தன்னம்பிக்கைக்கு மறு பெயர் பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கர்.




எனது திரைப்படங்கள் தீர்ப்பு எழுதும் களம் அல்ல... எனது திரைப்படங்கள் சமுக அவலங்களை சாடுகின்றது.. எனது   திரைப்படங்கள் மூலம் தீர்வுகள்  கிடைத்து இருக்கின்றன.... சில நேரங்களில் தீர்வுகளோ தீர்ப்புகளோ கிடைத்தது இல்லை... இருந்தாலும் நான் பயணிக்கின்றேன் என்று ஒரு பேட்டியில்  மதூர் சொல்லி இருக்கின்றார்....

-         தேசிய விருது இயக்குனர் மதூர்  பாண்டார்கர்.



வீடு வீடாக பேப்பர் போடும் பையன் ஒருவன்... ஒரு நாள்  தினத்தந்தி போல  ஒரு  தினப்பத்திரிக்கைக்கு  முதலாளியாவது சாத்தியமா???
எப்படி சார் லாஜிக் இடிக்குதே...

லாஜிக் எல்லாம் இடிக்கலை...

தன்னம்பிக்கையும்,  கடின உழைப்பும், லக் என்ற வார்த்தையும்   அந்த பையன் பக்கம் திரும்பியிருந்தால் இந்த உலகில் எதுவும் சாத்தியம்..
1991 ஆம்  ஆண்டு  பத்தாம் வகுப்பு முடிந்த உடன் பகுதி நேரமாக நான் வேலை பார்த்த கடை... கடலூர் திருப்பாதிரிபுலியூர்  அரசினர் மகளிர் பள்ளி எதிரே இருந்த அபிநயா வீடியோ சென்டர்.கேசட்  மற்றும் டெக் வாடகைக்கு கொடுக்கும் வியாபாரம்... 

ஆனா நான் இன்னும்  அப்படியேதான் இருக்கேன்.

அதே போல  போய்ஸ்கார்டனில்  வீடியோ லைப்ரரி வைத்து  இருந்தவர்  ...  இன்றைய  முதல்வர்  ஜெ அவர்களின் உயிர்தோழி சசிக்கலா... முதல்வர் ஜெயலலிதாவுக்கு நட்பாகி பின்பு உயிர்  தோழி ஆகி விட்டார் என்பது நாடறிந்த உண்மைதான்...

லக் என்று கண்டிப்பாக ஒன்று வேண்டும்... இல்லையென்றால் ஒரு பப்பும் வேகாது...

மும்பையில்   நடிகர் நடிகை வீடுகளுக்கும்,  பார்களுக்கும்   வீடியோ கேசட்  சப்ளை செய்த ஒருவன்...  அதே நடிகர்களை இயக்கும் இயக்குனராக வளர்வது சாத்தியமா?

சாத்தியம் என்று மும்பை டான் போல ரோலிங் சேரில் சுற்றியபடி  கால் மேல் கால் போட்டு ஆக்ஷன் கட் சொல்கின்றார் இயக்குனர் மதூர்  பண்டர்கர்.

கன்னிராசிக்காரர்...

மூம்பையின் புறநகர் பகுதி கேசட் கடையில் வீடியோ கேசட்   டெலிவரி பாயாக இருந்து இன்று இந்தியா திரும்பி  பார்க்கும் அளவுக்கு பெரிய  இயக்குனராக தனது 30 வயதிலேயே உயர்ந்து இருப்பது சாதாரண விஷயம் அல்ல.

 நிறைய கஷ்டங்கள் வெளி நாட்ட வேலைகள் என்று அலைந்தாலும் வீடியோ  கேசட்டில்  நிறைய படம் பார்த்து பார்த்து  கேபிள் டிவி ஆப்பரேட்டர் திரிஷ்யம் மோகன்லால் போல் சினிமா மீதான காதலும் புரிதலும்  மதூருக்கு இயற்கையாக வந்தது  பெரிய ஆச்சர்யம் இல்லை..

 சின்ன சின்ன  இயக்குனர்களிடம் பகுதி நேரமாக உதவி இயக்குனராக  வேலை செய்துக்கொண்டு இருந்தவர். 1995 ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மாவிடம் முதன் முறையாக உதவி இயக்குனராக சேர்ந்து ஒரு சில காட்சிகளில் நடிக்கவும் செய்கின்றார்.
1999 Trishakti என்ற படத்தை இயக்குகின்றார்... பெரிய  அளவில் முதல் படத்திலேயே  மண்ணை கவ்வுகின்றார்... பிர்ர்ர் ....துப்... பச்சக் என்று மண்ணோடு எச்சிலை துப்பி விட்டு  என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றார்...

பேசமா சினிமா எல்லாத்தையும் மூட்டை கட்டி தூக்கி கடாசி விட்டு  ஓட்டல் அறையில் ரூம் புக் பண்ணி கில்மா படம் எடுக்கலாமா என்று யோசிக்கின்றார்... என்னதால் கில்மா படத்தை ரசித்தாலும் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான்... நம் படத்தை  ரசித்தவனே நம் தலையில் ஒன்று   வைத்து இவனுக்கு இன்னும் வேணும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல்.. அந்த பாராம்பரிய டயலாக்கையும் சொல்லுவானே என்ற கவலை மதூருக்கு...

நீயெல்லாம் அக்கா தங்கச்சியோடு பிறக்கலை..?? உனக்கு பொண்டாட்டி புள்ளை இல்லை..??? என்று கேட்பான்... அந்த கிளிஷே டயலாக்கில் இருந்து தப்பிக்க... என்ன செய்யலாம்  என்று யோசித்தார்...


கதைக்கு  எங்கும்  அலைய வேண்டாம்.... கேசட் கொடுக்கும்  டெலிவரி பாயாக  சென்ற இடத்தில் எல்லாம் கதை இருக்கின்றதே என்று துள்ளிகுதித்தார் மதூர்.

பார்களில் நடனம் ஆடும் பெண்ணிகளின் கதையை மையமாக வைத்து  சாந்தினி பார் என்ற பெயரில் தபுவை  நாயகியாக்கி படம் எடுத்தார்.. இரண்டாம் படத்தில் முதல் படத்தின் தவறுகள் எதுவும் தலை தூக்காமல் பார்த்துக்கொண்டார்.National Film Award for Best Film on Other Social Issues என்ற சிறகை மதூர் தன் கீரிடத்தில்  சூட்டிக்கொள்ள.. சாந்தினி பார் பெற்றுதந்தது.


 அன்றில் இருந்து இன்றுவரை மிகச்சிறந்த  இந்தி திரைப்பட இயக்குனர்கள் பட்டியல் எழுதும் போது எல்லாம் தன் பெயர் வருவது போல பார்த்துக்கொண்டார்...


 இயர் இயக்கிய பேஜ் திரி, பேஷன், கார்பரேட், டிராபிக் சிக்னல்,  ஹீரோயின்  போன்ற படங்கள் மதூருக்கு புகழுக்கு  புகழ்  சேர்த்தன எனலாம்..


 மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் போல்டாக படம் எடுத்து   மேல்தட்டு வர்க முகத்திரையை கிழிப்பவர்...  டிராபிக் சிக்னல் படத்துக்கு  சிறந்த இயக்குனருக்கா   தேசிய  விருது  பெற்ற வெற்றியாளர்...


 சீ சென்டர் மக்கள் எதுக்கு கவலை படமாட்டார்கள்.. ஆனா  நடுத்தர மக்கள் இரண்டும் கெட்டான்.. திரிசங்கு சொர்கம்.. ஆனால் மேல் தட்டு வர்கம் என்ன  செய்தாலும் பண பலத்தால் தடுத்து விடுவதால் யாருக்கும் அவர்களை பற்றி தெரியாது..


 அவர்களின்  உண்மை முகத்தை  செல்லுலாய்டில் அப்பட்டமாக   தேங்காய் உறிப்பது  போல  உறிப்பதுதான்  மதூர் திரைப்படங்களின்  வேலை..


  எல்லா கோட்  சூட்டுகளுக்கு பின்னாலும் கேவலமான பக்கம் எல்லா மக்களை போன்றே அவர்களுக்கு இருக்கின்றது என்பதைதைன் தன் படங்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்  மதூர்.


 என் திரைப்படங்கள் எதையும்  வெளிச்சம் போட்டு காண்பிக்கவில்லை.. சமுதாயத்தின்   இருள் பக்கங்களை  ஒரு கண்ணாடி போல எனது படங்கள் பிரதிபலிக்கின்றன என்று வேண்டுமானாலும் சொல்லலாம்..

எனது திரைப்படங்கள் தீர்ப்பு எழுதும் களம் அல்ல... எனது திரைப்படங்கள் சமுக அவலங்களை சாடுகின்றது.. எனது   திரைப்படங்கள் மூலம் தீர்வுகள்  கிடைத்து இருக்கின்றன.... சில நேரங்களில் தீர்வுகளோ தீர்ப்புகளோ கிடைத்தது இல்லை... இருந்தாலும் நான் பயணிக்கின்றேன் என்று ஒரு பேட்டியில்  மதூர் சொல்லி இருக்கின்றார்....

 எங்கே தன் வாழ்க்கையை  வீடியோ கேசட் டெலிவரிபாயாக தன் வாழ்க்கையை  தொடங்கினாரோ..?? அங்கே இருக்கும் சித்தி வினாயகர் கோவிலுக்கு கடந்த  16 வருடங்களாக சென்றுக்கொண்டு இருக்கின்றார்...

மனைவி ரேனுவும் ஒரே ஒரு மகளும் இவருடைய வளர்ச்சிக்கு பக்கபலம் என்றாலும்... நடிக்க வாய்ப்பு தருகின்றேன் என்று ஒரு பெண்ணை கற்பழித்து விட்டார் என்று  இவர் மீது புகார் இருப்பதும் உண்மை. அது அப்பட்டமான பொய் என்று மறுக்கின்றார் மதூர்.


ஓரே மாதிரியான கதைகளங்களை மட்டுமே தனது திரைப்படத்தில் தொடர்ந்து  பயண்படுத்துகின்றார் என்ற  பெரிய  குற்றச்சாட்டு இவர் மீது உண்டு.

 என்னுடைய  ஆல் டைம்  பேவரைட்...
டிராபிக் சிக்னல்,  பேஜ் 3, ஹீரோயின்...

வீடியோ கேசட் டெலிவரி பாயாக  இருந்து  உதவி இயக்குனர் நடிகராக வளர்ந்து, பின்பு இந்தியாவே திரும்பி பார்க்கும் இயக்குனரராக வளர்ந்து இருப்பது ஒன்றும் சிட்டிகை தட்டும் நேரத்தில் நடைபெற்ற விஷயம்   இல்லை...

அதற்கு பின்னால் இருக்கும் மதூரின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும்  போற்றும்..

ம் சொல்ல மறந்துட்டேன்...

45 வயதாகும்  மதூர் பண்டராக்கருக்கு இன்று பிறந்தநாள் இன்னும் பல சாதனைகள் இந்திய  சினிமாவில் சாத்தியப்படுத்த அவரை மனதார வாழ்த்துவோம்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

26/082014




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கர்.

    ReplyDelete
  2. You are bringing so much of info abt great artists. Kudos for ur share. great job. keep going...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner