(TOLET) டூலெட் முகம் காட்டும் சென்னை....அவர்கள் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து இருப்பார்கள், அவர்கள் வாகனம் டிவிஎஸ்50 அல்லது சேம்ப்போன்ற சிறு வண்டிகளைதான் பயன்படுத்துவார்கள், படிப்பறிவு சுத்தமாக இருக்காது.

கண்களில் நேற்று நள்ளிரவு வரை டஸ்மார்க்கில் உழைத்து கலைத்த விஷயம் கண்களில் சிவப்பாக தெரியும். பெண்களிடமும் ஆண்களிடமும் பேசும் போது ரொம்ப மரியாதையாக பேசுவது போல்வும், என்னவோ நம்க்காக தேச சேவை செய்ய வந்தது போலவே ஒவ்வொறுவரின் நடவடிக்கையும், பேச்சும் இருக்கும்.ஒரே ஒரு செல்போன் வைத்து இருப்பார்கள்.
ஒரு நாளைக்கு 3 வீடு காட்டுவார்கள். புடித்து இருந்தாள் ஒன்றரைமாதம் வாடகை அவர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு ரூபாய்6,000ஒரு வீட்டுக்கு மாத வாடகை என்றால்,ரூபாய் 9,000 ஆயிரம் இவர்களிடம் அழ வேண்டும்.


யோசித்து பாருங்கள் வாடகை, வீடு எங்கு இருக்கின்றது என்று காட்டுவதற்க்காக இவர்களுக்கு 9000 ஆயிரம் தர வேண்டும். அதே போல அழைத்து போய் காட்டிய வீடு பிடிக்கவில்லை என்றால் இவர்களுக்கு ரூபாய் 100 தண்டம் அழ வேண்டும்...
இவர்களை புரோக்கர்கள் என்று அழைப்பர்.

சரிஒரு புது எரியாவில் வீடு பிடித்து தருபவருக்கு நீங்கள் கொடுக்கும்பணம் அது என்று வைத்தால் கூட ,ஐடி வளர்ச்சி சென்னையில் நடந்த போது அவர்கள் ஆடிய ஆட்டம் இருக்கின்றேதே...... அப்பப்பா சொல்லி மாளாது... இவர்களுக்குள் ஒரு குழுவாக அமைத்துக்கொண்டு நான்கு பேராக கூட்டமாக டூலெட் போர்டுவீட்டுக்கு வெளியே வைத்து இருக்கும் ஹவுஸ் ஓனர்களை, மிரட்டி எடுக்க வைத்து புரோக்கர் கமிஷனுக்காக 2,500 ரூபாய் மதிப்பு்க்கான வீட்டை 4,500க்கு வாடகை ஏற்றி விட்டு, நடுத்தர மக்கள் வயிற்றில் அடித்த பரதேசிகள்.

அப்படியே புரோக்கர் பேச்சை கேட்காமல் டூலெட் போர்டு மாட்டினா,
“தோ பாருங்க நாளைக்கு எதாவது உங்க வீட்டுல குடி இருக்கறவன் பிரச்சனை பண்றான்னு வைங்க முத ஆளா நாங்க வந்து கேப்போம்” என்று முகம் பார்க்காத அல்லது இன்னும் வாடகைக்கு வராதவனை வில்லனாக சி்த்தரித்து, வெளியே வைத்த டூலெட் போடையும் பயம் காட்டி எடுத்துவிட வைத்து விடுவார்கள்.

ஐடி சென்னையில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் டவுன் ஆகி, இந்த மாதிரி பகல் கொள்ளைகாரார்களுக்கு பின்புறம் கிரீஸ் தடவபட்டது....இப்போது எரியாவில் எந்த வெள்ளை வேட்டி சட்டையும் கானோம்.

நான் பொதுவாய் புரோக்கர்களிடம் போக மாட்டேன். நண்பர்களிடம் சொல்லி வைத்தும் அல்லது, சைக்கி்ளில் மெதுவாக தெருத்தெருவாய் அலைந்துமே இதுவரை நான் வீடு பார்த்து இருக்கின்றேன்....


சென்னையில் பல இடங்களில் இப்போது டூலெட் போர்டு கண்ணில் பார்க்க முடிகின்றது எனலாம்....எந்த ஹவுஸ் ஓனரையும் யாரும் இப்போத மிரட்டவில்லை... இப்போது அதிக வாடகை ஏற்றியதால் வந்தவர்கள் ஐடி டவுன் ஆனதும் இடம் பெயர்ந்து விட்டார்கள்... இப்போது பல இடங்களில் வாடகைக்கு ஆள் வராததால் வாடகையை உடும்பு பிடியில் இருந்து சற்றே தளர்த்துகின்றார்கள்.அன்புடன்/ஜாக்கிசேகர்

ஓட்டு போட மறவாதீர்

34 comments:

 1. ஜாக்கி,
  வீடு கிடைப்பதில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா?
  நல்ல வேளை தப்பித்தேன்.
  நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 2. sulekaa classifieds ல் வரும் விளம்பரங்களை பார்த்திருக்கிறீர்களா...இடை தரகர் தொந்தரவு இல்லாமல் நேரடியாக வீட்டு ஓனர்களை தொடர்பு கொள்ள முடியும்

  ReplyDelete
 3. ஜாக்கி,
  வீடு கிடைப்பதில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா?
  நல்ல வேளை தப்பித்தேன்.
  நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  வாசு, இருக்கறதிலேயே பேஜார் புடிச்ச வேலை இதுதான்...

  நன்றி வாசு....

  ReplyDelete
 4. sulekaa classifieds ல் வரும் விளம்பரங்களை பார்த்திருக்கிறீர்களா...இடை தரகர் தொந்தரவு இல்லாமல் நேரடியாக வீட்டு ஓனர்களை தொடர்பு கொள்ள முடியும்//

  நல்ல தகவல் ராஜ் மிக்க நன்றி

  ReplyDelete
 5. good shot jacki...

  i too affected with this broker bastards.....

  ReplyDelete
 6. ரொம்ப மரியாதையாக பேசுவது போல்வும், என்னவோ நம்க்காக தேச சேவை செய்ய வந்தது போலவே ஒவ்வொறுவரின் நடவடிக்கையும், பேச்சும் இருக்கும்.

  unmai, unmai

  ReplyDelete
 7. More than the brokers, its greed of the houseowners to be blamed... aduthavan ekkadu kettu pona enna-nga manapaanmai... adthavan kashthapattu sambarikka-tha pudingra seyal.. kevalam...

  they know the house is worth say Rs.4000/- , why they hell they should agree with the house brokers for higher rent... kedu ketta jenmanga...


  (But there are very small percentage of good humans as houseowners who really charge reasoanble rent)

  ReplyDelete
 8. ஆனா வாடகை ல இவங்க அநியாயம் செய்தாங்க ....நான் சென்னையில் இருந்த போது freeads ல் பார்த்தே செல்வேன்

  ReplyDelete
 9. பதிவு நன்று.

  அதுவும் பேச்சிலர்களுக்கு வீடு கிடைப்பது மிகவும் சிரமம்.

  Free Ads நிறைய விளம்பரங்கள் வருது.

  சென்னையில் வாடகை குறைந்து விட்டதாகவும் இன்னும் குறையும் என்று தகவல்.

  ReplyDelete
 10. ஐயா நானும் பட்டிருக்கேன்... நல்ல பதிவு.

  ReplyDelete
 11. தெரு முக்கில் இருக்கிற iron கடை, auto காரர்களைக் கேட்டால் எந்த வீடு வாடகைக்கு இருக்கிறது என்று தெரியும்.

  ReplyDelete
 12. சென்னையில் நல்ல தண்ணீர் வசதி,ஸ்கூல் ,போக்குவரத்துக்கு எல்லாம் ஒருங்கே அமைந்த சிறந்த இடம் குறித்து சொலுல்ங்கள் .

  ReplyDelete
 13. ஐயா

  வீட்ல ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போலிருக்கு..

  அதான் ஒரு நாளைக்கு 3, 4 பதிவா கொட்டுறீங்களோ..?!!!

  ReplyDelete
 14. //sulekaa classifieds ல் வரும் விளம்பரங்களை பார்த்திருக்கிறீர்களா...இடை தரகர் தொந்தரவு இல்லாமல் நேரடியாக வீட்டு ஓனர்களை தொடர்பு கொள்ள முடியும்

  //

  http://chennai.craigslist.co.in/apa/
  http://chennai.click.in/
  chennai.locanto.in
  chennai.indialist.com
  chennai.vivastreet.co.in

  ReplyDelete
 15. //தெரு முக்கில் இருக்கிற iron கடை, auto காரர்களைக் கேட்டால் எந்த வீடு வாடகைக்கு இருக்கிறது என்று தெரியும்.///

  ivanunga thaan broker-kku main link-e... ivangualukku oru cutting undu broker commission-la, so thuttu kodukkama sollamaatanga!!!


  //sulekaa classifieds ல் வரும் விளம்பரங்களை பார்த்திருக்கிறீர்களா...இடை தரகர் தொந்தரவு இல்லாமல் நேரடியாக வீட்டு ஓனர்களை தொடர்பு கொள்ள முடியும்//

  only very few... many of the houseowners are greey, and brokers contact these houseowners after seeing their sulekha/criaglist/magicbricks ads.. these greedy houseowners are happily give all the details to the houseowners putting the condition that they will not pay any commission to the brokers and brokers agree to that and squeeze the poor tenants!!!!

  ReplyDelete
 16. ஜாக்கி அண்ணே ! ஒரு மாசத்துக்கு முன்னால தான் இந்த மாதிரி ஒரு 7500 ருபாய் மொய் எழுத வெச்சிடானுங்க .. அந்த ஆள் பண்ண வேலை, ஒரு வீட்டை காட்டினார் ( ன் ) . அதுக்கு சேவை கட்டணம் ஒரு மாத வாடகை .. வயிதெரிசலா இருக்கு .

  ReplyDelete
 17. good shot jacki...

  i too affected with this broker bastards.....//

  நன்றி வினோத் உங்கள் கோபம் என்னால் உணர முடிகின்றது

  ReplyDelete
 18. ரொம்ப மரியாதையாக பேசுவது போல்வும், என்னவோ நம்க்காக தேச சேவை செய்ய வந்தது போலவே ஒவ்வொறுவரின் நடவடிக்கையும், பேச்சும் இருக்கும்.

  unmai, unmai//

  நன்றி பயல்

  ReplyDelete
 19. More than the brokers, its greed of the houseowners to be blamed... aduthavan ekkadu kettu pona enna-nga manapaanmai... adthavan kashthapattu sambarikka-tha pudingra seyal.. kevalam...

  they know the house is worth say Rs.4000/- , why they hell they should agree with the house brokers for higher rent... kedu ketta jenmanga...


  (But there are very small percentage of good humans as houseowners who really charge reasoanble rent)//

  சென்னை பாய் நம்ம எல்லோருக்கும் இந்த புரோக்கர் தொல்லையில இருந்து தப்பிக்க ஒரே வழி நாம் வீடு தேடறதுதான்...

  ReplyDelete
 20. ஆனா வாடகை ல இவங்க அநியாயம் செய்தாங்க ....நான் சென்னையில் இருந்த போது freeads ல் பார்த்தே செல்வேன்//

  நல்ல ஐடியா கிரி

  ReplyDelete
 21. பதிவு நன்று.

  அதுவும் பேச்சிலர்களுக்கு வீடு கிடைப்பது மிகவும் சிரமம்.

  Free Ads நிறைய விளம்பரங்கள் வருது.

  சென்னையில் வாடகை குறைந்து விட்டதாகவும் இன்னும் குறையும் என்று தகவல்.//
  சூர்யா உங்கள் கூற்று உண்மை

  ReplyDelete
 22. ஐயா நானும் பட்டிருக்கேன்... நல்ல பதிவு.//

  நன்றி ரமேஷ்

  ReplyDelete
 23. தெரு முக்கில் இருக்கிற iron கடை, auto காரர்களைக் கேட்டால் எந்த வீடு வாடகைக்கு இருக்கிறது என்று தெரியும்.//

  டீக்கடைகாரனும் ஆயன் காரனும்தான் இப்ப புரோக்கர்ஸ் ஆதவும் இல்லாம அவுங்களும் கமிஷன் கேக்கறாங்க

  ReplyDelete
 24. சென்னையில் நல்ல தண்ணீர் வசதி,ஸ்கூல் ,போக்குவரத்துக்கு எல்லாம் ஒருங்கே அமைந்த சிறந்த இடம் குறித்து சொலுல்ங்கள் .//

  வளசரவாக்கம் சரியான தேர்வு மலர்

  ReplyDelete
 25. ஐயா

  வீட்ல ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போலிருக்கு..

  அதான் ஒரு நாளைக்கு 3, 4 பதிவா கொட்டுறீங்களோ..?!!!//

  என்ன பன்னறது தலை வெட்டி ஆபிசர் வேறு என்ன செய்வான்?

  ReplyDelete
 26. நன்றி இந்தியன்,

  ReplyDelete
 27. ஜாக்கி அண்ணே ! ஒரு மாசத்துக்கு முன்னால தான் இந்த மாதிரி ஒரு 7500 ருபாய் மொய் எழுத வெச்சிடானுங்க .. அந்த ஆள் பண்ண வேலை, ஒரு வீட்டை காட்டினார் ( ன் ) . அதுக்கு சேவை கட்டணம் ஒரு மாத வாடகை .. வயிதெரிசலா இருக்கு .//


  அந்த பயல்வோ உங்ககிட்டயும் ஆட்டைய போட்டுட்டான்ளா????

  ReplyDelete
 28. It is one month rent in Bangalore.
  I gave Rs 12K last May and Rs 10K this April when I shifted houses.

  Another tip is getting in touch with friends in IT. Companies like TCS/Wipro/Infy have internal employee websites where direct rental ads are posted. When I vacated last year, I posted on behalf of my landlord.

  ReplyDelete
 29. Excellent Comments....ஜாக்கிசேகர்

  ReplyDelete
 30. /
  சென்னையில் பல இடங்களில் இப்போது டூலெட் போர்டு கண்ணில் பார்க்க முடிகின்றது எனலாம்....எந்த ஹவுஸ் ஓனரையும் யாரும் இப்போத மிரட்டவில்லை... இப்போது அதிக வாடகை ஏற்றியதால் வந்தவர்கள் ஐடி டவுன் ஆனதும் இடம் பெயர்ந்து விட்டார்கள்... இப்போது பல இடங்களில் வாடகைக்கு ஆள் வராததால் வாடகையை உடும்பு பிடியில் இருந்து சற்றே தளர்த்துகின்றார்கள்.
  /

  மகிழ்ச்சியான செய்தி!

  ReplyDelete
 31. சரியாய் சொன்னீங்க. நான் சென்னைல 4 வீடு மாறிட்டேன் 3 வருசத்துல. எல்லாம் இந்த ஹவுஸ் ஓனர் 6 மாசம் ஆரடுத்க்குள்ள ஆரம்பிச்சிருவாங்க, நம்மள தொரத்தி வேற ஆள் வெச்ச இன்னும் அதிக வாடக கிடைக்கும்னு. நான் கூட இப்ப திருவான்மியூர் பாலவாக்கம் ஏரியா ல நிறைய To Let போர்டு பார்த்தேன்.
  புரோக்கர் ங்க நீங்க சொன்ன மாதிரி ரொம்ப கொள்ளகாரங்க.

  ReplyDelete
 32. ippavum konjam per thiriyaranga, but avangala kannda house owners mathikkarathu illa..

  ReplyDelete
 33. அவ்வளவும் கண் கூடான நிஜம் நண்பரே
  நேரம் கிடைக்கையில் நான் குமுறி எழுதிய இந்த கதையை படியுங்கள்
  எவ்வளவு ஒற்றுமையாக சிந்தித்திருக்கிறோம்?
  http://geethappriyan.blogspot.com/2009/05/blog-post_27.html
  அய்யா அத்தனையும் என் உள்ளக்குமுறல்கள்,என் நண்பர் ஒருவர் அதிக வாடகை தரமுடியாமல் வீட்டை ராணிப்பேட்டைக்கு மாற்றிவிட்டு வேலைக்கு தினமும் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து புறப்பட்டு,எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி வருகிறார்,அய்யா மனிதர்கள் யாரும் இப்போது சும்மா எதுவும் செய்வதில்லை சார்.எல்லாதிற்கும் காசு..பனிரெண்டு வருடங்களாக நான் பிரதிஉபகாரம் எதிர்பாராது எவ்வளவோ பேருக்கு வேலை வாங்கி தந்துள்ளேன்.அனால் இன்று நண்பர்கள் கூட சிறு உதவிகளுக்கோ அல்லது வழி காட்டுதளுக்கோ கூட ஏதேனும் எதிர் பார்க்கின்றனர்.அய்யா நான் இருந்த பதினைந்து நாளும் சென்னையில் மீடிஎட்டேர்கள் ஒரு சாரார் கும்பல் கூடி பேசுவதைக் கண்டேன்.அய்யா இவர்கள் யாருக்கும் இரக்கம் என்பதே இல்லை போலும். அதை கவனித்தேன்,,கொதித்தேன்.அதுதான் இப்படி கதையாக வெளிப்பட்டிருக்கிறது.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner