(KAW) அம்மாவாசைக்கு காக்காவுக்கு சோறு வைக்க போனால் ஜாக்கிரதை...




அம்மாவாசைக்கு மட்டும் என் அம்மாவுக்கு படைத்து விட்டு அந்த சாப்பாட்டை காக்காவுக்கு வைப்பது வழக்கம், இதை மூட நம்பிக்கை என்று நான் பார்த்தது இல்லை... ஒரு உயிரினத்துக்கு பசி போக்குகின்றோமே என்று உணர்வுதான்....

ஆனால் இந்த காவ் படத்தை பார்த்தால் நீங்கள் காக்காவுக்கு சோறு வைக்கவும் காக்காவை பார்க்கவும் பயம் கொள்ளுவீர்கள் என்பதை நான் அடித்து சொல்லுவேன்.

படத்தின் கதை இதுதான் ஒரு கிழவர் பண்ணை வீட்டிக் கொடவுனில் இருந்து டிராக்டரை பின்னால் எடுக்க முயல்கின்றார். அந்த பெரிய டிராக்டர் சக்கரத்தின் கீழ் இருக்கும் பூச்சியை காக்கா ஒன்று நாஷ்டா பண்ணிக்கொண்டு இருக்கின்றது... பின்னால் வந்த டிராக்டர் சக்கரம் அந்த காக்கா மீது ஏறி அது இறந்து விடுகின்றது. அவ்வளவுதான் எல்லா காக்காவும் ஒன்று சேர்ந்து இந்திய பாராளுமன்றத்தி்ல் சபாநாயகர் இருக்கை அருகே வந்து எல்லோரும் கும்பல் கூடி கேரோ செய்வது போல் எல்லா காக்காவும் சேர்ந்து அந்த கிழவரை கொல்லுகின்றன...

அதன் பிறகு அந்த நகரம் காக்காக்ள் கொலை செய்யும் நகரமாகின்றது,அந்த நகரத்தில் வசிக்கும் எல்லோரும் மரணபயத்தோடுதான் வாழ்கின்றார்கள். இந்த அம்மாவாசைக்குசோறு தின்னும் காக்கைகளுக்கு வெறி எப்படி வந்தது? ஏன் வந்தது , அந்த நகரம் மக்கள் நிம்மதி பெரு மூச்சி விட்டு 9 மணி ரெகுலர்டிவி சீரியல் பார்த்தார்களா? என்பதை திருட்டு சிடியில் பார்க்கவும்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
இந்த படம் 2007 ல் வெளி வந்தது.. சிலருக்கு இந்த படம் பிடிக்காமல் சுட போகலாம்...

மிக அற்புதமான திரைக்கதை காக்கைகளை வைத்து ஷுட்டிங் செய்வது எல்லாம் ரொம்ப சிரமமான காரியம் அதிலும் திரில்லர் சான்சே இல்லை...

ஹிட்சாக் எடுத்த பேர்ட் படத்தின் ஆதார தழுவல் இந்த படம்...

அதற்க்காக ஹிட்சாக்கை இவர் காப்பி அடித்து விட்டார் என்பது ஏற்புடையதல்ல...

வெளியில் எந்த கேரக்டர் நடந்தாலும் எப்போது எந்த காக்கா கொத்துமோ என்ற பயத்திலேயே படம் பார்க்க வைத்த இயக்குனருக்கு நன்றி

அந்த ரசிகனின் பயம்தான் இயக்குநருக்கு கிடைத்த வெற்றி....


எப்போதுமே திரில்லர் படத்துக்கு சவுண்டு ரொம்ப முக்கியம். அது இந்த படத்தில் பெரிதும் உதவி இருக்கின்றது....

குழந்தைகளுடன் இந்த படத்தை பார்க்கவேண்டாம்

Directed by Sheldon Wilson
Produced by Gordon Yang
Written by Benjamin Sztajnkrycer
Starring Sean Patrick Flanery
Kristin Booth
Stephen McHattie
Rod Taylor
Release date(s) April 7, 2007 (USA)
Country Flag of the United States USA
Language English

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் இந்த செய்தி வெகுஜன மக்களிடம் போய்சேரும்
நன்றி

7 comments:

  1. இதனால்தான் சிங்கப்பூர்ல காக்கா எல்லாம் சுட்டு கொன்னுடறாங்களோ???
    :))

    நல்ல அறிமுகம்!

    ReplyDelete
  2. நல்ல பதிவு. பார்க்க முயல்கிறேன்.

    ReplyDelete
  3. உங்களால...கலெக்ட் பண்ண வேண்டிய DVD லிஸ்ட் பெரிசாகிட்டே போகுது

    ReplyDelete
  4. இதனால்தான் சிங்கப்பூர்ல காக்கா எல்லாம் சுட்டு கொன்னுடறாங்களோ???
    :))

    நல்ல அறிமுகம்!//

    நன்றி தலைவரே சிவா

    ReplyDelete
  5. நல்ல பதிவு. பார்க்க முயல்கிறேன்.//

    நன்றி டாக்டர் முருகானந்தம்

    ReplyDelete
  6. உங்களால...கலெக்ட் பண்ண வேண்டிய DVD லிஸ்ட் பெரிசாகிட்டே போகுது//

    ராஜ் இன்னும் பெருசாகும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner