முரட்டுதனம், திமிர், ஆணவம்,அகங்காரம் என்பது ஆண்களுக்கு மட்டும் பட்டா போட்ட விஷயம் அல்ல அது மனிதனாய் பிறந்து எல்லோருக்கும் இயல்பான ஒன்று என்பதுடன் அது பெண்களுக்கும் பொதுவானது என்பதை சொல்ல வந்த படம் இது..
கோபமும் வெறியும் இருபாலருக்கும் பொது ஆனால் ஆணின் வெறி வேறு, ஒரு பெண்ணின் வெறி வேறு... அது எப்படி? பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நீங்கள் சொல்லுகின்றீர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஆணின் கோபத்தை விட பெண்ணின் கோபம் கொஞ்சம் கம்மிதான்... ஒரு ஆண் கோபத்தில் அடித்தே பத்து கொலை செய்தால் பெண் இரண்டு கொலை செய்வாள்...
ஆனால் கோபம் பொதுவானது... பெண் சற்றே யோசித்து பார்பவள்.. ஆண் அவனிடத்தில் அந்த யோசிக்கும் குணம் கூட இல்லை...பெண் எப்போதுமே நிறைய பொறுத்து ஒரு கட்டத்தில் எல்லை தாண்டும் போதுதான் அவள் வேறு வழியில்லாமல் கொலைகாரி ஆகின்றாள்...
போர் மினிட்(ஜெர்மன்) படத்தின் கதை இதுதான்....
இந்த படத்தின் நாயகி Jenny (Herzsprung) கோபத்தில் ஒரே ஒரு கொலை செய்து விட்டாள் அதற்க்கு காரணம் அவ்ள் சின்ன வயதில் அவளிடம் காட்டிய சில சில்மிஷங்களால் அவள் கொலை செய்ய நேர்கின்றது... அவளுக்கு சிறை தண்டனை கொடுக்கின்றது கோர்ட்..... கதை 1944 ல் நடக்கின்றது....
80 வயது மூதாட்டிக்கு Traude Krüger (Bleibtreu)வேலை தினமும் பெண்கள் சிறையில் இருக்கும் பெண் கைதிகளுக்கு பியானோ கற்றுக்கொடுப்பதுதான் வேலை... அவள் கற்றுக்கொடப்பவர்கள் யாரும் யோக்கிய சீலர்கள் இல்லை.. எல்லாம் கொலை, கொள்ளை, போன்ற வழக்குகளில் குற்றம்சாட்டபட்ட கொடுர குற்றவாளிகள்.
ட்ராவுட் நம்ம முரட்டு கதாநாயகி ஜென்னிக்கு பியனோ கற்றுக்கொடுக்க முயல முதலில் எதையும் வெறியோடு எதிர்க்கும் ஜென்னி பியானோவில் விருப்பம் இருந்தும் கற்றுக்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்க ,அவளை போட்டு ஜெயில் நிர்வாகம் அவள் திமிரை அடக்க, பல கொடுமைகளை செய்கின்றது...
பொதுவாக ஆண் தவறு செய்தாலே அதாவது முறைத்தாலே, அவனை பெண்டு நிமிர்த்தும் சமுக அமைப்பு நம்முடையது இதில் இந்தியா என்ன ஜெர்மன் எல்லா இடத்திலும் ஆண் என்ற ஆதிக்க மனோபாவம்தான்...அதாவது சேரி பாஷையில் சொல்வதென்றால் ஜென்னியை போட்டு கும்மாங்குத்து குத்துகின்றார்கள்...
அதன் பிறகு அந்த கிழவி மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஜெனிக்கு அன்பு பிறக்கின்றது அதற்க்கு காரணம் கிழவியின் முதுமை கொடுத்த அனுபவம்...அதன் பிறகு அவள் பியானோ கற்றுக்கொள்கிறாள்.., ஜெயில் நிர்வாகம் ஜென்னியை வளர விட்டதா? அவள் தன் பியனோ நிகழ்ச்சியை அரங்கேற்றினாளா? என்பதை எப்படியாவது அடித்து பிடித்து டிவிடி வாங்கி பார்க்கவும்
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
http://www.flicks.co.nz/movie/four-minutes-vier-minuten/ படத்தின் டிரைலர் பார்க்க இங்கே செல்லவும். அல்லது இந்த தளத்திற்க்கு செல்லவும்http://www.apple.com/trailers/independent/fourminutes/
இந்த படத்தின் பெண் கைதிக்கும் 80 வயது பியானோ டீச்சருக்கான ஊடல் என்பது பூவே பூச்சூடவா படத்தில் நதியா, பத்மினி ஊடலுக்கு சமம்...
அவர்களுக்குள் எற்படும் மெல்லிய உணர்வுகளை கண்களில் நீர் முட்ட சொல்லி இருக்கின்றார் இந்த படத்தின் இயக்குனர் Chris Kraus...
அந்த பெண்ணை படுத்தும் சித்ரவதை காட்சிகள் பார்க்கும் போது அவள் முரட்டுதனத்துக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்பதாய் இருக்கும். பிளாஷ் பேக்கில் சிறு வயதில் பாலியல் ரீதீயாக அவள் துன்புறுத்த பட்டதால்தான் அவள் இந்த நிலைக்கு மாறினால் என்பதை காட்டும் போது நம் மனது கனத்து விடுகின்றது..
வயதான கேரக்டர் பண்ண பெண்மணியின் நடிப்பு அற்புதம்.... அந்த பொறுமை அவள் கொண்ட நம்பிக்கையை கண்களில் காட்டுவது... என்னமா நடிக்கறா? அந்த கிழவி... (எனக்கு பாசம் அதிகரிச்சா, அவுங்களை நான் வாடி போடி என்று கூப்பிடுவது என் இயல்பு)
எந்த கோபத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டுன்னு சொல்லும் படம் இது....
இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஆன அந்த 4 நிமிடம் படம் பார்த்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அந்த படத்தின்(Chris Kraus) இயக்குனருக்கு மரியாதை செய்தார்கள் சென்னை உலகபடவிழா ரசிகர்கள்....
குழந்கைளிடம் சில கயவர்கள் காட்டும் பாலியல் துன்புறுத்தல்கள் அந்த குழந்தை வளர்ந்தால் அது சமுகத்திடம், எவ்விதமாக பிரதிபலிக்கும் என்பதை ஜென்னி கேரக்டர் மூலம் புரியவைத்துள்ளார் Chris Kraus...
இன்னும் கொஞ்சம் கதை சொன்னாலும் படத்தின் சுவாரஸ்யம் போய் விடும் என்பதால் நான் இத்தோட நிப்பாட்டிக்கிறேன்...
கடைசி அந்த நாலு நிமிடம் நீங்கள் கண்களில் கண்ணீரோடு எழுந்து நின்று கைதட்டுவீர்கள் என்று நான் மீண்டும் உறுதி அளிக்கின்றேன்...
Directed by Chris Kraus
Produced by Alexandra Kordes, Meike Kordes
Written by Chris Kraus
Starring Monica Bleibtreu
Hannah Herzsprung
Sven Pippig
Richy Müller
Distributed by Flag of Europe EuropaCorp Distribution Flag of the United States Senator International
Release date(s) Flag of GermanyFebruary 1, 2006
Flag of the United StatesApril 18, 2008
Running time 112 min.
Country Germany
Language German
Budget €1,400,000
இந்த படம் வாங்கிய விருதுகள்....
2006
* Bavarian Film Awards
o "Best Actress" (Monica Bleibtreu)
o "Best New Actress" (Hannah Herzsprung)
o "Best Screenplay"
o "Best New Director"[1]
* "Jin Jue Award (Shanghai International Film Festival)
o "Best Feature Film"
* "Best Feature Film" at the Reykjavik International Film Festival
* Golden Biber (28th Biberach Film Festival)
o "Best Film"
o "Audience Award"
* Golden Heinrich (20th International Film Festival Brunswick)
o "Audience Award"
* "Best Set Design" (Silke Buhr) at the 40th Hofer International Film Festival
* State of Baden-Wuerttemberg
o "Best Screenplay"
2007
* German Film Awards
o "Best Feature Film in Gold"
o "Best outstanding performances - female leading role" (Monica Bleibtreu)
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் இந்த செய்தி வெகுஜன மக்களிடம் போய்சேரும்
நன்றி
பார்த்துடுவோம் நண்பரே!
ReplyDeleteயோவ்...
ReplyDeleteஉன் பதிவுக்கு கமெண்ட் எழுத கூட நேரம் கிடைக்காம இருக்கறப்ப பாத்து, பதிவு மேல பதிவு. படம் மேல படம்னு போட்டு ஏன்யா வெறுப்பேத்துற...
(பாசம் அதிகமானா இப்படித்தான் கொஞ்சம் மரியாதை இல்லாம எழுதுவோம்)
ங்கொய்யால உனக்கு சீக்கிரமே பெண்டு நிமித்துற மாதிரி வேலை கிடைச்சு பதிவுனா என்னானு சுத்துற நிலைமை வரணும்னு அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிறன்.
(அதுக்கப்பறம் நிறைய எழுதலாம் தலைவரே...)
அன்புடன் நித்யன்
/
ReplyDeleteகுழந்கைளிடம் சில கயவர்கள் காட்டும் பாலியல் துன்புறுத்தல்கள் அந்த குழந்தை வளர்ந்தால் அது சமுகத்திடம், எவ்விதமாக பிரதிபலிக்கும் என்பதை ஜென்னி கேரக்டர் மூலம் புரியவைத்துள்ளார் Chris Kraus...
/
இதற்க்காகவே பார்க்க வேண்டும்!
நல்ல அறிமுகம். நன்றி.
/
ReplyDeleteகுழந்கைளிடம் சில கயவர்கள் காட்டும் பாலியல் துன்புறுத்தல்கள் அந்த குழந்தை வளர்ந்தால் அது சமுகத்திடம், எவ்விதமாக பிரதிபலிக்கும் என்பதை ஜென்னி கேரக்டர் மூலம் புரியவைத்துள்ளார் Chris Kraus...
/
இதற்க்காகவே பார்க்க வேண்டும்!
நல்ல அறிமுகம். நன்றி.
உங்க விமர்சனத்துக்காகவே கண்டிப்பா பார்க்கணும். பார்த்துட்டு கமென்ட் போடுறேன். ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி
ReplyDeletepresent sir
ReplyDelete///நித்யகுமாரன் said...
ReplyDeleteயோவ்...
உன் பதிவுக்கு கமெண்ட் எழுத கூட நேரம் கிடைக்காம இருக்கறப்ப பாத்து, பதிவு மேல பதிவு. படம் மேல படம்னு போட்டு ஏன்யா வெறுப்பேத்துற...
(பாசம் அதிகமானா இப்படித்தான் கொஞ்சம் மரியாதை இல்லாம எழுதுவோம்)
ங்கொய்யால உனக்கு சீக்கிரமே பெண்டு நிமித்துற மாதிரி வேலை கிடைச்சு பதிவுனா என்னானு சுத்துற நிலைமை வரணும்னு அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிறன்.
(அதுக்கப்பறம் நிறைய எழுதலாம் தலைவரே...)
அன்புடன் நித்யன்///
வழி மொழிகிறேன்..
நல்ல படத்திற்கு, ஒரு நல்ல அறிமுகம். நிச்சயம் பார்க்கிறேன். ஒரு தகவல் வேண்டும். எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இந்த படங்களை! எங்கு கிடைக்கிறது என சொன்னால்.. நாங்களும் பயன்பெறுவோம்.
ReplyDeleteஅண்ணன் உனா தனா அவர்களை ஒரே வரியில் கமெண்ட் போட வைத்த எனக்கு ஏதெனும் பரிசில்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா... ஜாக்கி
ReplyDeleteஅன்பு நித்யன்
ரொம்ப நல்லா இருக்கும் போல பாத்துட்டு சொல்றேன் தல.
ReplyDeleteபார்த்துடுவோம் நண்பரே!//
ReplyDeleteநன்றி ஜமால்
ங்கொய்யால உனக்கு சீக்கிரமே பெண்டு நிமித்துற மாதிரி வேலை கிடைச்சு பதிவுனா என்னானு சுத்துற நிலைமை வரணும்னு அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிறன்.
ReplyDelete(அதுக்கப்பறம் நிறைய எழுதலாம் தலைவரே...)
அன்புடன் நித்யன்//
உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்
இதற்க்காகவே பார்க்க வேண்டும்!
ReplyDeleteநல்ல அறிமுகம். நன்றி.//
நன்றி சிவா
உங்க விமர்சனத்துக்காகவே கண்டிப்பா பார்க்கணும். பார்த்துட்டு கமென்ட் போடுறேன். ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி//
ReplyDeleteநன்றி கவிதை காதலன்
நன்றி நைனா,உண்மைதமிழன்
ReplyDeleteநல்ல படத்திற்கு, ஒரு நல்ல அறிமுகம். நிச்சயம் பார்க்கிறேன். ஒரு தகவல் வேண்டும். எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இந்த படங்களை! எங்கு கிடைக்கிறது என சொன்னால்.. நாங்களும் பயன்பெறுவோம்.//
ReplyDeleteநொந்த குமாரன் பல படங்கள் எப்போதோ பார்த்தது மற்றும் உலக படவிழாக்கள் நன்றி
ரொம்ப நல்லா இருக்கும் போல பாத்துட்டு சொல்றேன் தல.//
ReplyDeleteநன்றி இளைய கவி