ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக
சோபித்து வெற்றியை சுவைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல....
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவில்
சிகரம் தொட்ட பிசிஸ்ரீராம்... மீரா படத்தில் சறுக்கினார்...குருதிப்புனலில்
நிமிர்ந்தாலும் கமல் என்ற பிம்பம் அந்த வெற்றியை மானசிகமாக அவரை முழுவதும் சுவைக்க விடவில்லை...
அதன் பின் அவரிடம் பணியாற்றிய காலம் சென்ற ஒளிப்பதிவாளர் ஜீவா மற்றும்
கேவி ஆனந் இயக்குனர்களாக சாதித்தார்கள்..
அந்த வரிசையில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜும் வெற்றி
இயக்குனராக தன் முதல் படமான வேலையில்லா பட்டதாரி மூலம் வெற்றிக்கோட்டை தொட்டுவிட்டார்.
வேலையில்லா பட்டதாரி....
கமர்ஷியல் திரைப்படம். ஆனால் ஒன்றை கவனிக்க
வேண்டும்... இதே தனுஷ் சுள்ளான் படத்தில் பாய்ந்து பாய்ந்து அடித்து .ஆய் ஊய் என்று கத்தி வசனம் பேசிய போது , அந்த
படத்தை மண்ணைக்கவ்வ வைத்தார்கள் ரசிகர்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் இங்கே சர்வ நிச்சயமாய் பொருந்தும் என்று எண்ணுகின்றேன்.
ஒரு பொய் சொன்னா அதுல
உண்மையும் கலந்து இருக்கனும்.. என்பதுதான்.. அப்படி உண்மைகள் கொஞ்சம் கலந்து சில நாகாசு
வேலைகள் செய்தகாரணத்தாலே இந்த படம் வெற்றியின் உச்சத்தை தொட்டு இருக்கின்றது...
20 கோடி போட்டு 40 கோடி
சம்பாதிக்கறதை விட 2 கோடி போட்டு 40 கோடி சம்பாதிக்கறதுதான் வித்தை.. அதை தனுஷ் மற்றும்
வேல்ராஜ் கனக்கச்சிதமாக முடித்து இருக்கின்றார்கள்..
விண்ணை தாண்டி
வருவாயா படத்தில் வருவது போல ஒரு வீடு... அப்பா, அம்மா தம்பி,
கேரக்டர் பக்கத்துல காதலி வீடு...
அவ்வளவுதான்...
காதலி கூட பெரிய பெரிய ரெஸ்டாரண்ட்டுக்கு எல்லாம் கூட்டிக்கிட்டு போக சொல்லலை... மீறி போனா பீச் அவ்வளவுதான்.
அவ்வளவு
ஏன் பாட்டுக்கு பெரிசா செட்டு போடலை..
ஒரு பாட்டு இரண்டு பாட்டு நைட்டு எபெக்ட்டுல ரோட்டுல... ஒரு பாட்டு வீட்டு மொட்டை மாடியில்
குடிச்சிட்டு சித்தாளு கேரக்டருக்கு
நாலு டான்சர்சை வச்சிக்கிட்டாங்க.... அந்த அளவுக்கு சிக்கனமோ சிக்கனம்.
கிளைமாக்ஸ்ல... நாலே நாலு ரவுடிங்க... அவனுங்களும் ..
உதை வாங்கி விழும் போதும் தரையில்தான் விழுகின்றார்கள்....
எந்த கடையிலேயும் , காரிலும் விழுந்து கார் கண்ணாடி கடை கண்ணாடிகளை உடைத்து தயாரிப்பாளருக்கு தண்ட செலவு வைக்கவில்லை... அந்த அளவுக்கு டீம் யோசிச்சிங்...
கிளைமாக்ஸ் பைட்டை தரமணி பிலிம் இண்ஸ்டியூட்டில் எடுத்து இருக்கின்றார்கள் போல...
கிளைமாக்ஸ் பைட்டை தரமணி பிலிம் இண்ஸ்டியூட்டில் எடுத்து இருக்கின்றார்கள் போல...
செலவே இல்லை....
ஆனா படம் பிச்சிக்கிட்டு போவுது...
ஆனா படம் பிச்சிக்கிட்டு போவுது...
இத்தனைக்கு அரைச்சி, சலிச்சி, புளிச்சி போன கதைதான்....
அண்ணா, சாந்தி, தேவி, உட்லண்ட்ஸ்ன்னு சத்தியம் ஆல்பர்ட், எக்ஸ்பிரஸ்மால்ன்னு எல்லா இடத்திலேயும்
பிச்சி உதறுது.
படம் நெடுக லாஜிக் ஓட்டைகள் நிறைய.... ஆனாலும் அதையெல்லாம் யோசிக்காமல் மக்கள் ரசிக்கின்றனர்.
80களில் காலில் கயிற்றால் கட்டி ஜிப்சி
ஜீப்பை நிறுத்தி பெண்ணின் கற்ப்பை காப்பாற்றிய
ரஜினியை யாரும் கேள்வி கேட்கவில்லை.. அப்படியே கேள்வி கேட்டாலும் இப்போது போல
பேஸ்புக் போல கேள்விகேட்க தளங்கள் அப்போது இல்லை என்பதையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டும்....
தனுஷ் தவிர இந்த படத்தில் வேறு யார் நடித்து இருந்தாலும் இந்த படம் தேறுவது சந்தேகமே.
டேய் இப்பயும் சொல்லிக்கறேன்.....
சினிமா சாதாரண விஷயம் இல்லை...
தியரி படிப்பு வேற....
அனுபவம் வேற.. அப்புறம் சினிமா பீல்டு கண்டிப்பா
வேற...
பாலகுமாரன்ல இருந்து பட்டுக்கோட்டை
பிரபாகர் வரை தடுமாற வைத்த இடம். ஜெயமோகன்ல
இருந்த எஸ்ரா வரைக்கு ஒரு படம் வெற்றி அடைய
என்னய்யா பண்ணறதுன்னு யோசிக்க வைத்த இடம்..
ஆனானப்பட்ட சுஜாதாவே ஆட்டம் கண்ட துறை இது....
ஆயிரம் பேர் திறமையை ஒன்னா குமிச்சி, அவன்கிட்ட இருக்கற திறமையை வெளிக்கொண்டு வரும் இடம்.
ஒரு படம் வெற்றி பெற்று என் படைப்பே உன்னதம் என்று ஆடியவர்கள் எல்லாம் மண்ணை கவ்விய இடம்.
என்னை பொருத்தவரை நான்
எடுத்த படம்தான் பெஸ்ட் மத்தது எல்லாம் குப்பைன்னு ஒரு இயக்குனர் ஸ்டேட்மென்ட்
விட்டா.. அவர் என்ன உன்னதத்தை எடுத்து கிழிச்சாருன்னு விளாவரியா கிழிச்சி தொங்கவிடலாம்
என்பது எனது எண்ணம்.
சரி மெயின் மேட்டருக்கு வருவோம்... வேலையில்லா பட்டதாரி.... தலைப்பே.... சரியில்லை... வேலை இருக்கு .. நான் படிச்ச
படிப்புக்குதான் வேலை செய்வேன்னு பிடிவாதம் பிடிக்கற கேரக்டர்..
பெரிய பையனை
ராமகிருஷ்ணா மிஷன்ல படிக்க வச்ச இல்லை.. அப்புறம் ஏன் கம்பெர் பண்ணறே.. என்பது போன்ற டயலாக்குகள் நச்..
பால் எடுத்து வரும் போது சமுத்திரக்கனி... ஏழாவது படிக்கும் போது பால் எடுத்து விளையாடின... உன் கூட விளையாடினவன் எல்லாம் வேலைக்கு போயிட்டான்... இந்த வீட்டுல நாலு பேர் குடித்தனம் மாறிட்டாங்க....
முனு வாட்டி வீட்டுக்கு பெயிண்ட் மாத்திட்டாங்க..
ஆனா நீ மட்டும் அப்படியே..?
தங்கை விஜி எழுதியது போல
ஆர்கன் டொனேட் பண்ணது போல சரண்யா சாவும் போது
எதுவும் காட்டாம..... சுரபி உடம்புல இருக்கறது..
அம்மாவோட பார்ட் இருக்குன்னு திடிதிப்புன்னு
சொல்லி காதுல பூசுத்தறது செம காமெடிதான்...
பேஸ்புக்ல ஒரு விஷயத்தை
விரைவா சேத்து ஆட்களை வேலைக்கு திரட்ட முடியும்.. ஆனா உதை வாங்கி வேலை செய்ய எந்த வேலையில்லா பட்டதாரியும் ரெடியா இருக்க மாட்டான் என்பது நிதர்சன உண்மை...
கால் சென்டர்ல எந்த எக்ஸ்பீரியன்சும் இல்லாம
50 ஆயிரம் சம்பாத்தியம் எப்படி சாத்தியம்.???
ஆனாலும் படத்தை
கேள்வியை யோசிக்க வைக்காமல் படத்தை ரசிக்க வைக்கின்றார்கள்...
சுப்புடு போல இந்த படத்தை
கிழிச்சி தொங் விட்டு விட்டுதான்... மறுவேளைன்னு போனா கிழி கிழின்னு கிழிக்கலாம்..
ஆனா சினிமா என்பது உண்மை போல சொல்லக்கூடிய
பச்சை பொய்.. அது ரசிக்க வைக்கற கிராப்ட்
அவ்வளவுதான்.. அப்படி பார்த்தா இந்த படத்தை அழகா பொய் மூலாம் பூசி மறைத்து ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்.
சமுத்திரகனி மற்றும் சரண்யா சிறப்பாக நடித்து இருக்கின்றனர்.
அமலாபால் நோ கமென்ட்ஸ்...
நான் பார்த்த சென்னை
தேவி தியேட்டரில் என்ஜினியரிங் காலேஜ்
பசங்களை பத்தி மூச்சு விடாமா பேசிய வசனத்தை கேட்டு விசில் அடிச்சி கைதட்டி கொண்டாடினார்கள்...
படத்தில் விவேக் வந்து பெரிய ரிலிப்பை கொடுக்கின்றார் என்பது உண்மை.. அதே போல இவன்க ரெண்டு பேரும் என்ன ரகம் என்று வெளிப்படையாக பேச.. மைன்ட் வாய்ஸ் என்று பேசிட்டிங்க என்று தனுஷ் கலாய்க்கும் இடம் செமை.
ஒளிப்பதிவு செய்து எழுதி
இயக்கி இருக்கின்றார்... வேல்ராஜ்... ஆனால் ஒளிப்பதிவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை... சிக்னமாக பிரேம் வைக்க ஒளிப்பதிவு அனுபவம் மிக அழகாக வேல்ராஜூக்கு கை கொடுத்து இருக்கின்றது.
படத்தில் பேஸ்புக் பார்த்து
விட்டு முதல் ஆளாக தனுஷூக்கு உதவி செய்ய வருபவர் போடா போடி இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிட தக்கது...
==========
படத்தின் டிரைலர்..
=========
படக்குழுவினர் விபரம்
Directed by Velraj
Produced by Dhanush
Written by Velraj
Starring Dhanush
Amala Paul
Music by Anirudh Ravichander
Cinematography Velraj
Edited by M. V. Rajesh Kumar
Production
company Wunderbar Films
Distributed by Escape artist motion pictures
Release date(s)
July 18, 2014[1]
Running time 133 minutes
Language Tamil
=================
பைனல்கிக்.
மேஜிக் செய்யும் போது
நம்மை ஏமாத்த போறாங்கன்னு தெரிஞ்சிதான் போய் உட்காருகின்றோம்.. இல்லைன்னா ஒரு பொண்ணை எப்படி ரெண்டு துண்டா ஆக்க
முடியும்.. முடியாது இல்லை.. ஆனாலும் நம்பறா போல நம் கண்ணுக்கு எதிர மேஜிக் வித்தை
நடக்குது இல்லை...
அவனே சொல்லட்டான்.. இது மேஜிக்கின்னு.... அப்புறம் அவன் இதை செஞ்சி மறைச்சிட்டான்....
அதை செஞ்சி மறைச்சிட்டான்னு சொல்லறது எந்த வகையில் ஏற்புடையது..?? இது போலத்தான்..
சினிமா மேஜிக் போல யோசிக்க விடாமா பரபரன்னு போகுது அதுக்கு காரணம் உண்மை படத்தில் கொஞ்சம் இருப்பதால்...
ஆனா பூ மட்டுமே காதில் சுற்றி விட்டு நானும் நல்ல படம் எடுத்தேன் சொல்ற காமெடிகளும் உண்டு.
ஆனா பூ மட்டுமே காதில் சுற்றி விட்டு நானும் நல்ல படம் எடுத்தேன் சொல்ற காமெடிகளும் உண்டு.
பொதுவாக 100வது ரன் அடிக்க
தெண்டுல்கர் 88 ரன்களில் இருந்தே கட்டையை போட்டு ஆடிக்கொண்டு இருப்பார்.. பதட்டத்துலே
98 இல் அவுட் ஆனா வரலாற்று சாட்சியங்கள் நிறைய
உண்டு.
பொதுவாக 50 வது படம்
100 வது படம் எல்லாம் பெரிய நடிகராக இருந்தாலும் சறுக்கி தொலைக்கும் ஏரியா அது..
தனுஷ் தனது 25 வது படத்தில் , பழைய கள்ளாக இருந்தாலும் புதிய மொன்னையில் கொடுத்து
ஜெயித்து இருக்கின்றார்...
=======
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு எழு.
========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
உங்கள் விமர்சனம் படத்தை உடனே பார்க்கனும்னு ஆவலை தூண்டுகின்றது. தனுஷ் போன்ற நல்ல நடிகருக்கு முந்தைய படங்கள் தோல்வியையே கொடுத்தது. இந்த படம் தனுஷ் க்கு நல்ல ஹிட்டா அமையனும்.
ReplyDeleteGood movie
ReplyDeleteதனுஷிடம் நடிப்புத் திறமை இருக்கு...
ReplyDeleteமிக அருமையான விமர்சனம்...