நீங்கள் போட்டோ கிராபரா..?
அப்படி என்றால் இது உங்களுக்கான திரைப்படம்.
கண்டிப்பாக இந்த திரைப்படத்தை நீங்கள் பார்க்க வேண்டும்...
சலனப்படத்தின் மீதுதான்
எனக்கு முதலில் காதல்... அதனால்தான் வீடியோ
துறையை தேர்ந்து எடுத்தேன்...
ஒரு திருமணத்தை கூட சினிமாவில்
வரும் ஷாட்டுகளை போல நிறைய கட் ஷாட் கொடுத்தும்
ஆங்கிள் மாற்றியும் படம் பிடிப்பேன்....
ஸ்டேன்டில் போட்டோ அல்லது தோளில்
கேமரா வைத்தோ கடமைக்கு ரெக்கார்ட்டிங் போட்டு வேலை செய்ததே இல்லை.....
நான் ரசித்து செய்த வேலை...
ஆனால் கஷ்டப்பட்டு கல்யாணத்தில் குருப் மிகவும் பொறுமையாக கேமராவை பேன் செய்து எடுத்துக்கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருக்கும் போட்டோ கிராபர் கிளிக் செய்
பிளாஷ் அடித்தால் போதும் எல்லோரும் கல் எரிந்த
தேனிக்கூடு போல சட்டென்று கலைந்து போக... ஓத்தா
மதிக்காத இந்த வேலையை இனி செய்யக்கூடாது
என்று முடிவு எடுத்து வீடியோ கேமராமேனில் இருந்து போட்டோகிராபராக மாறினேன்.
இதுவரை ஆயிரக்கணக்கான
திருமணங்கள் எடுத்தாகி விட்டது.. லட்சக்கனக்கான
புகைப்படங்கள் எடுத்தாகி விட்டது.. ஆனாலும்
ஒரு கணத்தை பதிவு செய்வதும் இப்போதும் எனக்கு
ஆனந்தம்தான்...
பிலிம் கேமராவில் இருந்து இப்போது டிஜிட்டல் வரை வந்தாலும் எப்எம் 10 நிக்கான் கேமரவையும் ரோல் போட்டு கணக்கு வைத்து குளோசப் படங்கள் எடுத்ததும்.. முக்கியமான நேரத்தில் ரோல் முடிய அவசரம் அவசரமாக வேர்த்து விறு விறுக்க ரோல் மாற்றி படம் எடுத்த
கணங்கள் இன்று இருக்கும் டிஜிட்டல் போட்டோ கிராபர்கள் அறியாதவை..
இன்னும் ஹேன்டி கேம் டிஜிட்டல் கேமராக்கள் வந்தவுடன். இந்த தொழிலுக்கு மரியாதையே
போய் விட்டது...
தொழிலில் மதிப்பு இல்லாத
போது வேறு தளத்துக்கு மாற வேண்டும் என்பது
எனக்கு பிடித்த விஷயம்....
சார் ஒரு சிப்பு போட்டா?
ஆயிரம் படம் எடுக்கலாம்... எதுக்கு சார் இன்னும் ரோல் கணக்கு போடறிங்க என்றார் ஒரு கஸ்டமர்..
16 ஜிபி கார்டு போட்டா... 5 ஆயிரம் போட்டோ கூட எடுக்கலாம்....
நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்து பத்தே பத்து
போட்டோ ஒழுங்க பிரேம் வச்சி எடுங்களேன் ... ரோல் கணக்கே பேசலை... கத்துக்கிட்ட தொழிலுக்குதான்
காசு கேக்கறோம் என்றேன்.
5 ஆயிரம் படம் எடுக்கலாம்ன்னு வச்சிக்கோங்க.. அதுக்காக காலையில இருந்து சாயங்காலம் வரை உன் வீட்டுலேயே
உட்கார்ந்துக்கிட்டு இருக்க முடியுமா? அதனால்தான்
ரோல் கணக்கு என்றேன்.. அதன் பின் அவர் வாய் திறக்கவில்லை...
ஆனால் ஒரு
காலத்தில் போட்டோகிராபர்கள் தெய்வமாக
பார்த்த காலம் ஒன்று உண்டு... ஆனால் எப்போது
சிறிய ரக கைக்கு அடக்கமான கேமராக்கள் பொது மக்களிடம்
அறிமுகமானதோ... அப்போதே போட்டோகிராபர்களுக்கான மரியாதை போய் விட்டது...
சில நேரங்களில் அமெச்சூர் போட்டோகிராபார்கள் எடுத்த
போட்டோக்கள் பிலிம் எக்ஸ் போஸ் ஆகாத அல்லது பிரிண்டில் பிரச்சனை ஏற்படும் போது அமெச்சூர்
ஆட்களின் போட்டோக்கள் ஒரு பதிவாக உதவி இருக்கின்றது
என்பதை மறக்க முடியாது..
இன்றைய நவீன யுகத்தில்
செல்போனில் கேமரா வந்தாலும் வந்தது..
நொடிக்கு ஒரு தரம் போட்டோ எடுத்து அதனை
சமுக வலைதளங்களில் பதியும் போக்கு
நிறைய நடந்து வருவதை நாம் மறுக்க முடியாது...
அமேச்சூர் போட்டோகிராபார்கள்..
போட்டோவை பிரண்டு கொடுத்து விட்டு கலர் லேப் வாசலில் தவம் கிடந்து போட்டோக்களை வாங்கி சென்ற சம்பவங்கள் நிறையவே
உண்டு..
அதே போல கலர் லேப்புகளில் அமெச்சூர்
ரோல்களை தொலைத்துவிட்டு கை கட்டி
கண்ணீர் மல்க பதில் சொன்ன கதைகளும் ஏராளம்.
எனக்கு
சென்னையில் வடபழனியில் பேருந்து நிலையம்
எதிரில் இருக்கும் போட்டோ நெட்டை தவிர வேறு எங்கும்
நான் இதுவரை பிரிண்ட் போட்டதில்லை... தனுஷ் போட்டோஸ் என்றால் உடனே பிரிண்ட் அடித்து வைத்து இருப்பார்கள்...
போட்டோ நெட் கலர் லேபில் வேலை செய்த நண்பர்கள் பலர் எனக்கு பிற்காலத்தில் குடும்ப நண்பர்கள் ஆயினர்..
இந்த திரைப்படம் கலர்லேப்பில் வேலை செய்யும் திருமணம்
ஆகாத வயது முதிர்ந்த ரபின் வில்லியம்ஸ் பற்றியது...
போட்டோ பிரிண்ட் அடித்து விட்டு வேஸ்ட் ஆனா போட்டோக்களை
ஓனரிடம் கணக்கு காட்ட வேண்டும் என்பது கலர் லேப் விதி...
ஆனால் நிறைய போட்டோக்கள் வெஸ்ட் லிஸ்ட்டில் இருக்கின்றன..
ஆனால் கணக்கில் வரவில்லை...
என்ன செய்வது??? ரபினை பிடித்து விசாரித்தால் ஒரு
குறிப்பிட்ட பேமிலியில் எடுத்த போட்டோக்களை வேண்டாம்... கதையின் சஸ்பென்ஸ் உடைந்து விடும்...
அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இந்த திரைப்படம்..
ONE HOUR PHOTO-2002/உலகசினிமா/ அமெரிக்கா/
திரைக்கதையின் போக்கு திண்டிவனம், பாண்டி, கடலூர் சிதம்பரம் வழியாக போய்க்கொண்டு இருக்கின்றது என்று நினைக்கும் போது திடிர் என்று இந்த பக்கம் நெல்லூர் விஜயவாடா பக்கம் போனால் எப்படி இருக்கும்??
எனக்கு தெரிந்து ஒருவர் சமீபத்தில் இறந்து போனார்.. அவர் ஊருக்கு
பிச்சைக்காரனாக வந்தார்.. ஒரு குடும்பம் ஆதாரவளித்தது... சாகும் வரை அந்த குடும்பத்துக்காக
தனக்கு தெரிந்த கைத்தோழிலை வைத்து அந்த குடும்பத்துக்காக உழைத்துக்கொடுத்து இறந்து போனார்...
இத்தனைக்கு
அவரின் பின் புலம் பலர் அறியாத ஒன்று.. சிலர் இன்னும் மற்ற குடும்பத்தை எத்தனை க்கு எத்தனை அவமானபடுத்தினாலும் அந்தகுடும்பத்துக்காகவே பழியாக கிடப்பார்கள்...
அது போன்ற உறவு சிக்கல்களை வைத்து பக்கா திரில்லரை லோ பட்ஜெட்டில் கொடுத்து இருக்கும் இந்த திரைப்படத்தை
கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்... ஒன் அவர் போட்டோ சர்வ நிச்சயமாய் பார்க்க வேண்டிய திரைப்படம்.
=============
படத்தின் டிரைலர்.
==========
படக்குழுவினர் விபரம்...
Directed by Mark Romanek
Produced by Christine Vachon
Written by Mark Romanek
Starring Robin Williams
Connie Nielsen
Michael Vartan
Gary Cole
Eriq La Salle
Music by Reinhold Heil
Johnny Klimek
Cinematography Jeff Cronenweth
Edited by Jeffrey Ford
Production
company Catch 23 Entertainment
Killer Films
John Wells Productions
Distributed by Fox Searchlight Pictures
Release date(s) September 13, 2002
Running time 96 minutes
Country United States
Language English
Budget $12 million
Box office $52,223,306
========
பைனல் கிக்..
ராபின் நடிக்கும் போது இந்த திரைப்படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க போகின்றேன் என்று இந்த படத்தின் ஒன்லைனை தன் நண்பர்களிட்ம் பகிர்ந்து
இருந்தால்.... கண்டிப்பாக ஏன் பேரை கெடுத்துக்கொள்கின்றாய்...
என்று தடுத்து இருப்பார்கள்.. ஆனால்.... படத்தை பார்த்து விட்டு நிச்சயம் ராபினுக்கு
முத்தம் கொடுத்து இருப்பார்கள்..
இயக்குனர் Mark Romanek திரைப்படமாக இயக்கியது... மூன்றோ அல்லது நான்கு படங்கள்தான்... மற்றபடி மியூசிக் வீடியோக்களை இயக்குவதில் கில்லி என்றும் மைக்கேல் ஜாக்சன் வீடியோவை கூட இவர் இயக்கி இருக்கின்றார் என்று தகவல்...
இயக்குனர் Mark Romanek திரைப்படமாக இயக்கியது... மூன்றோ அல்லது நான்கு படங்கள்தான்... மற்றபடி மியூசிக் வீடியோக்களை இயக்குவதில் கில்லி என்றும் மைக்கேல் ஜாக்சன் வீடியோவை கூட இவர் இயக்கி இருக்கின்றார் என்று தகவல்...
அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்
===========
படத்தின் ரேட்டிங்
பத்துக்கு ஏழு.
=======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ராபின் வில்லியம்ஸ் சிறந்த நடிகர், அவசியம் இப்படத்தை பார்க்கிறேன்.
ReplyDeleteஇந்த படத்தின் ஹீரோ Oscar-winning actor #RobinWilliams found dead at home. He was 63. http://bit.ly/1yp2t5p
ReplyDelete