THE BOOK THIEF-2013/உலக சினிமா/ஜெர்மனி/புத்தகத்தின் மீது காதல் கொண்டவள்.




ஜெர்மனியில்  யுதர்களுக்கு எதிராக நடந்த  துயரங்களை  முன் வைத்து இதுவரை  ஆயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வந்துள்ளன... இதன் மூலம்   ஹிட்லரையும் நாஜிக்களையும்    நேற்று உலக வரலாறு  தெரிந்த இளைஞன்   கூட இன்னும் திட்டி தீர்க்க ஏதுவாகவும் , அந்த  கனல் அனையாமல் பார்த்துக்கொள்ளுகின்றார்கள்...


 கிளவராக   திரைப்பட  துறையை கையில் எடுத்துக்கொண்டு. மிக  நேர்த்தியாக உண்மை  சம்பவங்களை  எடுத்து, பிசிறு தட்டாமல் திரைக்கதை அமைத்து, வருடத்துக்கு ஒரு   திரைப்படம் வீதம்   நாஜிகாலத்த்திய ஜெர்மனியில் நடந்த துயரங்களை  நம் கண்முன் நிறுத்துகின்றார்கள்.

எந்த ஜெர்மனிக்காக யூதர்களை அழிக்க வேண்டும் என்று ஒரு நாட்டு  மக்களையே தனது உணர்ச்சிகரமான பேச்சின் மூலம் யுதர்களை கொல்லுதல் பாவம்  அன்று...  என்று  நினைக்க வைத்து ,ஜெர்மனி மக்களை  பொட்டி பாம்பாக ஆட வைத்த  ஹிட்லர் என்ற பெயரை தற்போது ஜெர்மனியில் சொல்லவே  யோசிக்கின்றனர்....

காரணம் அந்த அளவுக்கு உலக மக்களிடையே ஹிட்லர் யுதர்களுக்கு  நடத்திய கொடுமைகளை திரைப்படம் என்று கருவி மூலம் உலகலாவிய பொது  மக்களிடம் கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல்  வருடத்திற்கு  ஒரு படம் வீதம் கொண்டு சேர்த்த வண்ணம்  உள்ளார்கள்..

ஆனால்  நமது பக்கத்து  நாடான   ஈழத்தில் நடந்த முள்ளிவாய்க்கால்   படுகொலை குறித்து நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ  கூட திரைப்படங்களில் நம் துயரங்களை சொல்ல  எந்த  படைப்பும் இது நாள் வரை  முன் வரவில்லை என்பதுதான்  உண்மை.

 சரி படத்துக்கு வருவோம்...

 உங்களுக்கு படிக்க  தெரியுமா?

  தெரியாது....

கொஞ்சமாவது தெரியுமா?

சுத்தமாக தெரியாது...

சரி உங்கள் எதிரில் புத்தகத்தை வைத்துக்கொண்டு சிலாகித்து படித்துக்கொண்டு இருந்தாள்... உங்களுக்கு எப்படி இருக்கும்?-

பேஜாராயிடும்...   எனக்கும் படிக்க தெரிஞ்சா...  இந்த உலகத்துல இருக்கற எல்லா புத்தகத்தையும்  படித்து விட  வேண்டும் என்று வெறியே வரும்..

  சரி படிக்க ஆரம்பிச்சிட்டிங்க....


 அது எப்படிங்க  திடிர்ன்னு படிக்க முடியும்?

சரி ஒருத்தர் கத்துக்கொடுத்தார்ன்னு வச்சிக்கோங்க....,.. நீங்களும் கற்பூர புத்தி போல புரிஞ்சிக்கிட்டிங்க... நல்லா படிக்கிறங்க.. நீங்க நினைச்சது போல உலகத்துல  இருக்கற எல்லா புத்தகத்தையும்  படித்து விட ஆசை எழுகின்றது.. அந்த நேரத்துல  உங்க எதிர்க்க புத்தகங்களை வைக்கோல் போர்  போல குமிச்சி புத்தகங்களை   எரிச்சா உங்கள் மனம் என்ன பாடு படும்...??


கொடுமைசார்.. எப்படி சார்.. புத்தகங்களை எரிக்க மனம் வருது..??
 நம்ம எப்படி வெள்ளையேனே வெளியேறு இயக்கத்தின் போது வெள்ளக்காரன் துணியை எரிச்சோம் இல்லையா? அது போல ஜெர்மனியில் யூதர்களை பற்றி பெருமை பேசும் புத்தகங்களை எரித்தார்கள்...

 அதாவது யாழ் நூலகத்தை எரித்தது போல..

 அப்ப படிக்க தெரியாதவன் படிக்க கத்துக்கிட்டா பார்க்கற புத்தகம் மேல எல்லாம் காதல் வரும் இல்லையா?

ஆமாம்..

அவுங்க  கண் எதிரில் புத்தகம் எரிந்தால் தாங்க முடியுமா?

முடியாது.. இல்லையா... இந்த உணர்வு பூர்வமான கான்செப்ட்டை வச்சிக்கிட்டு ஜெர்மன் , நாஜி, யுதர்கள்இ, ராணுவம் போர்ன்னு பூந்தி மிக்சர் தூவி... உலக அளவுல த புக் ஆப் தீப் திரைப்படம் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கின்றது..

 படத்தின் கதை என்ன,?

1938 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு  சிறுமி  லீசல் மிமிங்கர்(Sophie Nélisse) தத்து அப்பா அம்மாவிடம் செல்வதாக கதை   தொடங்குகின்றது... தனது தம்பியையும் அம்மாவையும் பறிகொடுத்தவள்.. தற்போதைக்கு ஆதரவு என்று பார்த்தாள்...ஜெர்மனியில் உள்ள  தத்து அப்பா அம்மாவான ஹன்ஸ் மற்றும் ரோசா.... ஹன்ஸ் கேரக்டர் யார் தெரியுமா..? கிங் ஸ்பீச் படத்துல  தெத்துவாய் ராஜாவுக்கு டீச்சரா வருவாரே... அவரேதான்.. இன்னும் நல்லா வௌங்களும்னா த பெஸ்ட் ஆப்பர் படத்துல நடிச்சி தூள் கௌப்பிய  Geoffrey Rushதான்.


ஜெர்மனில் நாஜிக்கள் பட்டையை கிளப்பிக்கொண்டு இருந்த நேரம்...லீசல்  பள்ளிக்கு போறா... ஆனா  அவளுக்கு எழுத படிக்க தெரியாது...  பசங்க  கேலி செய்யறாங்க. தத்து அப்பா ஹன்ஸ்தான் லீசலுக்கு படிக்க ,எழுத கத்துகொடுக்கின்றார்...


ஜெர்மனியில்  யூதர்கள் சம்பந்த பட்ட  புத்தக எரிப்பு  விழாவில்  லீசலும் அவளோட பள்ளி  நண்பன் ருடீயும் கலந்துக்கறாங்க...லீசல் எதிரில் மலைபோல் குவிக்கப்பட்டு எரியும் புத்தகங்களை  கண்டு மனம் புழுங்கி , எல்லோரும் சென்ற உடன்  கொஞ்சம் எரிந்து புத்தகத்தை எடுத்து மறைத்து வைத்துக்கொள்ளுகின்றாள்.

 அதை  அவளின் அப்பா ஹன்ஸ் பார்த்து விட்டாலும் நாஜிக்கள்  கண்ணில் படாமல்  அவளை காப்பாற்றுகின்றார்.

 இந்த நிலையில்  ஹன்ஸ் முதல் உலக போரரில் தன் உயிரை  காப்பாற்றிய யுதரின் பையன் மேக்ஸ்க்கு தன் வீட்டின் நிலவரையில்    அடைக்கலம் கொடுக்க ஜெர்மனி  நாஜிக்களுக்கு  தெரிந்தால் அவ்வளவுதான்...

மேக்ஸ்யை எப்படி அவர்கள் இராணுவத்திடம் இருந்து காத்தார்கள்..   இதில் லீசலின்  பங்கு என்ன என்பதுதான் கவித்துவமான படத்தின் மற்றைய சுவாரஸ்யம்.

 ====
படத்தின் சவாரஸ்யங்களில்  சில.

இதே பெயரில் சக்கை போடு போட்ட புத்தகத்தின் ரைட்ஸ் வாங்கி  நோவாமல் திரைக்கதை அமைத்து வெற்றிப்படமாக எடுத்து விட்டனர்.


  சான்சே இல்ல.. கவித்துவமான திரைப்படம்...


படத்தின் பெரிய பலம் லீசல் கேரக்டரில்  நடித்து இருக்கும் Sophie Nélisse சான்சே இல்ல.... முட்டை கண்ணை வச்சிக்கிட்டு அப்படியே இன்னோசன்ட் பேசோடு நம் மனதை கவர்கின்றார்...

முதலில் லீசலிடம்  ஒட்டாமல் இருக்கும்  ரோசா.. பின்பு தன் மகள் போல பாவிக்கும் இடம் அருமை.. மெல்ல மெல்ல அந்த வீட்டில் ஒரு மகாராணியாக வளம்வருவது கிளாஸ்..

மேக்ஸ் உயிருக்கு  போராடிக்கொண்டு இருக்கும் போது பள்ளி வந்த லீசலிடம் மேக்ஸ் உயிர் பிழைத்து விட்டான் என்று கண்டிப்புடன் சொல்லி  பின்பு சிரிக்கும் காட்சி இருக்கின்றதே... அதான்யா இயக்கம் அப்படின்னும் அதான்யா நடிப்புன்னு சொல்லும் இடங்கள்..

 புத்தகங்களை படித்து ஒருவனை உயிர்ப்போடு வைப்பதும்,  படித்த புத்தகத்தை குண்டு வெளியே விழ உயிர் பயத்துடன் மக்கள் பதுங்கு வெளியில் பதுங்கி இருக்க லீசல் மெல்ல படித்த கதையை சத்தமாக சொல்ல... எல்லோரும் ரிலாக்ஸ் ஆவது என   படத்தில் கவித்துவமான  காட்சிகள் ஏராளம்.

 படத்தின் போட்டோகிராபி கண்ணுல ஒத்திக்கலாம்... கேமராமேன் அத்தனை பேரும் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும்... அவர்களுக்கு டல் லைட்டிங் இறைவன் கொடுத்த வரம் என்றாலும் இன்டோரில்  நில வரையில் எடுத்து இருக்கும் காட்சிகள் கவிதை...

 படத்தின் முக்கிய ஹீரோ  இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ்... ஸ்பில்பெர்க் இந்த படத்தை இயக்கவில்லை என்றால் நான் மியூசிக் செய்ய மாட்டேன் என்று 2005 ஆம் ஆண்டு சொல்லி இருந்ததாக தகவல்..

 முக்கியமாக வெள்ளை பனியில் கார் வேகமாக போகும் படத்தின்  பெயர் வரும் காட்சியில்  ஜான் தன்  இசையால்  பின்னி இருப்பார்.

Geoffrey Rush நடிப்பை நாம சொன்னா சூரியனுக்கே டார்ச் அடிக்கற கதை என்பதால் படத்தில் அவரது நடிப்பை பார்த்து  அசந்து போவீர்கள்.


====
படத்தின் டிரைலர்,



======
படக்குழுவினர் விபரம்

directed by Brian Percival
Produced by
Karen Rosenfelt
Ken Blancato
Screenplay by Michael Petroni
Based on The Book Thief 
by Markus Zusak
Starring
Geoffrey Rush
Emily Watson
Sophie Nélisse
Narrated by Roger Allam
Music by John Williams[1]
Cinematography Florian Ballhaus
Edited by John Wilson
Production
  company Sunswept Entertainment
Distributed by 20th Century Fox
Release date(s)
October 3, 2013 (Mill Valley Film Festival)
November 8, 2013 (United States)
Running time 131 minutes
Country United States
Germany
Language English
German
Budget $19 million[3]
Box office $76,586,316


===========
பைனல்கிக்.

 இந்த படம்  பீல் குட் மூவி..

 வார இறுதியில் அகன்ற  திரையில் ஒரே ஒரு  பியருடன்  பார்த்தே  தீர வேண்டிய    கவித்துவமான திரைப்படம்.. முக்கியமாக வரலாறு தெரிந்து இருத்தல் நலம். எனக்கு தெரிஞ்ச, புரிஞ்ச வரலாறை வச்சி   எழுதி இருக்கேன்...

போட்டோகிராபி கண்ணில் ஒத்துக்கொள்ளலாம்.. படத்தின் முக்கியமான ஹீரோ  இசையமப்பாளர் ஜான்  வில்லியம்ஸ் என்றால் அது மிகையில்லை.
  
புத்தக காதலர்களுக்கு   இந்த திரைப்படம் கண்டிப்பாக பிடிக்கும்.
=========
படத்தின் ரேட்டிங்.

பத்துக்கு எட்டு
=========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner