(படங்களை கிளிக்கி பெரிதாக பார்த்துக்கொள்ளுங்கள்)
நான் கின்டி கத்திப்பாரா செல்வதென்றால் நான் ராமாபுரம் வழியாக சென்று சென்னை டிரேட் சென்டர் நத்தம்பாக்கம் வழியாக செல்வேன். மியோட் ஆஸ்பிட்டல் தாண்டி ஒரு பாலம் வரும் அது அடையாறு ஆற்றுப்பாலம். அதனை தாண்டியதும் லெப்ட் சைடில் இறக்கத்தில் குடும்பத்துடன் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ஆற்று ஒரத்தில் குடிசைகள் அமைத்து, அந்த இடத்தில் அவர்கள் தங்கள் கை காசை போட்டு ஒரு அம்மன் கோவிலையும் கட்டி அதற்க்கு திருவிழா எல்லாம் நடத்தி மகிழ்வாய் வாழ்க்கை நடத்தினர் போனவாரம் வரை....
இப்போது இலங்கையின் தமிழர் பகுதி வீடுகள் போல் எல்லாம் எரிந்து சாம்பலாகி, சிதிலமாகி கிடக்கின்றது. தீயில் எல்லாம் எரிந்து போயிற்று. காரணம் தெரியாது...
சென்னையி்ல் வெளிவரும் செய்திதாள்களில் புளியந்தோப்பில் 300குடிசை பற்றி எறிந்தது...நத்தம்பாக்கத்தில்100 குடிசைகள் பஸ்பம் என்று செய்திகளை கேட்டதுன்டு படித்ததுன்டு,தீ விபத்தால் வீடு இழந்த மக்கள்எங்கே தங்குவார்கள்?? நேற்றுதான் அதை நேரில் பார்த்தேன்....நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் அருகில் எதிரில் இருக்கும் பிளாட்பாரத்தி்ல் நான்கு கலர்கலரான தண்ணீர் பிடிக்கும் பிளாஸ்டிக் குடங்களுடன் சின்ன துணி முடிச்சுகளுடன், நான்கு கல்வைத்து விறகு மூட்டி சாப்பாடு செய்து சாப்பி்ட்டு கொண்டு இருக்கின்றார்கள்,
படுக்கை திறந்தவெளி பிளாட்பாரத்தில்,இதில் ஒரே அறுதல் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா இருவரும் வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்ள சில மாதங்களுக்கு முன் நந்தம்பாக்கம் சென்னை டிரேட் சென்டருக்கு வந்தனர்,அதனால் சாலைகளும் பிளாட்பாரமும் புத்துயிர் பெற்றன. இப்போது அந்த நடைபாதை பிளாட்பாரத்தில்தான் குடும்பமே கொசுக்கடியில் உறங்கி கொண்டு இருக்கின்றது...
இப்படித்தானே இலங்கையில் எம் இன மக்கள் இன்னும் திறந்த வெளி காப்பகத்தில் ஒரு அடிமையை போல், வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டு இருக்கின்றார்கள். எவ்வளவு கொடுமையான வாழ்க்கை அது...அது எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும் நம்மவர்களுக்கு புரியாத விடயம்.
நானும் சென்னை பிளாட்பாரங்களில் படுத்து உறங்கி இருக்கிறேன் ஹோட்டலில் எச்சில் தட்டுகள் கழுவி இருக்கின்றேன், மேரி பிஸ்கட் பெட்டி அட்டை விரித்து மெரினா பீ்ச்சில் படுத்து இருக்கின்றேன்... ஆனால் நான் தனிமரம். அனால் ஒரு குடும்பத்தை அதுவும் வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் குடும்பத்தை வெட்ட வெளியில் சற்றே யோசித்து பாருங்கள்...
அந்த பெண்கள் எங்கே உடை மாற்றுவார்கள் , சரி அதை விடுங்கள் அவர்கள் சட்டென வயிற்றுக்கலக்கினால் எங்கு போய் மலஜலம் கழிப்பார்கள்,தினமும் காலையில் எங்கு போய் காலைக்கடன்,குளியல் போடுவார்கள், சொல்லுங்கள்...?
நாம் அடுத்த வீட்டு பாத்ரூம் டாய்லட் என்றாலே யோசிக்கும் ரகம், சரி அவசரத்துக்கு பப்ளிக் டாலட் என்றாலே தே/பை மூத்திரம் இருக்கின்றதுக்கு மூன்று ரூபாய் வாங்குறான் கொஞ்சம் பீளிச்சிங் பவுடர் கூட போட்டு வைக்கமாட்டேங்குறானுங்க, தண்ணியை கூட ஊத்தமாட்டேன்கிறானுங்க.... என்று மூக்கை பொத்தியபடி திட்க்கொண்டு வருவோம், பஸ் ஏறி பத்துகிலோமீட்டர் கடந்தும் அந்த டாய்லட்டை நினைத்தால் குடல் பிரட்டிக்கொண்டு வாந்தி வந்து தொலையும்...
(இந்த இடத்தில்தான் போன வாரும் வரை, பல குடும்பங்கள் வாழ்ந்தன, பிள்ளைகள் படித்தன படுத்து உறங்கின.)
நேற்று அந்த மக்களை பற்றிய நினைவாக இருந்தது, அவர்கள் படும் துயரை போட்டோ எடுக்க என் கை பறபறத்தது. அனால் கஷ்டபடும் அவர்களை போட்டோ எடுத்து மேலும் கஷடப்படுத்த விரும்பவில்லை...ஒரு மூக்கு ஒழுகிய குழுந்தையிடம் 50 ரூபாய் கொடுத்து அம்மாவிடம் கொடுக்க சொல்லி அந்த இடம் விட்டு மனம் கணத்தபடி நகர்ந்தேன்....என்னிடம் காசே இல்லை என்ன செய்ய, இப்போதம் நந்தம்பாக்கம் சென்னை டிரேட் சென்டர் எதிரில் 3 நாட்களாக அகதி வாழ்க்கை வாழும் மக்களை பார்க்கலாம்...இங்கே இப்படி என்றால் இலங்கையில் எம் தொப்புள் கொடி உறவுகளை நினைத்து, வருத்தத்துடன் பிளாக்தான் எழுத முடிகின்றது.... அந்த பகுதி கவுன்ஸ்லர் மற்றும் அரச நிர்வாகம் என்ன செய்ய போகின்றது,??????
அன்புடன்/ஜாக்கிசேகர்
ஓட்டு போட மறவாதீர்...
நானும் திங்கட்கிழமை காலை பஸ்ஸில் வரும்போது பார்த்தேன்....நகராட்சி/மாநகராட்சி நிர்வாகம் யாரும் இவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரிய வில்லை
ReplyDeleteஅண்ணா, உங்க பதிவ படிச்ச பிறகு, மனசு ரொம்ப கஷ்டமா போச்சு. இந்தியா வல்லரசு நாடாகும் என்ற கனவு இப்படங்களை பார்த்தபிறகு கலைஞ்சு போச்சு:)
ReplyDelete:((((((((((
ReplyDeleteஅண்ணே... நீங்க பார்த்தது... ௦0.01% இன்னும் இந்தியாவில் இதை போல் லச்சக்கணக்கில் இருக்கிறது... அருமையான திட்டங்களுக்கு அதனை சரியாக மக்களிடம் சேர்க்கும் முறையும் அந்த முறைகளையும் திட்டங்களையும் மக்களுக்கு அறிவுறுத்துதல் மூலமே இதனை சரி செய்ய முடியும்.
ReplyDeleteவருந்ததக்க விஷயம்...!
ReplyDeleteவிரத பேசாமல் ஏதாவது
செய்யனும் பாஸ்!!
சென்னையில் இதைப் போன்ற குடும்பங்கள் நிறைய இருக்கின்றன ஜாக்கி..
ReplyDeleteவேளச்சேரி-தரமணி ரோட்டிலும் கிட்டத்தட்ட 50 குடும்பங்களுக்கு மேல் இப்படி இருக்கிறார்கள்..
வயசுப்பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் கஷ்டமான விசயம்..
மழைக்காலத்தில் இவர்கள் பெருங்குடி,தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் தங்குகிறார்கள். பகலில் உழைக்கும் உழைப்பாளிகள், இரவில் 9 மணிக்கெல்லாம் புழுதிபறக்கும் சாலை ஓரத்தில் வாகனங்களின் வேகத்தையும் இரைச்சலையும் பொருட்படுத்தாது தன்னை மறந்து படுத்துறங்கும் பெண்களையும் வயதானவர்களையும் கண்டால் மனம் ஒருகணம் அதிர்ந்துஅடங்கும்..
அவர்களை கடக்கும்போது மட்டும் கவலைப்படும் என்னைப் போன்ற மனிதர்களால் என்ன நடந்துவிடும் அவர்கள் வாழ்க்கையில்.. அவர்கள் வீறுகொண்டெழுந்து முன்னேற வேண்டும்..
இந்த மாதுரி தீ பிடிச்சு எரிஞ்சி போறது சென்னைல நிறையே நடக்கிறது . மாநகராச்சி அதிகரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அறுதல் வார்த்தை மட்டுமே சொல்லுகிறார்கள் . மாற்று ஏற்பாடு என்பது நடக்காத விஷயமா தான் இருக்கிறது . குடுசை பகுதி எல்லாம் இடித்து விட்டு அவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் முலமாக அடுக்கு மாடி வீடு கட்டி தந்தால் தேவலாம் .
ReplyDeleteஇப்படித்தானே இலங்கையில் எம் இன மக்கள் இன்னும் திறந்த வெளி காப்பகத்தில் ஒரு அடிமையை போல், வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டு இருக்கின்றார்கள். எவ்வளவு கொடுமையான வாழ்க்கை அது...அது எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும் நம்மவர்களுக்கு புரியாத விடயம்.//
ReplyDeleteஉண்மைதான் ....
ம்ம்.
ReplyDeleteநானும் திங்கட்கிழமை காலை பஸ்ஸில் வரும்போது பார்த்தேன்....நகராட்சி/மாநகராட்சி நிர்வாகம் யாரும் இவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரிய வில்லை//
ReplyDeleteநன்றி ராஜ் தகவலுக்கு இன்று கூட அவ்ர்கள் பிளாட்பாரத்தில்தான் பார்த்தேன்
அண்ணா, உங்க பதிவ படிச்ச பிறகு, மனசு ரொம்ப கஷ்டமா போச்சு. இந்தியா வல்லரசு நாடாகும் என்ற கனவு இப்படங்களை பார்த்தபிறகு கலைஞ்சு போச்சு:)//
ReplyDeleteநாடம வல்லரசு என்று நினைக்காமல் நம் கீழ்தட்டு நிலையில் இருக்கும் மக்களை உயர்த்த நினைத்தாலே போதும்..
நன்றி சிவா தங்கள் சோகத்தை பகிர்ந்து கொண்டதற்க்கு
ReplyDeleteஅண்ணே... நீங்க பார்த்தது... ௦0.01% இன்னும் இந்தியாவில் இதை போல் லச்சக்கணக்கில் இருக்கிறது... அருமையான திட்டங்களுக்கு அதனை சரியாக மக்களிடம் சேர்க்கும் முறையும் அந்த முறைகளையும் திட்டங்களையும் மக்களுக்கு அறிவுறுத்துதல் மூலமே இதனை சரி செய்ய முடியும்.//
ReplyDeleteநைனா தங்கள் கூற்றை ஏற்றுக்கொள்கின்றேன்
வருந்ததக்க விஷயம்...!
ReplyDeleteவிரத பேசாமல் ஏதாவது
செய்யனும் பாஸ்!!//
நர்ம செய்யும் அளவுக்கு பொருளாதாரமோ அதிகாரமோ நம்மிடம் இல்லையே கலை என்ன செய்ய?
அவர்களை கடக்கும்போது மட்டும் கவலைப்படும் என்னைப் போன்ற மனிதர்களால் என்ன நடந்துவிடும் அவர்கள் வாழ்க்கையில்.. அவர்கள் வீறுகொண்டெழுந்து முன்னேற வேண்டும்..//
ReplyDeleteஉண்மை தீப்பெட்டி மழைக்காலங்க்ளில் அவர்கள் படும் அவஸ்த்தை சொல்லி மாளாது
இந்த மாதுரி தீ பிடிச்சு எரிஞ்சி போறது சென்னைல நிறையே நடக்கிறது . மாநகராச்சி அதிகரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அறுதல் வார்த்தை மட்டுமே சொல்லுகிறார்கள் . மாற்று ஏற்பாடு என்பது நடக்காத விஷயமா தான் இருக்கிறது . குடுசை பகுதி எல்லாம் இடித்து விட்டு அவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் முலமாக அடுக்கு மாடி வீடு கட்டி தந்தால் தேவலாம் .//
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்புடையது ராஜராஜன்
நன்றி புகழினி
ReplyDeleteசேகர், உங்கள் பல பிளாக்குகள் படித்தபொழுது பின்னூட்டம் போட தோன்றவில்லை. ஆனால் இந்த பதிவு உங்கள் மனித நேயத்தை வார்த்தைகளில் மட்டும் காட்டாமல் செயலிலும் காட்டியது,............. வாழ்க........
ReplyDeleteஎனக்கு தெரிந்து தமிழில் இப்போது நேரடி ரிப்போர்ட் தரும் ஒரே வலைப்பதிவர் நீங்கள் மட்டும்தான்!
ReplyDelete//நானும் திங்கட்கிழமை காலை பஸ்ஸில் வரும்போது பார்த்தேன்....நகராட்சி/மாநகராட்சி நிர்வாகம் யாரும் இவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரிய வில்லை//
ராமாபுரம் மாநகராட்சி எல்லைக்குள் வராது. மாநகராட்சி எல்லைக்குள் ஏற்படும் தீவிபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி மாற்று ஏற்பாடுகள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளால் வழங்கப்படுகிறது.
ம்ம்... பாதிக்கப்பட்டாலும் மாநகராட்சி எல்லைக்குள் பாதிக்கப்பட வேண்டும் :-(
எனக்கு தெரிந்து தமிழில் இப்போது நேரடி ரிப்போர்ட் தரும் ஒரே வலைப்பதிவர் நீங்கள் மட்டும்தான்!
ReplyDeleteநன்றி லக்கி தங்கள் பாராட்டு்க்கு
ம்ம்... பாதிக்கப்பட்டாலும் மாநகராட்சி எல்லைக்குள் பாதிக்கப்பட வேண்டும் :-(//
ReplyDeleteஇதுதான் லக்கி பஞ்ச்
சேகர், உங்கள் பல பிளாக்குகள் படித்தபொழுது பின்னூட்டம் போட தோன்றவில்லை. ஆனால் இந்த பதிவு உங்கள் மனித நேயத்தை வார்த்தைகளில் மட்டும் காட்டாமல் செயலிலும் காட்டியது,............. வாழ்க....//
ReplyDeleteநன்றி சந்திரா தங்கள் பாராட்டுக்கு
தனிஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்.... ஆனா இங்க ஒதுங்கிறதுக்கு இடம் கூட இல்லையப்பா... என்னாத்த அளிக்கிறது... நொந்து நொந்து நாதாரி ஒட்டுப்பொறுக்கி நாய்களுக்கு சாபமிட்டு சாபமிட்டு செத்து போவோம் போக்கத்த கூட்டமாய்...
ReplyDelete