kramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர்ந்தால் பிள்ளையின் கதி???

ஒரு மனைவி கணவனை பி்ரிந்து போக வலுவான காரணங்கள் மேலைநாடுகளை பொறுத்தவரை, ஏதும் தேவையில்லை...

நம் நாட்டை பொறுத்தவரை கணவன் குடி குடித்து விட்டு வெறித்தனமாக மனைவியை அவள் அனுமதி இல்லாமல் புணர்ந்தாலும் சரி,அல்லது பிடி அல்லது சுருட்டு குடித்த வாயுடன் அவளை முத்தம் இட்டாலும் சரி, அல்லது படுத்து எல்லா வேலையையும் முடித்து விட்டு மறுநாள் காலை உன் ஆத்தா வீட்டுக்கு போய் 2லட்சம் வரதட்சனை பணம் வாங்கிவா? என்று சொல்வதில் இருந்து,

எதையாக இருந்தாலும் நம் நாட்டு பெண்கள், அந்த சண்டாளன் பத்து பேர் எதிரில், மஞ்சள் ரோப் கட்டிய பாவத்துக்காக பொறுத்து போக வேண்டும்.
அப்படி அவள் பொறுத்து போகவில்லை என்றால் வாழவெட்டி,அடங்காபிடாரி என்று நம் சமுகம் அவளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடும்...
இதைதான் நமது கல்சர் என்று சில மடப்பசங்க வீராஆவேசம் பேசுவர் .
மேலைநாடுகளில் வாழும் பெண்கள் கணவன் குறட்டை சத்தம் பிடிக்காவிட்டாலும், அல்லது அவன் வாய் நாறினால் கூட அங்கே விவாகரத்து சர்வசாதாரணம்....

நம் நாட்டு பெண்கள் இந்த விடயங்களில் மிக மிக பொறுத்து போகும் புண்ணிய ஆத்மாக்கள்... நம் நாட்டு பெண்கள் மட்டும், கொஞ்சம் ரோஷம் பார்த்தால், ஐகோர்ட் வளாகத்தில் நிறைய குடும்பங்கள் கையில் கேஸ் கட்டோடு, தமிழ் சினிமாவில் காட்டிய கோர்ட்டுக்கும், நிஜமான கோர்ட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணி முதலில் குழம்பி போய் இருப்பார்கள்....

குடி குடித்தல், இழுத்து போட்டு உதைத்தல், என்று எதை ஏற்றுக்கொண்டாலும் உன் சகலத்திலும் சரிக்கு சரியாய் வாழ்பவளை வரதட்சனை என்ற பெயரில் ஆத்தா வீட்டில் இருந்து பணம் வாங்கி வா? என்று சொல்ல இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றது என்றே தெரியவில்லை....????
kramer vs. kramer படத்தின் கதை இதுதான்....

கணவன்(dustin hoffman) வேலை வேலை என்று மணிக்கட்டில் இருக்கும் வாட்சை பார்த்தபடி ஓடும் ரகம், பொறுத்து பொறுத்து பார்த்த மனைவி(meryl streep )ஒரு நாள் குழந்தையிடம் தூங்கும் போதும், கணவன் அலுவலகத்தில் இருந்து வந்த உடனேயே நான் உன்னை விட்டு பிரிகின்றேன் என்கிறாள்....

இதுவே நம் கணவன்மார்கள் என்றால் யாரடி வச்சிக்கினு இருக்கிற்??? என்பார்கள், கணவன் கெஞ்சுகிறான் மன்றாடுகின்றான் அவள் போட்டது போட்டபடி போய் விடுகின்றாள்...

இவன் வேலைக்கு போய் கொண்டே தன் ஒரே புத்திசாலியான ஆண் மகனை கஷ்டப்பட்டு வளர்க்கின்றான்.18 மாதங்களுக்கு பிறகு அவளுக்கு பிள்ளை பாசம் எட்டிப்பார்க்க, எனக்கு என் பிள்ளை வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்க்கின்றாள். அவளிடம் அவன் எவ்வளவோ மன்றாடி பார்த்தும் கூட அவள் கோர்ட் படி எறுகின்றாள்...

விதி படத்தில் வரும் நீண்ட கோர்ட்சீன் போல, கோர்ட்டில் கணவன் மனைவி இருவரும் பிள்ளை தனக்கே சொந்தம் என்று வாதாடுகின்றார்கள்

முடிவு என்ன என்பதை வழக்கம் போல் வெண்திரையில் பாருங்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

1979ல் வெளிவந்த இந்த படம் பல விருதுகளை வென்றது

இந்த படத்துக்கு 5 ஆஸ்கார் அவார்டுகள் கிடைத்துது...

பெஸ்ட் பிக்சர், பெஸ்ட் ஆக்ட்ர்,பெஸ்ட் சப்போர்டடிங் ஆக்டர்ஸ்,பெஸ்ட் டைரக்டர் பெஸ்ட் அடப்டேட் ஸ்கிரின் பிளே போன்ற 5 தளங்களில் ஆஸ்கர் பரிசுகளை வென்ற படம் இது...இந்த படத்தில் நடித்த நாயகன்(dustin hoffman) நாயகிக்கு(meryl streep ) ஆஸ்கர் விருது கிடைத்து.. பூங்காவில் குழந்தை விளையாடும் போது, அடிபட்டதும் டிராபிக்கில் அவன் குழந்தையை எடுத்து கொண்டு மிக வேகமாக ஓடும் போது அது நடிப்புதான் என்றாலும், அந்த வெறித்தனமான ஓட்டம்தான் நாயகனுக்கு ஆஸ்கார் கிடைக்க காரணம் என்பது என் கருத்து.... அதை மிக அழகாக ஒரே ஷாட்டில் படம் ஆக்கி இருப்பார்கள்...

நல்ல கணவன் ஏன் பிரிந்தீர்கள் என்று கோர்ட்டில் கேட்கும் போது காரணம் தெரியாமல் அவள் கண்களில் இருந்த வடியும் நீர் அற்புதமான நடிப்பு அது....


கோர்ட்டில் ஒரு வக்கில் வாதிடுவார் பாருங்கள் அது போன்ற வாத திறமையை நான் எங்கும் பார்த்தது இல்லை....

பட் படம் ரொம்ப ஸ்லோ ஒர வேளை 1979 என்பதால் கூட அப்படி தோன்றலாம் அதனால் இந்த படம் பார்த்தே தீர வேண்டிய லீஸ்ட்டில் இருந்து மயிர் இழையில் பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் வருகின்றது நான் என்ன செய்ய????

படம் மெதுவாக போகும் வேளையில் ஆபிசில் பணிபுரியும் அந்த பெண், மனைவியை பிரிந்த கணவனுடன் ஒரு நாள் இரவு படுக்கையை பகிர்ந்து கொள்கின்றாள், காலையில் எழுந்து முழு நிர்வாணமாக பாத்ரூம் செல்லும் போது எதி்ரில் அவன் பிள்ளை. எப்படி இருக்கும் அவளுக்கு? அந்த சிறுவனும் பாத்ரூம் போக வர, அவளும் அந்த கோலத்தில் வர, அவர்களுக்கிடையே சிறு உரையாடல் வேறு நிகழும்....

சரியாக படத்தில் 46வது நிமிடத்தில் வரும் இந்த காட்சி வயிறு குலுங்கவைக்கும் நகைச்சுவை காட்சி அது . அதனால் 15 வயதுக்கு கிழே உள்ள பிள்ளைகளும் கலாச்சார காவலர்களும் அந்த காட்சியை பார்க்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ள படுகின்றார்கள்.

அந்த சிறு காட்சிக்காக இந்த படத்தை 18+ என்று தரம் பிரிக்க மனது வரவில்லை....

படத்தின் கோர்ட் சீன் கவனிக்கபட வேண்டிய விஷயம்.

கிளைமாக்ஸ் கவிதையிலும் கவிதை....

நிறைய குடும்பங்களில் நடக்கும் இகோ மோதலுக்கு பலிகடாவாக பல குழந்தைகள் ஆக்கப்பட்டு, அந்த பிஞ்சுகளின் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்தி விடுகின்றார்கள் சில பெற்றோர், அப்படி பேற்றோர் இருவரும் இகோ கேரக்டர்களாக இருந்தால், பிள்ளைகள் கதி என்னவாகும் என்பதை நெற்றி பொட்டில் அடித்து சொல்லி இருக்கின்றார் இதன் இயக்குநர்Robert Benton...

இதன் இயக்குநர்Robert Benton சிறந்த இயக்குநர் ஆஸ்கார் விருது பெற்றார்...


படம் முடியும் போது எல்லோர் கண்களிலும் ஜலம் நிச்சயம், எப்படி இவ்வளவு நிச்சயமாக சொல்கிறேன் என்றால் என் மனைவி படம் முடியும் போது கர்சிப் நனைத்து, சளி பிடித்தது போல் கனைத்துக்கொண்டாள்.....

Starring: Dustin Hoffman, Justin Henry, Meryl Streep, Jane Alexander, Howard Duff, George Coe, JoBeth Williams, Bill Moor

Director: Robert Benton
Producer: Stanley R. Jaffe
Screenwriter: Robert Benton
Composer: Henry Purcell, Antonio Vivaldi

Runtime: 1 hr 45 mins

Genre: Dramas


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் வெகுஜன மக்களிடம் போய்சேரும்
நன்றி....

13 comments:

 1. எதையாக இருந்தாலும் நம் நாட்டு பெண்கள், அந்த சண்டாளன் பத்து பேர் எதிரில், மஞ்சள் ரோப் கட்டிய பாவத்துக்காக பொறுத்து போக வேண்டும்.\\

  கோபம் தெரிகிறது உங்கள் வரிகளில்

  ReplyDelete
 2. dustin hoffman "ரெயின் மேன்" (rain man) படம் பார்த்திருக்கிறீர்களா? அட்டகாசமான நடிப்பு.. அடுத்து அந்த படத்தை பற்றி எழுதுங்கள். கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம்.

  டானிக் குடுத்தாச்சி!!

  ReplyDelete
 3. ///

  படம் மெதுவாக போகும் வேளையில் ஆபிசில் பணிபுரியும் அந்த பெண், மனைவியை பிரிந்த கணவனுடன் ஒரு நாள் இரவு படுக்கையை பகிர்ந்து கொள்கின்றாள், காலையில் எழுந்து முழு நிர்வாணமாக பாத்ரூம் செல்லும் போது எதி்ரில் அவன் பிள்ளை. எப்படி இருக்கும் அவளுக்கு? அந்த சிறுவனும் பாத்ரூம் போக வர, அவளும் அந்த கோலத்தில் வர, அவர்களுக்கிடையே சிறு உரையாடல் வேறு நிகழும்....

  ///

  இந்த சீன் யோசிச்சாலே நல்லா இருக்கே... படம் பாக்காம வசனம் எழுதிப் பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 4. /
  அவள் பொறுத்து போகவில்லை என்றால் வாழவெட்டி,அடங்காபிடாரி என்று நம் சமுகம் அவளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடும்...
  இதைதான் நமது கல்சர் என்று சில மடப்பசங்க வீராஆவேசம் பேசுவர் .
  /
  /
  இதுவே நம் கணவன்மார்கள் என்றால் யாரடி வச்சிக்கினு இருக்கிற்??? என்பார்கள்
  /

  நச்

  /
  ///

  படம் மெதுவாக போகும் வேளையில் ஆபிசில் பணிபுரியும் அந்த பெண், மனைவியை பிரிந்த கணவனுடன் ஒரு நாள் இரவு படுக்கையை பகிர்ந்து கொள்கின்றாள், காலையில் எழுந்து முழு நிர்வாணமாக பாத்ரூம் செல்லும் போது எதி்ரில் அவன் பிள்ளை. எப்படி இருக்கும் அவளுக்கு? அந்த சிறுவனும் பாத்ரூம் போக வர, அவளும் அந்த கோலத்தில் வர, அவர்களுக்கிடையே சிறு உரையாடல் வேறு நிகழும்....

  ///
  :))))))))))))

  பட அறிமுகம் சூப்பர்!

  ReplyDelete
 5. நன்றாக விமர்சித்து உள்ளீர்கள். நன்றி ...........பொறுத்து போவதால் தான் நம் இன பெண்களை ....பூ மாதேவி என்கிறார்களோ ? இனி வரும் காலங்களில் எல்லாம் (பூமாதேவி .........வாழ்த்து ) இருக்குமோ தெரியாது ..........

  ReplyDelete
 6. இதே போன்று சமிபத்தில் "Fire proof" என்றொரு படம் வந்தது .
  கணவன் வேலை வேலை என்று இருக்க இவர்களுக்குள் இடைவெளி பெரிது ஆகி கொண்டு ஒரு நாள் நடக்கும் சண்டையில் மனைவி பிரிந்து போக போகிறேன் என்று கூறுகிறாள்.
  இதை பற்றி அந்த கணவன் தன் தந்தையிடம் கூறும் போது அவர் 40 நாட்களில் இரண்டு பேரயும் சேர்ந்து வாழ்வதற்கு இந்த Diary உதவும் என்று தன்னிடம் இருக்கும் ஒரு diary குடுக்கிறார் . அதில் ஒவ்வொரு நாளும் அவன் என்ன செய்ய வேண்டும் எப்படி எல்லாம் தன்னை அவளுக்காக மாற்றி கொள்ள வேண்டும் என்று .

  அதற்கு பிறகு நடக்கும் சுவாரசியமான கதை தான் டைரக்டர் படம் ஆகி உள்ளார் .

  ReplyDelete
 7. எதையாக இருந்தாலும் நம் நாட்டு பெண்கள், அந்த சண்டாளன் பத்து பேர் எதிரில், மஞ்சள் ரோப் கட்டிய பாவத்துக்காக பொறுத்து போக வேண்டும்.\\

  கோபம் தெரிகிறது உங்கள் வரிகளில;

  நன்றி ஜமால்

  ReplyDelete
 8. dustin hoffman "ரெயின் மேன்" (rain man) படம் பார்த்திருக்கிறீர்களா? அட்டகாசமான நடிப்பு.. அடுத்து அந்த படத்தை பற்றி எழுதுங்கள். கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம்.


  நன்றி கலை கண்டிப்பாக பார்க்கின்றேன்

  ReplyDelete
 9. இந்த சீன் யோசிச்சாலே நல்லா இருக்கே... படம் பாக்காம வசனம் எழுதிப் பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.


  நிச்சயமாக நித்யா

  ReplyDelete
 10. நன்றி மங்களுர் சிவா தொடர் பின்னுட்ட ஆதரவுக்கு

  ReplyDelete
 11. நன்றாக விமர்சித்து உள்ளீர்கள். நன்றி ...........பொறுத்து போவதால் தான் நம் இன பெண்களை ....பூ மாதேவி என்கிறார்களோ ? இனி வரும் காலங்களில் எல்லாம் (பூமாதேவி .........வாழ்த்து ) இருக்குமோ தெரியா

  நன்றி நிலாமதி உங்கள் கேள்விக்கு விடை தெரியவில்லை

  ReplyDelete
 12. ராஜராஜன் கண்டிப்பாக அந்த படத்தை பார்க்க முயற்ச்சிக்கின்றேன்

  ReplyDelete
 13. அன்பு நண்பர் ஜாக்கி, அவர்களுக்கு,

  தங்களுடைய வலைபூ பக்கத்தில் "விவாகரத்து பெற நேர்ந்தால் பிள்ளையின் கதி???" என்ற கட்டுரையை படித்தென்...

  நம் நாட்டில் அப்பாவி அபலைப்பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை யாராலும் மறுக்க முடியாது அதெ சமயம் இந்த "வரதட்சணை கொடுமை - 498ஏ" என்றும் சட்டத்தால் தவறாகப்பயன்படுத்தும் கெடுமதிப்பெண்களால் பற்றி தங்களுக்கு சிறு புள்ளி விபரம் - இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் தெருவிக்க விரும்புகின்றேன்...

  இச்சட்டத்தால் ஒரு பெண் புகார் கொடுத்தால் எந்த வித விசாரணையும் இன்றி கைது செய்யலாம்..., அப்படி கைது செய்யப்பட்டவர் தான் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயர்..
  மற்றும் இவ்வழக்கில் எனது தாயர் மற்றும் தம்பி யும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் இதில் கொடுமை என்ன வென்றால் எனது மனைவி குடும்தினரால் எனது தாயும் தம்பியும் (தற்பொழுது நானும்) "எனது" வீட்டை விட்டு போலீஸ் மற்றும் கட்டப்பஞ்சாயத்து பொறுக்கிகளினால் துரத்தப்பட்டனர் என்பது எனது பகுதியல் உள்ளவர்களுக்கு த்தெரியும்
  மற்றும் இதைவிடக்கொடுமை எனது குழந்தை இவரை நான் பிறந்த பொழுது பார்தது இவரின் மழையை இழப்பது மகாக்கொடுமை... இவரைப்பார்கசென்றால் கடத்த வந்தான், கொலைசெய்யவந்தான் என்றும் புகார் கொடுக்கலாம் மற்றும் நீதிமன்றம் வழியா பார்க மனு செய்தால் ஒருமாதத்திற்கு ஒருமணி நேரம் அல்லது அரைநேரம் தான் பார்வை நேரம் (பெற்ற பிள்ளையை பார்க இவ்வளவு சட்டகெடுபிடி)

  மற்றும்.. இதுபோல் வரதட்சணை கொடுமை பொய்வழக்கில் பதியப்படும் (புணையப்படும்) வழக்குகளில் 98 சதவித வழக்குகள் பொய்வழக்குகள் என்று நீதிமன்றத்தால் பொய்வழக்கு என்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது.... இரண்டு சதவீத வழக்குகள் மட்டுமே உண்மை..

  2004 ஆம் அண்டில் இருந்து சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் மட்டும் விசாரணை கைதிகளாக (எனது தாயர், மற்றும் தம்பி நண்பருடைய தாயர் உட்பட) சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்... ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றன ( எனது குழந்தை உட்பட)

  தயவுசெய்து இதன் மறுபக்கததையும் தெருவிப்பதே என் நோக்கம் - உங்கள் வலைபூ பக்கத்தில் எனது இடுகைக்கு அனுமதி அளிக்கவும்..

  மற்றும் என்(எங்கள்) மீது போட பட்டுள்ள வக்கிர குற்றச்சாட்டு FIR தங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பிஉள்ளேன் தயவுசெய்து படித்துப்பார்கவும்

  நன்றி

  என்றும் அன்புள்ள,
  தமிழ். சரவணன்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner