகள் இருப்பின் நண்பர்கள் பின்னுட்டத்தில் பகிரலாம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
23/08/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நடிகர் மோகனை பற்றிய பதிவு அருமை.
ReplyDeleteமுகத்தில் பருக்கள் இருந்தும் வசீகரித்தவர்
ReplyDeleteOk anyhow Raguvaran done 100% justice to the father role he played in Anjali right?
ReplyDeletemy favourites are Mounaragam,Nooraavathu naal,Vithi,Udhayageetham,Uyire Unakkaga...........goes like this
ReplyDeleteMoreover Rajni had overtaken Kamal so many years back and Mohan gave tough fight for Kamal
ReplyDeleteமவுனராகம் எனக்கு மிகவும் பிடித்த படம்! மோகனை பற்றி பல சுவாரஸ்யத்தகவல்களை அறிந்து கொண்டேன்! நன்றி!
ReplyDeleteஅதன் பின் 1977 ஆம் ஆண்டு கமல் நடித்த கோகிலா மூலம்..... பாலுமகேந்திராவால் அறிமுகம் செய்யப்பட்டார்- அப்படியா,,, நல்ல தகவல்... சற்று மார்க்கெட் போன பின்புதான் உருவம் படத்தில் நடித்தார்.. எனவே அதை வீழ்ச்சிக்கு காரணமாக சொல்ல இயலாது
ReplyDelete"விதி" படத்தில் அவருடைய நடிப்பை நான் ரொம்ப ரசித்தேன்
ReplyDeletebut mouna ragam is a copied version of nenjathai killathe.mohan acted in that film also.
ReplyDeleteசற்று மார்க்கெட் போன பின்புதான் உருவம் படத்தில் நடித்தார்.. எனவே அதை வீழ்ச்சிக்கு காரணமாக சொல்ல இயலாது.
ReplyDeleteYes.correct
மோகன் வெற்றிக்கு முக்கிய காரணம் மிக பெரிய ஹிட் ஹிட்ஹிட்ஹிட் பாடல்கள்
ReplyDeleteநடிகர் மோகனைப் பற்றிய மிகச் சிறப்பான பகிர்வு அண்ணா...
ReplyDeleteமுகத்தில் பருக்கள் இருந்தும் வசீகரம் செய்தவர் என்று எழுத நினைத்து மறந்து போன விடயத்தை நியாபகபடுத்தியமைக்கு மிக்க நன்றி...
ReplyDeleteஉண்மை பிச்சைக்காரன்... அதை வீழ்ச்சி என்று சொல்ல முடியாது.. ஆனால் அப்படி ஒரு டாக் இருந்தது என்பதை பகிர்ந்து இருக்கின்றேன்... பாராட்டிய கருத்திட்ட நண்பர்களுக்கு என் நன்றிக்ள்.
I liked many of his movies too. Good actor.
ReplyDeleteI love ilayaraja
ReplyDeleteI love ilayaraja
ReplyDelete