konyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக்கு மீறிய வேலைசெய்தால் எப்படி இருக்கும்???

உலகின் மிகச்சிறந்த படமாக இந்த ஹங்கேரி படத்தை சொல்லுவேன்...

பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை அனால் அந்த பிரச்சனைகளை எதிர் கொள்ள, என்று ஒரு வயது இருக்கின்றது அல்லவா? ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்றால் ரத்த ஓட்டம் உடம்பில் வேகமாக ஓடும் போது ஒன்றும் கவலை இல்லை . ஓடி உழைத்து கலைத்து அந்த கடனை அடைத்து விடலாம் .

ஆனால் பென்ஷன் வாங்கி காலத்தை ஓட்டும் 70வயதை கடந்த தம்பதிகளுக்கு கடன் பிரச்சனை கழுத்தை நெரித்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? அதுவும் மிக மரியாதையாக வாழ்ந்த தம்பதியர்...

பிரச்சனை எந்த வயதில் வந்தாளும் அதை நல்லவிதமாவோ அல்லது கெட்டவிதமாகவோ அதை எதிர்கோள்ள வேண்டும் என்பதை காமெடி கலந்து விறுவிறுப்புடன் சொல்லி இருக்கின்றார்கள்...

தள்ளாத வயதில் பணப்பிரச்சனை என்றால் என்ன செய்ய முடியும் அதுவும் கடன் பிரச்சனை,வீட்டில் கந்து வட்டிக்காரர்கள் போல் வந்து சத்தம் போட்டால்? என்ன செய்ய முடியும்...


படத்தின் கதை இதுதான்


அவர்களுடைய காதலை இன்றெல்லாம் பாத்துக்கொண்டே இருக்க செய்யும் அந்த அளவுக்க அந்த வயதான தம்பதியர், இருவரிடையே இருக்கும் துய்மையான நெருக்கமான காதல் அது .

அந்த கிழவனுக்கு 80 வயது. அந்த கிழவிக்கு 70 வயது இருவரும் ஒரு ஆப்பார்ட்மென்டில் வசித்து வருகின்றார்கள். பிள்ளைகள் இல்லை..கிழவர் அந்த காலத்து கம்யுனிஸ்ட் பார்ட்டி. அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சொத்து அந்த காலத்து ஈரா கார் மட்டுமே...

அந்த பாட்டி வீட்டில் இருக்கும் போது கடன்காரார்கள் அவரரை அசிங்கமாக பேச அந்த பாட்டி தன் கணவன் ஆசையாக வாங்கி கொடுத்த டைமன் கம்மலை கழட்டி கொடுத்து வி்ட,பாட்டியும், கிழவரும் தங்கள் நிலை நினைத்து கண்ணீர் விடுகின்றார்கள்...

15 வருடங்கள் இருவரும் ஒன்றாக படுத்து உறங்கியது இல்லை, தனி படுக்கை ஆனால் அன்று இரவு ஒன்றாக படுத்து உறங்குகின்றனர்...

கிழவர் மறுநாள் காலை ஒரு முடிவு எடுத்தவராக எழுந்து அவர்வைந்து இருக்கும் ஒரே சொத்தான ஈரத காரிடம் செல்கிறார். காரை போர்த்தி இருக்கும் படுதாவை எடுக்கின்றார்.காரின் டெஷ் போர்டில் அந்த காலத்து துப்பாக்கி இருக்கின்றது.

நேராக ஒரு போஸ்ட் ஆபிசில் நிறுத்துகின்றார், உள்ளே போகும் போது மறக்காமல் அந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போகிறார் பணம் கட்டம கீயுவில் இவரும் நிற்க்கிறார், அவர் வயதை கண்டு அவரை முன்னே சென்று பணம் கட்ட சொல்ல அவர் வேண்டாம் என்று மறுக்கின்றார்.

அவர் கவுன்ட்ர் அருகே வந்து நிற்க்க, கவுன்டர் பெண்மணி பணம் கொடுங்கள்? என்ற கேட்க, அவர் கவுன்டர் உள்ளே துப்பாக்கியை வி்ட்டு இருக்கிற பணத்தை எல்லாம் எடு நான் கொள்ளை அடிக்க வந்து இருக்கின்றேன்.. எனக்கு இதுல முன் அனுபவம் கிடையாது துப்பாக்கி வெடிச்சாலும் வெடிச்சிடும், சீக்கரம் பணத்தை கொடு என்று அந்த கிழவர் சொல்ல,


அந்த பெண் முகம் வெளிரிப்போய் பணத்தை அவர் கையில் கொடுக்கும் போது படம் எடுக்கும் ஓட்டமான திரைக்கதை படம் முடியும் வரை விறு விறுப்பாகவும் காமெடி கலந்தும், கண்களில் நீர் வர வைத்தும் சொல்லி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றார் இந்த ஹங்கேரி பட இயக்குநர்Gábor Rohonyi

இந்த வயதான தம்பதிகளை பிடிக்க இளம் தம்பதி போலிஸ் வருகி்ன்றார்கள் வயதான தம்பதிகளை இளம்தம்பதிகள் பிடித்தார்களா? என்பதை வெண் திரையில் கானுங்கள்


படத்தின் சுவரஸ்யங்களில் சில...

கிழவர் கொள்ளை அடித்து விட்டு வரும் போது தன் மனைவியை போலிஸ் நெருங்கி விடும் என்பது தெரிந்து அவர்தன் மனைவயை தன் பக்கம் வர வழைக்க அவர் போடும் திட்டங்கள் சூப்பர்.....


இந்த படத்தில் கிழவராக நடித்தவர் படத்தின் பாதியில் வேறு யாரையாவது வைத்து படம் எடுத்தக்கொள்ளுங்கள் என் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று டைரக்ட்ரிடம் வருத்தப்பட்டாராம்...

வயதான தாத்தா பாட்டியை வைத்து வேளை வாங்குவது என்பது சாமான்ய காரியம் அல்ல அதுவும் ஒரு ராபேரி திரில்லர் காமெடி படத்தை எடுக்க உண்மையிலேயே தில் வேண்டும்.

படத்தின் தலைப்பான இந்த வார்த்தை ஒரு ரஷ்ய வார்த்தை இதற்க்கான பொருள் “முடிவு” என்பதாகும்..

படத்தில் எனக்கு பிடித்த கேரக்கடர் தாத்தா கேரக்டரை விட பாட்டி கேரக்டர்தான், தாத்தாவின் ஒவ்வொறு செயலையும் புரிந்து அவருக்க ஏற்றார் போல் நடந்து கொள்ளும் பாங்கு சூப்பர்..

வயதான தம்பதியை கொள்ளை அடிக்க விட்டு அவர்களை துரத்தி பிடிக்கும் போலிஸ் இருவரும் இளம் காதலர்களாக உலாவ விட்டது அந்த ஜென்ரேஷன் கேப்பை பார்வையாளன் புரிந்து கொள்ள டைரக்டர் எடுத்த நல்ல உத்தி என்ற சொல்லலாம்.

இந்த படம் ஹங்கேரி நாட்டு படம் பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட்டு பலத்த பராட்டககளையும் விருதுககளையும் பெற்றது..

இந்த படம் பார்த்து விட்டு வரும் போது முகம் நிறைய புரிப்புடன் வெளிவந்தவர்கள்தான் ரொம்ப அதிகம்..

இது நமது 5வது சென்னை உலக திரைப் படவிழாவில் பைலட் தியேட்டரில் திரையிடப்பட்டது,

இந்த கொள்ளை அடித்த வயதானவர்களை டிவியில் காட்டியதும் இதே போல் பல வயதானவர்கள் கொள்ளளை அடிக்க துப்பாக்கியும் கையுமாக பேங்குக்கு போய் கைதாவதை மிக காமெடியாக எடுத்து இருப்பார்கள்..


சில படங்கள் பார்த்து விட்டு வரும் போது மனம் முழுவதும் சந்தோஷமாக இருக்குமே சமீபத்திய உதாரணம்“ பசங்க ”திரைப்படம். படம் பார்த்து விட்டு வந்த போது எனக்கு அப்படித்தான் இருந்தது அது போல் இந்த படமும் இருக்கும்....

இந்த படம் பாத்து வி்ட்ட வெளிவரும் போது எப்போது இந்தியாவில் அதுவும் லோபட்ஜெட்டில், இந்த மாதிரி படங்கள் வெளிவரும் என்ற ஏக்கம் நிச்சயம் எல்லோருடைய மனதி்லும நிச்சயமாக தோனும் என்பது உண்மை...

யாருமில்லாத பெரியவர்கள் எந்த அதரவும் இல்லாதவர்கள், புறக்கனிக்கபட்ட மனநிலையில் இருப்பார்களே ஆனால் அவர்கள் உயிர் வாழ எதுவும் செய்வார்கள் என்பதையும் தன் மனைவியை உயிராய் நேசிப்பவன், பிரச்சனை என்று வரும் பல விஷயங்கள் அவன் மயிருக்கு சமம் என்பதாக திரைக்கதை அமைத்த இருக்கின்றார் இயக்குநர்....


இந்த படம் நிச்சயமாக ,சத்தியமாக பார்க்கவேண்டிய படம் அல்ல, பார்த்தே தீரரரரரரவேண்டியபடம் இது...

Director:
Gábor Rohonyi
Writers:
Balázs Lovas (writer)
Zsolt Pozsgai (writer)
Contact:
View company contact information for Konyec on IMDbPro.
Release Date:
11 January 2007 (Hungary) more
Genre:
Comedy | Crime | Drama more
Plot:
After a life changing decision, an old man and his wife become criminals.

Parents Guide:
Add content advisory for parents
Country:
Hungary
Language:
Hungarian
Color:
Color
Aspect Ratio:
1.85 : 1 more
Filming Locations:
Budapest, Hungary

https://www.youtube.com/watch?v=77w3UBcD4I8

அன்புடன்/ஜாக்கிசேகர்

தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் இந்த செய்தி வெகுஜன மக்களிடம் போய்சேரும்
நன்றி

21 comments:

  1. நல்ல பகிர்வுங்க.


    (அலுவலகத்தில் ஓட்டிங் வசதி இல்லை - ஞாபகம் இருப்பின் வீட்டில் வந்து ஓட்டுகிறேன்)

    ReplyDelete
  2. பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  3. பகிர்ந்தமைக்கு நன்றி . பர்மா பஜார்ல இன்னைக்கு அலசி பார்துடுறேன்.

    ReplyDelete
  4. sooparanne...

    சென்னை வந்து நான் இந்த படத்தை பார்க்குறேன்.

    ReplyDelete
  5. பரஞ்சத்துக்கு நன்நி சாரே!!

    ஓட்டு போட்டாச்சி!!

    ReplyDelete
  6. வணக்கம் ஜாக்கி
    இந்த படத்தை நிச்சயம் டி.வி.டியில் பார்க்கிறேன்
    பல நல்ல பிற மொழி படங்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    "தன் மனைவியை உயிராய் நேசிப்பவன், பிரச்சனை என்று வரும் பல விஷயங்கள் அவன் மயிருக்கு சமம்"

    மனதின் கல்வேட்டாய் பதிய வேண்டிய வார்த்தைகள்

    ReplyDelete
  7. நல்ல அறிமுகம். பாத்துடணும்!
    :))))

    ReplyDelete
  8. நல்ல பகிர்வுங்க.


    (அலுவலகத்தில் ஓட்டிங் வசதி இல்லை - ஞாபகம் இருப்பின் வீட்டில் வந்து ஓட்டுகிறேன்)-/

    நன்றி ஜமால் மிக்க நன்றி

    ReplyDelete
  9. பகிர்விற்கு நன்றி!//

    நன்றி சென்ஷி

    ReplyDelete
  10. பகிர்ந்தமைக்கு நன்றி . பர்மா பஜார்ல இன்னைக்கு அலசி பார்துடுறேன்.//

    ராஜராஜன் இந்த படத்தோட டிவிடி கிடைக்கமாட்டேங்குது... யாராவது பதிவர் வச்சிருந்தா எனக்கு ஒரு காப்பி கொடுங்க... நான் உங்களை எப்போதும் மறக்கமாட்டேன்

    ReplyDelete
  11. sooparanne...

    சென்னை வந்து நான் இந்த படத்தை பார்க்குறேன்.//

    நன்றி நைனா

    ReplyDelete
  12. பரஞ்சத்துக்கு நன்நி சாரே!!

    ஓட்டு போட்டாச்சி!!//

    நன்றி கலை அதுக்கு அப்புறம் அதாவது காப்பியடித்த படங்களுக்கு அப்புறம் பதிவே போடலை போல இருக்கு???

    ReplyDelete
  13. வணக்கம் ஜாக்கி
    இந்த படத்தை நிச்சயம் டி.வி.டியில் பார்க்கிறேன்
    பல நல்ல பிற மொழி படங்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    "தன் மனைவியை உயிராய் நேசிப்பவன், பிரச்சனை என்று வரும் பல விஷயங்கள் அவன் மயிருக்கு சமம்"

    மனதின் கல்வேட்டாய் பதிய வேண்டிய வார்த்தைகள்//

    இன்னும் நிறைய படங்கள் எழுத தீர்மானித்து உள்ளேன்

    ReplyDelete
  14. நல்ல அறிமுகம். பாத்துடணும்!
    :))))

    நன்றி மங்களுர் சிவா, புதுவை சிவா

    ReplyDelete
  15. Keep it up!//

    நன்றி பாபு

    ReplyDelete
  16. யாராவது இந்த படத்தோட டிவிடி வச்சி இருந்தா ஒரு காப்பி கொடுக்கவும்
    அன்புடன்
    ஜாக்கி

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. தலைவரே...

    80 வயசு தாத்தா வயதுக்கு மீறிய வேலை செய்யுறாருன்னோன தமிழனோட ஆர்வத்தோட வந்து பாத்தா கொள்ளையடிக்கிறார்னு சொல்லிட்டீங்களே...

    ஏனோ தேவையில்லாம உங்களுக்குப் புடிச்ச அந்த மனுசன் எனக்கு ஞாபகம் வர்றாரு...

    வுடுங்க பாஸ். உடனே வரிஞ்சு கட்டிட்டு வராதிங்க.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  19. 80 வயசு தாத்தா வயதுக்கு மீறிய வேலை செய்யுறாருன்னோன தமிழனோட ஆர்வத்தோட வந்து பாத்தா கொள்ளையடிக்கிறார்னு சொல்லிட்டீங்களே...

    ஏனோ தேவையில்லாம உங்களுக்குப் புடிச்ச அந்த மனுசன் எனக்கு ஞாபகம் வர்றாரு...

    வுடுங்க பாஸ். உடனே வரிஞ்சு கட்டிட்டு வராதிங்க.

    அன்பு நித்யன்//

    உங்களுக்கு எப்பயுமே எங்கள் தலைவர் பற்றிய நினைப்புதான் போல இருக்கு....போய் பொழப்பை பாருங்க தலைவா..

    ReplyDelete
  20. Can Please Provide the link to download this movies

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner