(broken arrow ) பல் கடித்து பேசும் நடிகர்...



அந்த நடிகரை இன்றைக்கு எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம், அவர் அழகன் மட்டும் அல்ல அவரின் பாடி லாங்வேஜ் அவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்துவார் அவர் எப்போதும் பேசினாலும் ஒருமாதிரி பல் கடித்த படிதான் பேசுவார், அவர் சிகரேட் பிடிக்கும் ஸ்டைலே தனிதான்...

அவரின் வாய்ஸ் ஒரு வசீகரிக்கும் உணர்வை ஏற்படுத்தும். மேன்லினெஸ் வரிசையிலும் வரக்கூடியவர் அவர் பல கேரக்டர்கள் ஏற்று நடித்தாலும் அவர் வில்லதனத்துக்கு உலகம் எங்கும் ரசிகர் பட்டாளம் உண்டு...நம் தமிழ்நாட்டில் சத்யராஜ் எப்போதும் பேசும் வசனம்

“ஏன்டா ஜனா தகுடு எங்கடா? தகுடு தகுடு” என்ற பேசுவாரே அது போல இவரது வசனங்களும் வில்லத்தனமும் உலகப்பிரபலம்.....

அந்த நடிகரின் பெயர் ஜான் டிரவோல்டா அவர் நடித்து, இயக்குனர் ஜான் வூ இயக்கிய புரோக்கன் ஏரோவ் படத்தை பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்....உங்களில் அனேகம் பேர் இந்த படத்தை பார்த்து இருக்கலாம் ஆனால் இந்த உலகத்தில் இந்த படத்தினை பார்க்காதவர்களும் நிறைய இருப்பார்கள், அவர்களுக்குதான் இந்த பதிவு... அதே போல் வளரும் தலைமுறையினர் யாராவது நல்ல படத்தை எப்படி அறிந்த கொள்ளலாம் என்பதை உலகில் இருக்கும் தமிழன் ,எவராவது எனது வலை தளத்தை ரெபர் செய்யலாம் அதனால்தான் ரொம்ப மெனெக்கட்டு எழுதிக்கொண்டு இருக்கின்றேன்....

இரண்டு அமெரிக்க ராணுவ விமானிகள்(ஜான் டிரவோல்டா) Deakins (கிரி்ஸ்டன் ஸ்லேட்டர்) Riley Hale இருவரிடத்திலும் ஒரு ரகசிய பணி ஒப்படைக்கப்படுகின்றது அதாவது இரண்டு நியுக்ளியர் வெப்பன் வேறு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்... இருவரும் நண்பர்கள்தான் அனால் அதில்மேஜர் டிக்கன்ஸ் கெட்டவன். கேப்டன் ஹேல் ரொம்ப நல்லவன்,
பணத்துக்கு ஆசைப்பட்டு இரண்டு நியுக்ளியர் வெப்பன்களை கடத்த முயற்ச்சிக்கின்றான்.. ,டிக்கெனஸ் ஹேலை கொலை செய்ய முயற்ச்சிக்க விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தப்பிக்கின்றான்.அந்த யாருமற்ற சமவெளியில் அவனுக்கு ஒரு பார்க்ரேஜ் ஆபிசர் பெண் அவனுக்கு உதவ படம் வேகம் எடுக்கின்றது....

டிக்கென்ஸ் ஒரு மிரட்டலை அமெரிக்க அரசாங்கத்து விடுகின்றான் 14 மணிநேரத்தில் 250 மில்லியன் டாலர் வேண்டும் என்று கேட்கின்றான் அப்படி கொடுக்கவில்லை என்றால் 250 கோடி மக்கள் உயிர் இழக்க வாய்பு அதிகம் என்று மிரட்டுகின்றான்...

அமெரிக்க அரசாங்கம் டிக்கன்ஸ் விடுத்த மிரட்டலை எப்படி எதிர் கொண்டது, கடத்தப்பட்ட நியுக்கிளியர் வெப்பனை கண்டு பிடிக்க அமெரிக்க அரசு என்ன முயற்ச்சிகளை மேற்க்கொண்டது, ஹேல் எப்படி டிக்கென்ஸ்க்கு சவலாக இருந்தான் என்பதை ஆக்ஷன் கலந்த விறு விறுப்புடன் ஜெட் வேகத்தில் கதை சொல்லிக்கொண்டு போய் இருக்கின்றார்கள்....

படத்தின் சுவாரஸ்யங்கள்....

முதல் காட்சி அதாவது தொடக்க காட்சி, ரொம்ப லாங் ஷாட்டில் ஒரு சின்ன வெள்ளை சதுரமாக காட்டி பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஜும் இன்னில் அந்த இடம் வரும் போது அது ஒரு பாக்சிங்கிரவுண்ட் என்பதையும் அதில் இருவர் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதையும் மிக அழகாக அற்புதமாக ஒளிப்பதிவு செய்து எடுத்து இருப்பார்கள்...

1996ல் வந்த இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது...

இந்த படத்தின் இயக்குநர் ஜான் வூ பற்றி இன்னும் இவர் எடுத்த சில படங்களை அறிமுகப்படுத்தி விட்டு இவரை பற்றி தனிப்பதிவு இடுகின்றேன்.. அந்த அளவுக்கு இவரை பற்றி எழுதலாம்.....

நியுக்ளியர் பாம் தொலைந்து விட்டதால் இந்த ஆப்பரேஷனுக்கு உடைந்த அம்பு(broken arrow) என்று பெயர் வைத்து வி்ட்டார்கள்.


rope-a-dope என்ற மெத்தெட் குத்து சண்டையில் வெகு பிரபலம் அதாவது இவன் இப்படித்தான் பஞ்ச் கொடுப்பான் என்று எதிராளி நினைத்துக்கொண்டு இருக்கு்ம் போது முற்றிலும் வேறு வழியில் அவனின் மூவ்கள் இருக்கும் இதுதான் படத்தின் ஒன்லைன் ஆர்டர்....

டிக்கென்ஸ் போடும் திட்டங்கள் எல்லாம் ஹேல் ஸ்மெல் செய்வது ஒரு சுவாரஸ்யமான ஆட்டம்.....
தொன தொன என பேசிக்கொண்ட வரும் நபரை ஜீப் ஓட்டிக்கொண்டே பக்கத்தில் இருக்கும் இரும்பு ராடை எடுத்து கழுத்தில் ஒரு போடு போட்டு விட்டு அடுத்த வேலை பார்க்க போகும் ஜான் டிரவோல்டா ஸ்டைல் வேறு யாருக்கு வரும்....

படத்தில் எதிர்பாபராத காட்சிகளும் சேசிங் சீனகளுக்கும் பஞ்சம் இல்லை...

நீங்கள் இந்த படத்தை பார்த்து இருக்கலாம் , பார்த்தாலும் இன்னோருமுறை பாருங்கள் மிக நுனுக்கமாய்.....


Directed by John Woo
Produced by Bill Badalato
Terence Chang
Mark Gordon
Written by Graham Yost
Starring John Travolta
Christian Slater
Samantha Mathis
Howie Long
Music by Hans Zimmer
Editing by Joe Hutshing
Distributed by 20th Century Fox
Release date(s) February 9, 1996
Running time 108 min.
Country United States
Language English
Budget $55 million (estimated)



அன்புடன்/ஜாக்கிசேகர்

தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் இந்த செய்தி வெகுஜன மக்களிடம் போய்சேரும்
நன்றி

17 comments:

  1. டிராவல்டோ இந்த படத்தில் வில்லத்தனத்தில் கலக்கியிருப்பார். நல்ல ஹாலிவுட் மசாலா படம்!

    //இயக்கநர் ஜான் ஹு//

    இயக்குனர் ஜான் வூ!!

    (கீழே ஒரு இடத்துல சரியாத்தான் எழுதியிருக்கீங்க:) )

    ReplyDelete
  2. அந்த முதல் boxing scene அட்டகாசம்... இப்போதான் Taking Pelham 123 படம் பார்த்துட்டு வர்றேன் அதிலயும் செம ஸ்டைலிஷ்

    ReplyDelete
  3. ஜான் ட்ரவோல்டா சிகரெட் குடிக்கும் ஸ்டைலுக்கு நான் அடிமை!

    ReplyDelete
  4. இந்த படம் பார்த்திருக்கிறேன். டிவிடி இருக்கிறது. நல்லா இருக்கும்.

    ReplyDelete
  5. எத்தனை முறை பார்த்தாலும்...ஜான் ட்ரவோல்டா நடிப்பு சலிப்பு தட்டறதேயில்ல சார் இந்த படத்துல...அவரோட பாடி லேங்வேஜ் ல இருக்கற கம்பீரம்...நம்ம வாத்தியார் கிட்ட பார்த்த மாதிரியே இருக்கு சார்

    ReplyDelete
  6. எனக்கும் ஜான் மிகவும் பிடித்த நடிகர்.
    அதுவும் அவருடைய மேனேரிசம்- வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  7. டிராவல்டோ இந்த படத்தில் வில்லத்தனத்தில் கலக்கியிருப்பார். நல்ல ஹாலிவுட் மசாலா படம்!

    //இயக்கநர் ஜான் ஹு//

    இயக்குனர் ஜான் வூ!!

    (கீழே ஒரு இடத்துல சரியாத்தான் எழுதியிருக்கீங்க:) )
    நன்றி சென்ஷி திருத்தி விட்டேன்

    ReplyDelete
  8. அந்த முதல் boxing scene அட்டகாசம்... இப்போதான் Taking Pelham 123 படம் பார்த்துட்டு வர்றேன் அதிலயும் செம ஸ்டைலிஷ்//

    நன்றி யாத்ரீகன் பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  9. ஜான் ட்ரவோல்டா சிகரெட் குடிக்கும் ஸ்டைலுக்கு நான் அடிமை!//

    உண்மை வால்பையன்

    ReplyDelete
  10. இந்த படம் பார்த்திருக்கிறேன். டிவிடி இருக்கிறது. நல்லா இருக்கும்.//

    நன்றி மங்களுர் சிவா

    ReplyDelete
  11. எத்தனை முறை பார்த்தாலும்...ஜான் ட்ரவோல்டா நடிப்பு சலிப்பு தட்டறதேயில்ல சார் இந்த படத்துல...அவரோட பாடி லேங்வேஜ் ல இருக்கற கம்பீரம்...நம்ம வாத்தியார் கிட்ட பார்த்த மாதிரியே இருக்கு சார்//

    உண்மைதான் ராஜ்

    ReplyDelete
  12. எனக்கும் ஜான் மிகவும் பிடித்த நடிகர்.
    அதுவும் அவருடைய மேனேரிசம்- வாய்ப்பே இல்லை.//

    நன்றி பட்டாம் பூச்சி நங்கள் சொல்வது உண்மைதான்

    ReplyDelete
  13. நான் பார்த்த முதல் ட்ரவோல்டா படம் அது. பாக்ஸிங் முடிந்ததும் ஜெர்கின் ஸிப்பை மூடிவிட்டு புகைக்கும் அந்த காட்சியிலேயெ வசீகரிக்கப்பட்டுவிட்டேன். படம் பார்த்தபின் ட்ரவோல்டா படங்களாக தேடித்தேடி பார்த்தேன். Face off-ல் இன்னும் அசத்தியிருப்பார். முதலில் கதாநாயகனாக அவரைப் பார்த்ததும் கடுப்பாகி விட்டேன். முகம் மாற்றப்பட்டதும் ட்ரவோல்டா ஆட்டத்தை ஆரம்பிப்பார். முகம் மாற்றப்பட்டபின் கதாநாயகனை ஜெயிலில் சந்திக்கிற காட்சி, க்ளைமாக்ஸில் சர்சில் ப்ரேயர் செய்யும் கதாநாயகனிடம் அவர் பேசும் காட்சி, ஒருவர் நெற்றியில் ஒருவர் என்று துப்பாக்கிகளை வைத்திருக்கிற காட்சியில் அவர் செய்யும் அலும்புகள் அத்தனயும் அருமை. swordfish,Basic எல்லாவற்றிலும் கடைசியில்தான் பாசிடிவ் கேரக்டெர் என்று அறியப்படுத்துவது அவரது வில்லன் நடிப்பின் கவர்சியால்தானோ என்று தோன்றும். எனக்கு மிகவும் பிடித்த வில்லன். அவரது கேரக்டர்களில் எல்லாம் நான் அஜீத்தை பொருத்திப் பார்ப்பேன். எனக்கு பொருந்துவதாகவே தோன்றும்(வாலி, வரலாறு,சாம்ராட் அஷோகா)

    ReplyDelete
  14. ஜெர்கின் ஸிப்பை மூடிவிட்டு புகைக்கும் அந்த காட்சியிலேயெ வசீகரிக்கப்பட்டுவிட்டேன். படம் பார்த்தபின் ட்ரவோல்டா படங்களாக தேடித்தேடி பார்த்தேன்.///

    அந்த சீன் வேற ஸ்லோமோஷன்ல இருக்கும்... ரொம்ப அற்புதமான ஸ்டைல் வாவ் ரொம்ப அற்புதமா பீல் பண்ணி எழுதி இருக்கிங்க...

    நன்றி

    ReplyDelete
  15. பழைய நகைச்சுவை நடிகர் jerry lewis-ன் முகத்தோடு ஒட்டி வருமோ இவரது முகம்?

    ReplyDelete
  16. அருமையான கமர்ஷியல் திரைப்படம்.. நேரம் போனதே தெரியாமல் இருந்தது.. அதிலும் டிராவால்டோவின் வசன உச்சரிப்பே ஒரு தனி ஸ்டைலில் இருந்ததால் அவர் மீது ஈர்ப்பு அதிகமானது..!

    ReplyDelete
  17. ஜான் ட்ரவோல்டா அலட்டிக்கொள்ளாமல் நடிக்கும் நடிப்பே ஒரு அழகுதான். குத்துச்சண்டையில் வெற்றி பெற்று இருவரும் சந்திக்கும் போது, "நான் எப்போதுமே எதிலும் வெற்றிபெறுபவன்" என்று ஒருவித அலட்டாத மமதையில் அவர் கூறும் நடிப்பாற்றல் வியக்கவைக்கும். தமிழ் படத்திற்க்கும் இதற்க்கும் ஒரு வேறுபாடு உண்டு. அதாவது இதில் கதாநாயகன் கதாநாயகியிடம் படம் முடிந்தவுடன் உன் பெயர் என்ன என்று கேட்பான். அற்புதமான படம், திரைஅமைப்பு, யதார்த்தத்தை சமாதானம் செய்யாமை ஆகியவை ஈட்டுத்தந்த வெற்றி.......விடாதீர்கள், பாருங்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner