(untraceable) ஹிட்ஸ் வேண்டும் என்று அலைபவரா நீங்கள்???

தமிழ் பதிவுலகில் அதிகமான ஹீட்ஸ்களை பெரும் பதிவர் லக்கி லுக். அவர் வலைதளத்தை நிறைய பேர் படிக்கின்றனர். அதே போல் யூடியுப் அதிகம்.நமிதா என்று டைப் அடித்து குகூள் செர்ச்சில் பார்த்தவர்கள் ஏராளம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கின்றது, இது போல் வலையுலகில் ஆர்வமாக நாம் பலதை பார்க்கின்றோம்,படிக்கின்றோம்....

ஒருவன் கடத்தி அவனை கட்டி போட்டு அவன் உடலில் விஷம் எற்றி கொள்கிறான் ஒரு சைகோ அதுவும் எப்படி ? அந்த விஷம் மெல்ல மெல்ல அவன் உடலில் செல்ல அவன் பயண்படுததும் முறைதான் மற்ற கொலைகாரர்களிடம் இருந்து அவனை வித்யாசப்படுத்துகின்றது.


விஷம் உடனே உடலில் ஏற்றாமல் அதனை கில்மி நைள என்ற வெப்சைட்டை இனைத்து வெப் கேமராவில் உலகம் புராவும் அவன் கட்டி போட்டு இருக்கும் விடியோவை இனைத்து , அதாவது அந்த வெப்சைட்டை கிளிக்கினாலே அவன் உடலில் மெல்ல மெல்ல விஷம் ஏறுவது போல் செய்து இருப்பான் அந்த கொலைக்காரன்...


அதாவது மக்களின் ஆர்வமாக அந்த சைட்டை பார்க்க பார்க்க அவன் உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏறி அவன் இறப்பதை உலகம் முழுவதும் ஆவலாக பார்ப்பார்கள். இதுதான் கான்செப்ட்
சைபர் கிரைம் தலமை அதிகாரியாக பணிபுரியும் லேன்(ஜெனிபர் மார்ஷ்) இந்த தொடர் கொலைகள் பெரும் தலைவலியை ஏற்படுத்து்கின்றன.. அவன் ஒரே ஐபி அட்ரஸ்இல் இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கின்றான். அடுத்த கொலை இதே போல் கொடுரமாக ஆரம்பிக்க அந்த வலைதளத்தை யாரும் பார்க்காதீர்கள் என்றால், உடனே மக்கள் ஆர்வமாக அந்த வலைதளத்தை பார்கக வேறு ஒரு முறையில் கொடுரமாக அடுத்த உயிர் போகின்றது....
அதாவது மக்ளின் ஆர்வம் கொலையாளிக்கு பிளஸ் அகப்பட்டவனுக்கு ரோதனை இதுதான் கான்செப்ட் .

அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க பெரும் பிரயாத்னம் பட வேண்டி இக்கின்றது. இப்போது திரிஷா விடியோ ஒரு வெப்சைட்டில் இருக்கின்றது என்றால் உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் அதனை பார்க்கும் போது எவ்வளவு ஹீட்ஸ்கள் கிடைக்கும் அதுதான் கொலையாளிக்கும் வசதியானது மக்களின் ஆர்வம் அடங்காத ஆர்வம் பலரின் உயிர் இழப்புக்கு காரணமாக இருக்கின்றது.
அந்த சைக்கோ கொலைக்காரன் ஏன் கொலை செய்கின்றான்? அவனை எப்படி எப் .பி. ஐ சற்றி வலைக்கின்றார்கள் என்பதை பதட்டத்துடன் வெண் திரையில் கான்க...


இந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. நல்ல திரில்லர்படம் பார்க்க ஆவலாய் இருப்பவர்களுக்குநான் இந்த படத்தை பரிந்துரைக்கின்றேன்.
வலையுலகில் பயணிக்கும் மக்களின் மனோபாவம் எந்தளவுக்கு கீழ்தரமானது என்பதை கிளைமாக்சில் ஒரு வரியில் சொல்லி இருக்கின்றார் இதன் இயக்குநர்Gregory Hoblit 2008ல் இந்த படம் வெளியானது...


அன்புடன்/ஜாக்கிசேகர்

13 comments:

  1. why don't you tell the full theam of that story.suspence?

    ReplyDelete
  2. முழுக்கதையும் சொல்வது நல்ல விமர்சனம் அல்ல... அது ஒரு படைப்பாளியை அவமானப்படுத்தும் செயல். ஒரு விமர்சனம் அந்த படத்தை தேடி பார்ப்பதில் இருக்க வேண்டும். முழுக்கதையையும் சொல்லிவிட்டாள் படம் பார்க்கும் போது எந்த உணர்வும் இருக்காது என்பதால்,

    வலைதளம் பக்கம் வந்து பல நாள் ஆகின்றது என்று எண்ணுகிறேன். ஏதும் எழுதவும் இல்லை???

    ReplyDelete
  3. போன மாதம் இதே போல் ஒரு படம் பார்த்தேன்!

    ஆறு கொலை குற்றவாளிகள் ஒரு தீவுக்கு அழைத்துவரப்பட்டு ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும், கடைசியில் தப்பிப்பவர்களுக்கு விடுதலை!

    இவை அனைத்தும் லைவாக நெட்டில்!
    பணம் கட்டி பார்க்கலாம்!

    நல்ல ஆக்‌ஷன் படம் அது! வெரஸ்டிலிங் வீரர் நாயகனாக நடித்திருப்பார்!

    ReplyDelete
  4. இந்த படத்த கட்டாயம் பாக்கணும்..

    நாம இப்படி எத்தன பேத்த கொன்னுகிட்டு இருக்கமோ?..

    ;-)

    ReplyDelete
  5. படத்தை ஏற்கனவே பார்த்துடேன் பாஸ்!
    விமர்சனம் நல்லாயிருக்கு!

    இந்த படம் ஹிட் ஆகாத படம், ஆனா நல்லாயிருக்கும்!
    இதே போல் படம் வேண்டும் என்றால், நான் பரிந்துரைப்பது...
    Hackers (1995), The Net (1995), Takedown (2000)

    ReplyDelete
  6. வால் பையன் அந்த படம் பேரு "The Condemned".

    Stone Cold - Steve Austin நடித்திருப்பார்.

    ReplyDelete
  7. வால் அந்த படத்து டிவிடி என்கிட்ட இருக்கு ஆனா படம் கொஞ்சம்தன் பார்த்தேன்...

    ReplyDelete
  8. இந்த படத்த கட்டாயம் பாக்கணும்..

    நாம இப்படி எத்தன பேத்த கொன்னுகிட்டு இருக்கமோ?..

    ;-)//

    தீப்ட்டி அப்படி யோசி்ச்சாலே பயமா இருக்கு

    ReplyDelete
  9. படத்தை ஏற்கனவே பார்த்துடேன் பாஸ்!
    விமர்சனம் நல்லாயிருக்கு!

    இந்த படம் ஹிட் ஆகாத படம், ஆனா நல்லாயிருக்கும்!
    இதே போல் படம் வேண்டும் என்றால், நான் பரிந்துரைப்பது...
    Hackers (1995), The Net (1995), Takedown (2000)//


    நன்றி கலை நீங்கள் சொன்ன படங்கள் பார்க்க முயற்ச்சிக்கிறேன்

    ReplyDelete
  10. நன்றி நந்தா தங்கள் தகவலுக்கு

    ReplyDelete
  11. I read one story written by dual writers Suba.. The story theme is same as below.

    //போன மாதம் இதே போல் ஒரு படம் பார்த்தேன்!

    ஆறு கொலை குற்றவாளிகள் ஒரு தீவுக்கு அழைத்துவரப்பட்டு ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும், கடைசியில் தப்பிப்பவர்களுக்கு விடுதலை!

    இவை அனைத்தும் லைவாக நெட்டில்!
    பணம் கட்டி பார்க்கலாம்!

    நல்ல ஆக்‌ஷன் படம் அது! வெரஸ்டிலிங் வீரர் நாயகனாக நடித்திருப்பார்!

    ReplyDelete
  12. நெட் பாக்கிறதுல இம்புட்டு இருக்கா??

    படத்திற்கான விமர்சனம்/ முன் சுருக்கம் அருமை.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner