உப்புக்காத்து/ 31(சினிமா துறைக்கு செல்லும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்)



இது நான் லீனியர் உப்புக்காத்து..


ஜாக்கி சார்...

நீங்க   டிவி  மீடியத்துல இருந்து சினிமாவுக்கு போயிட்டு எதுக்கு திரும்ப டிவி மீடியத்துக்கு வந்திங்க..??

 சினிமாவுல இரண்டு வருஷம் இருந்தேன்.... 25 ஆயிரம் சம்பாதிச்சேன்..  ஆனா இந்த நேரத்துல  ஒய்ப் லோன் போட்டாங்க...வீடு வாங்கிட்டோம்.... நம்பி வந்தவளை காசு இல்லாம  தவிக்க விட முடியாது இல்லையா..?  யாழினி  பொறந்தா..... அப்புறம்  எங்க சினிமா???

தமிழ் சினிமாவில் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு  கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து மரியாத்தா  கோவில் சத்தியம் அடித்து விட்டு எல்லாம் நான் புறப்பட்டு வரவில்லை..

சினிமாவை நேசிக்கின்றேன்.. உண்மையாய் ...

பிராப்தம் இருந்தால் அது கை கொடுக்கட்டும்...

சினிமா எங்கேயும் ஓடிப்போகப்போவதில்லை.. கிளின்ட் ஈஸ்ட் உட் வயதிலும் சினிமாவில்  சாதிக்கலாம்... 

ஆனால்   வாழ்க்கை...??

 கட் டூ பிளாஷ் பேக்.........



கடமை தவறாத காவல் வீரன் என்றால் தமிழ் சினிமா நமக்கு நிறைய கதாபாத்திரங்களை அறிமுகபடுத்தி வைத்திருக்கின்றது.  அதில் ஏதாவது ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள்..

 அவன் நல்லவன்....

 நல்லவன் என்றால் ...???? நீதி, நேர்மை, நியாயம்,  போன்றவற்றை  நேர்மையான ஹாமாம் சோப்பு போட்டு வார்த்து எடுக்கப்பட்டவன்...

 நல்லவன் அப்படின்னா விட்டு விட்டு போயிட வேண்டியதுதானே...,? அப்புறம் என்ன மயித்துக்கு இவ்வளவு விளக்கம் நீங்கள்  டென்ஷன் ஆவது தெரிகின்றது..

 பட் நல்ல...

 அப்படி என்றால் பல பேருக்கு என்ன வென்று தெரியவில்லை...  நாணயமாக நடந்துக்கொள்ளுவான்...

அடுத்தவன் பைசாவுக்கு கிஞ்சித்தும் ஆசை கொள்ள மாட்டான்.
பிறர் பொருளை  அபகரிக்க வேண்டும் என்று   கனவிலும் அவன் நினைத்தது இல்லை...

பழி பாவத்துக்கு அஞ்சபவன்.

கர்வி....

அதனால்தான் கொஞ்சம் எழுத வேண்டியதாகி விட்டது...
திரும்பவும்   சொல்கின்றேன்.....  அவன் நல்லவன் என்றால்  அப்படி ஒரு நல்லவன்..

 படிப்பில் பொது அறிவில் படு சுட்டி....

 தென் மாவட்டத்தில் காவிரி பாயும் ஊர்... அப்பா அரசாங்க  உத்யோகஸ்தர்.... கான்வெட்  படிப்பு என்பதால் என்னை போல எட்டாம்  வகுப்பு படிக்கும் போது லைக் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் முழிப்பது போல முழிக்காமல் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே லைக் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தவன் என்பதால்   இளம் வயதில் ஆங்கில புத்தகங்கள் அத்துப்படி...

பத்தாம் வகுப்பு நல்ல மார்க்.

 பனிரெண்டாம் வகுப்பு நல்ல  மார்க்.... கல்லூரியில் பிரிந்து மேய்ந்து படித்தான்... விஜிலென்ஸ் ஆபிசர் உத்யோகத்துக்கு இந்தியா  முழுவதும் தேர்வு நடைபெற்றது...

ஹேவி காம்படேஷன்  இந்தியாவே விஜிலென்ஸ் தேர்வுக்கு விழுந்து விழுந்து படித்துக்கொண்டு இருக்கும் போது... ரிலாக்சாக தினத்தந்தி  பேப்பரில் கள்ளக்காதல் கொலை செய்தியை படித்துக்கொண்டு இருந்தான்...

2002  ம் ஆண்டில் விஜிலென்ஸ் ஆபிசர் உத்யோகம். மத்திய அரசு  உத்யோகம்....40 ஆயிரம் சம்பளம்...

 கற்றடித்தாலும் ,வெயில்  அடித்தாலும்,மழை பெய்தாலும், வேலை செய்தாலும் செய்யா விட்டாலும், சம்பளம் ஒன்றாம் தேதியானால்  அக்கவுண்ட்டில் விழுந்து விடும்...

  ஏர்போர்ட்டில் குவார்ட்டர்ஸ் கொடுத்தார்கள்...... ரேஷன்,குடி தண்ணீர் எல்லாம் சலாம் போட்டு வாசலில் வந்து  நிற்கும்...
அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்... தன் பிள்ளை தன்னை மரியாதையான இடத்தில் கொண்டு  வந்து  வைத்து விட்டான் என்று  பெருமீதம்...

 அவன்  டூட்டுக்கு வருகிறான் என்றால் எர்போர்ட்டில்  இருக்கும் ஏஜென்டுகளுக்கு ஜன்னி வந்து காய்சல் வந்து விடும். அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்பதால் பேப்பர் எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே பயணி விமானம் எற அனுமதிக்கப்படுவார்... பேப்பர் சரியில்லை என்றால் அவ்வளவுதான்...  அடுத்த நிமிடமே பயணம் கேன்சல்...

 படித்துக்கொண்டு இருந்த  போது  அவனை அவன் என்று விளித்தோம்... அதில் ஒரு நியாயம் இருக்கின்றது...
ஆனால் ஏர்போர்ட் அதிரும் ஒரு  ஆசாமியை  அவன்  என்று  விளிக்க வேண்டாம் எனபதால்  அவனை  குணா என்று   சுருக்கமாக அழைப்போம்.

குணா ஏர்போர்ட்டில் வரும் நேரத்துக்குள் ஏஜென்டுகளின் ஆட்கள்  செக்கின்  முடிந்து சீல் போட்டு உள்ளே சென்று விட வேண்டும் என்று இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ளுவார்கள்.

குணா எப்போது வீட்டில் இருந்து கிளம்புகின்றார்?  எப்போது ஏர்போர்ட் வருவார் என்று அவரை உளவு பார்க்க ஏஜென்டுகள் ஒரு பெரிய டீமையே வைத்து இருந்தார்கள். அந்த அளவுக்கு டெரர்...  நேர்மைதான் பாவ புண்ணியமே கிடையாது...

 குணாவோடு நட்பு பாராட்டி அவரை தன் கைக்குள் போட்டுக்கொண்டால் தம்முடைய  ஆட்கள் எளிதாக விமானம் ஏரளாம் என்று வலையில் வீழ்த்த தலையால் தண்ணிக்குடித்து பார்த்தார்கள்..


 ஆனாலும் மனிதன் அசைமாட்டார்...
 குணா மட்டும்முழு ஒத்துழைப்பு கொடுத்து இருந்தால்... ஒரு நாளைக்கு  இரண்டில் இருந்து 5 லட்சம் வீட்டுக்கு எடுத்து வரலாமாம்...

தற்போது   வட மாநிலத்தில் தற்போது புணரமைக்கப்பட்ட விமான நிலையத்தில் உயர் பதவி வகித்து... ஒன்றரை லட்சம் வாங்கி கொண்டு ஜம் என்று இருக்கின்றார்...

சரி அப்படியே கட் பண்ணி  வேற  ஒருத்தனை இப்ப  பார்ப்போம்.... இவனுக்கு சேகர்ன்னு பேர் வச்சிப்போம்....

  நான் வேலை செய்துக்கொண்டு இருந்த தொலைகாட்சியில்   என்னோடு  மூன்று வருடங்களுக்கு  முன் பணியில் சேர்ந்தான்...
இரண்டு பேரும் சேர்ந்து   ராய்ட்டர்சில் வரும் சுவாரஸ்ய  செய்திகளை வைத்து   ஆளுக்கு எட்டு எட்டு ஸ்டோரி   எழுதி தினமும்  அரைமணி நேர  நிகழ்ச்சி  செய்தோம் ....

 அதன் பின் வெவ்வேறு நிகழச்சிகள் செய்தோம் பழகிய  நாட்கள் மிக குறைவு என்றாலும் என் வயது என்பதால்   மிக  நெருக்கம்...வாடா சேகர் போடா  சேகர் என்று  நட்பாய் அழைப்பேன். 20 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு  தினமும்  சரவணபவனில் காப்பி குடித்து எப்படி கட்டுப்படியாகின்றது என்று  யோசித்து இருக்கின்றேன்...

 என் வயது இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.. எப்போது திருமண  பேச்சை  ஆரம்பித்தாலும் பிடி கொடுத்து பேசமாட்டான்...
 பாடி   அருகே  ஆயிரம் சதுர அடியில் அப்பாட்மென்ட்டில்  புது வீடு ஒன்று வாங்கினான்...

  கிரஹபிரவேசம் வைத்து என்னையும் அழைத்தான்...
யாழினியை பார்த்துக்கொள்ள  ஒன்றரை  மா தங்கள் அலுவலகத்தில் லீவ் சொல்லி இருக்கின்றேன்.... அவசியம்  வந்து விடுங்கள் ஜாக்கி  என்று போனில் அழைத்தான்...

 என்னால்  காலையில் செல்ல முடியவில்லை. யாழினியை பள்ளிக்கு அனுப்பி விட்டு  நான் காலை   ஒன்பது மணி வாக்கில்  புது வீட்டிற்கு சென்றேன்...

ஓடி வந்து அனைத்துக்கொண்டான்...

 வீட்டு வாசலில்... போலிஸ் அதிகாரிகளின்  வாகனங்கள்  மூன்றுக்கு மேல் நின்று கொண்டு இருந்தன... எல்லாம் தலையில் சிவப்பு  விளக்கு வைத்துக்கொண்டு இருந்தன... தனது நண்பர்களை  எனக்கு அறிமுகபடுத்தி வைத்தான்...இன்ஸ்பெக்டர், எஸ்ஐ கிரேடுகளில் ஆட்கள்   புது வீட்டில் வளைய வந்துக்கொண்டு இருந்தார்கள்....
 எல்லோரும் சேகரை சார் சார் என்று   மரியாதையாக அழைத்துக்கொண்டு இருந்தனர்.
 எனக்கு ஆச்சர்யம்...??

 விசாரித்தேன்...

2002  ஆம் ஆண்டில் பணிக்கு   ஏர்போர் விஜிலென்ஸ் ஆபிசராக கலக்கிய  குணாதான்  சேகர் என்பது தெரிந்தது...

 என் கண்கள் கலங்கியது....

இதையெல்லாம் எதையும் சொல்லாமல் 20,000 ஆயிரம் சம்பளத்துக்கு என்னோடு வேலை செய்தானா? ஏன் என்றேன்.??

சினிமா ஆசை...

எங்க இருந்து வந்துச்சின்னு தெரியலை சார்...

  ஆபிசர் வேலையை ரிசைன் பண்ணிட்டு    இந்தியாவின் பிரபல திரைக்கதை இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்து இருக்கின்றார்...

 எவ்வளவோ எடுத்து சொன்னோம்... சினிமா   ஆசை கண்ணை மறைத்து விட்டது... குணாவின் அம்மா  அழுது புலம்பி இருக்கின்றார்.. எல்லாம் சினிமா  ஆசை கண்ணை மறைத்து விட்டது...

குணாவின் ரிசைனிங்னை ஏர்போர்ட் அத்தாரிட்டி உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை.. நேர்மையான மனிதரை இழக்க எந்த நிர்வாகத்த்துக்கு   மனசு வரும் சொல்லுங்கள்...

 இந்தியாவுல எந்த எர்போர்ட்டுல வேண்டுமானாலும் போஸ்ட் போட்டு தரேன்... மனசு சரியில்லையா... எல்லா   ஊருக்கு பிரியா போயிட்டு வா... ஆனா வேலையை ரிசைன் செய்யாதே என்று சொன்னன போது குணா தன்  முடிவில்  உறுதியாக இருந்தார்.

 நான் லாங் லீவ்தான்  உங்களுக்கு  ஒரு வருஷத்துக்கு போட்டு இருக்கேன்...  ஆறு மாதத்தில் எப்ப   மனசு மாறிறனாலும் வந்து டூட்டியில் ஜாயின்ட் பண்ணிக்கோங்க என்று சொல்லியும்.... அவர் கேட்கவில்லை.. ஆறு மாதத்தில்  திரும்ப போன் வந்தது... சினிமா மோகம்  அவரை ஏர் போர்ட் பக்கம் திரும்பவில்லை.

ஒரு வருடம் கழித்து பைலை மேலிடத்துக்கு அனுப்ப போகின்றேன்.. ஒரு தரம் ரெண்டு தரம்ன்னு  ஏலம் விடும் கணக்காக சொல்லியும் அவர்  இசைவு கொடுக்கவில்லை..

  சென்னை வடக்கு சரகம் இன்ஸபெக்டர் சொல்றார்... ஜாக்கி சார்.. இப்போதைக்கு அவரு ரொம்பபெரிய  ரேங்கில ஆபிசரா இருந்து இருப்பார்... அப்பயே ஒரு மணி  நேரத்துல ஐந்து லட்சம் கல்லா கட்டுவாங்க,.. அவருக்கு தெரியாம...? அவரு மட்டும் அன்னைக்கு கண்ணை காட்டி இருந்தா... சென்னையில் இந்த அப்பார்ட்மென்ட் போல 40 வாங்கி  இருக்க முடியும்.... லஞ்ச பணம் ஒரு பைசா வாங்கியதில்லை...

பணத்தை டிராலிதள்ளிக்கிட்டு வந்து பிரிப்பாங்க... அந்த அளவுக்கு பணம் விளையாடும் என்றார்...

நான் குணாவை பார்தேன்...  பேசி இப்ப என்ன பிரயோஜனம் என்று வெறுப்பாய் சொன்னான்.

தமிழ் சினிமாவின் தலையெழுத்தை என்னை விட்டால் யாரால் புரட்ட முடியும் என்று   குணாவுக்கு  அன்றைய காலத்தில் இருந்த அதீத நம்பிக்கை ஒரு மத்திய அரசு உத்தியோகத்தை விட வைத்து இருக்கின்றது..

ஆனால் காலம் குணாவை அலைகழித்தது... பத்து வருடங்கள் சினிமாவில் இருந்து பெரிய பிரேக் எதுவும் அமையாமல்... சினிமாவை விட்டு விலகுவதாய்  குணா முடிவெடுத்தார்...

 கிட்ட வில்லை என்றால்   கட்டிக்கொண்டு அழாமல்  வெளியே வருவதுதான் வீரனுக்கு அழகு... குணா சினிமாவை விட்டு தொலைகாட்சி  மீடியத்துக்கு வந்தார்...

 என்ன செய்ய  கதை திரைக்கதை வசனம்  பார்த்திபன் படத்தில் தம்பி ராமைய்யா புலம்புவது போல குணா புலம்பவில்லை என்றாலும்
அந்த கண்களில் வாழ்க்கையை வீணடித்து விட்ட வேதனை கலந்த வலியை உணர்ந்தவர்களுக்கே அது புரியும்.

குணாவுக்கு விரைவில்  திருமணம் நடக்க வேண்டும் என்பதே என் ஆசை...  இதை படிக்கும்  உங்களின் பிரார்த்தனைகளாகவும்  இருக்கட்டும்.

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

21/08/2014


குறிப்பு.
 சினிமா துறைக்கு வரும் முன் இந்த  உப்புக்காத்து தொடரின் இந்த எப்பிசோட்டை  மட்டும் வாசித்து விட்டு சினிமா துறைக்கு செல்லவும்...


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

  1. மனம் கனத்துப் போயிற்று குணாவைப் பற்றி அறிந்ததும். ஆறாத காயமல்லவா அவருடையது..? நானும் பிரார்த்திக்கிறேன் சேகர்.

    ReplyDelete
  2. என்னப்பா நடக்குது...
    எங்கே தப்பு செய்தார் என்று தெரியவில்லை
    துணிச்சலாக தனது கனவுகளுக்காக தனது பணியை விட்டவர் ...
    கலங்குவது நியாம் இல்லை

    ஏற்றுக்கொண்டு வெறியோடு அடுத்த தளத்தில் சாதிக்க வேண்டியதுதான் ..

    ReplyDelete
  3. உங்கள் நண்பர் குணா சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Definitely he will achieve Greater Heights one day. My heartiest wishes and prayers.

    ReplyDelete
  5. குணாவின் நிலை யாருக்கும் வரக் கூடாது! எங்க ஊரிலும் இப்படி டைரக்டர் ஆகிறேன் என்று ஒரு நபர் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறார்!

    ReplyDelete
  6. அண்ண சினிமாவுல வெற்றி-ஒற்றை இலக்காேத. ஆனா தோள்வி எட்டு இலக்காே

    ReplyDelete
  7. குணா அவர்களின் வாழ்க்கை வளம் பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner