இந்த முறையும் பதிவர் சந்திப்பு சொன்ன நேரத்துக்கு துவங்காமல் சரியாக சொல்வது என்றால் 5•40க்கு பதிவர் சந்திப்பு வட்டம் தொடங்கியது...
இந்த முறை பேசும் போது சரியாக தலைப்பு இல்லாமல் என்ன பேசுவது என்று ஆள் ஆளுக்கு மண்டையை பிய்த்து கொண்டு இருந்த போது, எதிரில் அக்னிபார்வையும்,அதிஷாவும் உட்கார்ந்து இருந்தார்கள்....
நான் அதிஷாவிடம் கதை ரொம்ப நன்றாக இருப்பதாக சொல்ல... அப்போது பார்த்து அக்னி அதிஷா, இருவரும் ஈஷிக்கொண்டு உட்கார்ந்து இருக்க, பதிவர் வெண்பூ சின்னதாக கொடு காட்ட, அதிஷா அக்னிபார்வை இருவரையும் பதிவர்கள் ஓட்டு ஓட்டு என்று ஓட்டி விட்டார்கள்...
அதன் பிறகு சைதாப்பேட்டை சாந்தி மேட்டர் போஸ்டர் பற்றி கேபிள் சங்கர் கருத்து தெரிவிக்க அவரை எல்லோரும் ஓட்டினார்கள்... நான் முதன் முறையாக சமுகப்பொறுப்புடன் பேசும் கேபிளை பேசவிடுங்கள் என்று சொன்னேன்...அப்புறமும் அவரை ஓட்டிக்கொண்டுதான் இருந்தோம்....
தமிழ் ஸ்டுடியோ டாட்காம் சார்பாக சிறந்த பதிவராக தேர்ந்து எடுக்கபட்ட பதிவர் நர்சிமுக்கு, மூத்த பதிவர் டோண்டு கையால் பரிசை கொடுக்க சொன்னார் தண்டோரா....நடுவில் டீ விற்க்கும் பழனி என்பவர் டீ வேண்டுமா? என்று கேட்க நர்சிம் எல்லோருக்கும் கொடுக்க சொல்லி அதற்க்கான தொகையையும் அவரே கொடுத்தார்.... இதில் டெஸ்ட் பீசாக எனக்கு முதலில் டீ வழங்கப்பட்டு நான் குடித்த பிறகே அனைவரும் குடித்தனர்.....
பதிவர்களில் நேற்று நல்ல பாமில் இருந்தது... வெண்பூ,நர்சிம்,புருனோ மற்றும் தண்டோரா.....எல்லா கேள்வி முடிவுகளிலும் அல்லது பதில் முடிவுகளில் எதாவது ஒரு வார்த்தை சொல்லி நக்கல் விட்டுக்கொண்டு இருந்தார்கள்...நர்சிம் ஆயுத எழுத்து நல்லபடமா? என்று கேட்க நான் ஆதார தழுவல் இல்லாமல் யாராலும் படம் எடுக்க முடியாது... இங்கு யாரும் சுயம்பு அல்ல... யாரோ,எங்கோ, பார்த்த, படித்த, கேட்ட விஷயங்கள்தான் இங்கு மட்டும் அல்ல, உலகம் எங்கும் திரைப்படங்களாக வருகின்றன என்றேன்.... அந்த வகையில் கேபிளும் நானும் அது நல்லபடம் என்றோம்....
லக்கியின் ரிப்போர்டர் தொடர் குறித்து பாராட்டு தெரிவித்து ,டிரிட் கோராப்பட்டது...
எழுத்தாளர் பாஸ்கர்சக்தி மற்றும் பதிவர் தங்கமணி பிரபு போண்றவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்து வைத்தனர்.....
ஹெச்பியில் வேலைபார்க்கும் ஒரு பதிவர் கவிதை சொன்னார்... உலக பொருளாதாரம் குறித்து கொஞ்சம் பேசப்பட்டது...
எப்போதும் போல் பதிவர் வருகை பற்றி டோண்டு சார் குறிப்பெடுத்துக்கொண்டார்.... அவர் நடேச முதலியார் பூங்கா பற்றியும் அதில் உள்ள ஜாதி பெயருடன்தான் அதை அழைக்க வேண்டும் என்று டோண்டு கூற நர்சிம் எப்படி சொல்லாம் என்று கேட்க ? சில பல விளக்கங்களுடன் வேறு கேள்விக்கு போனோம்....
நான் போட்டோ எடுத்தேன்... என் போட்டோவை “என் தமிழ் ஸ்ரீ” எடுத்தார்... அவருக்கு ராகவன் நைஜீரியா போட்டோ சம்பந்தமாக அவருக்கு நன்றி கூறினார்....
போட்டோ எடுத்து பதிவு போடும் போது பெயர் போட வேண்டும் என்று பல வெளிநாட்டு பதிவர்கள் கோரிக்கைபற்றி, நான் கேட்ட போது பதிவர் லக்கி பெயர் போட வேண்டாம் என்றும்.. அப்படி போட்டால் ? யார் அந்த பதிவர் என்று தெரிந்து கும்முவார்கள் என்றும் அதனால் போட்டோவிற்க்கு பெயர் போடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபட்டது....பாலபாரதிஅவருடைய வலைப்பக்கம் திரும்ப வந்தது குறி்த்து சந்தோஷம் கொண்டார்....அவர் போட்டோ எடுக்கும் போது எதோ செய்து கொண்டு இருக்க...
“போட்டோ எடுக்கும் போது எங்காவது பாரு ,அப்புறம் என்போட்டாவை போடலைன்னு பின்னுட்டம் போடு... ”
என்று நான் அன்பாய் கடிந்து கொள்ள அப்புறம் போஸ் கொடுத்தார்...
பைத்தியக்காரனிடம் சில கேள்விகளை நர்சிம்,புருனோ மற்றும் லக்கி கேட்க சபையில் வேண்டாம் என்று மறுதளித்தார்.... ஆசிப் அண்ணாச்சி கொஞ்சம் லேட்டாக வந்து கலந்து கொண்டார்.... ஆசிப்பிடம் அதிஷா..
“ அண்ணாச்சி இந்த பார்க்கல கிஸ் அடிக்க சான்ஸ் இருக்கு, பிஸ் அடிக்க சான்ஸ் இல்லை”
என்று சொல்லி விட்டு சான்ஸ் தேடி அதிஷா எழந்து போனார்.....
காவேரி கனேஷ் பதிவர் நர்சிம் எழுத்துக்களை பாராட்டினார்...
பதிவர் தன்டோரா டைமிங் காமெடி செய்து அசத்தினார்.... பட்டர்பிளை,தன்டோரா இருவரிடமும் மட்டும் கொஞ்சம் என் வேலை குறித்து பேசினேன்...
டீக்கடையில் எப்போதும் போல் நான், டாக்டர் புருனோ, அக்னி போன்றவர்கள் ஒரு வட்டமேசை போடுவோம் அதில் இந்த முறை காவேரி கனேஷ் கலந்து கொண்டார்... ஈழம் பற்றி கனேஷ் அவர்கள் நிறைய தகவல்களை சொன்னார்....அதே போல் நிறைய பெயர்கள் மறந்து விட்டேன்... மேலும் நிறைய தகவல் பெற டோண்டு சார் வலைதளத்துக்கு செல்லுங்கள்...
பைத்தியக்காரனிடம் அடுத்த படம் என்ன ? பல பேர் கேட்க நாங்கள் அஞ்சரைக்குள்ள வண்டி என்று சொன்ன போது பதிவர்கள் அனைவரும் கொள்...
ஆசிப் அண்ணாச்சி ஊருக்கு போகப்போவதாக சொல்லி எங்களிடம் விடைபெற்றார்.... அதிஷா, லக்கி, கேபிள் போன்றவர்கள் விடை பெற்று சென்றார்கள்.... கேபிள் என்னை, தண்டோரா சென்ற தாக சாந்தி இடத்திற்க்கு அழைக்க நான் முறையான அழைப்பு இல்லை என்று மறுத்துவிட்டேன்...எப்போதும் போல்கடைசியாக நான், அக்னி, புருனோ அந்த இடம் விட்டு அகன்றோம்....
அப்புறம் டாக்டரை மாம்பலம் ஸ்டேஷனில் இறக்கிவிட என் இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து செல்ல, என்னை பற்றி திடிர் ஞாபகம் வந்து தண்டோரா என்னை, அழைக்க எனக்கு வேலை இருப்பதாக சொல்லி விட்டு புருனோவை அழைத்துக்கொண்டு சென்றேன்....
போகஸ்...1
துரைசாமி சப்வே அருகில் அந்த இரு பெண்கள் சுடிதார் அணிந்து கொஞசம் வெள்ளை தோலுடன் இருந்தனர்... அவர்கள் குடு்ம்பத்துடன் நடந்து போகும் போது, யாரோ நடந்து போன இரண்டு பேரில் ஒருவன், அந்த பெண்களின் உடம்பில் எதையோ அமுக்கி வைக்க...
அமுக்கினவன் ஓடி விட... கூட வந்தவன் மாட்டிக்கொள்ள அவன் முகத்தில் சொத்,நச்,பட் போன்ற சத்தங்கள் கேட்க்கொண்டு இருந்தது....
அந்த சுடிதார்பெண்...
“ இவன் இல்லை, அந்த ராஸ்கல் ஓடிட்டான்” என்று அவனை அடிக்காமல் தடுத்துக்கொண்டு இருந்தாள் பாதிக்கபட்ட அந்த சுடிதார் பெண்...
டாக்டர் புருனோ சொன்னார்....
“என்னால சட்னு அங்க என்ன நடக்குதுன்னு புரிஞ்சிக்க முடியலை” என்றார்....
ஏன்னா அது அப்படித்தான்....சிலதை சிலராலதான் சட்னு புரிஞ்சிக்க முடியும் என்றேன்....
போகஸ்..2,3,4,......
எல்லோரையும் உசுப்பிவிட்ட பதிவர் முரளி கண்ணன் வரவில்லை...
அந்தகால ரஜினி ஹேர் ஸ்டைலில் வந்தார்.. அக்னி பார்வை....
இந்த முறை லக்கி அதிகம் பேசவில்லை...
பாஸ்கர் சக்தி எழுத்தாளர் ஞானி வீ்ட்டு கேனி இலக்கிய கூட்டம் பற்றி அறிமுகம் செய்தார்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
அது ஒரு பாசிச பதிவர் சந்திப்பு,மத்தபடி நீங்க ஒரு நல்ல புகை படக்கரரா அல்லது உங்கள் கேமார நல்ல கேமாரா வா படங்கள் சூப்பர்...
ReplyDeleteநர்சிம்மிற்கு வாழ்த்துகள் ...
ReplyDelete(பெயர்கள் இல்லாமலே சிலரை அடையாளம் காண இயன்றது ...)
:)
அது ஒரு பாசிச பதிவர் சந்திப்பு,///
ReplyDeleteஅக்னி.. ஏம்மா இப்படி..??
பகிர்விற்கு நன்றி ஜாக்கி..
தலைவா..அழைப்பு விடுத்தது ராகவன்....பில் கொடுத்ததும் அவரே..என்னை பற்றி தெரிந்தும் நீயுமா???
ReplyDelete;-))))))))))))
ReplyDelete//பாலபாரதிஅவருடைய வலைப்பக்கம் திரும்ப வந்தது குறி்த்து சந்தோஷம் கொண்டார்....//
ReplyDeleteஆனா அவரோட வலைப்பக்கம் அவரே வரமாட்டேங்குறாரே தல??
ok..!
ReplyDelete/*
ReplyDeleteஅது ஒரு பாசிச பதிவர் சந்திப்பு,///
அக்னி.. ஏம்மா இப்படி..??
*/
அண்ணே... காண்டாவாதேண்ணே..... அதுக்கு அர்த்தம் நான் சொல்றேன்.
அப்படின்னா....
பார்க்கில் சிக்கிய சக பதிவர்கள் சந்திப்புன்னு அர்த்தம்.
அப்புறம் ஜாக்கி அண்ணே... இந்த பதிவர் சந்திப்பு படத்தை எடுத்து இங்கே போட்டதற்கு நன்றி. ( வேற எதுக்கு முடிஞ்சா நான் யூஸ் பண்ண தான்)
ரெண்டு பதிவுக்கு முன்னியே உன்னாண்ட ஒரு ரெகொஸ்த்து வச்சிகினேன்... அதே கண்டுக்கலியா அண்ணாத்தே....
நேரில் வந்த அனுபவத்தை தந்துவிட்டீர்கள்!! நன்றி!!
ReplyDeleteமேலும் a flew over the cuckoo's nest படம் பற்றிய உங்களுடைய விமர்சனம் எதிர்பார்க்கிறேன்.
வெங்கடேஷ்
thiratti.com
நல்ல பகிர்வு..
ReplyDelete//
venkat said...
நேரில் வந்த அனுபவத்தை தந்துவிட்டீர்கள்!! நன்றி!!
//
நானும் அதையே சொல்லிக்குறேன்..
very nice!
ReplyDeleteஅழகாக தொகுத்திருக்கிறீர்கள் ஜாக்கி சார். எனது புகைப்படமும் வந்திருப்பதில் மகிழ்ச்சி. நன்றியும்! (பாலபாரதி அவர்கள் சொன்னதால் உடனடியாக புகைப்படம் வெளியிட்டுவி்ட்டீர்கள் போல...)
ReplyDeleteவரமுடியாத எனக்கு உங்கள் பதிவு அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
பதிவுக்கும், படங்களுக்கும் நன்றி!
ReplyDelete//ஆனா அவரோட வலைப்பக்கம் அவரே வரமாட்டேங்குறாரே தல??//
இனிய நர்சிம்.. விரைவில் மீண்டு வருவேன் என்றே நினைக்கிறேன். ;)
பதிவும் படங்களும் அருமை
ReplyDeletenice, thanks for sharing
ReplyDeleteகலக்கல் சந்திப்பு
ReplyDeleteஅது ஒரு பாசிச பதிவர் சந்திப்பு,மத்தபடி நீங்க ஒரு நல்ல புகை படக்கரரா அல்லது உங்கள் கேமார நல்ல கேமாரா வா படங்கள் சூப்பர்...//
ReplyDeleteயோவ் அக்னி இந்த நக்கல்தானே வேனாங்கிறது...
நர்சிம்மிற்கு வாழ்த்துகள் ...
ReplyDelete(பெயர்கள் இல்லாமலே சிலரை அடையாளம் காண இயன்றது ...)
நன்றி ஜமால்
அது ஒரு பாசிச பதிவர் சந்திப்பு,///
ReplyDeleteஅக்னி.. ஏம்மா இப்படி..??
பகிர்விற்கு நன்றி ஜாக்கி..//
நன்றி சூர்யா
தலைவா..அழைப்பு விடுத்தது ராகவன்....பில் கொடுத்ததும் அவரே..என்னை பற்றி தெரிந்தும் நீயுமா???
ReplyDeleteசரி சரி விடுதலைவா சும்மா....
நன்றி அதிஷா...
ReplyDelete//பாலபாரதிஅவருடைய வலைப்பக்கம் திரும்ப வந்தது குறி்த்து சந்தோஷம் கொண்டார்....//
ReplyDeleteஆனா அவரோட வலைப்பக்கம் அவரே வரமாட்டேங்குறாரே தல??//
செம நக்கல் தலை
நன்றி தமிழன் கறுப்பி
ReplyDeleteஅப்படின்னா....
ReplyDeleteபார்க்கில் சிக்கிய சக பதிவர்கள் சந்திப்புன்னு அர்த்தம்.
நல்ல விளக்கம்
நேரில் வந்த அனுபவத்தை தந்துவிட்டீர்கள்!! நன்றி!!
ReplyDeleteமேலும் a flew over the cuckoo's nest படம் பற்றிய உங்களுடைய விமர்சனம் எதிர்பார்க்கிறேன்.
வெங்கடேஷ்
thiratti.com//
நன்றி வெங்கட் அந்த படத்தின் டிவிடி என்னிடத்தில் இல்லை படத்தை தந்தால் பார்த்துவிட்டு மறுநாளே...விமர்சனம்
நல்ல பகிர்வு..
ReplyDelete//
venkat said...
நேரில் வந்த அனுபவத்தை தந்துவிட்டீர்கள்!! நன்றி!!
//
நானும் அதையே சொல்லிக்குறேன்..//
நன்றி தீப்பெட்டி
நன்றி மங்களுர் சிவா
ReplyDeleteஅழகாக தொகுத்திருக்கிறீர்கள் ஜாக்கி சார். எனது புகைப்படமும் வந்திருப்பதில் மகிழ்ச்சி. நன்றியும்! (பாலபாரதி அவர்கள் சொன்னதால் உடனடியாக புகைப்படம் வெளியிட்டுவி்ட்டீர்கள் போல...)//
ReplyDeleteஅப்படி அல்ல அன்பு எவர் படத்தையும் விடக்கூடாது என்று எடுத்தபடம்.. நன்றி தங்கள் முதல் வருகைக்கு
வரமுடியாத எனக்கு உங்கள் பதிவு அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்//
நன்றி ஸடார்ஜன்
பதிவுக்கும், படங்களுக்கும் நன்றி!
ReplyDelete//ஆனா அவரோட வலைப்பக்கம் அவரே வரமாட்டேங்குறாரே தல??//
இனிய நர்சிம்.. விரைவில் மீண்டு வருவேன் என்றே நினைக்கிறேன். ;)//
நன்றி பாலபாரதி
பதிவும் படங்களும் அருமை//
ReplyDeleteநன்றி முரளி
nice, thanks for sharing//
ReplyDeleteநன்றி குப்பன்
கலக்கல் சந்திப்பு
ReplyDeleteநன்றி ராஜேஸ்வரி
பதிவும், படங்களும் அருமை. (படங்களில் பாதி நான் எடுத்தது! :) )
ReplyDeleteஅப்படியே நம்ம பதிவையும் படிங்க.
ஸ்ரீ....
//போட்டோ எடுத்து பதிவு போடும் போது பெயர் போட வேண்டும் என்று பல வெளிநாட்டு பதிவர்கள் கோரிக்கைபற்றி, நான் கேட்ட போது பதிவர் லக்கி பெயர் போட வேண்டாம் என்றும்.. அப்படி போட்டால் ? யார் அந்த பதிவர் என்று தெரிந்து கும்முவார்கள் என்றும் அதனால் போட்டோவிற்க்கு பெயர் போடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபட்டது....//
ReplyDeleteஇதில் ஒரு சிக்கல் இருக்கு தல. பேர் தெரியாம நரசிம்ம பார்த்து யாராவது லக்கின்னு நினைத்து கும்மிட்டங்கன்ன? பாவம் நரசிம்!................. எப்படியும் போட்டோ போட்டுட்டிங்க பெயைரையும் போட்டீங்கன்ன என்ன மாதிரி வெளியூரில் இருப்பவர்களுக்கு எல்லாம் வசதியா இருக்கும் இல்ல.....
பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவராத குறை தீர்ந்தது ஜாக்கி!
ReplyDeleteஉங்களை அழைக்காததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் நண்பரே... கூப்பிடக் கூடாது என்று இல்லை. பதிவர்கள் அனைவரும் நண்பர்கள் தான் எனக்கு. எப்படியோ விட்டுப் போய்விட்டது.
ReplyDeleteதிரும்பவும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
அழகான புகைப் படத் தொகுப்புகள். நன்றிகள் பல.