சிறுகதை போட்டிக்கான கதையை எழுதி உள்ளேன். வாசித்து பார்க்கவும்....

உரையாடல் சமுக கலை இலக்கிய அமைப்பின் சார்பாபக நடத்தப்படும் சிறுகதை போட்டிக்கான கதை.

“வலி”

நடைபெற்ற மாநில அளவிலான குறும்படபோட்டியில் முதல் பரிசு பெறும் படம் என்று, அந்த பெண் அறிவிப்பாளர் உடன் அறிவிக்காமல் சில நொடிகள் கடத்த பிட்டுபடம் திரையில் ஓடும் போது ஏற்படும் அமைதியை அந்த அரங்கம் நொடியில் பெற்று இருந்தது. சில குறும்பட படைப்பாளிகள் தன் பெயர் அறிவித்தால் டிவியில் சூப்பர் சிங்கர்ஸ் வெற்றி பெற்றதும் எப்படி குதிக்கின்றார்களோ, அது போல் கைகால் உதைத்து குதிக்க மனதுள் ஒத்திகை பார்த்தனர்.

இயக்குநர் சுபாஷ் இயக்கிய “வலி” என்ற குறும்படம் முதல் பரிசையும், ரூபாய் பத்தாயிரத்தையும் தட்டிசெல்கின்றது என்று அறிவிப்பாளர் அறிவித்த போது சுபாஷ் எந்த சலனமும் காட்டாமல் உதட்டில் லேசாக புன்னகை பூத்தான்.

அடுத்ததாக முதல் பரிசு பெற்ற வலி திரைப்படத்தை பற்றி பிரபல தமிழ் சினிமா இயக்குநர் ராம் இரண்டொரு வார்த்தை பேசுவார் என்று அறிவிப்பாளர் அறிவிக்க அரங்கத்தில் ஏற்ப்பட்ட விசிலாலும் கைதட்டலாலும் சிலருக்கு தலைவலியே வந்தது.

இயக்குநர் ராம் மைக்முன் வந்துதொண்டை செருமி பேச்சை துவக்கினார் , எம் இனமக்கள் இலங்கையில் கொத்து கொத்தாக செத்து மடிந்து கொண்டு இருக்கின்றார்கள், அதனை சர்வதேச சமுகம் வேடிக்கை பார்க்கின்றது, அதை கண்டிக்க வேண்டிய தாய்த்மிழர்கள் பொழுது போக்குகளில் முழ்கி போய் உள்ளார்கள். நம் இன மக்களின் வலியை இதுவரையாரும் உணரவில்லை. அனால், குறும்பட இயக்குநர் சுபாஷ் வயில்லா ஜீவனான மாடு அது படும் வலியையும், வேதனையையும் மிக அழகாகாக பதிவு செய்துள்ளார்,மிக முக்கியமாக சென்னை மன்னடியில் இருந்த அதிகம் பாரம் ஏற்றி வந்த மாட்டு வண்டி, தலைமைசெயலகம் அருகே இருக்கும் சப்வேயில் அதனால் இறங்கி ஏற முடியவில்லை. எற முடியால் தவிக்கும் அந்த மாட்டை முதுகில் இருக்கும் காயத்தின் மேல் அந்த மாடு ஓட்டி அடித்து, அந்த மாடு துடி தடித்து மேடு ஏறுவதை மிக அழகாகபடமாக்கி இருக்கிறார், குறும்பட இயக்குநர் சுபாஷ்.

அது மட்டும் இல்லாமல்ஒரு கட்டத்தில் அந்த மாடு ஏற முடியாமல் நடு ரோட்டில் படுத்து விட அது வாயில் நுரைதள்ளி அந்த மாட்டின் கண்களில் இருந்து வழியும் நீரில் ஈக்கள் மொய்பதையும் அது ஏறமுடியாமல் மூச்சு வாங்கி, அடிவயிற்றில் இருந்து அம்மா என்றுகத்துவதையும் மிக அழகாக பதிவு செய்து இருக்கிறார். அந்த மாடு கத்தும் போது, என் கண்கள் கலங்கிவிட்டன,இயக்குநர் சுபாஷ் காதல் கத்திரிக்காய் என்ற படம் எடுக்காமல் இது போன்ற சமுக அவலங்களை செல்லுலாய்டில் பதிய வைத்ததற்க்கு என் நன்றிகள் அவர் மென்மேலும் சிறப்புற வாழ்த்துறேன். என்று இயக்குநர் ராம் பேச்சை முடிக்க காட்டுக்கத்தலால் அரங்கம் கத்தியதால் டிராகன் நெற்றியில் தடவியும் அதையும் மீறி சிலருக்கு தலைவலி வின் வின் என்றது.


இயக்குநர் சுபாஷ் மேடைக்கு வந்து முதல் பரிசு பெற்று ஒரு சில வார்த்தைகள் பேச அவரை அன்பொடு அழைக்கின்றோம் என்று அறிவிக்க, சுபாஷ் நண்பர்கள் கை குலுக்கி, லேசாக ஹக் செய்து மேடைக்கு அனுப்பி வைத்தனர். அவன் முதல் பரிசு வாங்கி போட்டோவுக்கு பல்லை காட்டி மைக்முன் நின்று, நெற்றியில் விழுந்த முடியை சரி செய்து பேச்சை ஆரம்பித்தான்.

என்னை வாழ்த்திய இயக்குநர் ராமுக்கும், என்திரைபடத்தை முதல் பரிசுக்கு தேர்ந்து எடுத்த தேர்வு குழுவினருக்கு என் நன்றிகள்,நாம் மனிதர்கள் வலிக்கின்றது என்பதை கத்தி கதரி ஆர்பாட்டம் செய்து வெளிப்படுத்துகின்றோம். ஆனால் வாயிலலா ஜீவன்கள் என்ன செய்ய முடியும்... அதன் வெளிப்பாடே இந்த குறும்படம். இந்த படத்தில் உடன் பணிபுரிந்த என் நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்து விடை பெறுகிறேன் என்று பேச்சை முடித்து நண்பர்களுடன் அரங்கம் விட்டு வெளியே வந்த போது அவனை அனைவரும் கை கொடுத்த்து வாழ்த்து தெரிவித்தனர்.

வெளியே நடந்து போகும் போது சுபாஷ் நண்பன் ரகு சொன்னான்,

மச்சான் நான்,
“முதுமை” படத்துக்குதான் பஸ்ட் பிரைஸ் கிடைக்கும்னு நெனைச்சேன்”. என்று சொல்ல,

அதற்க்கு அரவானிங்க வாழ்க்கையை சொன்ன “புறக்கனிக்கபட்ட மனிதர்கள்” படத்துக்குதான் கிடைக்கும் என்று நான் நினைத்தேன், என்று மற்றவன் சொல்ல பேசிக்கொண்டே மெயி்ரோட்டுக்கு வந்தார்கள்.

நண்பர்கள் ட்ரீட் கேட்டர்கள் .பசி வேறு வயிற்றை கிள்ளியதால் அருகில் இருந்த் பாஸ்ட் புட் ஓட்டலில் மேஜை தேடி உட்கார்ந்தார்கள்.

சர்வர் வந்ததும் சபாஷ் சொன்னான்..

“ இவுங்க என்ன கேட்கறாங்களோ அதை குடுங்க”

எனக்கு ஒரு பீப்ரைசும் சில்லி பீப்பும் வேனும் என்றான்... ஆர்டர் எடுத்து போன சர்வரை சுபாஷ் திரும்பவும் அழைத்தான். சர்வத் திரும்ப வந்ததும்.

“எக்ஸ்யுஸ்மீ சில்லி பீப் நல்லா ப்ரை பண்னுங்க” என்றான்.

சபாஷ் நண்பர்களோடு தனது படத்தை பற்றி அரட்டை அடித்துக்கொண்டு பாதி பீப் பிரைட்ரைசை காலி செய்த போது, சில்லி பீப் வர அதில் ஒரு பீசை எடுத்து கடித்து படியே ..

“மச்சான் இது பராவாயில்லை, எங்க ஊர்ல மாட்டு வண்டியில கரும்பு லோடு ஏத்திக்கினு போவாங்க”.
“பாரம் தாங்காம மாடு சண்டித்தனம் பன்னுச்சுன்னா , அந்த மாட்டோட வால மாட்டுக்காரன் வெறியோட கடிப்பான்டா”

என்று சொன்ன போது நண்பர்கள் சுபாஷ் வாயை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

அன்புடன்/ஜாக்கிசேகர்

22 comments:

  1. //எம் இனமக்கள் இலங்கையில் கொத்து கொத்தாக செத்து மடிந்து கொண்டு இருக்கின்றார்கள், அதனை சர்வதேச சமுகம் வேடிக்கை பார்க்கின்றது, அதை கண்டிக்க வேண்டிய தாய்த்மிழர்கள் பொழுது போக்குகளில் முழ்கி போய் உள்ளார்கள்.//

    கதையில் சமூக அக்கறையும் பாராட்டத்தக்கது. பரிசு பெற வாழ்த்துக்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. :-(

    ஒண்ணும் சொல்ல தோணல. நல்லா இருக்குது.

    ReplyDelete
  3. எனக்கு ஒரு பீப்ரைசும் சில்லி பீப்பும் வேனும் என்றான்... கதை இங்கயே முடிஞ்சி போச்சு

    ரொம்ப நல்லாருக்கு

    வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கதை நல்லா இருக்கு. பலரின் சமூக அக்கறை இப்படித்தான் என்பது வேதனை :((

    ReplyDelete
  5. ஜாக்கி, அருமையான கரு.. இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம். அதே போல் எழுத்துப்பிழைகளை கவனியுங்கள்.

    பரிசு பெற வாழ்த்துகள்..

    //
    எனக்கு ஒரு பீப்ரைசும் சில்லி பீப்பும் வேனும் என்றான்...
    //

    கதையை இங்கேயே முடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..

    ReplyDelete
  6. கண்டிப்பா வெற்றி பெற வாழ்த்துகள் நண்பா :-) ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  7. thank you so much your fast wishes sri

    ReplyDelete
  8. எனக்கு ஒரு பீப்ரைசும் சில்லி பீப்பும் வேனும் என்றான்... கதை இங்கயே முடிஞ்சி போச்சு

    ரொம்ப நல்லாருக்கு

    வெற்றிபெற வாழ்த்துக்கள்\\

    thanks biskothu payal

    ReplyDelete
  9. கதை நல்லா இருக்கு. பலரின் சமூக அக்கறை இப்படித்தான் என்பது வேதனை :((\


    thanks siva

    ReplyDelete
  10. எனக்கு ஒரு பீப்ரைசும் சில்லி பீப்பும் வேனும் என்றான்...
    ரொம்ப நல்லாருக்கு..
    வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஜாக்கி.. கலக்குற...

    சூப்பர்...

    ReplyDelete
  12. thanks nandha thank you so much your wishes

    ReplyDelete
  13. thanks vannathu boochi thank you so much for your valuable replay

    ReplyDelete
  14. கதை நல்லாயிருக்கு ;)

    வாழ்த்ததுக்கள் ;)

    ReplyDelete
  15. chill beef"""nice sir!!!!//

    நன்றி லிங்க ராஜா தங்கள் பாராட்டுக்க

    ReplyDelete
  16. கதை நல்லாயிருக்கு ;)

    வாழ்த்ததுக்கள் ;)//

    நன்றி கோபிநாத் தங்கள் வாழ்த்துக்கு

    ReplyDelete
  17. கதையை எல்லோரும் பீப்ரைஸ் வேண்டும் என்பதோடு முடித்து விட சொன்னார்கள் இ,ருப்பினும் அந்த மாடு வாலை கடிக்கும் செய்தியை சமுகத்துக்கு சொல்லவே கொஞ்சம் கதை இழுத்தேன்...

    ReplyDelete
  18. நல்ல கதை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. நல்லா இருக்கு ஜாக்கி.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)

    ReplyDelete
  20. நடப்பை ‘ நச்’என்று சொல்லும் கதை! வாழ்த்துகள்!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner