Thanatomorphose-2012/ உலக சினிமா/ கனடா/ஒரு உவ்வே ஹாரர் திரைப்படம்...






 என்ன மாதிரி படமய்யா இது????

 எப்படி எடுத்து இருப்பானுங்க...




 போட்டு மண்டையை  போட்டு கொடாஞ்சிக்கிட்டு இருக்கு… எத்தனை சென்மம் ஆனாலும் இது போல ஒரு திரைப்படம் தமிழ் திரையுலகில் உருவாக ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை….

செர்பியன் மூவி  மற்றும்   இந்தோனேஷியா பிலிம்ன்னு நினைக்கறேன்… அதுக்கு அப்பறம் இது போன்ற படத்தை இப்போதான் பார்க்கறேன்..
நாயகனுக்கு ஒரு பெரிய கட்டி இருக்கும் அந்த கட்டியை பாட்டிலின் வாய் புறத்தை அதன் மேல் வைத்து ஒரு அழுத்து அவ்வளவுதான்… 

அந்த  கட்டி ரத்தமும்  சீழுமாக பாட்டிலில்  பிரிட்டு அடிக்கும்… படம் பேர் நினைவில்லை… அவன் தியேட்டரில் வேலை செய்யும் பையன்…அது இந்தோனேஷியா திரைப்படத்தான் என்று எண்ணுகின்றேன்…



 சாக்கடை அடைத்து தெரு முழுவதும் கரை புரண்டு ஒட அதில் மலம் கரைந்து போவதை பார்த்து உவ்வே என்று  முகம் திருப்பி   பல நாட்கள் அந்த காட்சி  நினைவில் இருந்தால் இந்த படத்தை தவிர்த்து விடுவது உங்களுக்கு நல்லது...


சாக்ஸ்   நாத்தம் போல குடலை புரட்டும் நாற்றம்  ஏதாவது இருக்க முடியுமா?  அதுக்கே வாந்தி எடுப்பவர் என்றால்  கண்டிப்பாக  இந்த படத்தை பார்த்தால் வாந்தி எடுத்து விடுவிர்கள் என்பது சர்வ  நிச்சயம்….


ஒரு பொண்ணு.. தனியா இருக்கா  அவளுக்கு ஆர்ட்டிஸ்ட் ஆகனும்னு கனவு… எப்ப பார்த்தாலும் வீட்டுக்குள்ளயே பூந்துக்கிட்டு இருக்கா… அவளுக்கு நிறைய சிந்தனைகள்.....பார்ட்டிக்கு கூட நண்பர்கள்  வீட்டுக்கு வந்து செல்கின்றார்கள்.  அவள் உடம்பில் பிரச்சனை..   சாத்தான் உடம்பை வியாப்பித்து இருந்தாள் படுத்தி எடுப்பானே,... அப்படியாக அவள் நினைத்துக்கொள்கின்றாள்..


அவளுக்கு  உடலில் நகம் பெயர்த்துக்கொள்கின்றது… உடம்பில் கொஞ்சம் அழுத்திதேய்தாலே அந்த இடம் சிவந்து படை போல  வந்து விடுகின்றது… மெல்ல அந்த  தேம்பல் படை அவளை எந்த அளவுக்கு உடம்பை ஸ்டெப்பை ஸ்டெப்பாக அவள் உடல் நிலையை அக்கு வேறு ஆணி வேறாக  காட்டி எப்படி வராத வாந்தியையும்  நமக்கு  வரவைக்கின்றார்கள்  என்பதுதான் மீதிக்கதை..


தலையில ரத்தம் வழியும் போது கூட பாய் பிரண்டோட  ஓரல் செக்ஸ்  வச்சி வித்துவை வாயில் வாங்கி துப்புவது என்று விலாவரியாக காட்டி நம்மை பீதி கொள்ள வைக்கின்றார்கள்…


 ஒரு குவாட்டர் சரக்கு அடிச்சிட்டு பிரியாணி சாப்பிட்டு படம் பார்த்தா  இரண்டு மூன்று காட்சிகளிலேயே அடித்த சரக்கு இறங்கி மலங்க மலங்க விழிப்பிங்க…
 எப்படின்னா லோக்க ல் சரக்கு  வாங்கி அடிச்சா குப்புன்னு-  போதையை தாறுமாற எத்தி ஒம்மால இரண்டு மணிக்கு எழுப்பி விட்டு விடும்…. 

திருவிழாவுல தொலைஞ்ச குழந்தை கணக்கா  தூக்கம் வராமா பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு இருப்போமே  அப்படி மு ழிச்சிக்கிட்டு இருக்க வைக்கும் இந்த படம்.


இந்த படத்துல நாயகி பெட்ல படுத்துக்கிட்டு இருக்கா… ரெஸ்ட்லெஸ்சா இருக்கா….. அவளுடைய யோனிக்கு நமைச்சல் எடுக்கின்றது….கொசு கடிச்சா கால்ல சொறிவோமே.. அது போல  யோனிக்கிட்ட சொறிய… அந்த பொண்ணுக்கு கவுட்டியில காயமே வந்துடுது… 

அதுல இருந்த  அந்த பொண்ணை  போட்டு டைரக்டரும் கேமரா மேனும் படுத்தி எடுக்கறானுங்க பாருங்க…  அம்மா  சாமி இந்த உலகத்துக்கே அடுக்காது….


 அது மட்டுமல்ல... அவளுக்கு சிதபேதி வேற உடல்ஊபாதை  காரணமா வந்து தொலையுது... கால்க்கிட்டு  ஒரு லோ ஆங்கிள் ஷாட்... அவளால முடியலை.. அப்படியே கழிஞ்சிடுறா... இப்படி எல்லாம் நடிக்க ஒரு தில் வேணும்....


கிளைமாக்ஸ் காட்சியில  வாந்திமட்டும் வரலை என் பேரு ஜாக்கி இல்லை… ஜாக்கிசேகருன்னு வச்சிக்கறேன்.

=======
இந்த படத்தின் டிரைலர்.



============
 படக்குழுவினர் விபரம்


Directed by Éric Falardeau
Written by Éric Falardeau
Starring Kayden Rose, Émile Beaudry, Eryka Cantieri, Roch-Denis Gagnon
Cinematography Benoît Lemire
Edited by Benoît Lemire
Production
  company Black Flag Pictures, ThanatoFilms
Distributed by Bounty Films
Release date(s)
October 2, 2012
Running time 100 minutes
Country Canada

Language English

==========

படம் வாங்கிய விருதுகள்



Awards
Best Movie Award, XXXI Festival de Cine de Terror de Molins de Rei (2012)
Best Special Effects Award, A Night of Horror International Film Festival (2012)
Best Film, Best Director, Best Actress, Most Repulsive Flick Awards, Housecore Horror Film Festival (2013)

Best Horror Film, The Phillip K. Dick Film Festival (2013)

========
பைனல்கிக்.

 உவ்வே ஹாரர் திரைப்படம்தான்... ஆனாலும் இப்படியும் படங்கள் இருக்கின்றது என்பதை  கடைகோடி ரசிகனும் தெரிந்துக்கொள்ளவே இந்த திரைப்பட அறிமுகம்.... இந்த படத்தை பார்த்தால் உலகில் எதுவும்  உன்னதம் இல்லை என்று  காட்சிகளில் பொட்டில் அறைந்து சொல்லுவதை காணலாம்.
 படத்தில் நடித்த பெண்ணுக்கும் அதுக்கு மேக்கப் போட்ட டீமுக்கும் ஒரு ராயல்  சல்யூட்..

===
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஐந்து

======

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 


8 comments:

  1. அண்ணா,அந்த பாட்டில்/சீழ் படம் இந்தோநேசியப் படம் அல்ல பிலிப்பைன்ஸ் நாட்டுப் படம்
    http://www.rottentomatoes.com/m/serbis/
    http://www.imdb.com/title/tt1225296/

    ReplyDelete
  2. Jackie Anna,

    Naan ungala "Human Centipede" & "The Martyrs" paaka sonaadhuku mudiyaadhunu solliteenga. Ipa yepdi inda padatha mattum vimarsanam pana mudinjadhu? Nee Answer paniyaeee theeranum Jackie Anna................ (Kochikaadinga......)

    ReplyDelete
  3. I am a horacious reader of your blog. I do not how to get these kind of films to view. Can you help me. I am from pondy anf luve your blog. Can you help

    ReplyDelete
  4. //கிளைமாக்ஸ் காட்சியில வாந்திமட்டும் வரலை என் பேரு ஜாக்கி இல்லை… ஜாக்கிசேகருன்னு வச்சிக்கறேன்.///

    சூப்பரப்பு!
    எதாவது ஒரு பக்கி கண்ணுல குச்சி மாட்டி கண்ணிமைக்காம இந்த படத்தை முழுசா பாத்துட்டு வாந்தி எடுக்காம, நம்மகிட்ட வந்து, ”என்னமோ சொன்ன?” அப்படின்னு சொல்வானோனு நம்பிக்கை?
    உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!

    ReplyDelete
  5. VELMURUGAN SEENIVASAN-அண்ணே கையில வெண்ணைய வச்சிட்டு நெய்க்கு அழஞ்ச கதையாகிபோச்சி.
    SERBIS படத்தோட ஜாதகம் இங்க இருக்கு.

    http://www.jackiesekar.com/2010/12/serbis18.html

    ReplyDelete
  6. Moebius (2013).. plz must watch this movie.. intha movie neenga pathu irukalam.. unga pagela,, unga style nan intha movie artilce padikanum anna.. bcoz its sema movie.. plz parunga..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner