இன்று எழுத்தாளர் பாலகுமாரனுக்கு பிறந்தநாள்.



இன்று எழுத்தாளர் பாலகுமாரனுக்கு பிறந்தநாள்..... உங்கள்  முன் நான் மதிக்கப்படும்  ஆளாய் இருக்க நேரடி காரணகர்த்தா ஐயா பாலகுமாரன்தான்...






1994லுல.. சென்னை  காந்தி சிலைக்கு பின்னாடி இருக்கற சாஹர் விஹார்  ஓட்டல்லல சர்வர் வேலை பார்த்தவன்க நான்... சென்னை நான் ஒன்னுமில்லைன்னு  என்னை ஏமாத்தின   நேரம். அது ..

 ஜென்டில்மேனுக்கு அப்புறம் காதலன் படத்துக்கு டிஸ்கஷனுக்கு பாலகுமாரனும்  இயக்குனர் ஷங்கரும்  பேசிக்கிட்டு நான் வேலை  பார்த்த அதே  சாஹர் விஹார் ஓட்டலுக்கு வராங்க...  பாவ் பஜ்ஜி  ஆர்டர் செஞ்சாங்க... உடனே பாலகுமாரன்கிட்ட கையெயழுத்து வாங்கினேன்...  வேற எதுவும் பேசலை.

98 இல் போட்டோ வீடியோ வால்பேப்பர்ன்னு கலந்துக்கட்டி  அடிக்க... குடும்ப  சூழல் காரணமாக  ஒரு வருஷத்துக்கு ஆட்டோ ஒட்டினேன்.... அப்ப என் பொண்டாட்டி பிளஸ் டூ படிக்கறா....
உன் கூட  சேர்ந்த வாழனும்ன்னு சொன்னா... ச்சை இது  ஈர்ப்பு மட்டும்தான் காதல் இல்லைன்னு  சொன்னேன்....


உனக்கு எனக்கும் ஏழு வயசு வித்தியாசம்  இது சரிப்பாடதுன்னு சொல்லிட்டேன்... ஆனாலும் மனசுக்கு ரொம்ப நெருக்கமான பொண்ணாச்சே... இருந்தாலும் நமக்கு இருக்கும் கமிட்மென்ட்டுக்கு இது சரிபட்டு வராதுன்னு விட்டுட்டேன்... திரும்ப திரும்ப என் வழியில்  வந்த போது...

முன்று வருஷம்... பார்ப்போம் அதுக்கு அப்புறமும் புடிச்சி இருந்தா... பார்ப்போம்ன்னு சொன்னேன்..

 மூன்று வருஷம் கழிச்சி அதே போல சொன்னா.. நீதான் எனக்கு வேணும்ன்னு....

ஓம்மால இதுக்கு அப்புறம்  மனசுக்கு  நெருக்கமான இந்த பொண்ணை விடக்கூடாதுன்னு இருக்க பற்றிக்கிட்டேன்....

 பத்துவருஷம் காத்திருந்து திருமணம் செஞ்சிக்கிட்டோம்... என் கடமைகள் ஒரளவுக்கு முடியும் வரை எனக்காக காத்து இருந்த பெண்...

 எவ்வளவோ சண்டைகள் ,சச்சரவுகள், அதையும்  மீறி நிக்க... பாலகுமாரன் எழுத்துகள்தான் எனக்கு கத்துக்கொடுத்துச்சி.. 

விட்டுக்கொடுத்தல் பரஸ்புரிதல் அப்படின்னற வார்த்தைக்கு அர்த்த்தை தலையில கொட்டி தன் எழுத்து மூலம் சொல்லிக்கொடுத்தவர் பாலகுமாரன்தான்...

தமிழ் நாட்டுல இந்த ஆளு எழுத்தாலதான் ஒரு மனுஷனா  நான் நின்னேன்னு யார் பேரையாவது சொல்ல சொல்லுங்க பார்ப்போம்....
100 பேர் தேர்ரது கஷ்டம்...

 ஆனா பாலகுமாரானின் எழுத்தால்  நான்   உருப்பட்டேன்னு  சொல்லி லட்சம் பேர்  கியூவுல வந்து நிற்பான்...

 காட்டுப்பய சார் நான்... தாட் பூட் தஞ்சா ஊர்தான்... அதுங்க பக்கமே போகமாட்டேன்...
பொம்பளைங்ககிட்ட எப்படி தன்மையா நடந்துக்கனும்ன்னு சொல்லிக்கொடுத்தது அந்த ஆளுதான்னு  பெருமையா சொல்லுவேன்...

இன்னைக்கு எழுதற பாதி பேருக்கு  சுஜாதாவும் பாலகுமாரனும்தான் ஆசான்... அதை வெளியே சொல்லிக்க  நிறைய பேருக்கு ஈகோ தடுக்குது...

 நான் சுயம்பு புடுங்கி.....  தனா வளர்ந்த காட்டுமரம்ன்னு காலரை  தூக்கி விட்டு சொல்லிக்க நிறைய பேருக்கு பெருமை.. 
இருந்துட்டுபோவட்டும்..  அது அவுங்க இஷ்டம்...

ஆனா பாலகுமாரன் வேஸ்ட்டுன்னு  சொல்லிக்க  ஒரு கூட்டமே அலையுது... அதுக்கு காரணம் உன்னை  நான் அவமானப்படுத்திட்டேன் நான் பெரிய ஆள் பாருன்னு சொல்லிக்கறதுல  ஒரு ஆசை...

 நிறைய காதல்கள் என்னிடத்தில் கடந்து சென்றாலும் இன்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் காரணமாக அவைகளை நான் நம்பியதில்லை...

உன்னை  ஒரு பொண்ணு விரும்பறான்னா.. உங்கிட்ட ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்குன்னுதானே அர்த்தம்ன்னு காதலன் டயலாக்தான் என்னை தெளிய வச்சிச்சி..

 வெற்றி பெற வேண்டும் என்று  நினைப்பவன்.. கர்பவதி தன் வயிற்றின் மீது எவ்வளவு கவனத்தோட இருப்பாளோ.. அது போல கவனமா வெற்றி மீது குறியா இருக்கனும்ன்னு  எனக்கு வெறி ஏத்தி சொல்லிக்கொடுத்தவன் அவன்தான்யா..

 எங்க ஊர்ல பத்தோட பதினோன்னா நானும் கொலுத்து வேலைக்கோ.. அல்லது  ஆசாரி வேலைக்கு  போயி வயித்து பொழப்பை பார்த்து இருப்பேன்.... ஆனா நான் சராசரியா எல்லார் போல  இருக்க கூடாது  நாலு பேர் மத்தியில  நம்மள அடையாளப்படுத்திக்கனும்ன்னு  தன் கதைகள் கட்டுரைகள் எழுத்துக்கள்  மூலம்  வெறி ஏற்றிக்கற்றுக்கொடுத்தது.... அந்த ஆளுதான்...

ஆட்டோ ஓட்டுனாரா இருக்காமா... நிறைய வளர்ந்து அடிபட்டு உதை பட்டு மிதி பட்டு     தனியார் தொலைகாட்சியில  ஸ்கிரிப்ட் ரைட்டர், புரோகிராம் புரொட்யூசர்,  சப் எடிட்டர்ன்னு படிப்படியா  வளர அவருடைய எழுத்துகள்தான் மறைமுகாரணம்...

2011 ஆம் ஆண்டு  அவர் வீட்டுக்கே போய் அவர் பிறந்தநாள் அன்னைக்கு போட்டோ எடுத்து கொடுத்துட்டு வந்தது... எனக்கே பெரிய  மலைப்புதான்...

 அதுக்கு அவருடைய உதவியாளர் ஜெகன் அவர்களால் அது சாத்தியம் ஆயிற்று...

 அவர் ஆன்மீகம் பக்கம் போனார்... நான் அவரை விட்டு  விலகினேன்.. ஆனால் ஆரம்பகால எழுத்துக்களில்  என்னை வார்த்து எடுத்தது... கற்றுக்கொடுத்தது பாலகுமாரன் எழுத்துகள்தான்..

 அவரு  சிலாகிச்ச அதே மயிலையில்தான் வாசம்...

மயிலைக்கு வந்த உடனே கபாலிஸ்வரர் கோவிலுக்கு போனேன்... அங்கே  முதல்  நாளே அவரை கோவிலில் குடும்பத்தோடு பார்த்தேன் ஆசி வாங்கினேன்....

யாழினி ஸ்கூலுக்கு எல்லா எடத்திலேயும் அலஞ்சேன்... அவரு புள்ளைங்க படிச்ச பள்ளியில நண்பி  அருணா  மூலமா ரொம்ப இலகுவா  இடம் கெடச்சது...

 அதிக அளவு பழக்கம் இல்லாட்டியும் ஏதோ ஒரு பந்தம் இருக்கத்தான் செய்யுது.. ஒரு எழுத்தாளனுக்கும்  ஒரு வாசகனுக்கும் அது போதும்.

  இதை என்னைக்கு  வேண்டுமானலும்  சொல்லுவேன்.. உலகத்தை  கற்றுக்கொடுத்தது... சுஜாதா... வாழ்கையை கற்றுக்கொடுத்தது பாலகுமாரன்.

 தன் எழுத்துக்களால் லட்சோப  லட்ச  இளைஞர்களை நல்வழிப்படுத்திய  எழுத்தாளர் பாலகுமாரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

உங்கள் ஆசிகளுடன்

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

14 comments:

  1. உண்மையை கட்டுரை பிரதிபலிக்கிறது. பாலகுமாரனால்தான் நான் மென்மையானேன். பெண்மையை உணர்ந்தேன். அதனால் ஒரு இனிய ஸ்நேகிதியையும் பெற்றேன். உங்கள் கட்டுரையால் மறக்க முடியாத நிகழ்வுகள் மீண்டும் மனதில் நிழலாடுகிறது.

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு.. ஜாக்கி..

    ReplyDelete
  3. உங்களின் இந்தப் பதிவை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன் சேகர். எனக்கும் அவர் அவ்விதமே.

    ReplyDelete
  4. "பாலகுமாரானின் எழுத்தால் நான் உருப்பட்டேன்னு சொல்லி லட்சம் பேர் கியூவுல வந்து நிற்பான்..."
    அந்த லட்சம் பேரில் நானும் ஒருத்தன்.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் பாலகுமாரன் சார்
    பதிவுக்கு நன்றி ஜாக்கி

    ReplyDelete
  5. அந்த லட்சத்தில் நானும் ஒருவன். சிங்கையில் ரயில் பயணத்தின் போது இவர் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தவுடன் உலகம் மறக்கும் இன்னும் மறந்துவிடுவேனோ என்று 3 ஸ்டேசனுக்கு முன்பே படிப்பதை நிறுத்திவிடுவேன்.

    ReplyDelete
  6. I also having same feeling regarding writer balakumaran ...

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு...
    ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. உங்கள் முன் நான் மதிக்கப்படும் ஆளாய் இருக்க நேரடி காரணகர்த்தா ஐயா பாலகுமாரன்தான்...
    அற்புதமான குரு வணக்கம் .
    அவர் ஆன்மீகம் பக்கம் போனார்... நான் அவரை விட்டு விலகினேன்..
    ஆனால் அவரோடு அங்கும் நாங்கள் கை கோர்த்தோம் .அவரோடு நாங்களும் ராம் சுரத் குமார் பாதங்களில் சரணடைந்தோம் .என் எழுத்துகளில் பாலாச்சார் வரவில்லை எனில் நான் எழுதவில்லை என்றே அர்த்தம் .எனவே நண்பர் ஜாக்கி அவர்களே நாம் இருவரும் ஒரே கப்பலின் பயனிகள்.ஆனால் நீங்கள் அற்புதமான பதிவாளி நான் உங்களை வாசிக்கும் படிப்பாளி .

    ReplyDelete
  9. பாலகுமாரன் சாரை புத்தக கண்காட்சியில் பார்த்து பேசும் போது அழுகையே வந்திருக்கிறது... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

    ReplyDelete
  10. Hi......a tribute to ur Guru... U had the fire to climb up the ladder....u found Balakumaran's writings as a grip..and more than that u are a good man and committed.hats off to u.....

    ReplyDelete
  11. பாலகுமாரன் மீதான தங்கள் அபிமானத்தை அழகாக வெளிப் படுத்தி இருக்கிறீர்கள் . பள்ளி வயதில் அவருடைய படைப்புகளை படித்திருந்தாலும் மறு வாசிப்பின்போது அதன் மீதான மதிப்பு இன்னும் உயர்ந்தது. அவரது படைப்புகளில் இடம்பெறும் நெகிழ்ச்சியான உரையாடல்களும்,இயல்பைப் பிரதிபலிக்கும் சூழலும், வாழ்க்கையின் சூட்சுமங்களை உணர்த்தும் விதமும் ஆயிரக் கணக்கானவர்களை சுண்டி இழுத்தன.

    ReplyDelete
  12. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner