விஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி???
இது சிரிக்க மட்டுமே......
ஹாலிவுட் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதுவும் சென்னையில் படம் தயாரிக்க விரும்பியது...
பொதுவாக ஹாலிவுட்காரர்கள் கதாபாத்திரங்கள் மூக்கை சிந்துவதில் இருந்து முகம் துடைப்பது வரை, எல்லாவற்றையும் ரைட்டிங்கில் அதாவது ஸ்ரிரிப்டில் இருக்க வேண்டும் என்று ஆசைபடுபவர்கள்....
அது நம் நாட்டில் வேலைக்கு ஆக வில்லை... அதனால் அவர்கள் வீம்புக்கு தமிழ் நாட்டில் ஒரு படம் எடுக்க அசைபட்டார்கள்....
சரி இந்தியாவில் ஏற்க்கனவே ஷுட்டிங் எடுத்த அனுபவம் கொண்ட ஸ்லம் டாக் இயக்குனர் டேனிபாயலை இயக்குநராக புக் செய்யதார்கள். வார்னர் நிறுவனம்,இயக்குநர் டேனியிடம்,
“ செலவை பற்றி கவலை படவேண்டாம், படம் மிக மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும்”
என்று இயக்குநரை வேண்டிக்கொண்டார்கள்....
அவர் இசைக்கு நம்ம இசைப்புயலை புக் செய்து கொண்டார்.....நம்ம ஜாக்கிசான்,ஆர்னால்டு,டாம்குரூஸ் ஹீரோக்களாகவும், ஏன்ஜலினா ஜுலியை ஹீரோயினாக புக் செய்து ஏவிஎம் ஸ்டுடியோ பிள்ளையார்கோவில்ல பூஜை போடாம, நம்ம தமிழ் நாட்டுல ஷுட்டிங் ஆரம்பிச்சு போயிகிட்டே இருந்துச்சு.....
இது ஒரு ஆக்ஷன் படம்....
நம்ம கோயம்பேடு பஸ்டாண்டு பக்கத்துல அதாவது பழைய விஜயகாந்த் கல்யாண மண்டபமா இருந்து, இப்போது அவரோட கட்சி ஆபிசா மாறிட்ட பில்டிங்கோட பக்கத்து ரோட்ல சேசிங் சீன் எடுத்துக்கிட்டு இருந்தாங்க...
அங்க வந்த நம்ம போக்குவரத்துதுறை அதிகாரிகள் ரிஜிஸ்டர் இல்லாம வச்சி இருந்த 4 கேரவேனையும் ஜப்தி பண்ணி எடுத்துக்கிட்ட போயிட்டாங்க...
அர்னால்டு,டாம்,ஜாக்கி, ஜுலி எல்லாம் நடு ரோட்ல நிக்க, அதை பெரிய அவமானமா எடுத்துக்கிட்ட ஜுலி தேம்பி தேம்பி அழ ஆராம்பிச்சட்டாங்க...அப்ப நம்ம ஊரு புரடெக்ஷன் மேனேஜர் அந்த டீம்ல இருக்க பக்கத்துல விஜயகாந்த கட்சி ஆபிஸ்ல இருக்கறதை கேள்வி பட்டு,
“சார் நம்ம ஊருக்கு வந்த ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் நடு ரோட்டல அனாதை பசங்களா நிக்கறாங்க, உங்க ஆபிஸ்ல ரூம்களை கொஞ்சம் நேரத்துக்கு ஒதுக்க முடியுமா? ” என்று கேட்க, விஜயகாந்த் தலை ஆட்ட ,எல்லா நடிகர்களும் விஜயகாந்த் ஆபிஸ்ல, அவரு இருக்கற ஏசி ரூமுக்கு வந்துட்டாங்க....
இருந்தும் ஜுலி பாப்பா மட்டும அந்த அவமானத்தை நினைச்சு தேம்பி தேம்பி அழுதுச்சு.....
இயக்குநர் டேனிபாயல் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் முடியாம போக, இன்னைக்கு ஷுட்டிங் நடக்குமா? என்ற கவலையில தலையில கை வச்சிக்கிட்டு எழுந்து வெளிய போய் ஒரு தம்ம பத்த வச்சிகிட்டு செம டென்ஷனா இருந்தார்....
இவரு டென்ஷனை பார்த்த ஜாக்கி,அர்னால்டு, டாம் எல்லாரும் ஜுலிகிட்ட போக, அங்க விஜயகாந்த், எப்படி ஜுலி புள்ளையை சமாதானப்டுத்துவது என்று புரியாமல் தவிச்சிகிட்டு,அந்த அறையில குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருந்தார்....
ஜாக்கி ஜுலி கிட்ட போய், hey, why are you crying? என்றார் அதன் பிறகு டாம் அவள் கிட்டே வந்து , ஜுலி, what happen to you? என்ற கேட்க அப்போதும் ஜுலி ஏதும் பேசாமல் குலுங்கி குலுங்கி அழ, வெறுத்து போன அர்னால்டு சற்றே கோபமாக ஜுலி கிட்டே வந்து ,why are you weeping jolie? என்று கேட்க, இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த நம்ம விஜயகாந்த்....
“டேய், நிறுத்தங்கடா... ஆள் ஆளுக்கு அந்த புள்ள கிட்ட எதை எதையோ கேட்டிங்கலே... அந்த புள்ள எதுக்கு அழுவதுன்னு எவனாவது கேட்டிங்கலாடா???”
என்று விஜயகாந்த் கேட்க, தசவதாரம் சாங் ரிலீஸ்க்கு சென்னை வந்து ஒரளவு தமிழ் கற்றுக்கொண்ட நம்ம தலைவர் ஜாக்கி, விஜயகாந்த் கேட்ட கேள்வியை ஜீரனிக்காமல் மயக்கமானார்
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Subscribe to:
Post Comments (Atom)
ஹா ஹா ஹா
ReplyDeleteஏண்ணே இந்த கொலவெறி?
ReplyDeleteஹா ஹா ஹா
ஹி..ஹி.. சூப்பரு.. உங்க ஜோக்ஸ் எல்லாம் வித்தியாசமாவும் அதே சமயம் சிரிக்க வெக்கிற மாதிரியும் இருக்கு.. தொடருங்கள் ஜாக்கி..
ReplyDeleteநன்றி ஜமால் சிரிப்புக்கு
ReplyDeleteஏண்ணே இந்த கொலவெறி?
ReplyDeleteஹா ஹா ஹா//
என்ன பன்னறது கலை ஒரு சேஞ்சுக்குதான் இப்படி எழுதறது
ஹி..ஹி.. சூப்பரு.. உங்க ஜோக்ஸ் எல்லாம் வித்தியாசமாவும் அதே சமயம் சிரிக்க வெக்கிற மாதிரியும் இருக்கு.. தொடருங்கள் ஜாக்கி..//
ReplyDeleteநன்றி வெண்பூ சதாரணமாக வந்த எஸ்எம் எஸ்தான் அதை இப்படிதான் என்னால் எழுத முடிகின்றது...
பாத்து அண்ணா, இது எந்த விஜயகாந்த் ரசிகர் கண்ணுலையும் படாம பாத்துக்குங்கோ(ஆமா...அப்படி ரசிகர் யாருச்சு இருக்காங்களா என்ன? ஹிஹி...)
ReplyDelete:))))))))))))
ReplyDelete:-))))))))))))))))))
ReplyDeleteபாத்து ஆட்டோ அனுப்புவாங்க இல்லன்னா வீட்டுல கல் எறியப் போறாங்க
ReplyDeleteஅண்ணாத்த... உங்களை போன பதிவர் சந்திப்புல பார்த்தேன்.. அதிகம் பேசலை... நீங்க போரூரா? நானும் அதே ஏரியா தான். போட்டோக்ராஃபி மேல ஒரு ஆசை வந்து இப்போ ஒரு கேமிரா வாங்க பிரியப்படுறேன்... உதவ முடியுமா? எனக்கு ஒரு ஈ-மெயில் அடிங்க சகா.. என் ப்ரொஃபைல்ல இருக்கு... உங்க மின்னஞ்சல் முகவரி பொதுவுல இல்லை... உதவ முடிந்தால் சொல்லுங்க...
ReplyDeleteஎன்ன ஒரு கொல வெறி..... முடியல... சார் முடியல.. அம்புட்டு நல்லவரா அவரு..?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஜாலியாக இருக்கு உங்கள் மாற்றத்தை பார்க்கும் போது.
ReplyDeleteகலக்குங்க.
:))............சூப்பர்..
ReplyDeleteசிரிக்க முடியல ....
ReplyDeleteநல்ல காமெடி
அண்ணே... ஜூப்பரன்னே.......
ReplyDeleteஅவரு, அவரு ஸ்டைலிலே " ஐ வாண்டு மேரி யூ" ன்னு சொல்லி இருந்தா (ஏன்னா அவருக்கு தான் அதுக்கே அர்த்தம் தெரியாதே..!!! [விக்கிரமனுக்கு நன்றி] ) அந்த அம்மாவே மயங்கி விழுந்து மண்டைய போட்டிருக்கும்.
பாத்து அண்ணா, இது எந்த விஜயகாந்த் ரசிகர் கண்ணுலையும் படாம பாத்துக்குங்கோ(ஆமா...அப்படி ரசிகர் யாருச்சு இருக்காங்களா என்ன? ஹிஹி...)//
ReplyDeleteநன்றி தமிழ்
:))))))))))))//
ReplyDeleteநன்றி மங்களுர் சிவா
நன்றி சின்னபையன் ஷபி
ReplyDeleteஅண்ணாத்த... உங்களை போன பதிவர் சந்திப்புல பார்த்தேன்.. அதிகம் பேசலை... நீங்க போரூரா? நானும் அதே ஏரியா தான். போட்டோக்ராஃபி மேல ஒரு ஆசை வந்து இப்போ ஒரு கேமிரா வாங்க பிரியப்படுறேன்... உதவ முடியுமா? எனக்கு ஒரு ஈ-மெயில் அடிங்க சகா.. என் ப்ரொஃபைல்ல இருக்கு... உங்க மின்னஞ்சல் முகவரி பொதுவுல இல்லை... உதவ முடிந்தால் சொல்லுங்க//
ReplyDeleteகண்டிப்பாக உதவுகின்றேன்
என்ன ஒரு கொல வெறி..... முடியல... சார் முடியல.. அம்புட்டு நல்லவரா அவரு..//
ReplyDeleteஆமாம் தலைவரே நன்றி பேரரசன்
நன்றி ஸ்டார்ஜன் ஜெட்லி
ReplyDeleteஅவரு, அவரு ஸ்டைலிலே " ஐ வாண்டு மேரி யூ" ன்னு சொல்லி இருந்தா (ஏன்னா அவருக்கு தான் அதுக்கே அர்த்தம் தெரியாதே..!!! [விக்கிரமனுக்கு நன்றி] ) அந்த அம்மாவே மயங்கி விழுந்து மண்டைய போட்டிருக்கும்.//
ReplyDeleteநன்றி நைனா ஹா ஹா
கேப்டன் கேப்டன் தான்!
ReplyDelete"அரசியல் ஜோக்கர் " சமீபத்துல NDTV க்கு குடுத்த பேட்டிய பாருங்க .. உடம்புல இருக்குற எல்ல பாகமும் சிரிக்கும் ... குறிப்பா பின் பக்கம்
ReplyDeleteஇது சிரிக்க மட்டுமே.....ன்னு போட்டுட்டு, ஒரு உண்மைக் கதையை எழுதினா, சிரிக்க முடியுமா, சொல்லுங்க!
ReplyDelete