சின்ன சிறுகதை.(( நிறைய உண்மை சம்பவங்கள்))



அவர்  ஒரு எடிட்டர்.பேரு பாலுன்னு வச்சிக்குவோம்.. சென்னையில் இருக்கும் பல மாடி கட்டிடத்தில் இயங்கும் தொலைகாட்சியில்  வேலை பார்த்தவர்... 

திடிர் என்று வேலையை விட்டு விட்டு   உப்புமா படங்கள் எடிட் செய்ய செல்லுவார்...

பாலுவுக்கு வேலை தெரியும் என்றாலும் நிறைய அள்ளி விடுவார்... எப்படி என்றால் ? எனக்கு கமிஷ்னரை தெரியும் என்ற ரேஞ்சிக்கு...பாலுவுக்கு சினிமா வேலை இல்லாத காரணத்தால்  அவசரத்து வேறு ஒரு தொலைகாட்சியில்  வேலைக்கு சேர்ந்தார்....

அங்கே  சேவியர்  என்ற எடிட்டர்   வேலை பார்த்தார் ....

சேவியருக்கு சம்பளம் கம்மி...

ஒர்க் லோட் அதிகம்...



எங்காவது இரண்டாயிரம்  ரூபாய் அதிகம் கிடைத்தால்  நன்றாக இருக்குமே என்று அனுதினமும்  இரவு இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு  படுப்பவர்... அது மட்டுமல்ல...  ரொம்ப  நல்லவர். திறமை சாலி... அதிர்ந்து பேசாதவர்.

பாலுவும் சேவியரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்...

இரண்டு பேரும்  வெளியே செல்வதென்ன... டீ 
குடீப்பதென்ன...
தம் அடிப்பதென்ன...??? 

ஒர்  உயிர் ..........ஈருடலாய்  வாழ்ந்தார்கள்.

சேவியர் தன் படும் அவஸ்தைகளை தெரிவித்தார்.... பாலு சொன்னான்.. கவலையே படாதே.. நான் வெளிய  போன... கண்டிப்பா உன்னை அழைச்சிக்கிட்டு போயிடறேன்...30 ஆயிரம் சம்பளம்... மாட்டை மேச்சோமா? கோலை போட்டோமான்னு இருக்கலாம்...

ஒரு பய கேள்வி கேட்கமாட்டான்...  

சொன்ன வேலையை செஞ்சிட்டா.. எடிட்டர் தோள்ல கை  போட்டுக்கிட்டு பேசலாம்...சார்ன்னு சொன்னா கூட... கால்மி அபய்ன்னுதான் சொல்லுவார் என்று தினமும்சேவியரிடம் அடித்து விடுவான்..

பாலு அடித்து விட்ட கதைகளை சேவியர் அப்படியே நம்பினார்...
ஒரு நாள் சேவியர்க்கு  கனவில்...

 எடிட்டிங் மெஷின் எப்சிபி  மாடாகியது... முதலில் எப்சிபி மாடு முரண்டு பிடித்தாலும், சேவியர் மூக்கனாங்கயிறு பிடித்து  ஹேய் ஹேய் என்று ஓட்டினார்... சட்டையை முதுகில் இரண்டு விருட்டு விருட்டினார்... மாடு அடங்கியது...

ஆலமரத்தில்  கட்டி போட்டு  விட்டு, ஹாயாக கயிற்று கட்டிலில் கைலி கட்டிக்கொண்டு,  எல்லா இடங்களிலும் காற்று  படற  ஹாயாக காலை விரித்தார்.

சுகம் என்றால் சுகம் அப்படி ஒரு சுகம்...சேவியர் மாட்டை  மேய்த்து  கோலை போட்டு விட்டு கைலி கட்டி கயிற்று கட்டிலில் படுப்பது என்னா சுகம் என்று தன் வாழ்வை சிலாகித்தார்... பாலு சொன்னது உண்மைதான் என்று  யோசிக்கும் வேளையில் மனைவி இன்னும் என்ன  தூக்கம் என்று எழுப்பி விட... எல்லாம் கனவாக இருந்த காரணத்தால் சேவியர் முதலில் வெறுத்தாலும்...
பாலு சொன்னது போல நடந்து விட்டால்... எவ்வளவு நன்றாக , இருக்கும்...

சேவியர்க்கு கனவு வந்த மூன்றாவது நாள்.... பாலு பேப்பர் போட்டர்...

அன்று இரவு  பாலுவும் சேவியரும் சேர்ந்து சரக்கு அடிக்கும் போது பாலு பேசிய வார்த்ததைகளை  இந்த ஜென்மத்தில்  சேவியரால்  மறக்கவே முடியாது.

மச்சி....ஒரு வாரம் ஒரே வாரம்... ரெடியா இரு... எப்ப வேணா கூப்பிடுவேன்... ஒம்மால அடுத்த செகன்ட் என் எதிர்க்க நிக்கனும்...உடனே அப்பாயிண்ட் மென்ட் லட்டர் வாங்கி தர்றது என் பொறுப்பு.

சீப் என்  பிரண்டுதான்....

முப்பதாயிரம் சம்ளம்ன்னா சும்மாவா..சேவியர் சிக்கன் தந்தூரி ஆப்  சொல்லு....


மாசக்கடைசி என்றாலும்...

சேவியர்  வெயிட்டரிடம் ஆப் சிக்கன் தந்தூரி சொன்னான்.
அன்னைக்கு சரக்கடிச்சிட்டு  போனவன்தான் ... ஒரு வாரத்துல வேலை வாங்கி தரேன்னு சொன்னவன்... பல வாரங்கள் ஆயிடுச்சி.. போனை காணோம்...

சேவியர்க்கு ஒர்க் பிரஷர்...

 இரண்டு மாதத்துக்கு அப்புறம்தான் பாலு பற்றிய நியாபகமே வந்துச்சி... சரி வாரத்து  ஏழு நாள்தான் என்பது உனக்கு தெரியுமா பாலு?? என்று கேட்டு  காலாய்ப்போம் என்று  நினைத்துக்கொண்டு சேவியர் பாலுவுக்கு போன் செய்தார்...
இரண்டு முறை புல் ரிங் போய் கட்டாயிடுச்சி...

மறு நாள் சேவியர்  போன்  பண்ணும் போது பாலு எடுத்தான்..
ஜி அவசரமா மீட்டிங்ல இருக்கேன்... அப்புறம் கால் பண்ணறேன்.. இப்பயும்  சொல்லறேன் ஜி... நல்ல ஆபருக்குதான் உங்களுக்காக   தேடிக்கிட்டு இருக்கேன்.,.. நான் எப்பவேணா  கால் பண்ணுவேன்...  அடுத்த செக்ன்ட் வந்து நின்னடனும்... ஓகே வா என்று சொல்லி பாலு  போனை வைத்ததான்...

ஒரு வருடம் ஆகி விட்டது... சிரியல் ,பரோக்கிராம், ஸ்பெஷல் புரோக்கிராம் என்று சேவியரை  சைக்கையாக புழிந்துக்கொண்டு இருந்த போது....

 பாலுவிடம் இருந்து போன்....

போனை  எடுப்பதற்குள்ளே...

யப்பா வேலை கிடைச்சிடுச்சி... அதுக்குதான் போனே   செய்யாத என் நண்பன் பாலு போன் செய்யறான்...

ங்கோத்தா... டக்குன்னு எப்படி  ரெசியூமோட அவன் முன்னாடி  போய் நிக்கறேன் பாரு.... என்று மனதில் நினைத்துக்கொண்டு  பாலுவின் காலை அட்டன்  செய்தான் சேவியர்...

ஹலோ...

ஜி எப்படி இருக்கிங்க...??

நல்லா இருக்கேன்.. பாலு... எங்கே  இருக்கிங்க...??

உங்க ஆபிஸ்க்கு கீழதான்...

ஆச்சர்யமா இருக்கு... ஒன்றரை வருஷம் கழிச்சி..  நம்ம ஆபிசுக்கு  வழி எல்லாம் உனக்கு தெரியுதா? தோ கீழ வரேன்...

ஜி  ஒரு நிமிஷம் ஒரு சின்ன உதவி... வீட்டுல இருந்து வரும் போது  அவசரத்துல பர்சை மறந்து வச்சிட்டு வந்துட்டேன்...டிபன்  சாப்பிட்டு விட்டு பர்சை பார்க்கறேன் இல்லை...பிளிஸ் வரும் போது உங்க  பர்சை எடுத்தக்கிட்டு வாங்க...

 பாலுவை பார்த்து சேவியர் கை கொடுத்தார்.. பாலு சாப்பிட்ட டிபனுக்கு பைசா செட்டில் செய்தார்... 

சாப்பிட்டவுன் தம் அடிக்கும்  பழக்கம் பாலுவுக்கு  உண்டு என்பது தெரியும்... 

ஒரு தம்மும் ஒரு ரூபாய் நீலக்கலர் நிஜாம் பாக்கும் சொன்னார்...

 நேற்று கூட  உங்களை பத்திதான் பேசினேன். நான் எப்ப சொன்னாலும் டக்குன்னு.........

பாலு முடிப்பதற்குள் சேவியர் டக்குன்னு   சொன்னார்
கொஞ்சம் மூடுறியா ...........................

(( ஒரு வருடத்துக்கு பிறகு... பாரில்  எடிட்டர் நண்பர் பாரில் சந்திந்தேன்...  அவருடன்  பேசிய சம்பாஷனைகளின் ஒரு பகுதிதான் இந்த சின்ன சிறுகதை. ))


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
18/09/2014




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. இந்த “எடிட்டர்” - ங்களே இப்படித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க...

    ReplyDelete
  2. கதை மிகவும் அருமை...
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner