இயக்குனர் வெற்றிமாறன்.




வெற்றிமாறன் தமிழ் சினிமா நம்பிக்கையோடு உச்சரிக்கும் பெயர்…


வெற்றிமாறன்  தமிழ் சினிமா துறைக்கு வந்து  ஏழு வருடங்கள் ஆகப்போகின்றது… ஆனால்  இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே   இயக்கி இருக்கின்றார்…

 ஆனாலும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ரசிகர்கள்  வெற்றிமாறனை தங்கள் ஆதர்ச இயக்குனராக கொண்டாடுகின்றார்கள்…

சினிமா கிராமர் தெரிந்து படம் எடுக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் வெகு குறைவு… அந்த வகையில் சினிமாவின் கிராமரோடு நம்ம உள்ளுர் சரக்கையும் இணைத்து  கதை பண்ணுவதில் வெற்றிமாறன் வல்லவர்.

 பாலுமகேந்திராவின் சிஷ்ய பிள்ளை என்பதாலோ என்னவோ…? புத்தகங்களின்  மீது தீராக்காதல்…தான்  படித்த ஆங்கில மொழி புத்தகங்கள் மிக நன்றாக இருந்தால் அதனை தமிழில்  மொழி பெயர்த்து  தன் சொந்த பதிப்கத்தில் புத்தகமாக போட்டு அனைவரும் படித்து பயன் பெரும் வகையில் ஒரு பதிப்பகத்தையும் தொடங்கி இருக்கின்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்…

வெற்றிமாறன்  கமர்ஷியல் படங்களாக வருடத்துக்கு நாலு படங்கள் எடுத்து கல்லா கட்டி    இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை…

எதிர்கால கனவுகளோடு ஒரு  உதவி இயக்குனர் தனது குரு நாதர்தானே என்ற  நம்பிக்கையில் தான் உருவாக்கியகதையை  சொன்னால்…. அதை அப்படியே  சட்டென பட்டி டிங்கரிங் பார்த்து தன் கதை என்று பெரிய பெரிய இயக்குனர்களே படம் எடுக்கும் இந்த காலக்கட்டத்தில்…. வெற்றிமாறனிடம்   கதை சொல்லும் நண்பர்கள் உதவி இயக்குனர்கள் யாருடைய கதை நன்றாக இருந்தாலும்  அந்த படத்தை தானே தயாரிப்பது  அல்லது  அவர்களுக்கு வாய்ப்பு வாங்கி  தருவது என்று  அசத்தி வரும் ஒரே இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமே என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அவருடன் இருந்த உதவி இயக்குனர்கள் அத்தனை பேரும்  இன்று இயக்குனர்களாக மாறி விட்டார்கள் என்பதுதான் உண்மை.


  இவர் இயக்கிய இரண்டு திரைப்படங்கள் பொல்லாதவன்  மற்றும் ஆடுகளம்.. இரண்டுமே வசூலிலும், பாராட்டுகளில் குளித்த திரைப்படம்…

  தான்  எடுக்கப்போகும் திரைப்படத்தின் திரைக்கதையில் முழு நம்பிக்கை இருந்தால் தான் அந்த படத்தை இயக்குகின்றார்….  நடுத்த மற்றும் விளம்புநிலை இளைஞர்களின் மன ஓட்டம் வாழ்க்கை  சூழல் போன்றவற்றை மிகை படுத்தாமல் இயல்பாக செல்லுலாய்ட்டில் பதிவு செய்வதில் வல்லவர்.

பொல்லாதவன் படத்தில் அப்பா அடிப்பட்டு கிடக்க கிஷோருடன்  கெத்தாக பேசும் வசனம் நடிப்பு வெற்றிமாறனுக்கு மட்டுமே சாத்தியம்.

அதே போல ஆடுகளத்தில் டாப்சி தனுஷை காதலிக்கின்றேன் என்று கை காட்ட அதன் பின் வரும் எக்ஸ்பிரஷன்  மற்றும் கைலிகட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் சான்சே  இல்லை..
தனுஷ் என்ற இந்தி தெரியாத நடிகரை ஆடுகளத்தின் கைலி  டான்ஸ் மட்டும் அந்த இயல்பு மட்டுமே வைத்து ராஞ்சனா இந்தி படத்தில் வாய்ப்பு கிடைத்தது வரலாறு.


இதுவரை இரண்டு படங்கள் இயக்கி இரண்டிலுமே தனுஷ்தான் நாயகன் மூன்றாவது படத்திலும் தனுஷ்தான்  நாயகன் என்பதும்  ஆச்சர்யமான செய்திதான்…

 பாலுமகேந்திரா சீடர்களில்  ஒரு சிலர் நிறைய பேசுவார்கள்… ஆனால்  இயக்குனர் பாலா போல மிக அமைதியாக தேவையில்லாமல் எந்த பேட்டியிலும் ஒரு வார்த்தை கூட வெற்றிமாறன் பேசியது இல்லை.. அதுமட்டுமல்ல..  பாலாவிடடம் கூட ஒரு சின்ன கர்வம் கண்களில் தெரியும்… ஆனால் வெற்றிமாறனிடம் கிஞ்சித்தும் கிடையாது…


இரண்டு வார்த்தை எக்ஸ்ட்ரா புகழ்ந்தாலும் கூட இதுவேணாமே என்று மறுத்து விடும் ரகம் வெற்றிமாறனுக்கே  உரிதானது..


  ஆடுகளம் படத்தின் முடிவில் கூட தன் எந்த திரைப்படத்தை பார்த்து இன்ஸ்பயர் ஆகினேன் என்று குறிப்பிட்டு  அந்த  இயக்குனர்களுக்கு  டைடில் கார்டில் நன்றி தெரிவித்து இருப்பார்…


நான் இயக்கிய படம் மட்டுமே கொண்டாட படவேண்டிய திரைப்படம்.. நானே  தமிழ் சினிமாவை காக்க வந்த சுயம்பு என்று வெற்றிமாறன் எங்கேயும் மார்தட்டிக்கொண்டதில்லை… அதனாலே அவரை எனக்கு மிகவும்  பிடிக்கும்.


 ஆடுகளம் படத்துக்கு  ஒரே  நேரத்தில் இரண்டு அவார்டுகளை வென்றவர்.. சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்தையாளர்  என இரண்டு  தேசிய விருதுகளை வென்றவர்,
கடலூரில் பிறந்து  தமிழ் சினிமாவை கலக்கும் வெற்றிமாறனுக்கு இன்று பிறந்தநாள்…  வயது 39….  


வெற்றிமாறனின் வெற்றியின் ரகசியம் தன் விரும்பும் சினிமாவை  தான் நம்பும் கதையை முழமையாக நம்பி களம் இறங்குவது… வெற்றி  தோல்வி எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.


வெற்றிமாறன் இன்னும் பல சாதனைகளை  தமிழ் சினிமாவில்  புரிய எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டிக்கொள்வோம். 

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்  வெற்றிமாறன் ஜி

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
04/09/2014





நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

  1. I thought Vettri is from Vellore(Ranipet). But anyway what ever you wrote about him is very correct.

    ReplyDelete
  2. வெற்றி மாறனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வெற்றி மாறனுக்கு வாழ்த்துக்கள். இரண்டு படங்கள் மட்டும் இயக்கி இருந்தாலும் இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு அவருடைய திறமை பேசப்படும். என்னைப் போன்ற புதியவர்களையும் வைத்து படம் இயக்கினால் மகிழ்ச்சி. வாய்ப்புக்காக காத்திருக்கும்.
    -சி.கே.பி.கார்த்திகேயன்,
    செல்: 9383005015, 9941710938

    ReplyDelete
  4. Jackie Write about "I" movie teaser and the crew..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner