(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா?


நம்ம ஊரில் இப்படி ஒரு தலைப்பு வைத்து படம் எடுத்தால் அவ்வளவுதான், அந்த படம் வெளியே வரவே வராது...எனென்றால் நாம் ஒரு வகையில் பச்சையாக நடித்துக்கொண்டு இருக்கின்றோம்...

பொதுவாழ்க்கையில் வந்து விட்டதாலேயே நாம் பெரிய பொறுப்புகளில் உள்ள எலலோரையும் நாம் தெய்வங்களாக பார்க்கும் மனநிலை நம்மிடம் நிறையவே உண்டு.... அவர்கள் கடவுள்கள் அல்ல அவர்களும் மனிதர்கள்....
அவர்களுக்கும் அடிமனது ஆசைகள், இச்சைகள், காமம், காதல், துரோகம் எல்லாம் உண்டு என்று தைரியமாக சொல்ல வந்த படம் “அப்சலூட்பவர்”

ABSOLUTE POWER படத்தின் கதை இதுதான்....


அவன் ஒரு திருடன்Luther Whitney (Clint Eastwood) அற்புதமாக வீடு பூந்து கொள்ளை அடிப்பதில் வல்லவன்.. பொதுவாக எல்லோருமே அழகான பெண்களை அடைகளைந்து பார்க்க ஆசைப்பட்டால், லூதருக்கு பூட்டிய வீடுகளை திறந்து கொள்ளை அடிப்பதில் அவ்வளவு இஷ்டம்....

அது ஒரு தனியான வீடு...
(சாரி,மன்னிக்வும் என் ரேஞ்சிலே யோசித்துவிட்டதால் அதனை வீடு என்று சொல்லி விட்டேன்) அது ஒரு ஆடம்பர பங்களா... ஆம் திருட வந்த லூதருக்கு நன்றாகவே தெரியும் அது ஒரு பெரிய பணக்கார பி்ல்லியனரின் வீடு என்று ....

ஒரு சுபயோக சுப தினத்தின் இரவில் பௌர்னமி வெளிச்சத்தை மட்டும் சாட்சியாக வைத்து அந்த வீட்டில் போய் திருடுகின்றான். அந்த பங்களாவின் பெட்ரூமில் ஒரு ரகசிய அறை இருக்கின்றது அதில்தான் விலை மதிக்க முடியாத வைரங்கள் ஆபரணங்கள் இருக்கின்றன...

அதாவது வெளியில் பெட்ரூமில் இருந்து பார்க்க, அது வெறும் கண்ணாடி போல்தெரியும். அதில் உங்கள் கலைந்த தலையையும், உடையையும் பார்த்து சரிபண்ணிக்கொள்ளலாம்... அதே போல் அந்த கண்ணாடி பின்புறம் உள்ள ரகசிய அறையில் ஒருவர் இருந்தால் பெட்ரூமில் என்ன நடக்கின்றது என்பதை மிக துள்ளியமாக பார்க்கலாம். ஆனால், பெட்ரூமில் இருப்பவர்களுக்கு அது ஒரு கண்ணாடி அவ்வளவுதான்...


லூதர் இன்ட்ரஸ்ட்டாக திருடிக்கொண்டு இருக்கும் போதுதான், சனியன் அவனுக்கு மணி அடித்தான்...

அந்த ஆடம்பர பங்களா வாசலில் ஒரு கார் வந்து நிற்க்கின்றது . அதில் இரண்டு ஆண் பெண் பேச்சுக்குரல்களும், சிரிப்பு சத்தமும் கேட்டவண்ணம் இருக்கின்றது,அவர்கள் வீட்டினுள் வந்து பெட்ரூமை நோக்கி வருகிறார்கள் என்று தெரிந்து உடன், அந்த ரகசிய அறையில் நம்ம ஆள் திரும்பவும் போய் மறைந்து கொள்கின்றான்...


அந்த பெட்ரூமுக்கு வந்தது சாதாரன ஆளு இல்லை யுனைட்டேட் ஸ்டேட் ஆப் ஆமெரிக்காவின் பிரசிடென்ட், அடுத்தவன் பொண்டாட்டி கூட அதாவது அந்த ஆடம்பர பங்களா மில்லியினர் பொண்டாட்டிதான் அந்த பொம்பளை... பிரசிடென்ட் செம போதையில அந்த பொம்பளையோட பெட்ரூமுக்கு வருகிறார். அதிபர் கண்ணுல காம போதை தலைக்கு எறி இருக்குது...இந்த கூத்தை ரகசிய அறையில பார்க்கற லூதருக்கு நெத்தியில வேர்வை பூத்து நிலத்துல சிந்துகின்றது ...

முதலில் முத்தம் போன்ற சமாச்சாரங்களாக போர்பிளே மும்மரமாக நடக்கின்றது....முதலில் சந்தோஷமாக ஆரம்பிக்கும் அந்த கூடலில் அமெரிக்க அதிபர் அந்த பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறான முறையில்  வெறித்தனமாக, மிருகத்தனமாக  செக்சுக்கு உட்படுத்த முயல, அவள் மறுக்க இப்போது பிரசிடென்ட்டுக்கு ஈகோ பொத்துக்கொண்டு வருகின்றது....

நான் ஒரு பிரசிடென்ட் நீ ஆப்டர் ஆல் நீ ஒரு பொம்பளை என் விருப்பத்துக்ககு ஈடு கொடுக்க மாட்டயா? என்ற வெறியோடு அவளை இழுத்து முரட்டததனமாக ஹென்டில் செய்ய அவள் பிரசிடன்டோடு போராடுகின்றாள் பக்கத்தில் இருக்கும் பழத்தை வெட்டும் கத்தியை எடுத்து பிரசிடென்ட்டை கீழே தள்ளி அவர் மேல் உட்கார்ந்து கத்தியை உயர்த்தவும், பிரசிடென்ட் பயத்தில் கத்தவும், வெளியே இருந்த பாதுகாலல் படையினர் உள்ளே வந்து அந்த பெண் பிரசிடென்டை கொலை செய்ய முயலுவதாக நினைத்து , துப்பாக்கியால் சுட்டு அவளை நொடியில் சாகடித்து விடுகின்றனர்.....

இந்த நிலையில் பிரசிடென்ட் தலமை அதிகாரிக்குGloria Russell (Judy Davis) தகவல் போய் , அவள் அங்கு வந்து முக்கிய தடயங்களை அழித்து, பாடியை டிஸ்போஸ் செய்ய சொல்லி, அந்த அறையில் இருந்த ரத்த கறைகளை அகற்றி.....


இவ்வளவு கூத்து நடக்கும் போது அந்த ரகசிய அறையில் நம்ம லூதர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றான்... அவர்கள் அந்த பங்களாவிட்டு கிளம்பும் போது இந்த் கொலைக்கான முக்கிய ஆதாரத்தை மாடியில் விட்டு விட்டு வந்தது தெரியவர, அதை எடுக்க இரண்டு செக்யூரிட்டிகள் மேலே வர அதற்க்குள் , நம் லூதர் அந்த எவிடென்சைஎடுத்துக்கொண்டு கொள்ளையடித்த பொருட்களுடன் பின்புறம் வழியாக தப்பிக்க அவனை பிடிக்க அந்த செக்யூரிட்டிக்ள் துரத்த...

1 லூதர் பிடிபட்டானா?
2அந்த கொலை மூடி மறைக்க பட்டதா?
3.பிரசிடென்ட் என்ன ஆனார்?
4அந்த எவிடென்சை பணத்தை வாங்கி கொண்டு லூதர் கொடுத்து விட்டானா? இது போன் ற பல விட்டானாக்களுக்கு விடை தெரிய ,இந்த படத்தை ஏதாவது வீடியோ லைப்பேரரியில் எடுத்து பார்த்து ரசிக்கவும்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்து ஒரு புயலை கிளப்பிய படம்...

இந்த படத்தின் இயக்குன்ர் கிளின்ட் ஈஸ்ட்வுட் அவரே தயாரிப்பாளருட் கூட...

அந்த திருடன் பாத்திரத்தில் நடித்து இருப்பது இந்த படத்தின் இயக்குனரே...

அந்த கொலைக்காட்சியை மிக நேர்த்தியாக படமாக்கிய விதம் அருமையிலும் அருமை...

நல்ல அற்புதமான விறு விறுப்பான காட்சி அமைப்புகள் கொண்ட படம்...


திருடன் ,கொள்ளைக்காரன் என்பதாலேயே அவனுக்கு மனிதாபிமானம் இல்லை என்று எவரும் சொல்லக்கூடாது என்று வலியுறுத்தும் படமும் கூட....

படத்தில் அப்பா மகளுக்கான பாச காட்சிகள்  படத்தை மேலும் ரசிக்க வைக்கும்... அதே போல டிடெக்டிவ் வக்கில் பெண்ணிடம் நான் தனியாகத்தான் இருக்கேன் என்று திரும்ப திரும்ப சொல்லும் காட்சி அழகான காதல் கவிதை

அந்த எவிடென்சை அவர் எடுத்துக்கொண்டு ஓட அவரை பிரசிடென்ட் ஆட்கள் துரத்த அது ஒரு நல்ல சேசிங் காட்சி.. அந்த காட்சியின் ஒளிப்பதிவும், படத்தில் பல காட்சிகளின் ஒளிப்பதிவும் (Cinematography Jack N. Green) பாரட்டபடவேண்டிய ஒன்று....

 இந்த படம்  தமிழ்நாட்டில்  எடுத்தால் படம் வெளியே வரவே வராது..  ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் நபரை இப்படியா  கேவலமாக சித்தரிப்பது  ஐயகோ என்று ஒப்பாரி வைத்து இருப்பார்கள்.Directed by Clint Eastwood
Produced by Clint Eastwood
Karen Spiegel
Written by Novel:
David Baldacci
Screenplay:
William Goldman
Starring Clint Eastwood
Gene Hackman
Ed Harris
Laura Linney
Scott Glenn
Dennis Haysbert
Judy Davis
and E.G. Marshall
Music by Lennie Niehaus
Cinematography Jack N. Green
Editing by Joel Cox
Studio Castle Rock Entertainment
Malpaso Productions
Distributed by Columbia Pictures (later Warner Bros.)
Release date(s) February 14, 1997
Running time 121 min
Country United States
Language English
Budget $50 million

 வீடியோ விமர்சனம்.
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

16 comments:

 1. வோட்டு போட்டாச்சு :)

  ReplyDelete
 2. டிவிடி கிடைக்குமா தல?? பாத்துட்டு திருப்பி தாரேன்.

  ReplyDelete
 3. /*இளைய கவி said...
  டிவிடி கிடைக்குமா தல?? பாத்துட்டு திருப்பி தாரேன்.*/

  அண்ணே...
  டீ.வி.டி, வீ.சீ.டி, ரெண்டையும் திருப்பி போட்டு பார்க்க முடியாது. தெரியுமா?

  ReplyDelete
 4. படம் பற்றி நல்ல அறிமுகம். நன்றி.

  ReplyDelete
 5. http://dailycoffe.blogspot.com/2009/06/blog-post_1151.html

  ReplyDelete
 6. தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிங்க...வோட்டு போட்டாச்சு...

  ReplyDelete
 7. வோட்டு போட்டாச்சு :)//

  நன்றி சென்ஷி

  ReplyDelete
 8. டிவிடி கிடைக்குமா தல?? பாத்துட்டு திருப்பி தாரேன்.//

  இளைய கவி பல படக்ளின் டிவிடி என்னிடம் இல்லை எப்போதோ பார்த் படங்களை வைத்து எழுதுகின்றேன்

  ReplyDelete
 9. நன்றி நைனா, மங்களுர் சிவா, இளைய கவி

  ReplyDelete
 10. தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிங்க...வோட்டு போட்டாச்சு.//

  நன்றி இங்கிலிஷ்காரன்

  ReplyDelete
 11. We saw the film, a very nice one. you should write about CROSSING OVER & GRAN TORINO

  ReplyDelete
 12. கண்டிப்பாய் பார்க்க தூண்டும் விமர்சனம்...குட்டி trailer. :)..

  வாசலில் ஒரு கார் வந்து நிற்க்கின்றது - நிற்கின்றது என்பதே சரி. 'ற்' அடுத்து மெய் எழுத்து வராதென்று நினைக்கிறேன்

  ReplyDelete
 13. ஜீன் ஹேக்மேனின் நடிப்பும் பாராட்டக்கூடியதே

  ReplyDelete
 14. இந்தப் படத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஜாக்கி அண்ணா.. :))

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner