வீணாகும் மக்கள் வரிப்பணம்.


பாண்டி கடலூருக்கு இருப்பு பாதை இல்லை  வான் வழிப்போக்குவரத்தும்  இல்லை... நீர்வழி போக்குவரத்தும் இல்லை.... மக்கள் தரை வழி போக்குவரத்தைதான் பெரிதும் நம்பி இருக்கின்றார்கள்... 

அதனால் பாண்டி கடலூர்  இடையே செல்லும் தனியார் பேருந்துகள் புயல்  வேகத்தில் கிளம்பி செல்லும் டைம் எடுப்பதில் தினமும் பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் எப்படியும் ஒரு  சண்டை நடந்துக்கொண்டு இருக்கும்.. எப்போது போனாலும் அந்த  காட்சியை காணலாம்... 

எனக்கு தெரிந்து டிவிஎம்ஸ் பேருந்துகள் வடிவில் போலிவானவையாக இருக்கும் அதே  போல வேகம் என்றால் பேய் வேகத்தில் செல்லும் காரணம்...  அப்போதுதான்   போட்ட காசை எடுக்க முடியும்... ஒரு நாள் சரக்கு லாரி ரிப்பேர் என்ற நின்றாலும்  அந்த  லாரி ஓனர் மூட் ஆப் ஆகி கட்டிங்கில்  அன்றைய நாள் முழுக்க காலம் தள்ளுவார். வண்டி  என்பது ஓடிக்கொண்டு இருக்க வேண்டும்...

கடனை உடனை போட்டு புத்தம் புதிதாய்  வாங்கிய ஒரு பேருந்தோ அல்லது லாரியையோ?  ஒரு முதலாளி அதனை  சுவர்  ஓரமாக  ஒரு வாரம்  நிறுத்தி வைத்து இருப்பானா??

 முடியவே முடியாது... அப்படி அவன் நிறுத்தி இருந்தால் அவன்  நல்ல முதலாளியாக இருக்க முடியாது.. உடனே  வாங்கிய   புது வண்டி லாரியோ அல்லது பேருந்தோ  வண்டி லைனில் ஓடி காசு எடுத்து வந்தால் தான்  அடுத்த மாத  பேங்க் லோனை அடைக்க  முடியும்... 

அது மட்டுமல்ல... ஏதோ ஒரு நாள்  ஸ்ட்ரைக் என்று அறிவித்தால் கூட  முதலாளி தலையில் கை வைத்து உட்கார்ந்து விடுவான்...  வண்டி ஒடிக்கொண்டே இருந்தால்தான்  லாபத்தில் தேய்மான செலவு செய்து தன் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு புது வண்டியும் வாங்கி தெம்பாக காலம் தள்ள முடியும்... அதனால்  புது வண்டி வாங்கியதுமே ஓட வேண்டியதுதான்....

ஆனால்  சென்னையில் 80 புதிய   மாநகர பேருந்துகள் வாங்கப்பட்டு ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை.. சுமார் நான்குமாதகாலமாக பணிமணியில் நிறுத்தி வைத்து அழகு பார்த்துக்கொண்டு இருக்கின்றது.... காரணம் ரொம்ப சிம்பிள்.. முதல்வர் தேதி கிடைக்கவில்லையாம்... அதனால்  பேருந்துகள் நான்கு   மாதங்களாக பணிமனை சுவற்றை வெறித்துப்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.


ஒரு நாளைக்கு எட்டு லட்சம்   சம்பாதிக்கும் பேருந்துகள் முதல்வர் பச்சைகலர் கொடி அசைப்புக்கு எங்கி  காத்துகிடக்கின்றன....


மின பஸ்  சென்னை தெருங்களில் பவனி வந்த போதே இந்த 80 பேருந்துகளும் பணிமனையை விட்டு வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசித்து இருக்க வேண்டும்...  ஆனால்     மினி பஸ்  தனியாகவும் பெரிய பேருந்துகள் தனியாகவும்   துவக்கி வைத்தால்தான் மக்கள் சேவையில் அதிமுக அரசு என்று சொல்லிக்கொள்ளலாம்... ஆனால்  அடுத்த வாரத்தில்    மாநகர பேருந்துகளை முதல்வர் நாட்டுக்கு அர்பணித்தார் என்று சொல்லி இருந்தால் பிரச்சனை இல்லை..


 நான்கு   மாதங்கள் ஆகி விட்டது....  ஒன்பது   கோடி ரூபாய் அரசுக்கு  இது நாள் வரை வருவாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.. இந்த ஒன்பது  கோடி  ரூபாய்க்கு  சில  புதிய பேருந்துகளையே வாங்கி இருக்கலாம்..

 கன்னியாக்குமாரியில் உடைந்த பேருந்துகள்  வருவாதால்  அந்த பேருந்தினை போட்டோ எடுத்து அதுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டி இருந்தார்கள்... அந்த ஒன்பது கோடி ரூபாய்க்கு புதிய பேருந்துகளையே வாங்கி  அந்த பகுதி மக்களுக்கு  வாங்கி கொடுத்து இருக்கலாம்..

 கடந்த  ஆட்சிகாலத்தில் பாராட்டு விழாவுக்கு சென்று வந்த  முன்னாள் முதல்வர் கலைஞர்  மேல் இப்படியான குற்றச் சாட்டினை ஒன்றவாது வைத்து இருக்க முடியுமா-?

 தினகரன் இன்றைய சென்னை பதிப்பில்  இந்த செய்தியை வெளியிட்டு இருக்கின்றது. நான்கு மாதங்கள் மக்களின் வரிப்பணம் வீணாகிக்கொண்டு இருக்கின்றது.... 

 எது எப்படியோ தாயுள்ளம் கொண்ட  அம்மா அவர்கள் தந்தையர் தினத்திலாவது புதிதாய் வாங்கப்பட்ட என்பது பேருந்துகளையும், புன் சிரிப்போடு தலைமைசெயலகத்துக்கு எதிரே  பச்சைக்கலர் கொடி அசைத்து விரைவில்  துவக்கி வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..

பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 


2 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner