தன்னம்பிக்கையின் மறுபெயர் இயக்குனர் அனுராக் காஷ்யப்



அனுராக் காஷ்யப் இந்திய சினிமா பெருமீதத்தோடு உச்சரிக்கும் பெயர்.

இந்திய சென்சார் போர்ட்   செய்த  இரட்டை வேடத்தால் இவரின்  முதல் படத்தை  இன்றுவரை  ரிலிஸ்   செய்ய முடியவில்லை..

இரண்டாம் படத்தை வெளியிட முடியாது என்று தடை  சென்சார் போர்டு கங்கனம் கட்டிக்கொண்டு தடை போட்டது.. 

சினிமாவில் சாதிக்க  மும்பையின் பிளாட்பாரங்களில்  வாழ்ந்து....பாய்ஸ் ஹாஸ்டல்  மாடியில்   உள்ள தண்ணீர் தொட்டிக்கீழே  தன்  வாழ்க்கையை ஆரம்பித்து ,மெல்ல மெல்ல ககையில் காலில்   விழுந்து சான்ஸ் பெற்று திரைப்படம் இயக்கினால்  அந்த படத்தை வெளியிட சென்சார் போர்டு   தடை போட்டால் ஒரு இயக்குனர் என்ன செய்வான்..???



மரணம் துரத்தினால் ஓடலாம்... மூச்சி வாக்கினால்? திரும்பவும் ஓடலாம்.... முச்சிரைத்தால்? திரும்பவும் ஓடலாம் , உயிர் ஆயிற்றே...ஓட முடியவில்லை என்றால் அதன் இடத்தில் இருந்து தப்ப முடியவில்லை  என்று ஒரு  பிரேக்கிங் பாயிண்ட் நிலையில் இருந்தால்........
வெறியோடு திரும்பி..... ஓம்மமால  நீயா..? நானான்னு பார்த்துடலாம்டான்னு முஷ்ட்டி மடக்கி  மல்லுக்கு நின்னு மரணத்தை  இரண்டுல ஒன்னு பார்த்துடலாம்....

 ஆனால்  தோல்வி அப்படி கிடையாது...? அது புரட்டி அடிச்சா... எழுந்து ஓட முடியாமா? நொடிஞ்சி போய் நடைபினமா இந்த உலகத்துல  நிறைய பேர்  வாழ்க்கையை   இழந்து   இருக்காங்க...
 கதவை சாத்திக்கிட்டு போதைக்கு அடிமையாகி மண்ணோடு மண்ணா போனவனும், தூக்கிலே தொங்கினவனுங்க கதை இந்த  பூமியில் ஏராளம்.

 சரி திரும்ப தன்னம்பிக்கையோடு எழுத்திருக்கலாம்ன்னு பார்த்தா  மொக்க  மோகன் எல்லாம் நம்ம கிட்ட வந்து அட்வைஸ் பண்ணறேன்னு பேர் வழின்னு நம்பலை குத்தி ரணகளமாக்குவானுங்க... இதுக்கு செத்தே தொலைஞ்சி இருக்கலாம்ன்னு நினைக்க வச்சிடுவானுங்க...

 அதனால்  தோல்வி  விடாமல் துரத்தும் போது , சரியான நேரம் பார்த்து அதன் நடுமார்பில்  எட்டி உதைத்து, அதனை நிலைய குலைய வந்து நிமிர்ந்து நிற்பது சாதாரணகாரியம் அல்ல..?? அப்படி நின்னா எதையும் சாதிக்க இதயம் ரெடியாகிடும்.

இதில் கொடுமை  என்னவென்றால் இந்திய முழுவதும் புகழ் பெற்று  ஒரு மிதப்பாக வரும் நேரத்தில்  தோல்வி உங்களை துரத்தினால் எப்படி தாங்குவீர்கள்.

 ஆனால்  தொடர்ந்து துரத்திய தோல்வியை   ஒரு கணத்துல எட்டி மங்குன்னு சத்தம் வருவது போல அதன்  நடு மார்பில் மிதித்து மீண்டு வந்தவர்தான் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

  அனுராக் காஷ்யப் இந்திய சினிமா பெருமீதத்தோடு உச்சரிக்கும் பெயர்.

சினிமா என்பது பொறாமை நிறைந்த உலகம்... யாரையும்  எளிதில் பாராட்ட மாட்டார்கள்.... எப்போது இந்திக்காரனுங்களுக்கு மதராசி  என்றாலே பின்புறத்தில்  பச்சை மிளக்காய் அரைத்து வைத்தது போல இருக்கும்...

தமிழர்களிடம் பேசுவது என்றால்  திடிர் என்று  முளைத்த இரண்டு  கொம்போடுதான் பேசுவார்கள்... அப்படியே பாராட்டினாலும்  மணிரத்னம் போன்ற உயர் ஜாதிக்காரர்களை மட்டும் பாராட்டி இந்தியன் என்று நிரூபிப்பார்கள்.. ஆனால்  இந்திய இயக்குனர் அனுராக் முதன் முறையாக மனதில் இருந்து பட்டவர்தனமாக..... இவர்களுடைய படம்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை  கொண்டு வர  காரணம் என்றும், இவர்கள் படங்களை பார்த்து விட்டுதான் நான் கேங் ஆப் வசிப்பூர் படத்தை இயக்கினேன் என்று சொல்ல  ஒரு பெரிய  மனது வேண்டும் அல்லவா??


காஷ்யாப் சொன்ன அந்த இயக்குனர்கள் வேறுயாரும் இல்லை..நமது தமிழ் இயக்குனர்கள் பாலா,  அமீர், சசிக்குமார் போன்றவரைதான் அப்படி பாராட்டினார்.

 அதனாலே தான் இயக்கிய கேங் ஆப் வசிப்பூர் படத்தில் தனது நன்றியினை  டைட்டில்  கார்ட்டில் தெரிவித்தார்...



(இயக்குனர் பாலா பற்றி.. வீடியோவி அனுராக்)

  யோசித்துப்பாருங்கள் உத்திரபிரதேசத்தில்  பிறந்து வளர்ந்த ஒருவன்.. இந்தியும், ஆங்கிலமும்   பெரிய அளவில் தெரியாத , அதிகம் பேசாத பாலா போன்ற கலைஞனை சப்பாத்தி சாப்பிட்ட படி பாராட்ட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை... ஆனால் பாலா என்ற கலைஞனின் திறமைக்கு முன் நான் ஒன்றுமே இல்லை என்று இந்தியா எங்கும் புகழப்படும் இயக்குனர் இப்படி சொல்ல முடியுமா? 

கஷ்யாப்பால் சொல்ல முடியும்...  அது  மட்டுமல்ல பரதேசி படத்தை பார்த்து விட்டு வட இந்தியா எங்கும்... இந்தி, ஆங்கில சப்டைட்டிலோடு அனுராக்கின்   நிறுவணமே வெளியிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


 உத்திரபிரதேசத்தில் அனுராக்  பிறந்த போது இந்திய சினிமாவின் தலையெழுத்தை  மாற்றுவேன் என்று  அரசியல்வாதிகள் போல எந்த சந்திய பிரமானமும்  அனுராக் எடுத்துக்கொள்ளவில்லை..


அவ்வளவு என் படிக்கும் போ து கட்  அடித்து விட்டு இந்தி படம் பார்த்ததாக அவர் எங்கேயும் சொல்லவில்லை.. ஆனால் டெல்லியில் கல்லூரியில்  ஜூவாலஜி படிக்கும் போது தவளையை  கவுத்து போட்டு அறுத்து... இது ஈரல், இது இதயம்  என்று குறிப்பேடுக்காமல், உலகசினிமாக்களை பிலிம் பெஸ்ட்டிவலில் பார்த்த ஒரே காரணத்தால் சினிமாவின் மீது காதல் பிறந்தது... அதுவும் பைசைக்கிள் தீவ்ஸ் திரைப்படம்தான் சினிமா மீது காதலும் காமமும்  கொள்ளவைத்து எனலாம்.


அப்புறம் என்ன தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக   சேர்ந்து நடித்தாலும் கனவுகள் எல்லாம் மும்பையை சுற்றியே இருக்க.... ஐஞ்சாயிரம் ரூபாய் காச எடுத்துக்கிட்டு மும்பைல இறங்கி நல்ல ஓட்டல் தங்கி... அந்த காசு  ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாம.... சோத்துக்கு  ஜிங்கி அடிச்சி.. தங்கறதுக்கு பிளாட்பாரம்....பாய்ஸ்  ஹாஸ்டல் தண்ணி டேங்குக்கு கீழ படுத்திக்கிட்டு என்று மும்பை தன் வேறு பக்க நரக வாழ்வை 1993களில் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தது எனலாம்.

 அதன் பின் கோவிந்த  நிகாலனி மற்றும்  சிவம் நாயரிடம் சில காலம் பணியாற்றினாலும், 

 பெரிய பிரேக் இல்லாமல்  தவித்தார்... இக்காலத்தில் தான் சம்பாதித்த  வருமாணத்தில் நல்ல விசிடு பிளேயர் வாங்கி....  நிறைய திரைப்படங்கள் பார்க்க துவங்கினார்... திரைக்கதை சூட்டசமத்தை ஆராய்ந்ததார்... ஸ்கிரிப்ட் எழுதவது எப்படி என்று புரிபட  நிறைய ஸ்கிரிப்ட்டுகள் எழுதி அழுத்து எழுதி அழுத்து தன் திறமையை வளர்ந்துக்கொண்டார்...


அனுராக்கின் திரையுலக வாழ்வை திறம்பட துவக்கி வைத்த பெருமை இயக்குனர்  ராம் கோபால் வர்மாவுக்கே உண்டு. 1998  ஆம் ஆண்டு சத்யா திரைப்படத்துக்கு கதையும் திரைக்கதையும்  எழுதினார்.. இந்திய சினிமா அனுராக்கின்ற திறமைய அடையாளம்  கண்டு  பெஸ்ட் ஸ்கீரின் ரைட்டர் அவார்டை  சத்தியா திரைப்படத்துக்கொடுத்து மகிழ்ந்தது.

இந்தியாவின் மிகச்சிறந்த கேங்ஸ்டர் படம் எது என்றால்  சத்தியா திரைப்படத்தை கண்டிப்பாக சொல்லலாம்..

 அதன் பின் எழுத்தும் இயக்கமும்  பிடித்து போக..  மணிரத்னத்தின் யுவா மற்றும்  சில ராம் கோபால் வர்மா திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கின்றார்... அதே போல இயக்குனர் ஷங்கருடன் இனைந்து  நாயக் திரைப்படத்தின் திரைக்கதை எழுதி இருக்கின்றார்.
லாஸ்ட் டிரெயின்  டூ மஹாகாளி என்கின்ற குறும்படம் மூலம்   இயக்குனர் அவதாரம் எடுத்து அதனை ஸ்டார் பிளஸ் சேனல் ஒளிபரப்பி  இந்தியாவிசன் சினிமா பிதாமகனின் முதல் திரைப்படத்தை நாங்களே ஒளிபரப்பினோம் என்று வரலாற்று பக்கத்தில்  மார்தட்டிக்கொண்டது. .


2003 ஆண்டு பாஞ் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார்... ஆனால் அந்த படம் இன்றுவரை வெளிவரவில்லை.. சென்சார் போர்டு அதிக ஆபாசம் மற்றும் வன்முறை இருப்பதாக இந்த படத்தை வெளியிட மறுத்தது...


 அனுராக் வாழ்வில் அடி என்றால் அடி மரண அடி...   அது வெள்ளிதிரையில் முதல் படம்....இந்த படத்தில்  படத்தை எடிட்  செய்ய வந்த ஆர்த்தி பஜாஜ் என்கின்ற எடிட்டர் பெண்ணோடு சினேகம்..  திருமணமும் செய்துக்கொண்டார்கள்... பெண்குழந்தையும் பிறந்தது...

பாஞ் படம் வந்தால் இந்தியாவில் வன்முறையும் ஆபாசமும் பெருகி விடும் என்று  முதல் படத்திலேயே இந்திய சென்சார் போர்டு அனுராக் கஷ்யாப்புக்கு  செக் வைத்தது.. படத்தை வெளியிட மறுத்தது...
முதல் படம்   வரவில்லை என்றால்  யோசித்து பாருங்கள்..  தூக்கிற்கு கழுத்தை கொடுக்க வேண்டியதுதான்.. ஆனால் அந்த சோகத்துக்கு குடிக்கு தன் உதட்டை கொடுத்தார்...

  அறையை சாத்திக்கொண்டு என்நேரமும் குடித்துக்கொண்டு இருக்கும் கணவனை  எந்த பெண்தான் மதிப்பாள்...?, சொல்லுங்கள்.. எடிட்டர் ஆர்த்தி பஜாஜ் என் வாழ்க்கையை விட்டு விலகி விடுங்கள் என்று   எரிந்து விழுந்தார்.

குடியில் மூழ்கி திளைத்து முத்தெடுக்க முடியாது என்று உணர்ந்த அனுராக் முகம் கழுவி  மெல்ல குடிப்பழக்கத்தில் இருந்து மெல்ல வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்.
 என்ன செய்வதென்று தெரியவில்லை.. முதல் படம் வரவில்லை.. படம் வரவில்லை என்றால் யாரும் மதிக்க மறுப்பார்கள் 

கட்டியமனைவியே மதிக்க மாட்டாள்... திரும்ப  பணபிரச்சனை...  இயக்குனர்  மகேஷ் பட்டை சந்திதார்.... அவரும் உதட்டை பிதிக்கினார்... இருந்தாலும் கஷ்யாப் மேல் இருந்த  திறமை காரணமாக பத்தாயிரம் பணத்தை கொடுத்து மனம் தளரவேண்டாம் என்று அறிவூறுத்தினார்...

2004 ஆம்  ஆண்டு அதாவது 2003 பாஞ் திரைப்படம் வெளிய சென்சார் போர்டு மறுக்க....

2004 ஆம்  ஆண்டு 1993 ஆம் ஆண்டு மூம்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்து  பிளாக் பிரைடே படத்தை  இயக்கினார்...

 இந்த படத்துக்கும் சென்சார் போர்டு முரண்டு பிடித்து... மத கலவரங்களை உருவாக்க இந்த திரைப்படம் ஏதுவாக்கும்  என்று சப்பை காரணத்தை முன்னிருத்தியது... 

படம் உலக திரைப்பட விழாக்களில் வெளியாகி பட்டையை கிளப்ப... சென்சார் போடு  எங்க நம்ம பேர்ல பாஞ்சிட போறாங்கன்னு  இரண்டு வருடம் கொடுக்காத அனுமதியை படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு  கொடுத்து.,....

 அதன் பின்  அனுராக் இந்திய  திரைப்பட வானில்  வெற்றிகரமாக வலம் வர ஆரம்பித்தார்...

2009 ஆம் ஆண்டு தேவ்டி திரைப்படத்தை தொடங்கினார்... முதல் மனைவியை விவாகரத்து செய்தார்....  தேவ்டி படத்தில் நடித்த கல்கி  கோச்சிலினை கரம் பிடித்தார்.. இவர் வேறுயாரும் இல்லை... நம் பாண்டிச்சேரிக்காரர்.   அது ஒரு தனிக்கதை அதை வெறு ஒரு சந்தர்பத்தில் எழுதி மகிழ்வோம்...

கல்கியை திருமணம் செய்துக்கொண்ட பிறகும் தன்  முதல் மனைவியோடு  சேர்ந்து பணி புரிந்தார் என்பது  குறிப்பிடதக்கது..
 என்னை  பொறுத்தவரை தேவ் டி, த கேர்ள் இன் எல்லோ பூட், கேங்ஸ் ஆப் வசீப்பூர் போன்ற படங்கள் என் ஆல்டைம் பேவரைட் என்று சொல்லலாம்...

இந்தியாவில் நடப்பவைதான்.. ஆனாலும் பூசி மொழுகி காட்சியாக வைப்பார்கள்.. ஆனால் அதை காட்சியாக வைக்கும் தில் உள்ள ஒரே இயக்குனர்  அனுராக் கஷ்யாப் தான் ...

 போன் செக்ஸ், பிளோஜாப்,  கார்பரேட் தில்லு முல்லுகள்.. போதை பழக்க வழக்கங்கள் போன்றவை காட்சிகளாக வைப்பதாலேயே இவர் காண்ட்ரவர்சியல் இயக்குனர் என்று  பெயர் எடுத்தவர்...

நிறைய  தோல்விகளை பார்த்தாலோ என்னவோ.... காட்சிகளில் டயலாக்குகளில் ஒரு தடிப்பு மித மிஞ்சி இருக்கும்... எல்லா காட்சியும் வசனமும்  சென்சார் போர்டினை வம்புக்கு இழுப்பதாகவே இருக்கும்...

  அனுராக் படம் என்றால் இந்திய சென்சார் போர்டு அதிகாரிகள்.. கூடுதலாக விளக்கெண்ணையை கண்ணில் ஊற்றிக்கொண்டு பார்ப்பார்கள்...

 இப்போது கூட தான் அழகியலாக எடுத்த காட்சில்  சிகரேட் பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது என்ற வாசம் வர வேண்டும் என்று சொல்ல...

 அது காட்சியின் அழகியலை கெடுக்கும் படம் பார்க்கும் ரசிகனை அது டிஸ்ட்ராக் செய்யும் என்று அனுராக் வாதாட  சென்சார் அதிகாரிகள் இதுதான் சட்டம் என்று கூக்குரல் இட, அப்ப சிகரேட்டை  ஏன்  இந்தியாவில் விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று  அனுராக் நீதி மன்ற கதவை  தட்டி இருக்கின்றார்....


இந்தியா  நிறைய அசிங்கமான பக்கங்களை தன்னுள்ளே வைத்துக்கொண்டு  நல்லவன் என்று கலாச்சாரம் வேஷம் போட்டு வருகின்றது என்பதை தன் படங்களில்  தோல் உரித்து காண்பித்து வருபவர்..

ஸ்லம்டாக் மில்லெனியர் படம் எடுக்க துண்டுதலாக இருந்தது...  அனுராக் எடுத்த பிளாக் பிரைடே திரைப்படம் தான் தனது இன்ஸ்பிரேஷ்ன் என்று இயக்குனர்  டேனிபாயல் குறிப்பிட்டு இருக்கின்றார்.... அதனாலே மும்பை தராவியில் 15 நிமிட சேசிங் காட்சியை தான் வைத்ததாக தெரிவிக்கின்றார்...

 எது அதிகமான  பரபரப்பான காண்டர்வர்சியல் செய்திகளாக இருக்கின்றதோ.. அதை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர் காஷ்யாப்  மட்டுமே,.


பூச்சுக்கல் இல்லாத காட்சிகளை தன் படத்தில் காட்சிகளாக வைப்பதாலேயே நான் அனுராக்கின் ரசிகன் அது மட்டுமல்ல... மற்ற படைப்பாளிகளின் படைப்புகளையும்  மதிக்க தெரிந்தவன் என்பதால் அந்த ஆளை எனக்கு  மிகவும் பிடிக்கும்

  இதே நாளில்  உத்திரபிரதேசத்தில்  பிறந்து , தோல்விகள் துரத்திய போது எல்லாம் தன்னம்பிக்கையுடன் போராடி இந்திய ஆளுமை  இயக்குனர்கள் பட்டியலில் தன்  பெயரையும் இணைத்துக்கொண்ட அனுராக் கஷ்யாப்பை  மனம் நிறைய வாழ்த்துவோம்...



இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அனுராக் கஷ்யாப் ஜி.

பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

  1. எது அதிகமான பரபரப்பான காண்டர்வர்சியல் செய்திகளாக இருக்கின்றதோ.. அதை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர் காஷ்யாப் மட்டுமே,.

    ReplyDelete
  2. எது அதிகமான பரபரப்பான காண்டர்வர்சியல் செய்திகளாக இருக்கின்றதோ.. அதை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர் காஷ்யாப் மட்டுமே,.

    ReplyDelete
  3. எது அதிகமான பரபரப்பான காண்டர்வர்சியல் செய்திகளாக இருக்கின்றதோ.. அதை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர் காஷ்யாப் மட்டுமே,.

    ReplyDelete
  4. அனுராக் கஷ்யாப் ku thamizh theriyuma?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner