அஞ்சலி தேவி.
தென் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து, தன் மயக்கும் விழிகளால் தமிழ் சினிமா ரசிகனின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பழம் பெரும் நடிகை அஞ்சலிதேவி…
ஆந்திராவில் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரம் கிராமத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்தார்…தன் வளர் பருவத்தில் நாடக துறையை தேர்ந்து எடுத்து தன் திறமையை வெளிபடுத்தினார். தமிழ் சினிமா பேச ஆரம்பித்த காலத்திலே ஒரு சில படங்களில் தலை காட்டினாலும் சரியான வாய்ப்பு இல்லாமல் காத்திருந்தார்.
அஞ்சலி தேவி அவர்களின் திறமையை கண்ட தெலுங்கு இயக்குனர் புல்லைய்யா தனது திரைப்படமான கொல்ல பாமாவில் மோகினி கதாபாத்திரத்தில் அறிமுகபடுத்த , படம் வெளியான ஒரே இரவில் தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக மாறியதோடு அக்கால இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்க காரணகர்த்தாவாக இருந்தார்.
350க்கு மேற்ப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்த அவர் அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வந்தார்… நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பராசக்தியில் நடித்து புகழ்பெறும் முன் அவர் திறமை கண்டு அவரை தன் படத்தில் நடிக்க முதன் முதலில் முன் பணம் வழங்கியவர் அஞ்சலி தேவி என்பது குறிப்பிடதக்கது..
தமிழ் சினிமாவிலும் அறிமுகமான அஞ்சலி தேவி எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார். "மணாளனே மங்கையின் பாக்கியம்', "சர்வாதிகாரி', "அன்னை ஓர் ஆலயம்' உள்பட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி தேவி, தெலுங்கில் வெளிவந்த "லவகுசா' படம் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றார்.
அஞ்சலி தேவி தீவிர சாய்பாபா பக்தர்.. ..1940 ஆம் ஆண்டு அதிநாராயணராவ் என்ற இசையமைப்பாளரை திருமணம் செய்துக்கொண்டார் ஆஞ்சலி தேவி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவியாக பதவி வகித்த ஒரே பெண்மணி அஞ்சலிதேவி அவர்கள்தான். என்பது குறிப்பிடதக்கது… ஆண்கள் அதிகம் நடமாடும் சேவல் பண்ணை என்று அழைக்கப்படும் சினிமா உலகில்…. உச்ச நடிகையாகவும், நடகர் சங்க தலைவியாக இருக்க தனி தில் வேண்டும்…. அஞ்சலி தேவி அவர்கள் தெலுங்கு தேசத்தில் பிறந்தாலும் கடந்த 65 ஆண்டுகளாக தனது கடைசி மூச்சு வரை தமிழகத்தில் வாழ்ந்து வந்தவர்…
அஞ்சலி தேவியை அஞ்சம்மா, அஞ்சலி குமாரி என்ற பெயர்களிலும் ரசிகர்கள் அழைத்து மகிழ்வர். அஞ்சலி குமாரி என்ற பெயரை அஞ்சலி தேவியாக மாற்றி நாமகரணம் சூட்டியவர் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் புல்லைய்யா…
நடிகை அஞ்சலி தேவி கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம்…. கமல் நடித்த காதல் பரிசு…ரஜினியோடு அன்னை ஓர் ஆலயம் படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்க்கது..
பெண் அடிமைத்தனம் கொடி கட்டி பறந்த காலத்தில் இருந்து தென்னக சினிமாவில் நடித்து படிப்படியாக நடிகை , இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவி என்று பன்முகதன்மையோடு முன்னுக்கு வந்த சகாப்த பெண்மணி அஞ்சலி தேவி அவர்கள்.
இந்த மண்ணுலகை விட்டு கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தனது 86 ஆம் வயதில் மறைந்தாலும் தென்னக சினிமா வரலாற்று பக்கத்தில் நீங்க இடம் பெற்றவர் அவர்.
70 ஆண்டுகாலம்…. தென்னக சினிமாவுக்கு தன் பங்களிப்பை கொடுத்த அஞ்சலிதேவி அவர்களுக்கு இன்று பிறந்த நாள்…. அவர் ஆளுமைய இந்த நாளில் நினைத்து பார்த்து மகிழ்வோம்.
ஜாக்கிசேகர்
24/0802014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

திருமதி.அஞ்சலி தேவி பத்தி சூப்பர் post அண்ண
ReplyDeleterare info. Thanks for sharing.
ReplyDeleteஅஞ்சலி தேவி பற்றிய பதிவு சூப்பர்.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி நண்பர்களே.
ReplyDelete