நீங்கள் பிரபல நடிகர்... உங்களுக்கு என்று தமிழ் சினிமாவில் பெரிய பின் புலம் ஏதும் இல்லை... ஒரு படம் சறுக்கினாலும்... போண்டிதான் பின்பு சாட்சாத் ஆண்டிதான்.
அஜித் சொல்வது போல நீங்கள் தனியா வளர்ந்த காட்டு மரம்.
அப்பாவின் செல்வாக்கிலோ... அண்ணாவின் செல்வாக்கிலோ, மாமனின் செல்வாக்கிலோ, சித்தப்பாவின் செல்வாக்கிலோ ஒரு படம் தோற்று விட்ல் நீங்கள் அடுத்த படத்தை இந்த தமிழ் திரையுலகில் பெற முடியாது,...
ஏன்டா... மைக் மோகனுக்கு சான்சே இல்லைன்னு கேட்டா..?? அவரு உருவம்ன்னு ஒரு படத்துல அஷ்ட கோணலா நடிச்சாரு.. அதான் மக்கள் ரசிக்கலைன்னு போகிற போக்கில் அடித்து விட்டு செல்லும் புருடாக்காரர்கள் நிறைந்த தமிழ் சினிமா உலகம் இது... நிறைய படங்களில் மோகன் ஏதார்த்த குடும்ப படங்களில் நடித்தலும் அந்த ஒரு படத்துல நடிச்சதாலதான் ஊத்திக்கிச்சின்னு கூசாம அடிரா சைக்கைன்னு அடிச்சி விடுவான் நம்ம ஆளு.
அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்... உங்களுக்கு ஒரு காதல் பூக்கின்றது.. அந்த காதல் எப்படியானது என்றால் தமிழகமே கனவு கன்னியாக நினைத்துக்கொண்டு இருக்கும் பெண்ணை நீங்கள் காதலிக்கின்றீர்கள்... அந்த பெண்ணின் புன்னகைக்கு தமிழ் நாடே தவம் இருக்கின்றது.. அப்படியான பெண்ணை நீங்கள் காதலில் வீழ்த்தி விட்டீர்கள்...
தமிழ் திரையுலகமே நேரில் வந்து அட்சதை தூவி வாழ்த்துகின்றது...
எப்படிடா அந்த புன்னகை இளவரசியை சாய்த்தான் என்ற சாப்பிட்டு விரல் நக்கும் போது கூட அதே யோசனையாக உங்கள் கல்யான ரிசப்ஷனில் யோசித்துக்கொண்டு இருந்தவர்கள் மிக அதிகம்.
கல்யாணம் முடிந்து உங்களுக்கு ஒரு படம் நடிக்க வாய்ப்பு வருகின்றது... படம் இயக்க போகின்றவர் புதியவர்... கதையை சொல்கின்றார்...
நீங்கள் நான் நடிக்கின்றேன் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள்...
கதை சொன்ன இயக்குனர் ஷாக் ஆகின்றார்...
காரணம் கதை விவாகரமானது.. கண்டிப்பாக நீங்கள் நடிக்க மறுப்பீர்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்த இயக்குனருக்கு உங்கள் சம்மதம் ஆனந்த அதிர்ச்சியை தருகின்றது.
கதைப்படி நாயகனுக்கு நிச்சயம் முடிந்து அவனுக்கு நிச்சயித்த பெண்ணோடு ஒரு சுபவேளையில் படுக்கையில் அந்த பெண்ணை சாய்க்கையில்...நாயகனின் ஆணுறுப்பு விறைக்கவில்லை.. அது தேமே என்று கிடைக்கின்றது என்று டைரக்டர் சொன்னால் ....
எந்த தமிழ் நடிகரும் ஒத்துக்கொள்ளவே மாட்டான்... ஆவ்வளவு ஏன் தமிழ் சினிமாவுக்கு இந்த களமே புதிது...
ஏன் என்றால் காலம் காலமாக ஆறு பேரை ஒரே ஆடியில் வீழ்த்தி வீழ்த்தி ருசிகண்ட பூனையாக வளம் வருபவனை அதுவும் முக்கியமான மேட்டர் எந்திருக்கவில்லை என்றால் எந்த நடிகனும் நடிக்கவே மாட்டான்...
நீங்கள் சொல்லும் இப்படி ஒரு பொசிஷனில் பிரபல நடிகராக நீங்கள் இருந்தால் நடிப்பீர்களா??
ஆனால் இப்படி ஒரு விவகாரமாக கதைகளத்தில் புது மாப்பிள்ளை பிரசன்னா நடித்தார்..
... நடிகை சிநேகாவை மனமுடிந்த பின் அவர் நடித்த படம் கல்யாண சமையல் சாதம்... எழுச்சி பிரச்சனை சம்பந்த பட்ட இந்த கதையில் பிரசன்னா மிக தைரியமாக நடித்தமைக்கே தமிழ் சினிமா வரலாற்றில் அவருக்கு கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும்...
ஆறு பேரை திரையில் அடித்து வீழ்த்துவதை விட இதற்குதான் கட் அதிகம் வேண்டும்.. உதாரணத்துக்கு கணவன் மனைவி இரண்டு பேரும் வெளியே போகையில்...
இன்னா சார் கல்யாண சமையல் சாதம் படத்துல வர்ரது போல முடியலையா--??? நாங்க வேணா முயற்சி செய்யட்டுமா ? என்று வேண்டும் என்றே வம்புக்கு இழுப்பார்கள்.
அதை எதிர்கொள்ள ஒரு பக்குவம் வேண்டும்.. ஒரு நிதானம் வேண்டும்.. டென்ஷனாகம்ல் புறம் தள்ளி விட்டு செல்ல ஒரு தைரியம் வேண்டும்.,.. அது நடிகர் பிரசன்னாவிடம் இருக்கின்றது என்று தைரியாமாக சொல்லலாம்..
2000 ஆம் ஆண்டு மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் அதிக செலவு வைக்காமல் ஒரு படம் தயாரிக்க நினைத்தது.. படத்தை தனது சிஷ்ய பிள்ளை சுசிகணேசனை இயக்க அனுமதித்தது...
பைவ் ஸ்டார் என்ற அந்த படத்தில் நடிக்க ஐந்து புது முகங்களை தேர்வு செய்ய....வாரபத்திரிக்கைகளில் போட்டி வைத்தது ... அந்த படத்தில் நடிக்க தேர்வானவர்களில் ஒருவர்தான்.. பிரசன்னா...
திருச்சி சொந்த ஊர்... இதே நாளில் 1982ல திருச்சியில் பொறந்தார்... இன்னைக்கு எல்லாம் கூட்டி கழிச்சி பார்த்தா பிரசன்னாவுக்கு 32 வயசாகுது... சின்னவயசுல நடிப்புல ஆர்வம் அதிகம்... பைவ்ஸ்டார் வாய்ப்பு கிடைச்சப்ப.... அவுங்க வீட்டுல எதிர்ப்புதான்...
முதல் படத்துல இந்த பையன் எப்படி நடிச்சி இருப்பான்னு... அப்படின்றறதுக்கு உதாரணம்ன்னு சொல்லனும்னா..
பைவ் ஸ்டார் இன்டர்வெல் பிளாக்ல ஈஸ்வரி உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு ஒரு சீன் ஒன்னு இருக்கும்... திருடனுக்கு தேள் கொட்டினா போல நடிக்கற சீன் அது... பிரசன்னா நல்லா நடிச்சி இருந்தாப்பலே...
பிரச்ன்னா நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்றால் பைவ் ஸ்டார், அழகியதீயே...கண்ட நாள் முதல், அஞ்சதே...
திடிர் என்று கொடுர வில்லனாக நடிக்க தில் வேண்டும் பிரசன்னா அஞ்சாதேவில் கலக்கி இருப்பார்... முரண் மற்றும் பாணா காத்தாடியில் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்...
அழகிய தீயேவில் ஓட்டலில் பார்க்கத காதலியை பற்றி பிரகாஷ்ராஜூக்கு கதை சொல்லும் இடம் மற்றும் கிளைமாக்ஸ் இடங்கள் அசத்தி இருப்பார்..
பிரசன்னா படங்களில் ஏதாவது ஒரு பாடல் பயங்கராமா க ஹீட் அடித்து விடும்..
பைவ் ஸ்டாரில்.... ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்..
அழகிய தீயே.... விழகளின் அருகினில் வானம்.
கண்ட நாள் முதல்... பனி துளி பனி துளி.....
நாணயம் படத்தில் ..... நான் போகின்றேன் மேலே மேலே... குறிப்பாக இந்த பாடலை இரவு பத்து மணிக்கு மேல் வார்ம் லைட்டிங் அறையில் சின்ன பாட்டில் பியரோடு சன்னமான ஒலியில் இந்த பாடலை கேட்டுக்கொண்டே மதுவை சுவைத்துக்கொண்டே மனம் கவர்ந்த மாதுவுடன் பேசிக்கொண்டு இருப்பது பூமியில் நாம் உணரும் சொர்கமாகும்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் ஒரு இது உருவாகி, பின்பு காதலாகி.. முதலில் அப்படி இல்லை என்று மறுத்து பின்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்..
நல்ல நடிகர் ஏன் இப்போத எல்லாம் அதிக படங்களில் நடிக்கவில்லை.. என்று தெரியவில்லை.. தொடர்ந்து நெகட்டிவ் ரோல் வருவதால் அது போன் பாத்திரங்களை தேர்ந்து எடுக்க தயக்கமா -??என்று தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் இன்னும் புதுமையான மனதுக்கு நிறைவான கதாபாத்திரங்கள் தேர்ந்து எடுத்து நடித்த மேலும் புகழ் பெற இன்றைய பிறந்த தினத்தில் நடிகர் பிரசன்னாவை வாழ்த்துவோம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
28/08/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

enaku therinthu palarum prasanna vai nalla nadigar endre koorugindranar... avarukku pirantha naal nalvaazhththukkal... :)
ReplyDelete