BLIND-2011/உலக சினிமா/கொரியா/சைக்கோ கொலையாளியை கண்டு பிடிக்கும் பார்வையற்ற பெண்.
 முதல்ல  நாம சொல்லற  கதை  நம்பறா மாதிரி இருக்கனும்...

நம்பறமாதிரின்னா...

 நான் சொல்ற கதையை என்  நெருங்கிய நண்பர்கள் நம்பவுவது  போலவாவது இருக்க வேண்டும்... அப்போதுதான்  அந்த கதை வெற்றி பெறும்.

இப்படி ஒரு ஒன்லைனை நான்  சொல்கின்றேன் என்று வைத்தக்கொள்ளுங்கள்..


 விபத்தில் பார்வை இழந்த    பெண் ஒருவள்   கொடுரமான சீரியல் கில்லரை எப்படி  கண்டு பிடித்து போலிசிடம் ஒப்படைக்கின்றாள்  என்பதுதான்  படத்தின் ஒன்லைன் என்று சொன்னால் கண்டிப்பாக    ஆர்வமாக கதை கேட்பார்கள்..

 ஆனால் லாஜிக்காக நீங்கள் விளக்கும் போது   அந்த  லாஜிக்கு ஏற்ற காட்சிகள்   வைக்க  தமிழ் நாட்டில் அல்லது இந்திய சூழலில் நாம் வளர்ச்சி பெறவில்லை என்பதுதான் உண்மை....


 உதாரணத்துக்கு யாருமில்லாத  ரயில்வே ஸ்டேஷன்... கொலையாளி  துரத்துகின்றான்.

  போனில் சொல்லும் இன்ஸ்ட்ரக்ஷன் படி  பார்வையற்ற பெண்  ஒட வேண்டும்....  பழக்கமில்லரயில்வேஸ்டேஷன்  அது..

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பார்வையற்றவர்கள் நடந்து செல்ல ஸ்பெஷல்  பாதை  ஒன்று இருக்கின்றது... அதை வைத்து அவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் நடந்து செல்ல முடியும்... வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்த  வசதி  நடைபாதையில் அமைத்து இருக்கின்றார்கள்...

 இப்படி ஒரு ஷாட் சென்னையில், அவ்வளவு ஏன்  இந்தியாவில் வைக்க  வாய்ப்பே இல்லை...

 நம்மில் பலர் அப்படி  ஒரு பாதை பார்வையற்றவர்களுக்கு இ ருக்கின்றதா? என்ற         கேள்வியையும் எழுப்பும் போது இதை எப்படி காட்சியாக வைக்க முடியும்...??? அப்படியே வைத்தாலும் பார்வையாளனை எப்படி நம்ப வைக்க  முடியும்..

 ஆனால் சென்னையில்  இருக்கின்றது... இது நிறைய பேருக்கு தெரியாது... ஏதோ டிசைன் என்ற அளவில் நம்மில்பலர் கடந்தஇருப்போம்...((பார்வையற்றவர்களுக்கான சிறப்பு நடைபாதை இப்படித்தான் இருக்கும்..மஞ்ச்ள் பாதையில்இருக்கும்சிறு மேடு  போன்ற பாதையில் யாருடைய உதவியும் இன்றி  நடந்து  செல்லலாம்.))


 சென்ட்ரல் ஸ்டேஷன்   எதிரே  இருக்கும் ரயில்வே மேம் பாலத்தின்    நடை பாதையில் சென்ன கார்ப்பரேஷன் வடிவமைத்து இருக்கின்றது..  சந்றே மேடு போல அமைக்கப்பட்டு இருக்கும் இந்த பாதையில் கால் வைத்து  யார்  உதவியும் இன்றி பார்வையற்றவர்கள்  நடந்து செல்லலாம்.

 இது போல   சென்னையின்    சாலையோர நடைபாதையில்  அமைக்கப்பட வேண்டும்.. ஆனால் நிறைய இடங்களில் நடைபாதையே இல்லை... அப்புறம் எங்கே  இது போன்ற  பார்வையற்றோருக்கான  சிறப்பு  நடைபாதை சாலைகளை அமைப்பது.. சொல்லுங்கள்..???


ஹங்காங்கில்  பிளைன்ட் டிடேக்ட்டிவ் மற்றும் கொரியாவில்  கிரைம் திரில்லரான  பிளைன்ட்  போன்ற திரைப்படங்கள் வந்த பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கின்றது...

நமக்கு இருக்கும் சூழலில்  இப்படி  ஒரு படம் சாத்தியம் இப்போதைக்கு குறைவு.. அது  மட்டுமல்ல... சென்சார்.... மீட்டர், தூரம், என்று  காட்சி படுத்தும் போது அது குறித்த புரிதல்  பார்வையாளனுக்கு  கண்டிப்பாக இருக்க வேண்டும்... 

அது இல்லாவிடில்  காட்சிகள்   வைத்து பயண் இல்லை..
இப்போதைக்கு  சேப்ட்டி சைடில்  ஒவ்வோரு பூக்களுமே என்ற பாடல் லெவலில்தான் நாம் இருக்கின்றோம் என்பதைஒத்துக்கொள்ளவேண்டும்...

 இது குறையாக சொல்லவில்லை....  ஒரு பார்வையாற்றவர் ஒரு கொலையாளியை கண்டு பிடிக்கின்றார் என்ற ஒன்லைனில்  காட்சிகளை சுவாரஸ்யமாக   அமைக்க  நமக்கு பரப்பு மிகவும் குறைவு என்பதே என்  ஆதங்கம்..

 சரி  பிளைன்ட் கொரிய படத்துக்கு வருவோம்.

போலிஸ் அதிகாரியாக பணியாற்ற வேண்டிய நேரத்தில் ஒரு விபத்தில்  தன் தம்பியையும்  தன்  பார்வையையும் பறிகொடுக்கின்றாள் மீன் சூ...

 நகரில் பெண்களை  கடத்தி  கொடுர கொலைகள் நிகழ்த்தும், சைக்கோ கொலைகாரன் பார்வையற்ற நம் நாயகியையும்   கடத்த முயற்சி செய்ய... அவனிடம்  இரந்த தம்பித்து , எப்படி அந்த  சைக்கோ கொலையாளியை கண்டு பிடிக்க  காவல்துறைக்கு   அவள் உதவி செய்வதோடு  அவனை கண்டு  பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பதே இந்த பிளைன்ட்  கொரிய படத்தின்  கதை.

படத்தின் சுவாரஸ்யங்கள்

 பார்வையற்ற பெண்ணாக மின் சூ பாத்திரத்தில் மிக பாந்தமாக Kim Ha-neul பொருந்துகின்றார்...


 நாய் மீதான  பாசத்துக்கு தம்பி மீதான பாசத்துக்கும், அவள் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள்தான் படத்தின் காட்சிகளை  தூக்கி  நிறுத்துகின்றன...

நான் என்ன செய்தாலும் , யார் மீது பாசம் வைத்தாலும் அவர்கள்  பிரச்சனையில் சிக்கி கொள்கின்றார்கள்.. நான் வீட்டை  விட்டு வெளியே வந்தாலே பிரச்சனைதான் என்று  வேதனையோடு சொல்லும் காட்சிகள்..


 டெலிவரி பாய்  கொஞ்சம் கொஞ்சமாக  அவளை அக்காவாக பார்க்கும்  இடமும்...  ஆரம்பத்தில் இருந்தே அவனை தன்  தம்பியாகவே  அவனை  பார்த்தாள் என்பதும் அதனால்தான் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல  வேண்டாம்  என்று பதறினாள் என்பதை அவன் மெல்ல  மெல்ல புரிந்துக்கொள்-ளும்  இடம் கவிதை..


 அதே போல  முதன்  முறையாக அவளை அக்கா என்று அழைக்கும் காட்சியும் அருமை..

 படத்தில் நாம் ரசிக்கும் மற்றோரு  நபர்..  டிடெக்டிவாக வரும்
Jo Hee-bong அசத்தி   இருக்கின்றார்.... கிலா போல நடித்தாலும் அந்த கேரக்டர் வடிவமைப்பு  கிளாஸ்.

முக்கியமாக கொலையாளியை நெருக்கி விட்டோம் என்ற மகிழ்ச்சியில்  ஐடி கார்டினை கொலையாளியிடம்  தடிப்போடு கேட்கும் அந்த காட்சி அற்புதம் என்பேன்..

என்ன மாதிரியான திரில்லராக இருந்தாலும் சென்ட்டிமென்ட்  காட்சிகளை எடுக்காமல்  கொரிய காரர்கள்   எந்த திரைப்படத்தையும் எடுப்பதில்லை என்று சபதம் செய்து இருக்கின்றார்கள்... காரணம் படம் பார்ப்பவர்கள் எல்லோரிடமும்இரக்கம்இருக்கின்றது... அந்த இரக்கத்தை நம்புவது போல காட்சி  கண்டிப்பாக ஒரு திரைப்படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆதார விதியோடு இயங்குபவர்கள்  கொரியகாரர்கள் என்றால்அதில் மிகையில்லை.


 கடைசி பதினைந்து  நிமிடம் அசத்தி இருக்கின்றார்கள். பெய்ா போடும் போது கூட போட்டோக்களில் கதை சொல்லும் பாங்கும் மகிழ்வின்  உச்சம்.

=====
படத்தின் டிரைலர்..==========
படக்குழுவினர் விபரம்

Directed by Ahn Sang-hoon
Produced by Andy Yoon
Written by Choi Min-seok
Starring Kim Ha-neul
Yoo Seung-ho
Music by Song Jun-seok
Cinematography Son Won-ho
Edited by Shin Min-kyung
Distributed by Next Entertainment World
Release date(s)
July 22, 2011 (PiFan)
August 11, 2011 (South Korea)
Running time 111 minutes
Country South Korea
Language Korean

Box office US$15,713,724

======
விருதுகள்.2011 48th Grand Bell Awards

Best Actress: Kim Ha-neul
Best Screenplay: Choi Min-seok
2011 32nd Blue Dragon Film Awards

Best Actress: Kim Ha-neul


=======
பைனல்கிக்..


 படம்சுவாரஸ்யமாக இருந்தால் போதும்லாஜிக் பற்றி அதிகம் கவலை  கொள்ளமாட்டார்கள் ரசிகர்கள் எனும் ஆ தார விதியை பின் பற்றி தமிழில் இன்றைக்கு  வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பின்னுகின்றது... 

அதே போல பிளைன்ட் படத்தில் யாருமற்ற ரயில்வே ஸ்டேஷனில் கொலையாளி துரத்துகையில்  சர்வெலன்ஸ் கேமரா மூலம் கொலையாளி யார் என்று ஒரு நிமிடத்தில் பிடித்த விடமுடியும்... 

ஆனாலும் அதை யோசிக்கவைக்காத அளவுக்கு காட்சிகளை அமைத்து இருப்பார்கள்... அது  மட்டுமல்ல...   லாஜிக்காக தலையை மறைத்துக்கொள்ளும் ஜெர்கின் அணிந்து இருந்தா ன்  அதனால் அவன்   முகம் சர்வெலன்ஸ் கேமராவில் சிக்க வில்லை என்று  இயக்குனர் தன் தரப்பை சொல்ல காட்சியாக வைத்த இருப்பார்....

ஆனால்  அதை காட்சியாக  வைத்து இருந்தால் எல்லா , இடத்திலும் லாஜிக் காட்சிக்கு டிரை செய்து இருக்கின்றார்கள் என்று நாம்  நினைக்கலாம்..

 சரி இந்த படத்தை  கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய   திரைப்படம் என்று பரிந்துரைக்கின்றேன்..  இந்தபடத்தை எனக்கு அறிமுகபடுத்திய நண்பர் கணேஷ் டி நிரோவுக்கு நன்றிகள்... நல்ல கிரைம் திரில்லர் படங்கள் நீங்களும்  பின்னுட்டத்தில் அறிமுகப்படுத்தலாம்...

=====

 படத்துக்கான ரேட்டிங்

பத்துக்கு எட்டு

=======

பிரியங்களுடன்.


ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

 1. "dead friend" korean film climax you never imaged watch it

  ReplyDelete
 2. Watch the movie Porkalam, an action movie from Kishore as the lead being blind. Recently we had Vikram's Thandavam. Tamil movies aren't bad as you mentioned.

  ReplyDelete
 3. Watch the movie Porkalam, an action movie from Kishore as the lead being blind. Recently we had Vikram's Thandavam. Tamil movies aren't bad as you mentioned.

  ReplyDelete
 4. @amaranathan suriyanathan தாண்டவம் புதிய முயற்சியே. அதனை மறுத்தல் ஏற்புடையதல்ல. ஆனால் திரில்லருக்கான சுவாரசியங்களை கூட்டாமல் போனது வருத்தமானது. அதில் இயக்குனர் கோட்டை விட்டுவிட்டார்.

  ReplyDelete
 5. ஜாக்கி அண்ணா, நிறைய கொரியத் திரைப்படங்களை உங்கள் வலைப்பூவைப் பார்த்தே புரிந்து கொண்டு படம் பார்த்தேன். ஆர்வமூட்டியமைக்கு நன்றி. இப்போது மீண்டும் அந்தப் படங்களை பார்க்கிறேன். இம்முறை எனக்காவும், விக்கிப்பீடியாவில் பதியவும். நாளைய தமிழ் தலைமுறைகளுக்கு உங்கள் வலைப்பூவும், தமிழ் விக்கிப்பீடியாவும் நிச்சயமாக கொரிய மொழித் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் என நம்புகிறேன். நன்றி.

  ReplyDelete
 6. எப்போது இந்தப் படங்களுக்கெல்லாம் விடியோ பதிவினை செய்யப்போகின்றீர்கள். சில சமயங்களில் நீங்கள் டிரைலருக்கு முக்கியகத்துவம் தந்து விடியோ பதிவு எடுக்கையில் அந்த நேரத்தில் இம்மாதிரியான படங்களுக்கு எடுத்திருக்க வேண்டுமென ஏக்கம் தோன்றும். உங்களுடைய திறனை டிரைலர், ஆடியோ ரிலீசுக்கெல்லாம் பாலாக்க வேண்டாம் என்பது என் போன்ற சினிமா ரசிகர்களின் கருத்து. நன்றி.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner