The Keeper of Lost Causes-2013-உலக சினிமா/ டென்மார்க்/யார் அவன்? எதற்கு செய்தான்?
டென் மார்க் நாட்டு திரில்லர்...

 அட்டகாசம் போங்கள்....


 அசத்தி இருக்கின்றார்கள்....  மேக்கிங், டயலாக், சினிமோட்டோகிராபி, சான்சே இல்லை...

 காஸ்ட்லி சரக்கா இருந்தாலும் சாப்பிட சாப்பிட அது கொஞ்சம் மொக்கையா தெரியும்...
திடிர்ன்னு  டாஸ்மார்க் கடை கதவு சாத்தும் போது  85 ,75 ன்னு  சொல்லிவாங்கற சரக்கு இருக்கே... ஒரு சின்ன கட்டிங்குக்கே...
 சான்சே இல்லாம நின்னு விளையாடுவான்... அது போலத்தான் இந்த திரைப்படம்..

ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பரபர சரசரதான்  போங்கள்.... வாய்ப்பே இல்லை... அற்புதமான கிரைம் திரில்லர்...

 இந்த டென்மார்க்   திரைப்படத்தை சினிமா தெரிந்த புடுங்கிகள் கொரியா திரைப்படமான ஓல்டுபாயை காப்பி கேட் பண்ணி விட்டார்கள் என்று சொல்ல  வாய்ப்பு இருக்கின்றது... அப்புறம் இன்னொரு அறிவு  ஜீவி வந்து ,மான்டேஜ் படத்தினையும் காப்பி அடித்து விட்டார்கள் என்று சொல்ல வாய்ப்பு இருக்கின்றது... எப்படிடா போறபோக்குல சொல்லுவானுங்கன்னு பார்த்தா இருக்கேவே இருக்கு அடிச்சி விடுற கலை.... சரி கதையை சொல்லறேன்.... ஒரளவுக்கு உங்களுக்கு தெரியும்...


 சரி விஷயத்துக்கு வருவோம்...

 அவன்  ஒரு போலிஸ்  ஆபிசர்... அமைதியா இருக்கவே மாட்டான்.... உதாரணத்துக்கு சொல்லனும்னா... ஜென்டில்மேன்  போலிஸ் ஆபிசர்  அழகர் நம்பி சரண்ராஜ் போலன்னு வச்சிக்கோங்க...

 துரு துருன்னு இருப்பான்... எதை பத்தியும் யோசிக்க மாட்டான்...

 ஒரு வீட்டுல சஸ்பெக்ட் இருக்கான் தெரிஞ்சிடுச்சி... பேக்கப்புக்கு ஆட்களை வரச்சொல்லி உள்ளே போலாம்ன்னு கூட இருக்கற ஆபிசருங்க எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கும் போதே டாமால்ன்னு அந்த வீட்டுக்கு உள்ள போறான்... 

கூடவே ஆபிசர்ங்க போறாங்க.... உள்ள இருக்கற  வில்லன் மூன்று பேரையும்  சுட்டுடறான்.... ஒரு ஆபிசர் ஸ்பாட் ஆவுட்.. ஒரு ஆபிசர் படுத்த படுக்கையா கிடக்கறான்... பேக்கப்புக்கு ஆட்கள் வரமா? நீ பெரிய புடுங்கி மயிறு போல உள்ளே  போய்  உன் அவசரத்தால  ஒருத்தன்  செத்துட்டான்... ஒருத்தன் படுத்த படுக்கை அதனால நீ ஹோமிசைடா இருக்க  லாயிக்கில்லைன்னு  அவனை விளங்காத கேஸ் இருக்கற செக்ஷனுக்கு அனுப்பறாங்க..

 விளங்காத செக்ஷன்ன்னா...  துப்பே கிடைக்காம தூசி படிஞ்சி போயி  கெடக்கற கேசை...  தூசி தட்டி எடுத்து...

 சாணி  பேப்பர்ல... கேசில் சம்பந்த பட்ட நபரின் பாடி  பல வருடங்கள் ஆகியும் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்த கேசை மூடு விழா நடுத்தறோம்ன்னு சொல்லி.. ஒரு  நாளைக்கு ஒரு கேஸ் வீதம் பைலை மூடி பச்சை கலர் இங்குல கையெழுத்து போட்டு கேசை முடி வைக்கனும்..

இந்த செக்ஷனுக்கு Q ன்னு பேரு....

அப்படி ஒரு கேசை  தூசி தட்டி முடு விழா நடத்தலாம்ன்னு நினைக்கு போது அது  நூல் பிடிச்சது போல பல திசைக்கு அழைச்சிக்கிட்டு போவுது.

  சரி  அந்த போலிஸ்காரன் பேர் என்ன தெரியுமா? கார்ல்... ஒகே... அவன்  ஏன் ரெஸ்ட்லெஸ்சா இருக்கனும்....???

பொண்டாட்டி அவனை விட்டு விட்டு போயிட்டா,....

கூட இருந்த போலிஸ்காரனுங்க செத்துட்டான்... ஒருத்தன் படுத்த படுக்கையா இருக்கான்.. அப்பறம் எப்படி சிரிப்பு வரும்... பொறுமை வரும்? எல்லாத்து மேலேயும் எரிஞ்சிதான் விழுவான்..

 அவனுக்கு ஒரு  அசிஸ்டென்ட் பெயர்.. ஆசாத்...

 ரெண்டு பேரும் 5 வருஷத்துக்கு முன்ன காணமா போன  பொண்ணோட கேசை தேடி போறங்க... அவள்  செத்துப்போயிட்டாளா? அல்லது கிடைச்சாளா? என்பதுதான் கதை..

 இந்த படத்தோட கதை  Jussi Adler-Olsen  என்கின்ற புகழ் பெற்ற டேனிஷ் எழுத்தாளரோட நாவல்...


 இந்த  எழுத்தாளர் ஆளோ அப்பா பெரிய செக்சியாலஜிஸ்ட்... மற்றும் சைக்கியாரிஸ்ட்டா இருந்து இருக்கார்... அதனால் நிறைய பைத்தியக்கார ஆஸ்பத்திரி அனுபவங்கள் அவருடைய டீன்  ஏஜ்ல பார்த்து இருக்கார்.. அது எல்லாம் படத்துல  காட்சிகளா விரியுது...

டென்மார்க்ல இந்த படம்  செக்கை போடு போட்டுக்கொண்டு  இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொம்ப நாளைக்கு அப்புறம் முஸ்லிம் கேரக்டரை ரொம்ப டீசன்டாக வடிவமைத்து இருக்கின்றார்கள்.. ஆசாத்தை ரசிக்கவும்  அவர் போடும் காபியை சுவைக்கவும் முடிகின்றது..

கிளைமாக்சில் உயர் அதிகாரி ஹோமிசைடா மாத்தறேன்னு சொல்லியும் கியு டிப்பார்ட்மென்ட் வேண்டும் என்று சொல்லி விட்டு  ஆசாத்துடன் இணையும்  இடம் டச்சிங்.
========
 படத்தின் டிரைலர்...

==========
படக்குழுவினர் விபரம்.

Director: Mikkel Nørgaard
Writers: Jussi Adler-Olsen (novel), Nikolaj Arcel
Stars: Nikolaj Lie Kaas, Fares Fares, Sonja Richter 
Country: Denmark | Germany | Sweden
Language: Danish | Swedish | Arabic
Release Date: 3 October 2013 (Denmark)
============
பைனல் கிக்.
 கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்...  படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பரபரன்னு ஓடிக்கிட்டு இருக்குது... படம் முடிஞ்ச உடன் வேண்டுமானால் இந்த படத்துல பார்த்த சீன் போல இருக்கு அந்த படத்துல வரும் சீன் போல இருக்குன்னு வேணா நினைக்கலாம்..  ஆனா படம் ஓடும் போது  நிச்சயம் வேற  எதையும் யோசிக்க வைக்காத திரைக்கதை.

============
படத்தோட ரேட்டிங்க,.

பத்துக்கு ஏழரை.
============
பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

  1. மிக்க நன்றி அண்ணா ரொர்டில் புகுந்து தேட வேண்டியது தான்

    ReplyDelete
  2. இப்பதான் பார்த்து முடிச்சன்.. படம் செம..!!

    ReplyDelete
  3. லிங்க் அனுப்புங்க

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner