செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்...


20 வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் செய்திகள் வாசிப்பில் கொடிகட்டி பறந்தவர் பாத்திமாபாபு, இப்போதும் ஜெயா டிவியில் செய்தி வாசிப்பவர்...

அப்போதெல்லாம் அவரை நான் மிக வியப்பாக பார்த்து இருக்கின்றேன்,அதன் பிறகு சென்னை வந்து கேமரா மேனாக மாறிய பிறகு நிறைய பிரபலங்களை சந்தித்து விட்டேன்...

5 வருடங்களுக்கு முன் விஜய் செய்திகள் நிறுத்தப்பட்டஉடன் அதில் வேலை செய்தவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து பிரண்ட்ஸ் டிரீம் டெலிவிஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கூட்டாஞ்சோறு என்ற, காலை நிகழ்ச்சியை ராஜ் டிவிக்காக தயாரித்த கொடுத்தனர்...

அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியில் பாத்திமாபாபு பணியாற்றினார், அப்போது அந்த குழுவில் நானும் கேமராமேனாக இருந்தேன்...
காலை நிகழ்ச்சி எடுக்கும் போது லைட்டிங் செட் செய்து விட்டு உட்கார்ந்து இருக்கும் போது எடுத்த படம் இது... இப்போதுவரை அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட...

பாத்திமாபாபு அவர்கள் என்னை பொறுத்தவரை எல்லோரிடமும் மிக இனிமையாய் பழக கூடியவர்... அவரின் தமிழ் உச்சரி்ப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
நானும் அவரும் பல விஷயங்கள் பற்றி பேசி இருக்கின்றோம்... என் தமிழ் ஆர்வம் கண்டு வியந்தவர் அவர்...

அவர் எழுத்தாளர் சுஜாதா அவர்களை பேட்டி கண்ட போது அவரின் மத்தியமர் சிறுகதைகளை பற்றி கேள்வியில் சேர்க்க சொல்லி அவரை பேட்டிக்கான நானும் உதவினேன்...

அதன் பிறகு கெஸ்ட் ரூமில் நான், பாத்திமா பாபு ,எழத்தாளர் சுஜாதா மூன்று பேரும் ஒரு மணிநேரம் பேசினோம்.... அப்போதே சுஜாதா சாருக்கு உடல் நிலை சற்று மோசமாகத்தான் இருந்தது...

அதன் பிறகு எதிர்பாபராத காரணங்களால் அந்த நிகழ்ச்சி வெற்றி பெற வில்லை,அதன் பிறகு நான் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டேன்... ஒருநாள் எங்கள் கல்லூரிக்கு கெஸ்ட்ஆக வந்தார்கள்...

பொதுவாய் நடிகைகள் மறந்து விடுவார்கள் அல்லது மறந்து விடுவது போல் நடிப்பார்கள்... ஆனால் பாத்திமா
“எப்படி தனசேகரன் இருக்கீங்க?” என்று நலம் விசாரித்து பழைய வேலைகளை பற்றி கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு பிறகு சென்றார்கள்...

இன்றளவும்உலக பட விழாவில் கலந்து கொண்டு கூடுமானவரை அனைத்து படங்களையும் பார்க்க முயல்பவர்... இப்போது கூட உட்லன்ஸ் தியேட்டரில் நடந்த உலக படவிழாவில் என்னை பார்த்து நலம் விசாரித்தார்....

பாலச்சந்தர் இயக்கிய கல்கி படத்தில் நல்ல கதாபாத்திரத்தை பெற்று பிரபலமடைந்தவர்..எனக்கு அவரை நடிகையாக பார்ப்பதை விட அவரை செய்திவாசிப்பாளராகவே பார்க்கவே எனக்கு அதிகம் பிடிக்கின்றது...பிரபலமாக இருப்பதும் இயல்பாய் இருப்பதுமான பழக்கம் பொதுவாய் எல்லோரிடமும் இருப்பதில்லை..

அந்த வகையில் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு வித்யாசமான பெண்மனி....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....
நன்றி

31 comments:

 1. தலைப்பை மாத்துங்கப்பூ! வூட்டுலே மாத்து விழப்போவுது! :-)))

  ReplyDelete
 2. எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்!

  ReplyDelete
 3. படத்தை பார்த்து பலபேர் காத்துல புகை வரப்போவது நிச்சயம்.

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. TV செய்தி வாசிப்பவர்களில் மறக்க முடியாத பெயர் ஷோபனா ரவி & பாத்திமா பாபு.

  உண்மைதானே தண்டோரா..??

  ReplyDelete
 6. \\படத்தை பார்த்து பலபேர் காத்துல புகை வரப்போவது நிச்சயம்\\

  :-))))

  @தண்டோரா,

  வில்லங்கமான கமெண்ட்டா இருக்கே

  ReplyDelete
 7. வாழ்த்துகள்...
  பெரிய பெரிய ஆட்களோடஎல்லாம் நட்பு வச்சிருகீங்க...
  :)))

  ReplyDelete
 8. தலைப்பை மாத்துங்கப்பூ! வூட்டுலே மாத்து விழப்போவுது! :-)))//

  அதுதான் டெய்லி வீட்ல உழுதே

  ReplyDelete
 9. எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்!//

  நன்றி வால்பையன் உங்களை போலவே

  ReplyDelete
 10. present sir

  நைனா நன்றி

  ReplyDelete
 11. படத்தை பார்த்து பலபேர் காத்துல புகை வரப்போவது நிச்சயம்.//

  அப்படியா?

  ReplyDelete
 12. TV செய்தி வாசிப்பவர்களில் மறக்க முடியாத பெயர் ஷோபனா ரவி & பாத்திமா பாபு.

  உண்மைதானே தண்டோரா..??//

  மிக மிக உண்மை

  ReplyDelete
 13. \\படத்தை பார்த்து பலபேர் காத்துல புகை வரப்போவது நிச்சயம்\\

  :-))))

  @தண்டோரா,

  வில்லங்கமான கமெண்ட்டா இருக்கே//

  நன்றி முரளி

  ReplyDelete
 14. வாழ்த்துகள்...
  பெரிய பெரிய ஆட்களோடஎல்லாம் நட்பு வச்சிருகீங்க...
  :)))//
  நன்றி வழி போக்கன்

  ReplyDelete
 15. அண்ணன் தண்டோராவின் பின்னூட்டத்தை நீக்கிய ஜாக்கிசேகரின் ஜனநாயக விரோதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

  ReplyDelete
 16. உண்மை தமிழனை வழி மொழிகிறேன்.

  ஜனநாயகம் வாழ வேண்டும்.

  ReplyDelete
 17. தலைப்பை பார்த்தவுடன் பயந்தேன்....
  படித்த பின் வியந்தேன்.....

  ReplyDelete
 18. நல்ல செய்திவாசிப்பாளர், பழக இனிமையானவர் என பதிவு மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 19. அண்ணன் தண்டோராவின் பின்னூட்டத்தை நீக்கிய ஜாக்கிசேகரின் ஜனநாயக விரோதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..!//

  நன்றி உண்மைதமிழன்

  ReplyDelete
 20. உண்மை தமிழனை வழி மொழிகிறேன்.

  ஜனநாயகம் வாழ வேண்டும்.//

  யோவ் செத்த சும்மா இருங்கைய்யா..

  ReplyDelete
 21. Your writing style is good man//
  நன்றி தமிழ் நெஞ்சம்

  ReplyDelete
 22. அண்ணே!! தலைப்பு?????????//

  மாத்திட்டேன் குறை

  ReplyDelete
 23. தலைப்பை பார்த்தவுடன் பயந்தேன்....
  படித்த பின் வியந்தேன்.....//
  நன்றி ஜெட்லி

  ReplyDelete
 24. super......//
  நன்றி விவேக்

  ReplyDelete
 25. நல்ல செய்திவாசிப்பாளர், பழக இனிமையானவர் என பதிவு மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி.//

  உண்மை மங்களுர் சிவா

  ReplyDelete
 26. அழகான செய்தி வாசிப்பாளர், எனக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
 27. u didnot respond to my gmail.

  நண்பருக்கு வணக்கம்.

  உங்கள் பதிவுகள் மிக நன்றாக உள்ளன. உங்கள் படங்களைப் பார்க்கலாம் என்று மடிப்பாக்கத்தில் சில கடைகளில் பார்த்தால், நிறைய சிடிகள் கிடைக்கவே வில்லை.

  நான் சிடிகளின் நிரலை இணைத்துள்ளேன்.

  எங்கு கிடைக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். இணையத்தில் தரவிறக்கம் செய்யலாமா என்றும் சொல்லவும்.

  நன்றி.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner