BIG BAD WOLF-2013/உலகசினிமா/இஸ்ரேல்/மகளை பறிகொடுத்த தகப்பனின் வெறி.




அசத்தலான இஸ்ரேலிய திரைப்படம்...

செமையான திரில்லர்.

 சான்சே இல்லை..

 மேக்கிங் அக்மார்க்..

 சைக்காலஜிக்கலா நம்மை வேற பக்கம் அழைச்சிக்கிட்டு போய்... திடிர்ன்னு வயித்துல குபுக்குன்னு  குத்து விடும் கிளைமாக்ஸ்.


படத்து உள்ளே டீடெயிலா போறதுக்கு முந்தி சின்ன பிளாஷ் பேக்.

  கடந்த 17 ஆம்  தேதி அன்று தமிழ் இந்துவில் வெளியான செய்தி இது...
பெங்களூரில் 6 வயது மாணவி பள்ளி ஊழியர்களால் பலாத்காரம் செய்ய‌ப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள மாரத்த ஹள்ளியில் ‘விப்ஜியார்' என்ற தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு 6 வயது சிறுமி முதல் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை அவரது பெற்றோர் திங்கள் கிழமை ம‌ருத்துவமனைக்கு அழைத் துச் சென்றனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதிர்ச்சி அடைந்த அவரது பெற் றோர் கடந்த செவ்வாய்க்கிழமை மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத் தில் புகார் செய்தனர். ஆனால் போலீ ஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து புதன் கிழமை பள்ளிக்கு சென்ற மாணவி யின் பெற்றோர், இந்த கொடூர சம்ப வம் குறித்து முறையிட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் எங்களுடைய பள்ளியில் நடக்க வாய்ப்பே இல்லை' என்று கூறிய பள்ளி நிர்வாகம் அவர்களை வெளியே அனுப்பிவிட்டது. விரக்தி அடைந்த சிறுமியின் பெற்றோர் வியாழக்கிழமை உறவினர்களுடன் வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:

பள்ளியில் பணியாற்றும் இரு ஊழியர்கள், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். பள்ளிக்கு அவப் பெயர் ஏற்படும் என்பதால் பள்ளி நிர்வாகம் மறைக்க முயல்கிறது. இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என பெற்றோ ரையும் மிரட்டியுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

சிசிடிவி காட்சிகள்

பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் வெளியே வந்த பள்ளி நிறுவனர் ருஸ்தம் கரவள்ளா, 'இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தவறிழைத்தவர்களை தூக்கிலிட வேண்டும்.பள்ளி நிர்வாகம் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும். குற்றவாளிகளை அடையாளம் காண பள்ளியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அடங்கிய சிடியை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார்.

 இது போன்று தினம் ஒரு செய்திகள் செய்திதாள்களில் வந்த வண்ணம்  இருக்கின்றன... அது மட்டுமல்ல....

ஈரோடு பக்கத்தில் அப்பா பக்கத்தில் படுத்து தூங்கிக்கொண்டு  இருந்த குழந்தையை கடந்தி பாலியல் வன்புணர்வு செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டு விட்டார்கள் சண்டாளர்கள்... அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிந்த காட்சியை படிக்கும் போது  அந்த மிருகங்கள்  எந்த அளவுக்கு மோசமானவர்கள்  என்பதை நாம் அறிந்துக்கொள்ள முடியும்... ஆனால் அந்த ஏழை தகப்பனுக்கு நீதி கிடைக்குமா? அல்லது அந்த பெண்குழந்தை அனுபவித்த வேதனையை  அந்த கயவர்கள் அனுபவிப்பார்களா?

இப்படித்தான்  பிக் பேட் உல்ப்.. திரைப்படம் தொடங்குகின்றது..

ஒரு பழைய வீட்டில் இரண்டு சிறுமிகள் ஒரு பையனும் கண்ணா மூச்சி விளையாட்டு விளையாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.. 

சிறுவன் மரத்தில் கண் பொத்தி ,  ஒன்று  ரெண்டு மூன்று எண்ணிவிட்டு தேடுதல் வேட்டையை தொடங்க... ஒரு சிறுமியை கண்டு பிடித்து விடுகின்றான்... அடுத்த சிறுமியை கண்டு பிடிக்க அவனும்   முதலில் விளையாட்டில் பிடிபட்ட சிறுமியும் இணைந்து அவளை கண்டு பிடிக்க செல்கின்றார்கள்... அந்த சிறுமி  மரபீரோவில் ஒளிந்துக்கொண்டதை  மாட்டிக்கொண்ட சிறுமி  ஏற்க்கனவே பார்க்கின்றாள்... மரபீரோவை திறந்து பார்த்தால்  அந்த சிறுமி இல்லாமல் அவளின் ஒரு செருப்பு மட்டும் கிடக்கின்றது..

அந்த சிறுமி காணவில்லை...

போலிசுக்கு ஒரு  சிறுமியின் உடல்  கிடப்பதாக  போன் வர அங்கே போலிசார் செல்ல... சேரில் கட்டப்பட்ட நிலையில்  அந்த சிறுமி  பாலியல் வண்கொடுமைக்கு ஆளாகி இறந்து போய் இருக்கின்றாள்.. 
எல்லாத்தையும் விட கொடுமை அந்த சிறுமியின் தலை இல்லை..

அந்த சிறுமியின் தகப்பன் ரிட்டையர்டு மில்ட்ரி மேன்.

டோர் என்பவன் இ ந்த சம்பவத்தில் போலிஸ் சந்தேகப்பட்டு அவனை பிடிக்கின்றது... அவன் ஒரு பள்ளி ஆசிரியர்...

டோர் பள்ளி ஆசிரியர் சரி.... 

இறந்து போன  சிறுமி.... டோர்  ஆசிரியாராக வேலை செய்த பள்ளியில்  படித்தாளா?

 எந்த சந்தேகத்தின் பேரில்  ஆசிரியர்  டோரை கைது செய்தார்கள்?

 இதுக்கு முன் சிறுமிகளிடம்  ஆசிரியர் டோர் சில்மிஷம் செய்தற்கான ஆதாரம் ஏதாவது இருக்கா? அல்லது குற்றப்பின்னனி? எதாவது இருக்கின்றதா?

தெரியாது.... ஆம் அதுதான் திரைக்கதை சமார்த்தியம்...

 ஆனால் டோர் மீது மிக்கி என்ற போலிஸ்காரானுக்கு  சந்தேகம் வர டோரை  கடத்தி அவனிடம் இருந்து உண்மையை வரவழைக்க நினைக்கின்றான்....  

வெறியில் இருக்கும் சிறுமியின் அப்பா... மிக்கி  மற்றும் ஆசிரியர் டோர்  என இரண்டு பேரையும் கடந்தி ஊருக்கு ஒதுக்கு புறமான  வீட்டின் அண்டர்கிரவுண்டில் இரண்டு பேரையும்  கட்டிப்போட்டு , டோரினை அனு அனுவாக சிறுமியின் அப்பா டார்ச்சர் செய்து உண்மையை வெளிக்ககொனர நினைக்கின்றார்.....

தன் மகளின் தலையை  எங்கே வைத்து இருக்கின்றாய்? என்று கேட்டு கொடுமை படுத்த... தான் ஒரு அப்பாவி என்றும் போலிசார் என்னை தவறாக பிடித்து விட்டார்கள் என்றும் டோர் வலியின் ஊடே கதறுகின்றான்.


 டாச்சர் செய்வதை பார்க்கும் நமக்கு கண்கள் கலங்கும்.


எனக்கும் ஒரு பெண் இருக்கின்றாள்..? நான் ஏன்  சிறுமிகளை கடத்த போகின்றேன் என்று டோர்  கதறினாலும் என் பெண்ணின்  தலையை  எங்கே வைத்து இருக்கின்றாய்? என்று கேட்டு உடலில் எல்லா  பாகங்களிலும் டார்ச்சர் நடக்கும்...

யுதர்களை பொருத்தவரை இறந்து போன உடலின் அனைத்து பாகங்களையும் எரியூட்டி விட வேண்டும் என்பது யூத தர்மம். அதனால் தன் பெண்ணின் தலையை எங்கே புதைத்து  வைத்து இருக்கின்றான்  என்று  கேட்டு டார்ச்சர்  செய்ய.. போலிஸ் மிக்கி கைகள் கட்டப்பட்ட நிலையில்  இத்னை பார்த்துக்கொண்டு இருப்பதை தவிர அவனுக்கு வேறு வழியில்லை..


சிறுமியின் தலை கிடைத்ததா?

ஆசிரியர் டோர் அப்பாவி என்றால் உண்மையான கொலைக்காரன் யார்?

 மீதியை  வழக்கம் போல வெண்திரையில்  அல்லது எல்ஈடி ஸ்கிரினில் பார்த்து தொலையுங்கள்.

=  
படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை தாறுமாறு...  நான்சே இல்லை... ஆறு கேரக்டர்கள்... அதுவும் படத்தின் முக்கால்வாசி காட்சிகள்  அண்டர்கிரவுண்டில்தான் நடக்கின்றன..

 மொத்தமே நாலு பேர்தான்... ஆனா மிரட்டி இருக்கானுங்க..

கிளைமாக்ஸ் ஒரு ஷாட்டில் முடித்து நம்மை மிரள வைக்கின்றார்கள்..
குற்றவாளியே  என்றாலும் அவனை இப்படியா டாச்சர் செய்வது என்று  நினைப்பது பொது ஜனத்தின் மன  நிலை.. ஆனால் பெண்ணின் கொடுரமாக பறிகொடுத்த  தந்தைக்கு டார்ச்சர் செய்ய  செய்ய  வெறி அடங்கும் தானே... அந்த சைக்காலிக்கல் நாட்டை கண்டு பிடித்து திரைக்கதையில் புகுத்தி வெற்றிகண்டு இருக்கின்றார்கள்..

 எல்லாத்தையும் விட உல்ப்  கதை சொல்லற காட்சிகள் அருமை... அது பழமையான கதை.... 


 கன்னடத்தில் லுசியா என்று ஒரு படம் வெளியானது.. குறிஞ்சி பூ போல எப்போதாவது  அந்தி பூத்தது போல சில நல்ல படங்கள் கன்னட மண்ணில் இருந்து வெளி வரும். அப்படி வராது வந்த மாமுனியாய் வந்த படம்தான் லுசியா...

 அந்த படம் வந்த போது ஒரு பய சீண்டவில்லை... இந்தி இயக்குனர்  அனுராக் கஷ்யாப்  கன்னட லுசியாவை பார்த்து விட்டு ஆஹா ஓஹோ என்று புகழ...  அவ்வளவுதான் இந்தியா எங்கும் லுசியா திரைப்படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்ட லுசியா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது வரலாறு.

 அது போலத்தான் இந்த  பிக் பேட் உல்ப்  என்கின்ற  இஸ்ரேலிய திரைப்படமும் பத்தோடு பதினோன்றாக மாறி இருக்கும்... ஆனால் ஹாலிவுட் இயக்குனர்  குவன்டின் 2013 ஆண்டின் மிக சிறந்த படம் என்று குறிப்பிட்டு வைக்க படத்தை  பார்க்க வேண்டும் என்று உலக சினிமா ரசிகர்கள்  சபதம் எடுத்து இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

 இந்த படத்தை இயக்கிய இஸ்ரேலிய இயக்குனர்  Aharon Keshales மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றார்... பின்னே பரம் பைசா செலவு செய்யாமல்  லோ பட்ஜெட்டி  படம் எடுத்து விட்டு அந்த உலக புகழ் பெற்று விட்டது என்றால் சும்மாவா?

=====
படத்தின் டிரைலர்



=========
படக்குழுவினர் விபரம்.
Directed by Aharon Keshales
Navot Papushado
Produced by Tami Leon
Hillick Michaeli
Avraham Pirchi
Moshe Edery
Leon Edery
Written by Aharon Keshales
Navot Papushado
Starring Lior Ashkenazi
Tzahi Grad
Doval'e Glickman
Rotem Keinan
Music by Haim Frank Ilfman
Cinematography Giora Bejach
Edited by Asaf Corman
Production
  company United Channel Movies
Distributed by Magnet Releasing
XYZ Films
Release date(s)
April 21, 2013 (Tribeca Film Festival)
August 15, 2013 (Israel)
January 17, 2014 (USA)
Running time 110 minutes
Country Israel
Language Hebrew

===============
பைனல்கிக்.
பள்ளிக்கூடம்தான் பாதுகாப்பான இடம் என்றால் பெங்களுரீல் பள்ளி கூடத்தில் வேலை செய்த இரண்டு பேர் ஆறுவயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து இருப்பதும் ,முதலில் போலிசார்  அந்த  புகாரை பெற்றுக்கொள்ளவில்லை என்பதும் எவ்வளவு பெரிய  கொடுமை..
அது மட்டுமல்ல  நிறைய பள்ளிகளில் ஆசிரியர்களே இந்த ஈனச்செயலில் ஈடுபட்டு வருவதுதான்  கொடுமை.. இந்த இஸ்திரேலியா திரைப் படமும் இது போன்ற  கேள்விகளை எழுப்புகின்றது.
 இந்த படம் பார்தே தீரவேண்டிய திரைப்படம்.. அவசியம் உலகசினிமா ரசிகர்கள் மற்றும்   கிரைம் திரில்லர் விரும்பிகள் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

========
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு எட்டு
=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

====
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner