ஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் பார்த்த உலக சினிமா...(புகைபடங்களுடன்)

பதிவர் பைத்தியக்காரன், கிழக்கு பதிப்பகம் பத்ரிசார் ஏற்பாட்டில் நேற்று கிழக்கு பதிப்பகம் எதி்ரில் இருக்கும் மினி ஹாலில் நேற்று உலக சினிமா திரையிடப்பட்டது.

ஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்... கொரிய இயக்குனர் கிம்கிடுக்இயக்கிய படமான,சம்மர் ஃபால் வின்டர் திரையிடப்பட்டது. நான் இந்த படத்தை ஏற்க்னவே சென்னை உலக திரைப்படவிழாவில் பார்த்து விட்டேன். இருந்தாலும் இந்த படத்தின் உறுத்தாத ஒளிப்பதிவுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ஒரே லோகேஷன் நான்கு கால நிலைகளைஅற்புதமாக பதிவு செய்து இருப்பார்கள்.. அதனால் திரும்பவும் இந்த படத்தை ரசித்து பார்த்தேன். என்னை போலவே பத்து பதினைந்து பேர் இந்த படத்தை பார்த்து இருந்தாலும், திரும்பவும் பார்த்து ரசிக்கவும், பதிவுலக நண்பர்களை சந்தித்து கதைக்கவே படம் பார்க்க பலரும் வந்து இருந்தார்கள்.
அங்கு நடந்த நிகழ்வுகளில் பார்த்ததில் சில....

சின்ன மினி ஏசி ஹாலில் படம் திரையிடப்பட்டது, குடும்பத்துடன் பார்த்த அனுபவத்தை தந்தது.சராசரிக்கு சற்று உயரமான நான் முதல் சேரில் உட்கார போன போது ஜாக்கி எங்களுக்கு மறைக்குது என்று கூக்குரல் எழ நான் இருட்டில் துழாவி எனக்கான இருக்கை தேடி கடைசியில் உட்கார்ந்தால், பக்கத்தில் அதிஷா, வண்ணத்து பூச்சி.

50 பதிவர்களில் ஒரே ஒரு பெண் மட்டும் வந்து இருந்தார்....அவர் பத்ரிசாரின் துனைவியார்...படம் ஓடும் போது எந்த பேச்சுகளும் இன்றி பின்டிராப் சைலன்ஸ் ஆக படம் பார்த்தது ,வியப்பும் ஆறுதலும் அளித்தது..

நடுவில் ஒரு பதிவர் உள்ளே வரும் போது பவர் கேபிளை தட்டி விட்டதால், படம் நின்று டென்ட் கொட்டாய் போல் இன்டெர்வெல் விடப்பட்டது. மீ்ண்டும் படம் ஓடியது...

படம் ஒடிய 90 நிமிடங்கள் அரங்கம் பின்ராப் சைலன்ஸ். ஆனால், இரண்டு போலிஸ்காரர்கள் கோக் டின்னை குறிபார்த்து பல ரவுன்டுகள் சுட்டும் அதன் மேல் படாமல் இருக்க, பக்கத்தில் இருக்கும் சாது பக்கத்தில் இருந்த சிறு கல்லை எடுத்து ஜஸ்ட் லைக்தட்டாக அதன் மேல் வீச அந்த கோக் டின் மேல் பட்டபோது அரங்கத்தில் மெல்லிய சிரிப்பலை...படம் முடிந்ததும் கைதட்டி இயக்குநருக்கு பதிவர்கள் நன்றி தெரிவித்தனர் அல்லது மரியாதை செய்தனர்.

பதிவர் பைத்தியக்காரன், படம் ஓடும் போது வருவோர் போவோருக்கு கதவை திறந்து விடுவதும், முடுவதுமாக, கடமையே கண்ணாக கடைசி வரை இருந்தார்



படம் முடிந்து டைட்டில் போட்டதும் சட்டென லைட் போடாமல் அல்லது பதிவர்கள் எழுந்து சோம்பல் முறிக்காமல் என்ட் டைட்டில் கிரிடிட் ஓடி முடியும்வரை அமைதி காத்தது எனக்கு பிடித்து இருந்தது.

அப்படி உட்கார்ந்து அமைதி காத்த போதும், படம் முடிந்ததும் எல்லோரும் கரவொலி எழுப்பிய போதும்,அந்த சின்ன அரங்கம், உலக சினிமா திரையிடப்படும் அளவுக்கு உயர்ந்து விட்டது என்பேன்.படம் முடிந்து கலந்துரையாடல் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால், வெளியே குழு குழுவாக, ஆறாம் விரல் புகைய, டீயை குடித்தபடி, குட்டே பி்ஸ்கட் தின்றபடி கலந்துரையாடல், வெவ்வேறு விஷயத்தை உள்ளடக்கியதாக இருந்தது.
என்னதான் நிகழ்ச்சி முடிந்தாலும் பதிவர் முரளிகண்ணனும் , பதிவர் அதிஷாவும் டீ, பிஸ்கட் ஆர்டர் செய்ததை , வாங்கி வந்து எல்லோருக்கும் வழங்கியதை மறக்கமுடியாது.


இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது சாதிசாயம் பூசி இருப்பதாக தெரிந்தது. எதுவுமே செய்யாமல் இருப்பதை விட எதையாவது செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த வகையில் ,டிஜிட்டல் புரஜெக்ஷன்,குளிர்சாதனஅரங்கத்துக்கு ஆன தொகையை கொடுத்தவருக்கும் டீ பிஸ்கெட் ஏற்பாடு செய்தவர்களின் மனதை காயப்படுத்த வேண்டாம்.
சில வேண்டுகோள்...

அடுத்த முறை சேர் ஏதும் போடாமல் இரண்டு ஜமக்காளம் விரித்து கீழே உட்கார்ந்து படம் பார்க்கலாம். நிறைய பேர் அமர்ந்தும் பார்க்கலாம். யாருடைய பாதி தலையும் படம் முடியும் வரை பார்க்க வேண்டாம்.

படம் முடிந்ததும் அது என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது?பார்வையாளன் அந்த படத்தை எப்படிஉணர்ந்தான்? அல்லது புரிந்து கொண்டான், என்பதை ஒரு பத்து நிமிடம் கலந்துரையாடல் அவசியம் என்பது என் எண்ணம்.


90 நிமிட படங்கள் என்பதால் இரண்டு படங்கள் கூட திரையிடலாம்.


சப்போஸ் நேற்று போட்ட படத்தை ராயபுரம் வாசிகள் இருவர் பார்த்து இருக்க நேர்ந்தால் அவர்கள் எப்படி பேசிக்கொள்வார்கள் என்று சின்ன கற்பனை.

“மாமு படம் ரொம்ப ரொம்ப சுலோ , படத்துல மொத்தமே பத்து பேர்தான் நடிச்சி இருக்கானுங்கன்னா பார்த்துக்கோயேன்.”

“மெய்யாலுமே இந்தபடத்து எல்லா சீனும் கண்ணுல ஒத்திக்கலாம் போல சூப்பரா கீதுப்பா...”

“ஒருபறுப்பு அரைக்கற கல்லை வயித்துல கட்டிக்கிட்டு ஒர புத்தர் சிலையை தூக்கிக்கினு, எம்மான் தூரம் நடக்கறதையே காட்டிக்கிட்டு இருக்கானுவ...”

“எனக்கு மெய்யாலுமே புடிச்ச சீனு படத்துல ரெண்டு சீனுதான், ஒன்னு அருவிக்கிட்ட, இன்னோன்னு படகுல....”

அன்புடன்/ஜாக்கிசேகர்

குறிப்பு / எழுதியது படித்தால் மட்டும் போதாது ஓட்டு போட்டு என்னை உற்சாகபடுத்த மறவாதீர்

32 comments:

  1. அண்ணே! உங்க ஜடியா நல்லா இருக்கண்ணே...

    நான் அடுத்த வாரம் வாறேன்..

    ReplyDelete
  2. //அடுத்த முறை சேர் ஏதும் போடாமல் இரண்டு ஜமக்காளம் விரித்து கீழே உட்கார்ந்து படம் பார்க்கலாம்.//

    அந்த மாதிரி பண்ணினா நம்ம மக்கள்ஸ் அப்படியே சரிஞ்சிடாது?

    ReplyDelete
  3. எனக்கு மெய்யாலுமே புடிச்ச சீனு படத்துல ரெண்டு சீனுதான், ஒன்னு அருவிக்கிட்ட, இன்னோன்னு படகுல....”///

    Finally the cat is out of the basket....

    அடப்பாவி....

    ReplyDelete
  4. 50 பதிவர்களில் ஒரே ஒரு பெண்பதிவர் மட்டும் வந்து இருந்தார்....(அவர் பதிவரா? நண்பரா? தெரியவில்லை...///

    அவங்க Mrs. Badri

    ReplyDelete
  5. ஜாக்கி,
    நல்லா படம் காட்டியிருக்கீங்க. நன்றி.
    என்னோட படத்தையும்... 2 இடத்துல போட்டு... ரொம்ப நன்றி.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  6. அண்ணே! உங்க ஜடியா நல்லா இருக்கண்ணே...

    நான் அடுத்த வாரம் வாறேன்--//

    அடுத்த வாரம் இல்லை அடுத்த மாதம் நன்றி

    ReplyDelete
  7. பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  8. திட்டமிட்டு என்னை மறைத்தமைக்கு கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  9. பொக தெரியுது பொக தெரியுதுன்னு சொன்னீங்களே..இப்ப தான் புரியுது

    ReplyDelete
  10. //படம் முடிந்ததும் அது என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது?பார்வையாளன் அந்த படத்தை எப்படிஉணர்ந்தான்? அல்லது புரிந்து கொண்டான், என்பதை ஒரு பத்து நிமிடம் கலந்துரையாடல் அவசியம் என்பது என் எண்ணம்.//

    இது நல்லாயிருக்குது!

    ReplyDelete
  11. யார் மாட்டுவாங்கன்னு கையில காமிராவ வச்சுகிட்டே சுத்துவீங்களோ!

    ReplyDelete
  12. சாரி தலை மொத்தம் 25 படம் எடுததேன் எதை போடறதுன்னு தெரியலை அதுவும் இல்லாமல் நெட் வேற இன்னைக்கு கழுடததை அறுத்துடுச்சி அதனால பதிவு போட்டதே பெரிய விஷயமா இருந்தது

    நன்றி பால பாரதி

    ReplyDelete
  13. //அடுத்த முறை சேர் ஏதும் போடாமல் இரண்டு ஜமக்காளம் விரித்து கீழே உட்கார்ந்து படம் பார்க்கலாம்.//

    அந்த மாதிரி பண்ணினா நம்ம மக்கள்ஸ் அப்படியே சரிஞ்சிடாது?--//
    ராஜா நம்ம மக்கள் எல்லாம் நைட் 9 மணிக்குதான் சாய்வாங்க...

    ReplyDelete
  14. எனக்கு மெய்யாலுமே புடிச்ச சீனு படத்துல ரெண்டு சீனுதான், ஒன்னு அருவிக்கிட்ட, இன்னோன்னு படகுல....”///

    Finally the cat is out of the basket....

    அடப்பாவி....//

    கண்டுப்புடிச்சிட்டியா?? போ நல்லா தூங்கு

    ReplyDelete
  15. Ok...
    Ok...
    padichaachu...//

    நன்றி நைனா

    ReplyDelete
  16. ஜாக்கி,
    நல்லா படம் காட்டியிருக்கீங்க. நன்றி.
    என்னோட படத்தையும்... 2 இடத்துல போட்டு... ரொம்ப நன்றி.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்““//

    நன்றி அகநாழிகை

    ReplyDelete
  17. பகிர்ந்தமைக்கு நன்றி...//

    நன்றி தீப்பெட்டி

    ReplyDelete
  18. பொக தெரியுது பொக தெரியுதுன்னு சொன்னீங்களே..இப்ப தான் புரியுது//
    அக்னி இப்பவாவது நான் பொலம்பனதுக்கு அர்த்தம் புரிஞ்சுதே

    ReplyDelete
  19. /படம் முடிந்ததும் அது என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது?பார்வையாளன் அந்த படத்தை எப்படிஉணர்ந்தான்? அல்லது புரிந்து கொண்டான், என்பதை ஒரு பத்து நிமிடம் கலந்துரையாடல் அவசியம் என்பது என் எண்ணம்.//

    இது நல்லாயிருக்குது!//

    நன்றி ராஜநாடராஜன்

    ReplyDelete
  20. யார் மாட்டுவாங்கன்னு கையில காமிராவ வச்சுகிட்டே சுத்துவீங்களோ!/

    என்ன செய்யறது பொழப்பு அது போல...நடராஜன்

    ReplyDelete
  21. உலகப்படமெல்லாம் பாக்கறீங்க..
    நடக்கட்டும்.. நடக்கட்டும்...
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. its nice to see that people have still interest on cinema.

    ReplyDelete
  23. its nice to see that people have still interest in cinema.

    ReplyDelete
  24. சந்திப்பை திரையிடலை புகைப்படங்களை மிக அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள்,பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  25. நன்றி கலையரசன் கடந்த 6 வருடமா உலக படவிழாக்கள் தொடர்ந்து பாத்துக்கிட்டுதான் வரேன்..

    ReplyDelete
  26. ts nice to see that people have still interest on cinema.//

    உண்மைதான் குப்பன் யாஹு

    ReplyDelete
  27. சந்திப்பை திரையிடலை புகைப்படங்களை மிக அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள்,பகிர்வுக்கு மிக்க நன்றி.//

    நன்றி யாத்ரா உங்கள் பாராட்டுக்கு

    ReplyDelete
  28. Unable to relate faces with the names. :(

    Please provide the names with the photos.

    ReplyDelete
  29. பகிர்தலுக்கு நன்றி....

    ReplyDelete
  30. 50 பதிவர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி.. ஆனாலும் நான் இருக்கிற போட்டோவைப் போடாததால் அண்ணன் ஜாக்கிக்கு என் கண்டனங்கள் :-)

    ReplyDelete
  31. தனியா ஒரு படம் எடுத்தீங்களே.. அதை ஏன்போடல..?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner