நான் இதுவரை சென்னையில் நடந்த ஒரே ஒரு உலகபடவிழாவை தவிர்த்து எல்லா படவிழாக்களையும் தவறவிடாமல் பார்த்து இருக்கி்றேன்....அப்படி கடந்த வருடம் நடைபெற்ற உலக படவிழாவில் நான் அதிர்ச்சியானது என்ன வென்றால் ஒர கொரிய படத்தை பார்க்க நான் அரங்கில் உட்கார்ந்து இருக்க நிறைய பேர் இடம் இல்லாமல் அலைந்த கொண்டு இருந்ததார்கள், பொதுவாக உலக படவிழாவில் ஒரு அரங்கம் நிறைந்நது இருந்தால் அதில் ஏதோ பிட்டு சமாச்சாரம் என்ற நினைத்தேன்...
படம் போட்டார்கள், டைட்டில் ஓடியது.
ஆனால் இயக்கம் கி்ம் கி டுக் என்ற பெயர் போட்ட போது அரங்கம் கைதட்டலில் சப்உபர் போல் அதிர்ந்தது. சட்டென நான் முடிவை மாற்றிக்கொண்டேன். இது வேறு ஏதோ படம் என்று ... அந்த படத்தின் பெயர் இப்போது பதிவர்கள் ஏற்பாடு செய்த போது திரையிட்ட, ‘‘சம்மர் பால் வின்டர்”. என்ற திரைப்படம் அதன் பிறகு கிம் படங்கள் நிறைய பார்த்தாகி விட்டது...
அதில் சமீபத்தில் பார்த்த படம் ...(smaritan girl)
கிம் கதாபாத்திரங்கள் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களின் துயரங்களை சொல்வதாகவே இருக்கும். அவரை பற்றிய விரிவான பார்வை அடுத்த பதிவில் தனிப்பதிவாகவே போடலாம் என்று இருக்கி்றேன்...
ஒரு போலிஸ்கார தகப்பன் தன் ஒரே மகளை மிக ஆசையாக வளர்க்கின்றான், அந்த பெண்ணை அப்படி பார்த்துக்கொள்கிறான்,காரில் தினமும் பள்ளியில் வி்ட்டு விட்டு அலுவலகம் செல்வான்... அப்படி செல்கையில் ஒரு நாள் அடந்த நகரத்தில் இருக்கும் ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கின்றாள் என்ற தகவல் வருகிறது.அப்போது இவன் அந்த கொலை நடந்த ஸ்தலத்துக்கு எதிர் அறையில் ஒருவனுடன் படுக்கையில் இருந்தால் எப்படி இருக்கும்? சரி அது முதலில் காதல் என்று என்னுகிறான், பிறகுதான் தன் பெண் விபச்சாரம் செய்கின்றாள் என்பதை அறிந்து துடிக்கின்றான். அதை விட அந்த பெண்ணும் அவள் நண்பியும் விபச்சாரம் எதற்க்கு செய்கின்றார்கள் என்ற கதை மிக சுவாரஸ்யம்...
அதன் பிறகு தன் மகளை அவன் தொடர்ந்து பாலோ செய்ய அவள் பலரிடம் செல்வதை பார்க்கின்றான், தன் பாசமிகு மகள் தன் கண்முன்னே சீர் அழிவதை எந்த தகப்பனால் பொறுத்துக்கொள்ள முடியும்..
அந்த பெண் விபச்சாரம் செய்வது தன் தந்தைக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கன்றாள். அவள் விபச்சாரத்தை நிறுத்தினாளா? அவள் விபச்சாரம் செய்வது அவள்தந்தைக்கு தெரியும் என்பது அவளுக்கு தெரியுமா?
மிகமுக்கியமான விஷயம் அவள் ஏன் விபச்சாரம் செய்கின்றாள்?? அதற்க்கான காரணம் என்ன? என்பதை எப்போதும் போல் வெண்திரையில் காண்க...
படத்தை பற்றிய சுவாரஸ்யங்கள் சில....
முதல்காட்சியில் பள்ளி சீருடையில் இருக்கும் பெண்கள் கேஷுவல் உடை மாற்றி விபச்சாரம் செய்ய போகும் காட்சி பகீர் ரகம்....
காம வெறிக்காக 15 வயது பருவ பெண்களை அனுபவிக்க துடிக்கும்,உயர்ந்த குடும்பத்தவன்,பிரம்மச்சாரி. குடும்பஸ்தன், என்று அனைத்துதரப்பு மக்களையும் காட்டி, இங்கு எவனும் யோக்கியன் இல்லை, அப்படி யோக்கியன் என்று ஒருவன் சமுகத்தில் இருந்தால் அவன் நன்றாக நடிக்கின்றான் என்பதை மிக அழகாக தனது திரைக்கதையில் சொல்லி இருப்பார் இயக்குநர் கிம்....
தன் 15 வயது மகளை வீட்டில் இருக்கு அதே வயது பெண்ணை விபச்சாரத்தில் சல்லாபிக்கும் நடுத்தர குடும்பத்தையும்,சமுகத்தில் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் இசையமைப்பான் வரை கிம் யாரையும் விட்டு வைக்கவில்லை...
எல்லா சமுகத்திலும் நட்புக்கான முக்கியத்துவம் இருக்கின்றது. அது எந்த நாட்டிலும், எந்த மதத்திலும் சாகாவரம் பெற்ற ஒன்று என்பதையும் இந்த மானுடம், நட்பு என்ற ஒன்றுக்காக எதையும் செய்ய துடிக்கும் என்பதையும் மிக அழகாக காட்சிகளாக்கி இருக்கின்றார் கிம்....
இந்த படம் பார்க்கும் போது சிலருக்க அயர்ச்சியை தரலாம், முடிவு உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் அதற்க்கு காரணம் படம் முடியும் போது நல்லவன், கெட்டவன் எல்லாம் ஒரே பிரேமில் நின்று சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து அதன் மேல் வணக்கம் போட்டு படம் பார்த்து வளர்ந்த சமுகம் நம்முடையது...
தனது சொந்த நாட்டு மக்களால் ரசிக்கப்படாத இதன் இயக்குனர் கிம் . இந்த படம் கொரியாவில் பெரிய அளவில் வரவேற்ப்பு பெற வில்லை...
பெர்லின் திரைப்பட விழாவில் இந்த படம் வெள்ளிக்கரடி விருதை தட்டிச்சென்றது...
Directed by Kim Ki-duk
Produced by Bae Jeong-min
Written by Kim Ki-duk
Starring Kwak Ji-min
Lee Eol
Han Yeo-reum
Distributed by Cineclick Asia
Tartan Video
Release date(s) 2004 (
Running time 97 min.
Language Korean
Budget $1,000,000 US
போஸ்டரில் கன்னியாஸ்திரி மாதிரியான எஃபெக்ட். வாவ்.. க்ளாஸ்... :-)
ReplyDeleteசரி ஒரு நாள் இந்த படத்தை பாப்போம்....
ReplyDeleteஅப்புறம்....... இப்ப ரெண்டு மூணு நாளா நடந்த சம்பவத்திற்கும் இந்த பதிவிற்கும் எதோ உள் குத்து இருக்கும் போலே இருக்கே...
(டேய்... மாப்பி டக்கு, என்ன நான் சொல்றது... சரிதானே..?)
ம்ம்.. நல்லாயிருங்க.
ReplyDelete:))
போஸ்டரில் கன்னியாஸ்திரி மாதிரியான எஃபெக்ட். வாவ்.. க்ளாஸ்... :-)-//
ReplyDeleteநன்றி லக்கி தங்கள் பாராட்டுக்கு
சரி ஒரு நாள் இந்த படத்தை பாப்போம்....
ReplyDeleteஅப்புறம்....... இப்ப ரெண்டு மூணு நாளா நடந்த சம்பவத்திற்கும் இந்த பதிவிற்கும் எதோ உள் குத்து இருக்கும் போலே இருக்கே...
(டேய்... மாப்பி டக்கு, என்ன நான் சொல்றது... சரிதானே..?)//
அப்படியா??????
ம்ம்.. நல்லாயிருங்க.
ReplyDelete:))//
நன்றி அகநாழிகை
DVD இங்க கிடைக்குதானு பாக்கணும்.
ReplyDeleteநல்ல அறிமுகம்
ReplyDeleteVD இங்க கிடைக்குதானு பாக்கணும்.--//
ReplyDeleteநன்றி மங்களுர் சிவா
நல்ல அறிமுகம்//
ReplyDeleteநன்றி முரளிக்கண்ணன்
ஜாக்கி,
ReplyDeleteசிறந்த அறிமுகம். அடுத்த திரையிடலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பு. தொடர்ந்து இத்தகைய அறிமுகம் தருவீர்களா?
ஸ்ரீ....
///தனது சொந்த நாட்டு மக்களால் ரசிக்கப்படாத இதன் இயக்குனர் கிம்///
ReplyDeleteஇங்க மட்டும் என்ன வாழுதாம். இங்க உள்ள இயக்குனர்கள் ஒரு வெளிநாட்டுப் படத்தின் கதை சொல்லும் பாணியைப் பின்பற்றினால், அந்தப் படத்தின் கதையை முழுமையாய் சுட்டு படம் எடுக்கிறார்கள் என்றும், நடிகர்கள் வெளிநாட்டு நடிகர்களைக் காப்பி பண்ணி நடிக்கிறார்கள் என்றும் குய்யோ முறையோ என்று கத்துகிறார்களே அதுக்கும் கொரிய மக்களுக்கும் என்ன வித்தியாசம். 'நாயகன்' கமல் மார்லன் பிராண்டோவின் மேனரிசங்களைக் காப்பி அடிக்கிறார் என்று கத்தும் நம்மவர்கள் ‘விருமாண்டியில்' ‘ஏண்டி செத்த நாயே.. என் தாயே' என்று அச்சு அசல் கிராமத்தானாக மாறிப் புலம்பும் கமலைப் பாராட்டி ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். இங்கே விமர்சனம் என்பது எப்போதும் எதிர்மறைக் கருத்துக்களைக் கூறுவதுதான் என்றாகிவிட்டது. எப்பவும் எங்களுக்கு வெள்ளைத் தோல்தான் பெரிது.
நல்ல பதிவு ஜாக்கி,படங்கள் அருமை
ReplyDeleteநன்றி பாஸ் , உடனே பார்த்துருவோம்..
ReplyDelete\\படம் முடியும் போது நல்லவன், கெட்டவன் எல்லாம் ஒரே பிரேமில் நின்று சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து அதன் மேல் வணக்கம் போட்டு படம் பார்த்து வளர்ந்த சமுகம் நம்முடையது...\\
ReplyDeleteஇது ரொம்ப நல்லா இருக்கு
ஜாக்கி,
ReplyDeleteசிறந்த அறிமுகம். அடுத்த திரையிடலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பு. தொடர்ந்து இத்தகைய அறிமுகம் தருவீர்களா?
ஸ்ரீ....//
கண்டிப்பாக தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இரு்க்கின்றேன்
எப்பவும் எங்களுக்கு வெள்ளைத் தோல்தான் பெரிது.//
ReplyDeleteஉங்கள் கோபம் நியாயமானதே குமாரசாமி
நல்ல பதிவு ஜாக்கி,படங்கள் அருமை//
ReplyDeleteநன்றி அக்னி
நன்றி பாஸ் , உடனே பார்த்துருவோம்..//
ReplyDeleteபாத்து விட்டு கருத்தை சொல்லுங்கள் சூரியன்
\படம் முடியும் போது நல்லவன், கெட்டவன் எல்லாம் ஒரே பிரேமில் நின்று சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து அதன் மேல் வணக்கம் போட்டு படம் பார்த்து வளர்ந்த சமுகம் நம்முடையது...\\
ReplyDeleteஇது ரொம்ப நல்லா இருக்கு//
நன்றி இதயம் பேசுகின்றது
படத்தின் அறிமுகத்துக்கு நன்றி ஜாக்கி :-) .. பிண்ணனி இசையாகட்டும்,எல்லா நிகழ்வுளையும் காட்சிகளாகே புரியவைப்பதாகட்டும்.. அந்த விதத்தில் படம் அட்டகாசம்..
ReplyDeleteஆனால் புரி்ய ேவண்டிய விஷயம் புரியலேேய :-(( , அதான் அந்த பொண்ணு ஏன் அப்படி பண்ணானு ?!